பதிவுகள் பலவிதம்
சரம் என்பதை மாலையாகக் கொண்டால் ஒரு முழுச்சுற்று. ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வந்துவிடுவோம் .
இந்த ஒரு வாரம் முழுதும் பகிர்ந்துகொள்ளப் போகும் பதிவுகளும் அப்படியே மாலையாக அமையவிருக்கிறது. பல்சுவைப் பதிவுகளில் ஆரம்பித்து, வாசிப்பனுபவப் பதிவுகளினூடாகப் பயணித்து, பயணம் குறித்த பதிவுகளில் மானசீகமாக அந்தந்த இடங்களுக்குச் சென்று, கதைமாந்தர்களுடன் வாழ்ந்து, திரைப்படங்களில் தோன்றும் கதாபாத்திரங்களுடன் ஒன்றி மீண்டும் பல்சுவைப் பதிவுகளுக்குத் திரும்புவோம்.
*
ஈகைத் திருநாளான நேற்றே இந்தப் பதிவைப் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். ஹஜ் பயணம் பற்றிய ஹுசைனம்மாவின் இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள். இவ்வளவு எளிமையாக அதே நேரம் சொல்ல வந்ததை ஒன்றுவிடாமல் சொல்லி இருக்கிறார். இது ஒரு கலை. இந்தப் பதிவைப் படித்ததும் எழுத்தாளர் நாகூர் ரூமியின் ‘இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்’ என்ற புத்தகம் நினைவுக்கு வந்தது. கூடிய விரைவில் ஹுசைனம்மாவும் அது போல ஒரு புத்தகம் போட வாழ்த்துகள்! டிரங்குப் பெட்டி என்ற தலைப்பில் இவர் எழுதும் பதிவுகள் சுவாரஸ்யம்.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரத்னவேல் ஐயா அவர்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் ஆவணங்கள் போலப் பாதுகாக்கப்பட வேண்டியவை. மருத்துவம், தொழிலாளர் நல வருங்கால வைப்பு நிதி, ஸ்ரீவில்லிபுத்தூரின் கதாநாயகி ஆண்டாள் கொண்டாடும் ஆடிப்பூரம், சதுரகிரி மலை பற்றிய பதிவுகள் என்று ஒவ்வொன்றும் பொக்கிஷம்.
கிரியின் ரசனை பரந்து விரிந்தது. விளையாட்டு, விமர்சனம், வினா, பாடல், படங்கள் என்று நீண்டுகொண்டே போகும் இந்தப் பட்டியல். கதையும் எழுதுவார். இந்தக் கதையைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள். விமலாதித்த மாமல்லன் கதைகள் பற்றிய இந்தப் பதிவையும் ஒரு முறை படித்து விடுங்கள்.
சிவகுமாரின் பலம் தங்குதடையற்ற மொழிதான். சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லிவிடுவார். சமீபத்தில் இவர் எழுதிய ஏழாம் அறிவு திரைப்படத்தின் விமர்சனத்தைப் படித்துப் பாருங்கள்.
புத்தகங்களுக்கான முன்னுரை பற்றிய பதிவுகளைப் படித்துக்கொண்டே வந்தபோது நிலாமகளின் இந்தப் பதிவைப் பார்க்க நேர்ந்தது. மிகக் குறைவாக ஆனால் மிகச் செறிவாக எழுதுகிறார். சில சமயங்களில் எனக்குக் காதில் புகை வரவைக்கும் பதிவர்களுள் இவரும் ஒருவர்:-)
விஜியின் இந்தப் பதிவைப் படித்ததும் எனக்குக் காதில் புகை வந்தது. ஆணாய்ப் பிறந்ததால் எவ்வளவு இழக்க வேண்டி இருக்கிறது பாருங்கள்:-) Jokes apart, மகளின் பிறந்த நாளன்று அவள் முதன் முதலில் பிறந்த நாளை அசைபோட்டிருக்கிறார். Simply touching! அறுபது நாள் விடுமுறைக் கொண்டாட்டத்தின்போது குழந்தைகள் அடித்த லூட்டியையும், பள்ளி திறந்ததும் வீடு வெறுமையாகக் காட்சி அளித்ததையும் இங்கே பதிவு செய்திருக்கிறார்.
*
கதம்ப மாலை கட்டும்போது பூக்கள் மட்டும் வைத்துக் கட்டாமல் வேரையும் வைத்துக் கட்டுவார்கள். அப்போதுதானே பூக்கள் எடுப்பாகத் தெரியும். மேலும் ராஜி மேடம் என்னுடைய சுவாரஸ்யமான பதிவுகள் மேலும் சிலவற்றைக் குறிப்பிட்டிருக்கலாம் என்று போன பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார். ஆகவே சுவாரஸ்யம் என்று நான் கருதும் என்னுடைய இந்தப் பதிவு.
மீண்டும் நாளை சிந்திப்போம் நண்பர்களே
|
|
வித்யாசமான அணுகு முறையுடன் அருமையான அறிமுகங்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteநல்ல அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.... படிக்கிறேன்...
ReplyDeleteதொடருங்கள்.....
அருமையான அறிமுகங்கள் கோபி.வாழ்த்துக்கள்.
ReplyDeleteவித்யாசமான அணுகு முறை அருமையான அறிமுகங்கள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலைச்சர ஆசிரியரே! நல்வரவு!
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteண்ணா கோபிண்ணா தேங்க்ஸ்ண்ணா :)))
ReplyDeleteவலைச்சரத்தில் நமக்கும் ஒரு இடம் கொடுத்த தங்கள் அன்புக்கு நன்றி கோபி!
ReplyDeleteவாழ்த்துகள் வலைச்சர ஆசிரியரே..
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.அறிமுகம் செய்த விதம அருமை!
ReplyDeleteசரம் தொடுத்த விதம் அருமை.அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் சுவராஸ்ய பதிவை மீண்டும் படிக்கையில் மற்றுமொரு முறை ரசித்தேன் :)
புதிய பதிவு என் வலைப்பூவில்
ReplyDeleteநல்ல வாசிப்பனுபவும்,தீராத எழுத்தார்வமும் உங்கள் தேர்வில் ஜொலிக்கிறதே!வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅருமையான கோர்வை
ReplyDeleteஎன்னையும் மற்றும் சக பதிவர்களையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி கோபி.
ReplyDeleteஅறிமுகப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteமாலை அருமையா கோர்க்கப்பட்டுள்ளது
ReplyDeleteவாசமும் அதிகம்
வாழ்த்துக்கள்
எனக்குப் பிடித்தவர்களின் அறிமுகங்கள் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி
ReplyDeleteவித்தியாசங்கள் நிறைந்த அறிமுகம்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
கதம்ப மாலை அழகாகவும், மணத்துடம்!
ReplyDelete@வை. கோபாலகிருஷ்ணன், மிக்க நன்றி
ReplyDelete@லக்ஷ்மி, மிக்க நன்றி
@வெங்கட் நாகராஜ், மிக்க நன்றி
@ராம்வி, மிக்க நன்றி
@ரமணி, மிக்க நன்றி
@துளசி கோபால், மிக்க நன்றி
@ஜலீலா கமால், மிக்க நன்றி
@என் ராஜபாட்டை ராஜா, மிக்க நன்றி
@விஜி, :-)))
@கிரி, மிக்க நன்றி
@அமைதிச்சாரல், மிக்க நன்றி
@கோகுல், மிக்க நன்றி
@ராஜி, மிக்க நன்றி
@பொதினியிலிருந்து கிருபாதன், மிக்க நன்றி
@ஆசியா உமர், மிக்க நன்றி
@சூர்யஜீவா, மிக்க நன்றி
@சிவகுமார், மிக்க நன்றி
@K.S.S.Rajh, மிக்க நன்றி
@ஆமினா, மிக்க நன்றி
@விச்சு, மிக்க நன்றி
@இந்திரா, மிக்க நன்றி
@சத்ரியன், மிக்க நன்றி
அறிமுகவாளர்களுக்கு வாழ்த்துகள் கோபியின் முதல நாள் பயணத்தையும் பல விதங்களாகப் பார்த்தோம். நாளை என்ன ? பார்ப்போம். நல் வாழ்த்துகள் சகோதரர் கோபி.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
@Kavithai, மிக்க நன்றி
ReplyDeleteகோபி, என் பதிவை அழகாக அறிமுகப்படுத்தியதற்கும், வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி. நெகிழ்கிறேன். மீண்டும் நன்றி.
ReplyDelete