முயற்சிகள் கைகூடும் முற்பகல் - வலைச்சரம்
➦➠ by:
திருமதி.சாகம்பரி
சூரியனின் கதிர்கள் நுழைய முடியாத கூட்டத்துடன்
வெப்ப மூச்சையும் அலைப்பேசி ஓசையையும் சுமந்து
சாலைகளில் மெதுவாக ஊரும் பேருந்துகளிலிருந்து
பைகளில் உணவையும் நினைவுகளில் வேலையையும்
சேர்த்துக் கொண்டு அலுவலகத்திற்குள் புகுத்தும் பகல்.
வணக்கம். வெளியுலகம் நம்முடைய வருகைக்காக காத்திருக்கிறது. வாருங்கள் கடமைகளை ஆற்றத் தொடங்குவோம். வீட்டை விட்டு வந்து வெளியுலகை சந்திக்கும் நேரம். நண்பர்கள், சக ஊழியர்கள் ஆகியோர்களை புன்னகையுடன் எதிர் கொள்ளுங்கள். முக்கியமாக நேற்றைய கசப்பான உணர்வுகளை இன்றைக்கும் தொடராதீர்கள். அவை இன்றைய நாளை பாதிக்கலாம். மாலை வீட்டிற்கு செல்லும்போது மறுபடியும் இதையே சுமந்து செல்ல வேண்டி இருக்கும். காலை நேரம் உற்சாகமிகு நேரம். மூளைக்கு வேலை தரும் நேரம்.
கல்லூரிக்குச் செல்லும் இந்த குமார பருவத்தில் வாழ்க்கைக்குத் தேவையான அடித்தளம் அமைக்கப்படும். "இப்போது நாம் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு விசயமும்தான் பிற்காலத்தில் நாம் வாங்கப்போகும் மாத சம்பளத்தை நிர்ணயிக்கிறது" என்று என் மாணவர்களிடம் சொல்லுவேன். சிலர் வாழ்க்கை பாதை மாறி தோல்வியை சந்திப்பதும் இந்த பருவத்தில்தான்.
மனோவியல் என்ன சொல்கிறது?. யாரோ ஒரு தேவதை நமக்காக காத்திருக்கிறது என்ற உணர்வு வராதவரை கல்லூரிக்குள்ளோ அல்லது அலுவலகத்திற்குள்ளோ உற்சாகமாக செல்லத் தோன்றாதாம். தேவதையானது ஒரு வகுப்பறையில் கணித குறிப்புகளுடன் கரும்பலகையாகவோ, வேதியியல் திரவங்களாக குடுவையில் இருக்கலாம். கணிப்பொறி திரையில் நிரல்களாக மின்னலாம் அல்லது மேலாளர் கையில் சம்பள பட்டியலாக காத்திருக்கலாம், - அதன் பெயர் ஸ்வதர்மா(love what you do or do what you love)
வீட்டிலிருந்து வெகு தொலைவு பயணித்து புகையிலும் வாகன இரைச்சலிலும் மாராத்தான் நடத்துவது , குளிர்காலத்தில் பறவைகள் செய்யும் புலப்பெயர்வைவிட கடினமாக இருக்கிறதல்லவா?
அதென்ன மேசையின் மேல் ஒரு தாளில் குறிப்புகள். ஓ.. இன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகளின் செயல் திட்டமா? சில சமயம் இந்த குறிப்பு புத்தகத்தை பார்த்தாலே எனக்கு ஒரு கோப்பை தேநீர் அருந்தத் தோன்றும்.
அலுவலகம் செல்லும் நேரம் |
கல்லூரிக்குச் செல்லும் இந்த குமார பருவத்தில் வாழ்க்கைக்குத் தேவையான அடித்தளம் அமைக்கப்படும். "இப்போது நாம் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு விசயமும்தான் பிற்காலத்தில் நாம் வாங்கப்போகும் மாத சம்பளத்தை நிர்ணயிக்கிறது" என்று என் மாணவர்களிடம் சொல்லுவேன். சிலர் வாழ்க்கை பாதை மாறி தோல்வியை சந்திப்பதும் இந்த பருவத்தில்தான்.
மனோவியல் என்ன சொல்கிறது?. யாரோ ஒரு தேவதை நமக்காக காத்திருக்கிறது என்ற உணர்வு வராதவரை கல்லூரிக்குள்ளோ அல்லது அலுவலகத்திற்குள்ளோ உற்சாகமாக செல்லத் தோன்றாதாம். தேவதையானது ஒரு வகுப்பறையில் கணித குறிப்புகளுடன் கரும்பலகையாகவோ, வேதியியல் திரவங்களாக குடுவையில் இருக்கலாம். கணிப்பொறி திரையில் நிரல்களாக மின்னலாம் அல்லது மேலாளர் கையில் சம்பள பட்டியலாக காத்திருக்கலாம், - அதன் பெயர் ஸ்வதர்மா(love what you do or do what you love)
வீட்டிலிருந்து வெகு தொலைவு பயணித்து புகையிலும் வாகன இரைச்சலிலும் மாராத்தான் நடத்துவது , குளிர்காலத்தில் பறவைகள் செய்யும் புலப்பெயர்வைவிட கடினமாக இருக்கிறதல்லவா?
அதென்ன மேசையின் மேல் ஒரு தாளில் குறிப்புகள். ஓ.. இன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகளின் செயல் திட்டமா? சில சமயம் இந்த குறிப்பு புத்தகத்தை பார்த்தாலே எனக்கு ஒரு கோப்பை தேநீர் அருந்தத் தோன்றும்.
எடுத்துக்குங்க! |
இன்றைய குறிப்புகள்:
செயல் திட்டங்கள், கல்லூரி வாழ்க்கை, அலுவலக நேரம், வேலை, குமார பருவம்., நண்பர்கள் , வேலைக்கு தேவையான திறமைகள்
1. கவிப்பிரியனின் வலைப்பூ கடித இலக்கியத்தை போற்றுகிறது. கடிதம் எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. இந்த கடிதத்தில் நம்பிக்கை பற்றி எழுதியிருக்கிறார். நம்பிக்கையோடு காத்திரு..
2. சகோதரர் சிசு அவர்களின் கூட்டாஞ்சோறு வலைப்பூவில் இந்த கடிதத்தை படியுங்கள். கல்லூரி வாழ்க்கை ஒரு காட்சியாக இருக்கும். அன்புள்ள தோழனுக்கு.
3. சகோதரர்.சண்முகம் அவர்களின் வலைப்பூ எப்போதும் சமூகம் பற்றிய சிந்தனையை வெவ்வேறு பரிமாணங்களில் தூண்டிவிடும். தனி மனித முன்னேற்றத்தை அக்கரையாக எடுத்துரைக்கும். இந்த பதிவை படியுங்கள். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிட்ட ஆங்கிலம் தேவை. ஆனால், ஆங்கிலம் பேச ஆசைப்பட்டும் முடியாமல் போவது ஏன்? .
4. திரு.கருன் அவர்களின் வேடந்தாங்கல் வலைப்பூவில் பல்சுவை பதிவுகள் நிறைய இருக்கின்றன. அக்கரையான ஆசிரியராக அவருடைய பதிவு சொல்கிறது. படியுங்கள். வெற்றி பெற தேவையான 5 குணங்கள் - அப்துல்கலாம்
5. தோள் தருவோம் தோழனே திரு..சூரியஜீவாவின் வலைப்பூவில் இந்த கவிதையை படியுங்கள். உழைப்பே வெற்றியின் ரகசியம்.
6. வாழ்க்கை வாழ்வதற்கே..! . கல்லூரி வாழ்க்கையென்றாலே காதலும் வரும். காதல் பற்றிய யதார்த்தமான ஒரு பதிவை பதிந்துள்ளார் பரிவை.சே.குமார் . படியுங்கள். இவருடைய பதிவில் படிக்கவும்,சிந்திக்கவும் சிறுகதைகள் நிறைய இருக்கின்றன.
7. அம்பாளடியாளின் வலைப்பூவில் வரும் பாட்டுக்களை வாய்விட்டு பாடமுடிகிறது -ஏதாவது ராகம் இணையாகிறது. இந்த அலுவலகம் செல்ல ஆரம்பிக்கும் புதுப்பெண்களுக்காக, சொன்னால் புரிஞ்சுக்கோ ....
8. படிப்பு , வேலை இதெல்லாம் எதற்காக? பணம் சம்பாதிக்கத்தான். இந்த வெள்ளிப்பணம் பற்றி மனவிழி சத்ரியன் சொல்வது நன்றாக உள்ளது. வெள்ளிப் பணம்
9. அப்பா எப்போதும் வாழ்க்கை பற்றி பேசுவார். கல்லூரியில் சேரும் முன், ஒரு நிமிடம் சிந்தியுங்கள் என்று அமைதி அப்பா சொல்வதை கவனியுங்கள்.
10. சமரசம் உலாவும் இடமே சர்வாகன் கணிதக்குறிப்புகளுடன் காத்திருக்கிறார் புதிய நடையில் கடினமான விசயங்களை விளக்கும் பயனுள்ள வலைப்பூ.
11 வரமாய் வந்த நட்பு ரேவாவின் கவிதைகள் வலைப்பூவில் நட்பு பற்றிய கவிதையை படியுங்கள்.
12. தொழில்நுட்ப பதிவுகளை கொண்ட வலைப்பூ பொன்மலருடையது. கணிப்பொறியின் தேவை அதிகரிக்கும் இந்த காலத்தில் நிறைய சந்தேகங்களும் எழும். இங்கே பதில் கிட்டும். மாதிரிக்கு ஒன்று இதோ... வைரஸ்களிடமிருந்து கணிணியின் பாதுகாப்பை அதிகமாக்க
சீக்கிரம் உங்கள் வேலைகளை ஆரம்பியுங்கள். நாம் (நாளை) உணவு இடைவேளையில் சந்திப்போம். நன்றி.
|
|
அருமை அருமை
ReplyDeleteஅழகான அளவான தெளிவான
முன்னுரையும் அறிமுகங்களும்
தங்கள் திட்டமிடல் பிரமிக்க வைக்கிறது
தொடர வாழ்த்துக்கள்
நன்றி தோழியே.
ReplyDeleteமுக்கியமாக நேற்றைய கசப்பான உணர்வுகளை இன்றைக்கும் தொடராதீர்கள்.//
ReplyDeleteஅருமையான விசயம்
இன்றைய வலைச்சரத்தில் அருமையான பதிவர்களின் பயனுள்ள பதிவுகளை அறிமுக படுத்திருக்கீங்க... வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅம்மா உங்களுக்கு எப்படிதான் நேரம் கிடைக்கிறதோ எல்லா பதிவாளர் பதிவுகளையும் படித்து அதன் பிறகு மிக அழகாக எழுதி அவர்களை அறிமுகப்படுத்தும் விதம் மிக அருமை இன்று அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பதிவாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான கருத்தை முன்னுரையாக தந்து அழகான அறிமுகங்கள் சகோ .
ReplyDeleteஅறிமுகப்படுத்தப் பட்ட அனைத்து பதிவன்பர்களுக்கும் வாழ்த்துக்கள் சகோ
இப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவும்
ReplyDeleteஅனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
இப்பதிவு பலரை சென்றடைய தங்களின் வலைப்பூவில் நல்லிணக்கத்தோடு லின்க் கொடுத்து உதவிய அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
அன்புடையீர்,
அடியிற்கண்ட சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.
//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காணத்தவறாதீர்கள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிரயாணத்திலும், சண்டையிலும், சமாதானத்திலும், சிறையிலும், சுகபோகத்திலும், நட்பிலும், பகையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////
.
ஒத்துழைப்புக்கு முன்கூட்டிய நன்றிகள்.
எளியநடையில் அழகிய அறிமுகங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்..
This comment has been removed by the author.
ReplyDeleteஇன்று அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பதிவாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
ReplyDeleteவிடியும் பொழுதில்
ReplyDeleteநேற்றைய துன்பங்கள் மறந்து
புதிய பிறப்பெடுங்கள்...
அருமையாக சொல்லிச் செல்கிறீர்கள் சகோதரி...
அறிமுகங்கள் அனைவரும் திறமை மிக்கவர்கள்...
வாழ்த்துக்களுடன் வணக்கங்களும் ..
வலைச்சரத்தில் முயற்சிகள் கைகூடும் முற்பகலில் எனது வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கட்டுரையையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அக்கா.
ReplyDeleteஇன்று அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வலைச்சரத்தில் இது எத்தனையாவது தடவை என்பது தெரியாவிட்டாலும் ஒவ்வொரு முறை அறிமுகப்படுத்தப்படும் போதும் முதல் முறை பெற்ற சந்தோஷம் எப்படியோ அப்படியே தொடர்கிறது.
இதுவரை அறிமுகப் படுத்தியவர்களுக்கும் இன்று அறிமுகப்படுத்திய உங்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்.
தொடருங்கள்.... தொடர்கிறோம்....
வாழ்த்துக்கள்.
நன்றி தோழி, பிறர் தளங்களை பார்வையிட மாலை நேரம் தான் எனக்கு உகந்த நேரம்
ReplyDeleteமுயற்சிகள் கை கூடும் முற்பகலில் திட்டமிடல் பற்றிய கருத்து.அனைவரும் செய்ய வேன்டிய ஒன்று,
ReplyDeleteநேற்றைய கசப்பான உணர்வுகளை இன்றைக்கும் தொடரவேண்டாம் என்றுரைத்தது மிகச் சிறப்பு.
மனோவியல் சொல்லும் குறிப்புகள் பயனுள்ளவைகளாக இருக்கின்றன.
பதிவர்கள் பலர் புதியவர்கள் இனிதான் சென்று பார்க்க வேண்டும்.துணையாக தேநீர் தந்தமைக்கு நன்றி
அழகிய அறிமுகங்கள்
ReplyDeleteஇன்று என் வலையில்
ReplyDeleteதலை, தளபதி மற்றும் புத்தர்
மிக சிறந்த ஆரம்பத்துடன் மிக சிறந்த அறிமுகங்கள். வாழ்த்துகள் அனைவருக்கும்.
ReplyDeleteஇனிய காலை பற்றிய வரவேற்புடன் இன்றைய பதிவு அழகிய அறிமுகங்கள். பதிவர்களுக்கு வாழ்த்துகள். மிகிழ்வாக உள்ளது. பாராட்டுடன். வாழ்த்துகள் தொடருங்கள் இறை ஆசி கிட்டட்டும்.
ReplyDeleteVetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com
தங்களின் முன்னுரை அழகாக அருமையாக இருக்கு மேடம்.
ReplyDeleteஅறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இனிய காலை பற்றிய அழகான முன்னுரையுடன், நல்ல பல அறிமுகங்கள். மிகவும் சிறப்பாக உள்ளன.
ReplyDelete//வீட்டை விட்டு வந்து வெளியுலகை சந்திக்கும் நேரம். நண்பர்கள், சக ஊழியர்கள் ஆகியோர்களை புன்னகையுடன் எதிர் கொள்ளுங்கள். முக்கியமாக நேற்றைய கசப்பான உணர்வுகளை இன்றைக்கும் தொடராதீர்கள். அவை இன்றைய நாளை பாதிக்கலாம்.//
// "இப்போது நாம் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு விசயமும்தான் பிற்காலத்தில் நாம் வாங்கப்போகும் மாத சம்பளத்தை நிர்ணயிக்கிறது" என்று என் மாணவர்களிடம் சொல்லுவேன்.//
மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
//"இப்போது நாம் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு விசயமும்தான் பிற்காலத்தில் நாம் வாங்கப்போகும் மாத சம்பளத்தை நிர்ணயிக்கிறது" என்று என் மாணவர்களிடம் சொல்லுவேன்.//
ReplyDeleteசிறந்த அறிவுரை.
கை கட்டி மாதசம்பளம் வாங்கும் எண்ணத்தை அவர்கள் மனதில் விதைப்பதை விட, இன்னும் சிறந்தவற்றை விதைக்கலாமே.
சிறந்த முறையில் தொகுத்து படைப்புகளை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்.
மிக்க நன்றி ரமணி சார்
ReplyDeleteநன்றி பொன்மலர்.
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில் அருமையான பதிவர்களின் பயனுள்ள பதிவுகளை அறிமுக படுத்திருக்கீங்க... வாழ்த்துக்கள்.//
ReplyDeleteகருத்துரைக்கு நன்றி ராஜேஷ்.
ரமணி சார் சொன்னதுபோல் திட்டமிட்டு செய்கிறேன். இந்த பொறுப்பை பற்றிய அறிவிப்பை மதிப்பிற்குரிய சீனா ஐயா 10 நாட்களுக்கு முன்பே சொல்லிவிட்டார். இப்போது பின்னூட்டம் இடும் வேலை மட்டுமே. நன்றி மதுரை தமிழன்
ReplyDeleteமிக்க நன்றி அன்பு உலகம் திரு.ரமேஷ்
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி ஐயா
ReplyDeleteமிக்க நன்றி திரு.சௌந்தர்
ReplyDeleteமிக்க நன்றி திரு.கருன்
ReplyDeleteஅருமையாக சொல்லிச் செல்கிறீர்கள் சகோதரி...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவரும் திறமை மிக்கவர்கள்...
வாழ்த்துக்களுடன் வணக்கங்களும் ..//பாராட்டிற்கு நன்றி சகோ.
நன்றி சகோ.குமார். இந்த பதிவிற்கு பொருத்தமாக இருப்பவற்றை அறிமுகப்படுத்துகிறேன்.
ReplyDeleteமுடிந்தபோது பாருங்கள் மிக்க நன்றி திரு.சூரியஜீவா
ReplyDeleteதிட்டமிடல் பற்றி குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி ராஜி.
ReplyDelete"என் ராஜபாட்டை"- ராஜா மிக்க நன்றி .
ReplyDelete@தமிழ் உதயம் said...
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
பாராட்டுடன். வாழ்த்துகள் தொடருங்கள் இறை ஆசி கிட்டட்டும்.
ReplyDeleteVetha.Elangathilakam. //
மிக்க நன்றி .
எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது மேடம்.
பாராட்டுதலுக்கு மிக்க நன்றி ராம்வி.
ReplyDeleteவிரிவான தெளிவான கருத்துரை தந்து என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி VGK சார்.
ReplyDelete@சத்ரியன்
ReplyDeleteநல்ல விசயத்தை விதைப்பதற்குத்தான் இந்த வரிகள் திரு.சத்ரியன். ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மிகுந்த செலவு செய்து படிக்கும் மாணவனின் நோக்கம் நல்ல வேலை நல்ல சம்பளம்தான். அதற்குரிய தொழில் நுட்பத்துடன், மென்திறன்கள் ஆகியவற்றை நாங்கள் கற்றுத் தந்தாலும் சில சமயம் வழி தவறி விடுகிறார்கள். அவ்விதம் நிகழாமல் தடுப்பதற்குத்தான் இந்த மந்திர வார்த்தைகள்.
மேலும் கைகட்டிதான் மாதச்சம்பளம் வாங்க வேண்டும் என்றில்லை சகோ. அனில் அம்பானி மாதம் ரூ.30கோடிகள் வருட சம்பளமாக வாங்குவதாக கூறுகிறார்கள்.
மிக்க நன்றி சகோ.
அறிமுகத்திற்கு நன்றி.மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் .உத்தி நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஎன்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி மேடம்.
ReplyDeleteஅறிமுகப்படுத்திய விதம் நன்று.
கடமை மிக்க காலை,முயற்சிகள் கை கூடும் முறபகல் இப்படி தலைப்பை பார்த்தவுடனே அத்தனையும் வாசிக்க தூண்டுகிறது..
ReplyDeleteவலைச்சரத்தில் நம்மை யாராவது அறிமுகப்பட்டத்த மாட்டார்களா என்று ஏங்கியதுண்டு. அது இன்று தருமதி.சாகம்பரி அவர்கள் மூலம் நிறைவேறியிருக்கிறது.
ReplyDeleteவலைச்சரத்திற்கும் மிகச்சிறப்பான அறிமுகம் கொடுத்து முதல் வரிசையில் எனது பதிவை அறிமுகப்படுத்திய சாகம்பரி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
யாரோ ஒரு தேவதை நமக்காக காத்திருக்கிறது என்ற உணர்வு வராதவரை கல்லூரிக்குள்ளோ அல்லது அலுவலகத்திற்குள்ளோ உற்சாகமாக செல்லத் தோன்றாதாம். /
ReplyDeleteதேவதை ஒன்று சிறப்பான பகிர்வுகளைத்தரும் என்று வலைச்சரம் நாடி வந்தமைக்கு அருமையான அறிமுகங்களைத்தந்து
அசத்தியற்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்..
உங்கள் பதிவுகளின் தரமே சொல்கிறது, ஆழ்ந்த திட்டமிடலே இதன் அடிப்படை என்று. மிகவும் சுவையாகவும் பயனுள்ளதாகவும் கூடிய முன்னுரையுடன் நல்ல பதிவுகளையும் படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்தி ஊக்குவிப்பதற்கு நன்றியும் பாராட்டுகளும் சாகம்பரி.
ReplyDeleteஅம்மா வலைச்சரத்தில் என் தளத்தை பற்றி கூறியதுக்கு மிக்க மகிழ்ச்சி அம்மா.
ReplyDeleteநான் ரசித்த, படித்த, பயனுள்ள பதிவுகளை தான் இடுகிறேன்...
இதை மற்றவர்கள் பயன்பெற வேண்டும் என்று தான் இடுகிறேன்.....
என் தளத்தை பற்றி தெரியாதவரும் தெரிந்துக்கொள்ள உதவியதுக்கு மிக்க நன்றி அம்மா....
இதனால் இன்னும் சிலர் பயன் அடைவார்கள் என்று நம்புகிறேன்....
உங்ளுக்கு என் மனமார்ந்த நன்றி அம்மா.......
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
:)
மிக்க நன்றி திரு.சண்முகவேல்
ReplyDeleteஅமைதி அப்பா said..
ReplyDeleteதங்கள் வலைப்பூவை அறிமுகம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி சார்.
தங்கள் கருத்து மகிழ்விக்கிறது. நன்றி ஆசியா மேடம்
ReplyDeleteநன்றி கவிப்பிரியன். கடித இலக்கியம் வளர்க்கும் உங்கள் வலைப்பூ சிறக்க வேண்டும் வாழ்த்துக்கள்.
ReplyDelete//தேவதை ஒன்று சிறப்பான பகிர்வுகளைத்தரும் என்று வலைச்சரம் நாடி வந்தமைக்கு அருமையான அறிமுகங்களைத்தந்து
ReplyDeleteஅசத்தியற்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்..//
தேவதை....!
ரொம்ப ரொம்ப நன்றி தோழி. ஆனாலும் நான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்காமல் அமைதியாகவே இருக்கிறேன் என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். நம்புங்கள்.
தொடர் வருகைக்கு மிக்க நன்றி கீதா.
ReplyDeleteஉங்கள் வலைப்பூவில் அக்கரை மிளிர்கிறது பிரபா. நிறைய பதிவுகள் முத்துக்கள் போலவே. மிக்க நன்றி
ReplyDeleteகாத்திருக்கும் தேவதை பற்றிய குறிப்பினை மிகவும் ரசித்தேன், நல்ல பல பதிவுகளையும் தளங்களையும் உங்களால் அறிமுகம் பெற்றேன்!
ReplyDelete@நம்பிக்கைபாண்டியன்
ReplyDeleteபாராட்டிற்கு நன்றி சகோ.