07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, February 29, 2012

மனிதனைக் கண்டு பிடித்தது பைங்கிளி

சாலையில் எத்தனையோ அனாதையாக விடப்பட்ட பெரியவர்களைப் பார்க்கிறோம்..
ஆனால் ஐயோ பாவம் என்ற வார்த்தையுடன் அவர்களைக் கடந்து செல்கிறோம்.
ஆனால் இந்த வலைபதிவர் ஈரம் மிக்க மனதுடன் அவர்களைக்  காப்பாற்றி 
உரியவர்களிடம் சமர்ப்பிக்கிறார். இவரை விட உயர்ந்த மனிதர் 
யாரேனும் உண்டோ உலகத்தில்.

ராஜம்மாளைப்  பாருங்கள் இவரைப்போல எத்தனை மனிதர்கள் நகைக்காக அழைத்து வரப்பட்டு எங்கோ ஒரு மூலையில் அனாதையாக விடப்பட்டுள்ளார்களோ?   


                                    
   
உறவினரே மனம் மாறி அனாதையாக விடப்பட்ட அலமேலு அம்மாளை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். 

                                        
மகனாலேயே அனாதையாக விடப்பட்ட 80௦  வயது பாட்டி மரண நேரத்தில் மகனைச் சந்தித்திருக்கிறார் 


மனநிலை பாதிக்கப்பட்ட நிர்மலா குணமடைந்த அதிசயம். 
                                                 



போகும்போது வாழ்கையில் என்னதாங்க கொண்டு போகப் போகிறோம் 
இந்தப் பதிவரை அமெரிக்க பத்திரிக்கை ஒன்றும் பெருமைப்படுத்தி உள்ளது.

மகேந்த்ரனைப் போல பதிவர்களும் ஈரமுள்ளவர்களும் பதிவுலகத்தில் தோன்றிட 
வலைச்சரம்  போன்ற இணையங்கள் உறுதுணை புரியவேண்டும்.
                            

இப்படிப்பட்ட ஈரமுள்ள பதிவர்களை யாரேனும் பார்த்திருந்தால் பின்னூட்டமிட்டுச் செல்லவும் மறக்காமல் .


சிந்திக்க தூண்டும் சில பதிவுகள் 


மெத்தனமாக இருந்து விடாதீர்கள் என்று எத்தனம் பதிவு நம்மை சாதிக்க தூண்டுகிறது கே.ஆர் .ஸ்ரீதர் போல .



1800 க்கும் மேல் பதிவுகளை தேன் தமிழில் எழுதி அரசியல் வாதியாய் இருந்தால் என்ன? ஆளும் கட்சியாய் இருந்தால் என்ன 
அம்பானி கம்பெனியில் தயாநிதிக்கு பங்கு என்று படிக்கத் தூண்டுகிறார். 



நடந்த கதை குறும்படத்தை நம் கண்முன் நிழலாடச் செய்கிறது திரை பறை பதிவுலகம். 


எப்போதேனும் நினைத்து வருந்தியிருக்கிறீர்களா சாஜகானின் கவிதையை அடர் கருப்பில் சென்று ஆழ்ந்து படித்துப் பாருங்கள். 


காவல் கோட்டம் ஒரு அனுபவம் சந்தேகமா தமிழ் வீதியில் நடந்து தெரிந்து கொள்ளுங்கள்.


புதிய பதிவர்களின் திறமைகளைக் காணலாம் இப்போது 



எண்ணங்களும் திரை வண்ணங்களும் வலைப்பதிவிற்குச் சென்றால்..

கேள்வியைத் தேடும் படம் பார்த்ததுண்டா நீங்கள் சினிமா சினிமாவிற்குச் சென்று வாருங்கள். 

அண்டை வீட்டாரிடம் அன்பு செலுத்த இறைவனிடம் கை ஏந்துங்கள்.

எல்லைகள் இல்லாமல் நீண்டு கொண்டே போகிறது 

நம்மைத் தொட்டுவிட்டுச் செல்கிறது தமிழ்க் காற்று .



நாளை எதைப் படிப்பது எதை விடுவது 
இவருக்கு எது தெரியாமலிருக்கும் என்று 
ஆராய்ச்சி செய்ய வைக்கும்  சகலகலா வல்ல வலைப்பதிவு ஒன்றுக்கு 
அழைத்து செல்லும் தமிழ்ப் பைங்கிளி.
                                     


மேலும் வாசிக்க...

Tuesday, February 28, 2012

தேடித் திரிந்தவனைத் தேடிப் பிடித்தது பைங்கிளி


தேடித் திரிவோம் வா 
இப்படி ஒரு வலைப்பதிவா என்று நம்மையெல்லாம் சிந்திக்க வைக்கிறது 
கல்லூரி மாணவரின் வலைப்பதிவு. 


ஒருவன் நம்மிடம்  என்ன சொல்ல வருகிறான் என்பதைக்
 கேட்கக் கூட நேரமில்லாத இயந்திரத்தனமான உலகில் இங்கு ஒருவர் 
அர்த்தமுள்ள சில மனிதர்களை தேடித் தேடி எழுதுகிறார்.

ராமேஸ்வரம் மீனவர்களின் பாடலை இசைக்கருவிகள் இல்லாமல்  நம் காதுகளுக்கு விருந்துவைக்கிறார் கடற்கரை ரம்மியத்துடன்..   

யாருக்காவது தெரியுமா 
இந்தவலைப் பதிவில்  பார்ப்பதற்கு முன்பே உங்களுக்குத் தெரிந்திருந்தால் மறக்காமல்  பின்னூட்டம் இட்டுச் செல்லவும். 

ஆழ்வார் தாத்தாவின் கல்விப்பணி சோம்பேறிகளை சிந்திக்க வைக்க்கும்.

            ***
காணாமல் போகும் சிட்டுக்குருவிகள் பற்றி நரிக்குறவர் ஒருவர் சொல்கிறார் கேளுங்கள்,பாருங்கள்.


தமிழ் கற்ற பேராசிரியர் ஹிரோசி ய்மாஷிடோ தெரியுமா? 
அணு உலை மின்சாரத்தைப்பற்றி இவர் என்ன சொல்கிறார் 
இந்தப்பதிவினைப்  படிக்கும்போது 
தமிழ் இவருடன் இருக்கிறதா 
நம்முடன் இருக்கிறதா சந்தேகமாக இருக்கிறது.

சென்னையில் ஒரு அரண்மனை இவர் கண்ணில்  மட்டும் பட்டுள்ளது.

 தனுஷ்கோடியைப் பற்றி யாருக்கெல்லாம் தெரியும் தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடுங்கள்.

சென்னைத் தொலைகாட்சி நிலையத்தில் எனக்கு செய்திப்பிரிவைதவிர வேறொன்றும் தெரியாது
பொன்விளையும் பூமி என்று புதிதாய் சொல்கிறார் கேளுங்கள் .

மருத்துவமனை ஒன்றுக்கு யாரேனும் சிகிச்சை அளியுங்கள் என்கிறார் தைரியமாக.

 கடலில் கண்ணீர் கலக்கிறது என்று கண்ணீருடன் கூறுகிறார்.

இப்படித் தாம் தேடித் தேடி சமுதாயச் சிந்தனையுடன் எழுதிக் கொண்டிருக்கும் கல்லூரி மாணவர் ராமேஸ்வரம் ரபி அவர்களது  வலைத்தளத்தினைப்போல வலைப்பதிவுகள் தோன்ற வேண்டும்.
                                      @@@@@@@@@@@@


சிதறிக் கிடக்கும் சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் 


தெரியாமலே போகட்டுமென்று 
தமிழன் வலை சொல்கிறது.


 ஒரு இருபது ரூபாய்க்கு கேரளா வீதியில் நின்ற தமிழன் 
பணத்தை விரித்து படுத்துக்கொள்ளும் சுயநலவாதிகள் படிக்க வேண்டிய  
சாம்பல் தேசத்தின் சாம்பல் துளிகள். 

 பொங்கல் என்றாலே அடுப்பும் பானையும் தான் நம் கண் முன் வரும்.
 அசாக் கேட்கிறார் எரிபொருள் எங்கே என்று ?

நல்லமனதுடன் 6 ,40 ,  000,௦௦௦ ௦௦௦ ௦௦௦ பிள்ளைகளுக்கு உதவ அழைக்கிறார் 
நண்டு @நோரண்டு .

முகம்மது ஆசிக்கின் வெஸ்டன் டாயிலெட் அறிவுரையை அனைவருமே உற்று நோக்கலாம்.
                                       @@@@@@                               

இனி புதிய வலைதளங்களுக்குப் பறக்கலாம் 

எப்படிப்பாட வேண்டுமென்று தமிழிசைக் குரல் கொண்டு 
குழல் ஊதுகிறார்.



இந்த முல்லைக்  கடல் அலை முத்தின் சிப்பி போல எண்ணங்களையே தனது பதிவின் வண்ணங்கள் ஆக்குகின்றார்.  

இவர் ஊர் சாலைகளை பல்லாங்குழி என்கிறார் நகைச்சுவையாக இந்த தேன்சிட்டு. 

சிட்டுக் குருவி இவரிடம் சிறைவாசியாய் நியாயம் கேட்பதைத் தண்ணீர்ப் பந்தலுக்குச் சென்று இளைப்பாறிக் கொண்டே படிக்கலாம் .

தமிழ்க் கவிதை தங்கச் சுரங்கத்தில் அன்றாட அறிவியலா ?வியக்கிறது கவிதையே.

நாளையும் ஒரு அருமையான ஈரப்பதிவருடன் உங்களை தமிழ்ப் பைங்கிளி தளங்களுக்கு அழைத்துச் செல்வாள்.
                                                  
நன்றி நண்பர்களே .





மேலும் வாசிக்க...

Monday, February 27, 2012

பனியில் பணியைத் தொடங்கும் பைங்கிளி


வணக்கம் வலைச்சர அன்பர்களே,
தேடிச் சோறு நிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்ப மிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

என்று பாடிய மாகாகவி பாரதியார் பிறந்தமண்ணில்

தமிழூர் என்ற ஊரையே உருவாக்கி தமிழுக்காக
தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்துவரும்
அறிஞர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களுடைய ஊர் அருகில்

மூத்த எழுத்தாளர் கலாபிரியா அவர்கள் வாழ்ந்து வரும் கிராமம் தான்
எனது ஊர் இடைகால்.

எனது உண்மையான பெயர் அருள்மொழி.

எனது வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு காட்டுக் கிளியின் பெயரே தமிழ்ப் பைங்கிளி.
என் தந்தை நான் எழுதிய முதல் கவிதைக்கு அத்தான் மட்டும் புனைப் பெயராகச் சூட்டினார்.

தமிழ் இலக்கியம் முடித்துவிட்டு கடந்த மூன்று வருடங்களாகப் பொதிகைத் தொலைக்காட்சியில் தமிழ் செய்திவாசிப்பாளராக சென்னையில் பணிபுரிந்து வருகிறேன்.


14 வயதில் என்னுடைய கவிதைப் பயணம் ஆரம்பித்து இன்றுவரை தொடர்கிறது.
ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம்தான் வலைப்பதிவினை ஆரம்பித்து கவிதைகளை எழுதி வருகிறேன்.


எத்தனையோ மிகச் சிறந்த மூத்த பதிவர்கள் வலைதளங்களில் உலா வரும் வேளையில்
இந்த சிறியவளையும் மதித்து பொறுப்பினை அளித்த வலைச்சர குழுவிற்கும் சீனா அய்யா அவர்களுக்கும்
வலைப் பதிவர்களைப் பெருமைப்படுத்திவரும் ஈரோடு சங்கமம் குழுவினருக்கும்
முதன் முதலில் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய வீடு சுரேஷ் குமார்,திரு .சம்பத் அவர்களுக்கும்
நன்றிகள்.



படத்தைப் பார்த்து கவிதை எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
இப்படி படம் பார்த்து கவிதைகள் எழுதிஉள்ளேன் .



என்னைப் போல எனக்குப் பிடித்த கவிதை

பிறப்பிற்கொரு ஒப்பாரி சமுதாயத்திற்காக

ஒரே ஒரு முத்தம் காதல் கவிதைகள் .

என்னுடைய சுய புராணங்களை இத்துடன் முடித்துக் கொண்டு
வரும் ஆறு நாட்களுக்கு
சமுதாய சிந்தனையுடன்
புதிய பதிவர்களுடன்,
சிந்திக்கத்தக்க கருத்துக்களை எழுதக் கூடிய பதிவர்களையும்,
வியக்கவைக்கும் பதிவர்கள்
1 தேடித் திரிகிறான் இங்கொருவன்
2 இவர்தான் மனிதன்
3 இவரிடம் தமிழ்வந்து தமிழ் கற்றுக்கொள்ளும்
4 கண்ணீர்தான் சொந்தம்
5 எண்ணங்களுக்குச் சொந்தக்காரன்
6 சகலகலா வல்லவன்

இப்படிப்பட்ட ஆறு அருமையான வலைப்பதிவுகளைப் பற்றியும்
உங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறேன். நன்றி.
- நாளையிலிருந்து தமிழ்ப் பைங்கிளி வலைதளங்களுக்கு அழைத்துச் செல்வாள் வலைச்சர நேயர்களை.

மேலும் வாசிக்க...

Sunday, February 26, 2012

சம்பத் குமார் விடை பெறுகிறார் - தென்காசித் தமிழ்ப் பைங்கிளி பொறுப்பேற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே !

அனைவருக்கும் வணக்கம்.

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் சம்பத் குமார் - தான் ஏற்ற பொறுப்பினை நிறைவேற்றுவதற்காக, கடுமையாக உழைத்து, பலப்ப்ல பதிவர்களையும் அவர்களது பதிவுகளையும் தேடித்தேடி - கண்டு பிடித்து - அறிமுகப்படுத்திய விதம் நன்று. புதுப் பதிவர்களையும் அறிமுகப் படுத்துவதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு பலரையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். அறிமுகப் படுத்தப் பட்ட பதிவுகளில் எல்லாம், அறிமுகப்படுத்திய விபரத்தினை மறுமொழியாகவும் இட்ட நல்ல செயலினையும் புரிந்திருக்கிறார்.

அறிமுகப்படுத்துவதற்கு எடுத்துக் கொண்ட தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகள். அததனையும் அருமை. பிளாக்கர் டிப்ஸ், மனம் கவர்ந்த பதிவுகள், கவிதைச் சரம், பெண் சிற்பிகள், பல்சுவைப் பதிவர்கள், ஃபேஸ்புக் மற்றும் கூகுள்+ டிப்ஸ் எனக் கலக்கி விட்டார். அத்தனையும் அருமையான அறிமுகங்கள்.

அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களும் பதிவுகளும் : 146
தான் எழுதியதில் அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுகள் : 16
பெற்ற மறு மொழிகள் :445

நாளை முதல் துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் தென்காசியினைச் சார்ந்த தமிழ்ப் பைங்கிளி. இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசியினைச் சார்ந்த இடைக்கால் கிராமத்தினை சொந்த ஊராகக் கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்று - தற்போது பொதிகைத் தொலைக் காட்சியில் தமிழ்ச் செய்தி வாசிப்பாளராகப் பணி புரிகிறார்.

14 வயதிலேயே தன்னுடைய கவிதைப் பயணத்தினைத் துவக்கியவர்.முதல் கவிதைக்கு, இவர் வளர்த்த கிளியின பெயரினையே - இவரது தந்தை - கவிதை எழுதியவருக்குப் புனைப் பெயராக - தென்காசித் தமிழ்ப் பைங்கிளி - சூட்டி விட்டார்.

சம்பத் குமாரினை நன்றியுடன் வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன். தென்காசித் தமிழ்ப் பைங்கிளியினை வருக ! வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் சம்பத் குமார்
நல்வாழ்த்துகள் தென்காசித் தமிஅழ்ப் பைங்கிளி

நட்புடன் சீனா



மேலும் வாசிக்க...

பேஸ்புக் டிப்ஸ் கூகுள் ப்ளஸ் டிப்ஸ்



வணக்கம் நண்பர்களே வலைச்சர ஞாயிறு. நமது எண்ணங்களையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்த உதவுகிறது ப்ளாக்கர் தளம்.ஆயினும் என்னதான் நாம் நமது வலையில் பதிவுகளை பதிந்து வைத்தாலும் உலகில் உள்ள தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பது சமூகவளைத்தளங்களான பேஸ்புக்,டிவிட்டர் மற்றும் கூகுள் ப்ளஸ் போன்றவையே.இதை தவிர தமிழ் திரட்டிகளும் உதவுகின்றன.தமிழ் பதிவர்களுக்கு உதவும் சமூகவலைத்தள டிப்ஸ் மற்றும் தமிழ் திரட்டிகளின் டிப்ஸ் ஆகியவ்ற்றை இன்றைய சரமாக உங்களிடம் சமர்பிக்கின்றேன்.நிச்சயம் இதுவும் உங்களுக்கு கண்டிப்பாக உதவும் என்ற நம்பிக்கையில்

இதற்கு முந்தைய பாகம் ப்ளாக்கர் டிப்ஸ் 2012 படிக்க...

பேஸ்புக் டிப்ஸ் 

FACEBOOK உருவான வரலாறு
http://www.thangampalani.com/2011/12/face-book.html

FACEBOOK ல் பக்கம் உருவாக்குவது எப்படி ?
http://www.bloggernanban.com/2011/06/facebook-fan-page.html

FACEBOOK ல் GROUP உருவாக்குவது எப்படி ?
http://www.vandhemadharam.com/2011/11/group.html

FACEBOOK ல் பதிவுகளை பகிர்வது எப்படி ?
http://www.bloggernanban.com/2011/05/blog-post_374.html

FACEBOOK ல் TIMELINE வசதி ஆக்டிவேட் செய்வது எப்படி ?
http://www.bloggernanban.com/2011/12/facebook-timeline.html

TIMELINE BANNER க்கு விதவிதமான படங்கள் வைக்க
http://www.vandhemadharam.com/2011/12/timeline-cover-banner-5.html

FACEBOOK ல் வரவேற்பது எப்படி ?
http://www.bloggernanban.com/2011/11/blog-post.html

ப்ளாக்கர் பதிவுகளை FACEBOOK ல் தானாக அப்டேட் செய்ய..
http://ponmalars.blogspot.in/2012/02/rss-graffiti.html

GMAIL ல் FACEBOOK கணக்கை கொண்டுவர..
http://www.vandhemadharam.com/2011/02/blog-post_15.html

இணைய தொடர்பு இல்லாமல் facebook உபயோகிக்க
http://www.karpom.com/2012/01/access-facebook-without-internet.html



கூகுள் ப்ளஸ் டிப்ஸ்

GOOGLE PLUS ல் ஒரு பக்கம் உருவாக்குதல்
http://www.bloggernanban.com/2011/11/google-pages.html

GOOGLE PLUS அப்டேட்களை ப்ளாக்கில் தெரியப்படுத்த
http://ponmalars.blogspot.in/2011/08/show-google-plus-updates-in-blogger.html

கூகுள் ப்ளஸ் மூலம் வாசகர்களை அதிகரிக்க
http://www.bloggernanban.com/2011/11/google-badge.html

ப்ளாக்கின் முகப்பிற்க்கு PLUS ONE பட்டன் வைக்க
http://www.karpom.com/2011/08/google-1-button-add.html

தமிழ் திரட்டிகள் டிப்ஸ்

அனைத்து SOCIAL விட்ஜெட்கள் ஒரே இடத்தில்
http://www.vandhemadharam.com/2011/11/email-subscribe-social-networks-feed.html

தமிழ் திரட்டிகளின் ஓட்டுப்பட்டை ஒரே வரிசையில் இணைக்க
http://www.tamilvaasi.com/2012/01/tamil-thiratti-social-sites-vote.html

உங்கள் ப்ளாக்கை பிரபலப்படுத்த 30 திரட்டிகளின் தொகுப்பு
http://www.thangampalani.com/2012/02/30-popularize-your-blog.html

பீட் பர்னர்டிப்ஸ்

feedburner ஈ மெயில் டெலிவரி நேரத்தை மாற்ற
http://www.vandhemadharam.com/2011/11/email-delivery-3.html

ஃபீட் பர்னரில் உங்கள் லோகோ வரவைப்பது எப்படி ?
http://www.karpom.com/2011/05/feedburner-email-subscription-logo.html

ஃபீட் பர்னரில் Feed Url மாற்றுவது எப்படி ?
http://www.vandhemadharam.com/2011/10/feed-url.html


இலவச ப்ளாக்கர் டிப்ஸ் மின்னிதழ் 

தற்போது தமிழ்வலையுலகில் தொழில்நுட்பபதிவுகள் எழுதி வரும் நம் நண்பர்கள் அனைவரும் கற்போம் என்றொரு வலையில் ஒன்றிணைந்து தொழில்நுட்பபதிவுகளை அழகாக எளிய தமிழில் பகிர்ந்து வருகின்றனர்.மாதம் ஒரு இலவசமின்னிதழ் உங்கள் மெயில் முகவரிக்கே அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார்கள்.விருப்பமுள்ள வாசகர்கள் தளத்தினை தொடரலாமே..


நன்றி நவிழல்

நண்பர்களே வலைச்சர ஆசிரியர் பணி ஏற்ற பொழுது மிகவும் பயமாய் இருந்தது.நாமே இன்னும் தமிழ் வலையுலகில் புதிய பதிவராக இருக்கையில் இத்தனை இடுகைக்களை எப்படி அறிமுகப்படுத்துவது என்ற பயம்.எனினும் நண்பர்கள் கொடுத்த ஊக்கம் இந்த அளவிற்க்கு ஆசிரியர்ப்பணி செய்ய வைத்தது.உதவி ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 

இந்த பணிக்கான இடுகை தேடல்களில் இன்னும் நிறையக் கற்றுக் கொண்டதுதான் நிஜம்.தமிழ் பதிவுலகில் இன்று எழுத வரும் இளைஞர் சமுதாயம் கண்டிப்பாக அடுத்த கட்ட வளர்ச்சியினை நோக்கித்தான் செல்கிறது என்பதை என்னால் நிச்சயம் அறுதியிட்டுச் சொல்ல முடியும் இதில் எவ்விதமான மாற்றுக்கருத்தும் இல் லை.

அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் நண்பர்களுக்கும் மற்றும் இந்த வாய்ப்பை நல்கிய வலைச்சர நிர்வாகிகளுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்

நன்றி! நன்றி!! நன்றி!!!

நட்புடன் நலம் நாடும்

சம்பத்குமார்


தமிழ்பேரன்ட்ஸ் & Cute Parents


நண்பர்களே இந்த வார ஆசிரியர் பணி பற்றிய உங்களது கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.உங்களின் பின்னூட்டமே எனக்கான ஊக்கமருந்து.


மேலும் வாசிக்க...

Saturday, February 25, 2012

பல்சுவை பதிவர்கள்


வணக்கம் அன்பிற்கினிய உறவுகளே வலைச்சரச்சனி இன்றைய பதிவில்அரசியல்,சினிமா,காமெடி,அனுபவம்,பயணம்,சிறுகதை,தொடர்கதை,கட்டுரை,சமூகம்,நையாண்டி,சிந்தனை,கவிதை,படத்தொகுப்பு,படைப்புகள்,செய்திகள் என பல்வேறு களங்களுக்கும் தங்கள் எண்ணங்களை கொண்டு சென்று பதிவுகளாய் பகிர்ந்து வரும் பதிவர்களில் என் பார்வையில் பட்ட சில பதிவர்களை சரமாகத் தொடுத்து அவர்களின் தளங்கள் வழியே சில புதிய அறிமுகங்களுடன் உங்களை சந்திக்கவருவதில் மிக்க மகிழ்ச்சி.பெரும்பாலும் இந்த பதிவர்களை பற்றி நீங்கள் நன்கு அறிந்து வைத்திருப்பீர்கள், எனினும் என் போன்ற புதியவர்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் விளைந்த சரம்.


இவர்களின் சிந்தனைகள் இன்னும் வளமோடு பெருக மனமாற வாழ்த்தி பல்சுவை பதிவர்களின் சரத்திற்க்குள் செல்வோமா

அட்ராசக்க வலைத்தளம் நடத்தும் அண்ணன் சிபிதான் இன்றுவரை பதிவர் நம்பர் ஒன்.இவரது சினிமா விமர்சனம் பார்த்தபின் பதிவர்கள் தியேட்டருக்கு போகலாம்.


அடுத்து வேடந்தாங்கல் என்ற வலையில் எழுதி வரும் கரூண் ஆசிரியரான இவரின் மகான்களின் வாழ்க்கையில் தொடர் மிகப்பிரபலம்

தமிழ்வாசி வலைத்தளம் நடத்தும் பிரகாஷ் ப்ளாக்கர் டிப்ஸ் முதல் சின்னப்பாப்பா பெரிய பாப்பா என காமெடி வரை கலக்குபவர்


விக்கியுலகம் வலை நடத்தும் வெங்கட் அவர்கள் வலையில் ரத்தக்கறையின் டைரி உண்மையான போர்வீரனின் டைரிக்குறிப்பு,பேச்சுலர் வாழ்க்கை என தொடர் நீள்கிறது.

நாஞ்சில் மனோ என்ற வலையில் எழுதிவரும் மனோ அவர்கள். காமெடி சீரியஸ் சமூக அவலம் என அனைத்தையும் பகிர்ந்தளிப்பவர். 

மெட்ராஸ் பவன் வலைத்தளம் நடத்திவரும் சிவா சினிமா உட்பட அனைத்து விஷயங்களையும் ஆழமாக சிந்திப்பவர். சமீபத்திய சமூகம் சார்ந்த பதிவுகள் மிகவும் பிரபலமானவை.

கவிதை கட்டுரை சினிமா காமெடி எந்த களமாய் இருந்தாலும் களத்தில் இறங்கி வீடு கட்டுகிறார் சுரேஷ்

அடுத்து நாற்று வலைநடத்தும் நிரூபன் திடகாத்திரமான பதிவுகளின் சொந்தக்காரர்.ஈழ போரின் உச்சங்களை கண்முன் நிறுத்துபவர்.புதியவர்களை ஊக்குவிப்பவர்

நாய் நக்ஸ் நக்கீரர் மாதமிரு பதிவுகளில் வந்தாலும் நகைச்சுவை மற்றும் சீரியஸ் பதிவிடுவதில் வல்லவர்.கழுகில் வெளிவரும் இவரது சமூகம் சார்ந்த பதிவிடுவதில் வல்லவர்.

பிரபாகரின் தத்துப்பித்துவங்கள் வலை நடத்தும் பிலாஷபி பிரபாகர் இவரின் பிரபா ஒயின்ஷாப் பதிவுகள் வலையுலகில் அதிபிரபலம் இவர் எழுதும் சினிமா விமர்சனம் ஏகபிரபலம்

கவிதைவீதி சவுந்தர் கவிதை முதல் இன்றைய சூடான அரசியல் விஷயம் வரை பகிர்ந்தளிப்பவர்

கூடல் பாலா என்று வலை நடத்தும் சுற்றுப்புற சூழல் நாயகன் பாலா அவர்கள்.இவரின் அணு உலை உண்ணாவிரத போராட்டம் பதிவுலகை ஒன்று சேர்த்தது

ஆணிவேர் சூர்யஜீவா சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளின் ஆழத்தினை பதிவுலகில் விமர்சிப்பவர்

உணவு உலகம் சங்கரலிங்கம் விழிப்புணர்வு பதிவுகளின் சொந்தக்காரர்


ஸ்டார்ட் மியூசிக் வலையின் உரிமையாளர் நமது அண்ணன் ராமசாமி நான் சொல்லித்தெரியப்போவதில்லை.எந்த களமானாலும் இறங்கி கலக்கும் ஆல் ரவுண்டர் 

தங்கம் பழனி நடத்தும் பழனி ப்ளாக்கர் டிப்ஸ் முதல் மாவட்டங்களின் கதை வரை அலசுபவர்

ஈரோடு தங்கதுரை வலையில் பகிர்ந்து வரும் தங்கத்துரை  – மொபல் டிப்ஸ்,கம்ப்யூட்டர் டிப்ஸ் என தொழிநுட்ப பதிவுகளின் ஆல்ரவுண்டர்

ராஜபாட்டை ராஜா கணினி டிப்ஸ் முதல் இன்றைய மாணவர்களுக்கு கல்வி டிப்ஸ் வரை தொகுத்தளிப்பவர்

Counsel for any வலை எழுதும் நண்பர் சண்முகவேல் அது இது என எந்த விஷ்யத்தையும் ஆழமாக விவரிப்பவர்


அனுபவம் அரசியல் சினிமா என அனைத்திலும் தீர்க்கமான பார்வைகாட்டும் வீடு திரும்பல் மோகன் குமார்

அரசியல் செய்தி சினிமா என அனைத்து துறைகளிலும் பதிவுகளை பகிரும் இட்லிவடை

நண்பர்கள் ராஜ் கிரிக்கெட் சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளை எழுதுபவர்.தற்சமயம் பதிவுலகிலிருந்து விலகி நிற்கிறார். மீண்டும் வாங்க ராஜ்.

வடகரை தாரிக் அவர்களின் வலைதளம் பல்சுவை வார இதழ்களின் டவுன்லோட் சென்டர்


புதிய பதிவர் அறிமுகம்



உழவன் என்ற வலை நடத்தி வரும் நண்பர் உழவன் ராஜா அவர்கள்.உலகின் எங்கோ ஓர் மூலையில் நடக்கும் அநியாத்தினை கண்டு மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே என அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.இதோ அவரது பதிவு சொத்துக்களுக்கு பத்திரப்பதிவு மட்டும் செல்லாது

என் இனிய தமிழ் உலகம் திரு சாய்பாபா அவர்கள் நடத்தி வருகின்றார்.ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான அவர் ஓய்விற்க்கு பின் வலையெழுதி வருவதாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.நண்பரின் வலையில் தானே பெயர் வந்த காரணம் பார்க்கச் செல்வோமா..

சின்னசின்ன சிதறல்கள்  என்ற வலையில் பகிர்ந்து வரும் சகோதரி அகிலா மனதில் பட்ட அன்றாட நிகழ்வுகளை வலையில் பகிர்ந்து வருபவர்.நேற்றைய என்கவுண்டர் பற்றிய அவரது பார்வை

பொதினியிலிருந்து - என்று வலையில் எழுதிவரும் நண்பர் கிருபாகரன் சினிமா விமர்சனங்களை தனது வலையில் பகிர்ந்து வருகிறார் 

சங்கர் கணேஷ் வலையில் எழுதிவரும் நண்பர் கணேஷ்.அவரின் வாழிய வாழியவே கவிதை ஒன்று

கண்மணி அன்போடு வலையில் பகிர்ந்து வரும் சகோதரி கண்மணி அவர்களின் கவிதை துளி ஒன்று காதலின் பதம்

அம்மாவிற்க்கு என்ற வலைத்தளம் நடத்தி வரும் நண்பர் செந்தில்குமார் தனது வலையில் எழுதிய இயந்திர நிமிடங்கள் கவிதை 

அடுத்து என் அனபு மித்ரா என்ற வலைத்தளத்தில் தனது எண்ணங்களை பகிர்ந்து வரும் சகோதரி  மித்ரா அம்மா அவர்களின் சமீபத்திய பதிவு சந்தியாவிற்க்கு,குழந்தைவளர்ப்பு பற்றிய விஷயங்களை அலசுகிறார்.


புதியதாய் அறிமுகமான பதிவர்களை வரவேற்று அவர்கள் தமிழ் வலையுலகில் மென்மேலும் வளர வலைச்சரத்தின் சார்பாக மனமார வாழ்த்துகின்றேன்

நன்றி நண்பர்களே !

நாளைய பதிவில் தமிழ் பதிவர்களுக்கு உதவும் திரட்டிகள்,பேஸ்புக்,கூகுள் ப்ளஸ் போன்ற சமூகவலைத்தளத்தில் பதிவுகளை பகிர்வதற்குத் தேவையான டிப்ஸ்களின் வழியே உங்களை சந்திக்க வருகின்றேன்

நட்புடன் நலம் நாடும்

சம்பத்குமார்


மேலும் வாசிக்க...

Friday, February 24, 2012

ஜொலிக்கும் பெண் சிற்பிகள்


வணக்கம் அன்பு உள்ளங்களே..வலைச்சர வெள்ளி இன்றைய பதிவில் தமிழ்பதிவுலகில் தங்கள் எழுத்துக்களால் ஜொலித்துக்கொண்டிருக்கும் சகோதரிகளின் பதிவுச்சரங்களுடனும் புதிய அறிமுங்களுடனும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.பொதுவாக வலையுலகில் பதிவெழுத வரும் பெண்பதிவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது.எனினும் தற்போது பதிவெழுதிக் கொண்டிருக்கும் பெண்பதிவர்கள் அனைவரும் தமிழ் பதிவுலகை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு செல்லும் தேடல்களில் இருப்பது நிஜம்.சமூக அவலங்களைச் சாடுவதிலிருந்து,எதிர்கால சந்ததிகளை வளமாக்குவதுவரை அனைத்துப் பணிகளையும் வலையினூடே செய்து வருவது பாராட்டுதலுக்குரியது.

நேற்றைய கவிதைசரத்திற்க்கு ஆதரவளித்த அனைத்து நல் இதயங்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொண்டு இனி எனது பார்வையில் பதிவுலகில் ஜொலித்துக்கொண்டிருக்கும் பெண் சிற்பிகள்.

இனி வலையுலகில் ஜொலிக்கும் பதிவுச் சிற்பிகளின் சரம்

முதலில் நாம் செல்ல இருப்பது பதிவுலக அம்மா லட்சுமி அவர்களின் வலைக்கு.தனது பயணபகிர்வுகளின் மூலம் அவருடன் நாம் சென்று வந்த உணர்வை அளிக்கவல்லவர்.இப்போது கூட தமிழ்பதிவர்களை கிலிபி ஆப்பிரிக்காவிற்க்கு அழைத்துச்செல்கிறார்.நாமும் செல்வோமா..

மிடில்கிகிளாஸ் மாதவி என்ற வலையில் நடுத்தர குடும்பத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நிகழும் சொத்து அடமானம் வைப்பதினை விரிவாக அலசியுள்ளார் சகோதரி மிடில்கிளாஸ் மாதவி

முக்திநாத் யாத்திரைக்கு சென்று வந்த அவர் நம்மளையும் பதிவின் வழியே அழைத்துச் செல்கிறார் சகோதரி கோமதி அரசு 

சாதாரணமானவள் வலையில் எழுதும் சகோதரி காதலைப்பற்றியும் காதலின் அடுத்த பரிணாமம் பற்றிய ஓர் அலசல் பதிவு

சகோதரி கீதமஞ்சரி அவர்களின் ஆஸ்திரேலியாவில் பள்ளிகளும் கற்பிக்கும் பாட முறைகளும் நமக்கும் பாடம் கற்றுத்தருகின்றன.இவரது கவிதை ஒன்று சமூகத்தினை சாடி நிற்கிறது பாருங்களேன்

தென்றல் எனும் வலையில் எழுதிவரும் சகோதரி சசிகலா அவர்கள் நடுத்தர வர்க்கத்தின் அவலத்தினை படம் பிடித்துக்காட்டியிருக்கிறார்

சகோதரி ஆச்சி அவர்களின் வலையில் தற்பொழுது மறக்க முடியாத பேருந்து நினைவுகள் இடைநில்லா பேருந்தாக ஓடிக்கொண்டிருக்கிறது.நீங்களும் பயணம் செய்ய என்னோடு வாருங்களேன்

சகோதரி சந்திரகவுரி அவர்கள் எழுதும் வலைப்பூவில் புத்தாண்டுத்தீர்மானங்கள் 2012 ஓர் சுய பரிசீலனை கவிதையை வாசிக்கலாமா,,

மதுரகவி வலை எழுதும் சகோதரி ராம்வி அவர்கள் தனது ஹாஸ்டல் நினைவுகளை சுவாரஸ்யம் மாறாமல் பதிவின் வழியாக தருகின்றார்.இந்த லின்கில் சென்று நீங்களும் வாசிக்கலாமே

டென்மார்க்கிலிருந்து வலை எழுதும் கோவைக்கவி அவர்களின் வேதா திலகம் வலையில் நான் ரசித்த கவிதை ஒன்று ஒருகாதலர் தினம் ஏன்

சகோதரி அம்பாளடியாள் அவர்களின் கவிதைகளில் ஓர் அழகிய கவிதை ஒன்று சொன்னால் புரிஞ்சுக்கோ..

தமிழ்கவிதைகள் தங்கச்சுரங்கம் வலை நடத்தும் சகோதரி ஸ்ரவாணி அவர்கள் தங்க மங்கைகளைப்பற்றி ஓர் பதிவிட்டுள்ளார்.916 ஹால்மார்க் சொக்கத்தங்கத்தினைப் பற்றிய ஓர் பதிவையும் வாசியுங்களேன்

அடுத்து சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்கள் ஆன்மீகப் பதிவுகள் அதிகம் எழுதுகிறார்.இவரது ஓவ்வொரு பதிவின் வழியே இணையத்திலிருந்தே கோயிலை தரிசிக்கலாம்.அவரின் மஹாசிவராத்திரி பதிவு ஒன்று.

டாக்டர் திருமதி மோகனா சோமசுந்தரம் அவர்கள் ரதனவேல் ஐயா அவர்களின் வலையில் எழுதிய நாய்கடியா ஜாக்கிரதை வெறி நாயாகவும் இருக்கலாம்.மருத்துவ விழிப்புணர்வு பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருக்கின்றார்.

முத்துச்சரம் வலையில் எழுதிவரும் சகோதரி ராமலட்சுமி அவர்களின் ஓர் பதிவுச்சரம் பள்ளி நிர்வாகங்கள்,ப்ளாஸ்டிக் அரக்கன் போன்ற தூறல்களின் துளிகள்

வானம் வெளித்த பின்னும் வலையில் எழுதிவரும் சகோதரி ஹேமா அவர்கள் காட்சிப்பிழை என்ற கவிதை வரிகளை வாசித்துவிட்டு வரலாமே.. 

அடுத்து ரம்யம் வலையில் பகிர்ந்து வரும் சகோதரி மாதேவி அவர்கள் பூக்களில் இத்தனை வகைகளா பார்த்ததும் பிரமித்துப்போனேன்.நீங்களும் பூ பூக்கும் ஓசையை பார்க்க வாங்களேன்

அடுத்து சமையல் அட்டகாசங்கள் வலையில் நமக்கு தேவையான சமையல் வகைகளை பரிமாறும் சகோதரி ஜலீலா கமால் அவர்கள்.ஆண்களுக்கு கோடைகாலத்தினை சமாளிக்கும் டிப்ஸ் தருகிறார்.கண்டிப்பாய் உதவும்.

என்பக்கம் வலையில் பகிந்து வரும் சகோதரி அதிரா அவர்கள் அவரது வளர்ப்பு மகள் சிறுகதையை வாசிக்க செல்லலாமா..

முத்துச்சிதறல் வலையில் எழுதிவரும் சகோதரி மனோசாமிநாதன் அவர்களின் சார்ஜாவில் வசிக்கும் இவரின் சமீபத்திய தமிழ்நாட்டுப்பயணம் பதிவு நம்ம ஊரு நல்ல ஊரு பதிவு.

அடுத்து உங்களை அழைத்துக்கொண்டு செல்லவிருப்பது அம்மாக்களின் வலைப்பூக்களுக்கு.குழந்தைவளர்ப்பு முதல் அனைத்தையும் விரிவாக அலசுகின்றனர்.தேசம் விட்டு தேசம் சென்றாலும் தமிழ் என்று வாழும் எனபதை உணர்த்தும் அமெரிக்காவில் ஆரம்பக்கல்வி

இன்றைய பதிவர் அறிமுகத்தில் 



தேவதையின் கனவுகள் என்ற வலையில் எழுதிவரும் சகோதரி தூயா அவர்கள்.தன்னைப்பற்றி சொல்வதற்க்கு ஒன்றுமில்லை ஏதாவது சாதித்துவிட்டுச் சொல்கின்றேன் என்கிறார்.புலிக்கு பிறந்தது பூனையாகாது ஏனெனில் இவரது பெண்வேங்கை பதிவே அதற்கு சாட்சி

தீபிகா கவிதைகள் என்னும் வலையில் வரும் சகோதரி தீபிகா ஈழத்தில் உதித்த உயிர்துளி எனது என அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.இதோ அவரது கவிதைகளில் ஒன்று அறுந்து விழுந்த பல்லியின் வாலும் பயங்கரவாதிகளும்

புதிய அறிமுக பதிவர்களுக்கு வரவேற்று தமிழ் வலையுலகில் அவர்கள் மென்மேலும் வளர வலைச்சரத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்

விடுபட்டுப்போன நல் இதயங்கள் பொறுத்தருள்க.

நன்றி சகோதர சகோதரிகளே..

நட்புடன் சகோதரன்,

சம்பத்குமார்

மேலும் வாசிக்க...

Thursday, February 23, 2012

கவிதை சரம்


வணக்கம் அன்பு நெஞ்சங்களே! வலைச்சர வியாழன் இன்றைய பதிவில் தமது எண்ணங்களையும்,சிந்தனைகளையும் தமிழ்பதிவுலகில் கவிதைவரிகளாய் பகிர்ந்து வரும் பதிவர்களின் பதிவுகளை சரமாக தொடுத்து அறிமுகப்பதிவர்களுடன் உங்கள் முன் சமர்பிக்கின்றேன்.இவர்கள் வாழ்க்கையின் உணர்வலைகளை செந்தமிழாம் தமிழ்மொழியில் வரிகள் எனும் தூரிகை கொண்டு பதிவுகளில் தீட்டிவைத்துள்ளனர்.வாருங்கள் அவர்கள் வரைந்து வைத்த கவிதைகளை சுவாசித்து விட்டு வருவோம்.

அதற்குமுன் நேற்றைய மனம் கவர்ந்த பதிவிற்க்கு ஆதரவளித்த அனைத்து நல் இதயங்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இனி இதோ கவிதைச்சரம்

முதலில் புலவர் இராமானுஜம் ஐயா அவர்களின் தமிழ் கவிதைச்சுரங்கத்தில் மீனவர்கள் படும் வேதனையின் வலி வரிகளாய்..

இறந்துபோவேனோ என்பதற்காக சுவாசிக்கவில்லை ஒருவேளை மறந்து போவேனோ என்பதற்காக சுவாசிப்பதாக சொல்லிநிற்கும் நண்பர் பனித்துளிசங்கர் சுவாசிக்கின்றேன் உனக்காக

பொதுவாக பெண்களின் பருவநிலை ஏழு எனக்கேட்டிருக்கின்றேன்.ஆண்களுக்கிங்கே ஏழு பருவங்களை எடுத்து இயம்புகிறார் நண்பர் மகேந்திரன் தனது வசந்தமண்டபத்தில்

வேர்களைத்தேடி முனைவர் குணசீலன் அவர்களின் வலையில் வந்த முறைமான் சீரு கவிதை வரைந்தவர் அவரது மாணவர் கேசவன்.

எங்கே செல்லும் இந்தப்பாதை நண்பர் K.R.P.செந்தில் அவர்களின் கடவுள்களும் கந்தசாமிகளும் 

மானுஷ்யபுத்திரன் கவிதைகள்,மற்றும் பல சிறந்த கவிஞர்களின் தொகுப்பு ரசிக்க ருசிக்க காலக்கூத்து கவிதை பெட்டகமாய் நிற்கிறது

நண்பர் மதுரை சரவணன் அவர்களின் வலையின் வழியே பிறந்து வந்த கிறுக்கல்கள் வாசிக்கலாமே...

மகளின் பிறந்த நாளிற்காக ஏற்பட்ட குடும்பசண்டை ஓர் கவிதையாய் எண்ணங்கள் அழகானால் நம்பிக்கை பாண்டியனின் உனக்குப்பிடித்ததும் எனக்குப்பிடித்ததும்.

நண்பர் ரமணி அவர்கள் நடத்தும் தீதும் நன்றும் பிறர் தரவாரா வலையில் தொலைக்காட்சித் தொடரை விட்டொழிக்கவேண்டியதின் அவசியத்தை உண்ர்த்தும் நிஜமல்ல கதை 

கவி அழகன் என்றவலையில் பகிர்ந்து வரும் நண்பர் கவியழகனின் கேள்வி ஒன்று உடலுக்குள் அசுத்தமா ? உலகமே அசுத்தமா ?

கரூர் பிரபாகரன் அவர்கள் எழுதிய நீ நிலவு நான் சூரியன்  கவிதை வரிகளாய் இங்கே.

தோழர் மதுமதி அவர்களின் மழையும் முத்தமும் திகட்டாத கவி வரிகள்.

தென்காசிபைங்கிளியின் கவிதையில் அணைக்கும் கை படிப்பவருக்கும், பார்ப்பவருக்கும், மனதை நெகிழச்செய்யும்...அணைக்கும் கை

கிராமத்துக் கருவாச்சி என்ற வலைத்தளத்தில் பகிர்ந்து வரும் தோழி கலை அவர்களின் உன்னைப்போல் நான்

ரிஷ்வனின் கவிதைத்துளிகளில் ஓர்துளி இயற்கையின் பிறவிக்குணமோ ?

தாயின் இழப்பைத் தாங்கமுடியாத மகனின் கதறல் தனசேகரின் சேகர் தமிழ் வலையில்

கவிதைகள் என்றொரு வலையில் நம்ம கடவுளுக்கே வேலைவைக்கிறார் கவிதைப்பிரேம் அவர்கள்

ராஜா சந்திர சேகர் கொடுக்கும் அனுபவ சித்தன் குறிப்புகள் ஒவ்வொன்றும் அழகிய ஹைகூக்கள்

நல்லவன் வலையில் ஜெயராம் தினகரபாண்டியன் வரைந்த சத்தமாகிப்போன வார்த்தைகள்.

சகோதரி மாலதியின் சிந்தனைகளில் உதித்த கோழையல்ல தமிழன்

நிகழ்வுகள் கந்தசாமி அவர்களின் வலையில் இன்னும் எனக்கேன் தடைகள்



பதிவர் அறிமுகம்

முதலில் என் பாதிப்புகள் பதிவுகளாய் என்ற வலையில் எழுதிவரும் நண்பர் திரு.புஷ்பராஜ்.இவரின் விருப்பங்கள் கேட்பதில் இசையும்,படிப்பதில் வரலாற்று நிகழ்வுகளும்,எழுதுவதில் கவிதைகளும் என அறிமுகப்படுத்துகின்றார்.இவரின் கூடல் கவிதை ஒன்று.

அடுத்தது ”ஓலை சிறிய” என்ற வலைதளத்தில் எழுதிவரும் ஓலை அவர்கள்.சமீபத்தில் ராசாக்கா என்ற பதிவினை வரைந்துள்ளார்.நாமும் சென்று வாசித்துவிட்டு வரலாமே.

அடுத்தது சிறுமுயற்சி என்ற வலையில் எழுதிவரும் திரு.விஜயகுமார் அவர்கள்.தன்னை அக்கவுண்டண்ட் என அறிமுகப்படுத்திக்கொள்ளும் இவர் தனது வலையில் விவசாயம் பற்றிய பதிவுகளை பகிர்ந்துவருகின்றார்

புதிய நண்பர்களை உங்கள் சார்பில் வரவேற்று அவர்கள் மென்மேலும் சிறப்பாய் வலையுலகில் வலம்வர வாழ்த்துக்களை தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

காத்திருங்கள் நண்பர்களே!..நாளைய வலைச்சரத்தில் தமிழ் பதிவுலகை செதுக்கிக் கொண்டிருக்கும் பெண் சிற்பிகள் பதிவின் வழியே உங்களைச் சந்திக்க வருகின்றேன்

நன்றி நண்பர்களே...

நட்புடன் நலம் நாடும்

சம்பத்குமார்
தமிழ்பேரண்ட்ஸ்


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது