07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 1, 2012

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் வைரை சதீஷ் தான் ஏற்ற பொறுப்பினை அதிக ஈடுபாட்டுடன் நிறைவேற்றி நான்கு பதிவுகள் இட்டு ஏறத்தாழ ஐம்பத்து ஐந்து மறுமொழிகள் பெற்று, முப்பத்து மூன்று பதிவர்களின், தன்னுடைய பத்து பதிவுகள் உள்ளிட்ட, ஐம்பத்து நான்கு பதிவுகளையும் அறிமுகப்படுத்தி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார். இவர் தானே புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் மழையினால் உடல் நலமின்றி மூன்று நாட்கள் இணையத்தின் பக்கம் வர இயலாமையினால் குறைந்த பதிவுகளே இட முடிந்ததென வருத்தத்தோடு கூறினார். இவர் நம்மிடமிருந்து இன்று விடை பெறுகிறார்.

இவரைப்பாராட்டி, சென்று வருக ! என வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுபேற்க அன்புடன் இசைந்துள்ள திருமதி கோமதி அரசு அவர்கள் பாளையங்கோட்டையைச் சார்ந்தவர். சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக உலக சமுதாய சேவா சங்கத்தில் சேர்ந்து யோகா ஆசிரியையாகச் சேவை செய்கிறார். கணவர் ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர்.

திருமதி கோமதி அரசு அவர்கள் திருமதி பக்கங்கள் என்ற வலைத் தளத்தில் எழுதி வருகிறார். இவரை வருக வருக ! என நல்வாழ்த்து கூறி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் வைரை சதீஷ்

நல்வாழ்த்துகள் திருமதி கோமதி அரசு

நட்புடன் சீனா

10 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வைரை சதீஷ் , அருமையான பணிக்கு நன்றிகளும்,
    அடுத்து வருபவருக்கு வாழ்த்துக்களும்
    தங்களுக்கு
    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே

    ReplyDelete
  3. அன்பு நண்பர் சதிஷின் உடல் நிலை தேறிவர இறைவனை இறைஞ்சுகிறேன்.

    அடுத்து வலைச்சரம் தொடுக்கவரும் கோமதி அம்மாவை
    மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்.

    ReplyDelete
  4. நல்வாழ்த்துகள் வைரை சதீஷ்

    நல்வாழ்த்துகள் திருமதி கோமதி அரசு

    நட்புடன் சீனா ஐயாவுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. சிறப்பான பதிவுகளுக்குப் பாராட்டுகள் வைரை சதீஷ்.

    நல்வாழ்த்துகள் கோமதிம்மா!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் வைரை சதீஷ். உடல்நலம் தேறி வர ஆண்டவனை வேண்டுகிறேன்.

    புதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வைரை சதீஷ் தங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நல்வாழ்த்துகள் வைரை சதீஷ்

    நல்வாழ்த்துகள் திருமதி கோமதி அரசு

    நட்புடன் சீனா ஐயாவுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்..

    ReplyDelete
  9. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

    உடல் நலக் குறையோடு தன் பணியை சிறப்பாக செய்த சதீஷ்க்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. ஆஹா “
    "செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்"
    என்ற தலைப்பே எவ்வளவு அழகாகக் கொடுக்கப்பட்டுள்ளது! ;))))

    “கோமதி அரசு”
    இந்தப்பெயர் நான் எங்கோ கேள்விப்பட்டதாக நல்ல பரிச்சயம் உள்ளதாகத் தெரிகிறதே! ;))))))

    ஆஹா! இப்போது நினைவுக்கு வந்து விட்டது எனக்கு!

    உலகத்தையே தன் இரு கைகளுக்குள் அடக்கிக்கொண்டு
    எத்தனை முறை என் பதிவுகளுக்கு ஓடோடி வந்து பின்னூட்டங்கள் கொடுத்து மகிழ்வித்துள்ளார்கள். அவர்களை என்னால் அவ்வளவு சுலபமாக மறக்க முடியுமா என்ன? ;))))))))

    அவர்கள் பின்னூட்டம் அளித்தாலே, உலகமே ஒன்று திரண்டு வந்து பின்னூட்டம் அளித்தது போல ஒரு மனநிறைவு ஏற்படுமே! ;))))))

    மிகச்சிறப்பான ஒரு நபரை தேர்ந்தெடுத்து வலைச்சர ஆசிரியராக நியமித்துள்ள, நம் பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு சீனா ஐயா அவர்களுக்கும், வலைச்சரக் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    வாருங்கள் திருமதி கோமதி அரசு அவர்களே!

    தாருங்கள் பல நல்ல அறிமுகங்களை!!

    என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களுடன் உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    WELCOME

    வை. கோபாலகிருஷ்ணன்
    gopu1949.blogspot.com

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது