07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, January 13, 2012

நாள்-5 (மாலை) -வழிகாட்டிகள் இவர்கள்!


ஒரு  கணினி உபயோகிப்பவரின் சந்தேகம்”எனது மின்னஞ்சலுக்கு பெறுநரிடமிருந்து பதில் வரவேண்டுமென்றால் நான் ஒரு சுய விலாசமிட்ட,   தபால் தலை ஒட்டப்பட்ட உறை இணைக்க வேண்டுமா?!”
--------------------------------------------
ஒரு பெண் திரும்பத் திரும்ப வாசலுக்கு வந்து கடிதப் பெட்டியைத் திறந்து    பார்த்து விட்டுச் சென்று கொண்டிருந்தாள்.

பக்கத்து வீட்டுக்காரர் அவளைக் கேட்டார்”என்ன செய்கிறீர்கள்”

அவள் சொன்னாள்”இந்த முட்டாள் கணினி ’தபால் இருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது.வந்து பார்த்தால் ஒன்றும் இல்லை!”
------------------------------------------
   
இன்றைய கால கட்டத்தில் கணினி என்பது ஒரு இன்றியமையாத சாதனமாய் மாறியிருக்கிறது.சாதாரணமாகக்  வீட்டுக்கணினிகளைப் பெரும்பாலோர்,மின்னஞ்சல் அனுப்பவும்,பெறவும் அல்லது அயல்நாட்டு உறவுகளோடு உரையாடவுமே பயன் படுத்துகிறார்கள்.  என்னைப் போன்று சிலர் அதற்கும் மேல் வலைப்பூ எழுதவும் பயன் படுத்து கிறார்கள்.இவர்களுக்கு அதிகப்படியான தொழில் நுட்பமெல்லாம் தெரியாது. அதெல்லாம் கிரேக்கமும் லத்தீனும்தான்தான். அப்படிப்பட்டவர்களுக்காகத் தொழில் நுட்பத்தை எளிதாக்கிப் புரிய வைக்கும் வித்தகர்கள் பலர் இருக்கிறார்கள்.இது வரை அவர்களைத் தொடுக்காத சரம் இல்லை. அவர்களில் சிலர்..   

மனித உடலுக்குப் பிரச்சினையென்றால் மருத்துவரிடம் போகிறோம். கணினிக்கு என்ன பிரச்சினை என்று அறிய சிஸ்டம்டாக்டரைப்  பார்க்கச் சொல்கிறார் வேலன்!--- 

புதிதாக வலைப்பூ தொடங்க விருப்பமா?கவலை ஏன்?உதவுகிறார் ப்ளாக்கர் நண்பன்.ப்ளாக் தொடங்குவது எப்படி என்று இதுவரை 13 பகுதிகள் எழுதியிருக்கிறார்-
 
புதிய ப்ரிண்டர்,மானிட்டர் போன்ற உபகரணங்கள் வாங்க வேண்டுமா?     வாங்கும் முன் கவனிக்க என்று பதிவுகள் எழுதியுள்ளார் இவர்.


உங்கள் ப்ளாக்கில் நகரும் ஃபெவிகான் இணைக்க வேண்டுமா?
பாருங்கள்   பொன்மலர்பக்கம்-

உங்கள் பதிவின் முடிவில் கையெழுத்து வரவைக்க வேண்டுமா?        இதோ பதில் தருகிறார் வைரை சதீஷ்-

உங்கள் டெஸ்க்டாப் ஐகான்களை அழகு படுத்த என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்  சூர்யாகண்ணன்.

கூகிள் ஆட்சென்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் அதை எப்படிப் பெறுவது என்பதெல்லாம் பலருக்குத் தெரியாது.இது குறித்த சந்தேகங்களுக்குப் பதிலளிக்கிறார் பிரபுகிருஷ்ணா.நாமும் கற்போம்!

நீங்கள் வீடியோக்கள் தரமிறக்குவதில் விருப்பம் உள்ளவரா? அனைத்துவித தளங்களில் இருந்தும் வேகமாக வீடியோக்கள்     தரமிறக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார் வடிவேலன்.

மிக ரகசியமான செய்தி ஏதாவது மின்னஞ்சலில் அனுப்ப வேண்டுமா? அதற்கென்றே ஓர் இணையதளம் இருக்கிறதாம். சொல்கிறார்  சிம்மன்

உங்கள் கணினியில் இணைய வேகத்தை அதிகரிக்க வேண்டுமா? அதற்கு வழி சொல்கிறார் கவிரூபன்

நாளை வேறு சரம் தொடுக்கலாம்!

12 comments:

  1. அனைத்தும் சிறந்த வலைதளங்கள்...!அனைவருக்கும் உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்..!

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. கணினியை உபயோகப்படுத்துவோர் எண்ணிக்கை கூடிவரும் இந்நாளில், எல்லோருக்கும் தேவைப்படுகின்ற தொழில் நுட்ப பதிவுகளை தொகுத்து வழங்கியுள்ளமைக்கு நன்றி.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அனைத்தும் சிறந்த தளங்கள் தொழில் நுட்ப பதிவுகளை தொகுத்து வழங்கியுள்ளமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. அறிமுகப் படலம் மிகவும்
    செம்மை!

    அனைவருக்கும் உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்..!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. உபயொகமான தகவல்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. நன்றி நண்பரே.

    ReplyDelete
  8. Found useful. You seem to have collected nice and wonderful data about anything and everything under the sun. Why dont u post something on certain simple DIY . Vasu

    ReplyDelete
  9. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது