07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, January 14, 2012

நாள்-6 -பொங்கி வரும் புதுப்புனல்!

சென்ற ஆண்டு - 2011-கலக்கத்தொடங்கியிருக்கும் சில பதிவர்கள் பற்றிய பதிவு இன்று.

தேடல் கொண்டவர்கள் இளைப்பாறிச் செல்ல தண்ணீர்ப்பந்தல் அமைத்திருக்கிறார் வே.சுப்ரமணியன்.இவரது கடவுள், கத்தரிக்காய்,  வெங்காயம், மனிதன் ஒரு நல்ல பதிவு.

மனிதனின் மகிழ்ச்சிக்குத் தேவையான் மூன்று முத்துக்கள் என்ன தெரியுமா?சொல்கிறார் திண்டுக்கல் தனபாலன்.

குடியா குடிமகன் இவரின் படைப்பு, மரணம்-அதை ஒரு சிறுகதை முயற்சி என்று சொல்கிறார் இவர்--ஒரு சிறந்த சிறுகதை.




இவர் தி.தமிழ்இளங்கோ பக்குடுக்கை நண்கணியாரின் புறநானூற்றுப் பாடல் பற்றிய இவரது பதிவில் இலக்கிய மணம் கமழ்கிறது.

எனக்குப் பிடித்தவை உங்களுக்கும் பிடிக்கும் என்று சொல்லும்  இவருடைய உன்னோடு நானிருந்த  என்ற கவிதை நினைவில் நிற்கும்.

2010 இல் பதிவு தொடங்கினாலும் 2011 இல் தான் அதிகம் எழுதியிருக்கிறார் டி.என்.முரளிதரன்.இவரது காதில் விழுந்த கவிதை குட்டிக் கவிதைதான். ஆனால் ’நச் ’ ரகம்


முன்பனிக்காலம் பூவின் பெயர்.24 பதிவுகள் எழுதியிருக்கிறார்.இதைப் படித்துப் பாருங்கள்

2010 இல் தொடங்கப்பட்டாலும் இந்த வீடு  2011 இலிருந்துதான் அதிக நடமாட்டம் உடையதாக இருக்கிறது!பாருங்கள் சுரேஷ்குமாரின்  அழகிய வீடு.


இவர்  ”ஒயினுக்குப் பேர்போனது கோவா... ஒலகத்துல நடக்குறத எழுதுறேன் ராவா...”  என்ற அறிமுகத்தோடு பதிவிடுகிறார்-மதுரை அழகு.


விநோதினியின் இந்தக் கிறுக்கல்களை ரசிக்கலாம்

ப.பிரகாஷ் அவர்களின் பெயரில்லாத வலைப்பூ! கொஞ்சம் வித்தியாசமான சிந்தனைகள்.ஒரு உதாரணம்


இவை மணம் வீசும் ஒரு சில புது மலர்களே.இன்னும் உண்டு எத்தனையோ வாசப் புது மலர்கள்.தேடிப் படியுங்கள்!


 

24 comments:

  1. அறிமுகத்திக்கு மிக்க நன்றி அய்யா!அனைவரும் சிறந்த முத்துகள்தான்

    ReplyDelete
  2. அருமையான அறிமுகம். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிமையான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பொங்கி வரும் புதுப் புனல்களின் அறிமுகம் அருமை
    அனைவருக்கும் இனிய தமிழர் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தொடரட்டும் உங்களது செம்மையான பணி .வாழ்த்துக்கள்.இனிய பொங்கல் வாழ்த்துக்களும் /

    ReplyDelete
  5. மிக்க நன்றி அய்யா! இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. நல்முத்துக்கள் அனைத்தும்! நன்றி!

    ReplyDelete
  7. புதிய முத்துக்கள்-தமிழில்
    பொங்கும் சத்துக்கள்!

    அரிய அறிமுகம் அனைவருக்கும்
    பொங்கல் வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. அறிமுகப்பதிவர்கள் அனைவருககும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வணக்கம்! மூத்த வலைப் பதிவர் நீங்கள். தங்களது வாசகர்களில் நானும் ஒருவன். எனது வலைப்பதிவையும் பாராட்டி மற்றவர்களும் அறிய செய்தமைக்கு மிக்க நன்றி! பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. முன்னணிப் பதிவராகிய தாங்கள் எனது பதிவை உங்கள் பதிவில் பாராட்டியதை பெருமையாகக் கருதுகிறேன். தங்களின் ஆசியுடன் மேலும் நல்ல பதிவுகளை இடுவதற்கு முயற்சி செய்வேன்.நன்றி அய்யா!

    ReplyDelete
  11. இப்போதுதான் பயணம் மேற்கொண்டு, நடு கடலில் ஒரு சிறிய படகு, தான் செல்லும் வழி சரிதானா? என்று குழம்பி தவித்துக்கொண்டிருக்கும் வேலையில், அந்த சிறிய படகிற்கு முன்னே வெகு தொலைவில் சென்று கொண்டிருக்கும் ஒரு பெரிய கப்பல், “வா நண்பனே! நீ சரியான திசையை நோக்கித்தான் துடுப்பு வீசி வந்து கொண்டிருக்கிறாய்!” என்று அந்த சிறிய படகிடம் பாராட்டி வழி காட்டும்போது, அந்த சிறிய படகு எவ்வாறு மகிழ்வுடனும், தெளிவுடனும், நம்பிக்கையுடனும், துடுப்பு வீசுமோ, அதே நிலைமையில் நான் இப்பொழுது இருக்கிறேன் அய்யா! தாங்கள் கொடுத்த இந்த ஆதரவு, என்னை மிக வேகமாக செயல்பட தூண்டுகிறது அய்யா! எனது வலைப்பதிவை அனைத்து நல் உள்ளங்களிடமும் எடுத்துசென்றதற்கு, எனது மனம் திறந்த நன்றி அய்யா! தங்களது பணி என்றும் தொடர்ந்து சிறக்க ஆசைப்படுகிறேன் அய்யா! தங்களுக்கும், தங்களுடைய அன்பு உறவுகளுக்கும், எனது இனிமையான, தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் அய்யா!

    ReplyDelete
  12. நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். இனிய பொங்க்ல் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. வணக்கம்! மூத்த வலைப் பதிவரான நீங்கள் என்னை அறிமுகம் செய்தமைக்கு, தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன் ஐயா!. மிக்க நன்றி!

    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. அறிமுகப்பதிவர்கள் அனைவருககும் வாழ்த்துக்கள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
    அன்பிற்கினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. நல்ல பகிர்வு.அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். இனிய பொங்க்ல் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. பொங்கிவரும் புதுப்புனலில் 2012 ல் கலக்கத்தொடங்கியிருக்கும் புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
  19. பொங்கி வரும் புதுப்புனல் எல்லாம் அருமை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. வலைச்சரத்தில் நானா? எதிர்பார்க்கவேயில்லை. நன்றி அய்யா? இந்த அறிமுகம் என்னை ஊக்கப்படுத்துகிறது...

    ReplyDelete
  21. வித்யாசமா அறிமுகம் செஞ்சிருக்கீங்க. நன்றி அய்யா.

    ReplyDelete
  22. இது மிகவும் எதிர்பார்க்காத, மிக அதிகமான ஒரு இன்ப அதிர்ச்சி...அன்புடன் நன்றிகள் பல..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது