07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, June 9, 2012

வாசம் குறையாப் பூக்கள்- சரம் 6


இன்றைய வலைச்சரத்தில் மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக  இன்றுவரை சளைக்காது எழுதிவரும் பதிவர்களின் பழைய பதிவுகளை பகிர்ந்துகொள்ள விரும்பினேன். தமிழ்ப் பதிவுலகில் பலர் பல ஆண்டுகள் தொடர்ந்து இன்றும் எழுதி வருவதை அறிந்து ஆச்சர்யமாக இருந்தது. அவர்கள் அனைவரையும் குறிப்பிட நேரம் போதாது. ஒரு சிலரைப் பற்றி மட்டும் இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடுகிறேன்

1.பதிவுலகில் சென்னை பித்தனை அறியாதவர்கள் இருக்கமுடியாது. இந்த வயதிலும் சுறுசுறுப்பு திலகமாக தன்னுடைய நான்பேச நினைப்பதெல்லாம் 2008 இல் துவக்கிய வலைப்பூவில் தினம் ஒரு பதிவிட்டு இளைஞர்களையும் ஈர்த்துவிடுகிறார்.இவரது தொடக்க கால தொடர்ப் பதிவு அன்புள்ள அப்பா அற்புதமாக உள்ளது. 

2. .தமிழா! தமிழா! வலைப்பதிவு ராதகிருஷ்ணன் அவர்களால்  2008 முதல் இயங்கி வருகிறது. பலசுவையும் நிறைந்த பதிவாக உள்ளது. இவர் 2009 இல் பதிவு செய்ததில் ஒன்று  தேங்காய்...மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(10-1-09).இன்னொரு பதிவு காளமேகமும் நகைச்சுவையும் மிக நன்று

3..சாளரம் கார்க்கி 2008 இல் பதிவுலகில் நுழைந்தவர். 2009 இல் பதிவிட்ட கார்க்கியின் காக்டெயில் துளிகள் அருமை. அவரது லவ் லெட்டர்பா பதிவு உண்மையில்  ஒரு கவிதையை படித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

4. 2008 இல் பதிவுலகில் காலடி எடுத்துவைத்த இன்னொருவர் இளங்கோ. இப்படிக்கு இளங்கோ என்ற வலைப்பூவில் நல்ல பதிவுகளை அளித்துவருகிறார். 2009 இல் அவர் பதிவு செய்த கவிதை சாக்கடை அருமை. .குற்றமும் தண்டனையும் என்ற மொழிபெயர்ப்பு நூலைப் பற்றி எழுதியுள்ளது அந்த நூலை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும்.

5. 2008 இல் வலைப்பதிவை துவக்கி இன்றளவும் பதிவிட்டு வருகிறார் வீடு திரும்பல் மோகன் குமார். சமூகம், விளையாட்டு,சினிமா விமர்சனம் உள்ளிட்ட பலதுறைகளிலும் ஆர்வம் உடையவர். இவரது பதிவுகள் ஒரு பத்திரிகையைப் படித்தது போன்ற உணர்வைப் ஏற்படுத்தும். அவர் 2009 இல் பதிவிட்ட கவிதைப் பதிவு முயற்சி மிக அருமை.

6. ஒய்வு பெற்ற பேராசிரியரான மா.சுசீலா 2008 இல் வலைப்பூ தொடங்கியவர்களில் இன்றும் நிலைத்திருப்பவர்களில் ஒருவர். மேலே குறிபிடப்பட்ட குற்றமும் தண்டனையும் மொழிபெயர்ப்பு நூலை எழுதியவர் இவரே. இவரது வலைப்பக்கங்கள்  முழுவதும் இலக்கிய மணம் கமழ்கிறது. இவரது .கசங்கிய ரோஜாக்கள் என்ற பதிவு சிறுவர் இலக்கியம் பற்றி பேசுகிறது..

7. தற்போது வரை அமுதசுரபியாக பதிவுகளைப் பொழிந்துவரும் பேராசிரியர் முனைவர்  குணசீலனும் வேர்களைத்தேடி வலைப்பூவை 2008 இல் தொடங்கியவர். சங்க இலக்கியப் பாடல்களை  தற்கால சூழ்நிலையுடன் ஒப்பிட்டு சுவையாக ஈர்க்கும் வண்ணம் விளக்குவதில் வல்லவர். அதற்கு எடுத்துக்காட்டு வண்டு கடித்த நண்டு; நண்டுக் கடித்த நாரை..இது  2009 ஆம் ஆண்டுப் பதவு.

8. 2009 இல் இருந்து  எழுதிவரும் என் ராஜ பாட்டை ராஜாவின் ஒரு பழைய பதிவு நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி என்று சுவையாகக்  கூறுவதை படித்து ரசிக்கலாம்.

9. தன் ப்ளாக்கை தொலைத்து பின்னர் மீட்டெடுத்த நவீன மென்பொருள் சாவித்திரி பொன்மலர் தனது வலைப்பதில்  2009 இல் இருந்து எழுத ஆரம்பித்தார். மென்பொருள் வல்லுனரான இவரது கணினி பற்றிய பழைய பதிவே  பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க. , இன்றும் இது பயன் படக்கூடியது.

10. மூத்த பதிவர்களில் ஒருவரான பழனி கந்தசாமி அவர்களின் வலைப்பதிவு சாமியின் மனஅலைகள் தொடக்கம் 2009. அந்நாட்களில் வெளியிட்ட பதிவு கோளாறு வித்தியாசமான பதிவு. படித்து ரசியுங்கள்.

11. வங்கித்  துறையில் பணியாற்றிய திரு வே.நடனசபாபதி அவர்கள் தனது அனுபவங்களை 2009லிருந்து நினைத்துப் பார்க்கறேன் வலைப்பதிவில்  சுவை சிறிதளவும் குன்றாமல் பகிர்ந்து வருகிறார். இவரது பழைய பதிவு. கம்ப சித்திரம் (ஓ! இதைத்தான் கம்ப சூத்திரம் என்று ஒரு சிலர் கூறுகிறார்களோ?) மூலம் கமபராமாயணப் பாடல் ஒன்றின் அழகை அறிந்து வியந்தேன். இவரது பாஸ்கள் பலவிதம் என்ற தற்போதைய தொடர்ப் பதிவுகளும் படிப்போரை ஈர்க்கும் வண்ணம் உள்ளது.

12. வழக்கறிஞர் எஸ். ராஜசேகரனின் வலைப்பதிவு நண்டு@ நொரண்டு. 2008 முதல் பதிவுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். 2009 இல் எழுதிய பதிவு நீதித் துறையில் மறைக்கப் படும் ஜனநாயகம்.. ஒரு நல்ல பதிவு

இன்றளவும்  வாசம் குறையாத பதிவுப் பூக்களை வழங்கிய பதிவர்களுக்கு பாராட்டுக்கள்
 ******************
இன்னும்  சிலரைப் பற்றி நாளை வலைச்சரத்தில்
வலைசரத்திற்கு நாளையும் வருக! கருத்துக்கள் தருக! 

20 comments:

  1. சளைக்காமல் தொடர்ந்து பதிவெழுதிக் கொண்டிருக்கும் பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி. ஒவ்வொரு தளமாய் பார்த்து ரசிக்கிறேன். அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாசம் குறையாப் பூக்கள்-
    மணம் நிறைந்த அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள் !

    ReplyDelete
  3. என்னுடைய பதிவைப்பற்றியிம் எழுதியமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  4. அறிமுகத்துக்கும் நல்வார்தைகளுக்கும் நன்றி முரளி

    ReplyDelete
  5. மூத்தவர்களை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி தொடர்ந்தும் சலைக்காமல் எழுதுவதுக்கு பெரியவர்களுக்கு என்னுடைய ஆதரவையும் தெரிவித்து கொள்கிறேன்

    ReplyDelete
  6. அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள் !

    ReplyDelete
  7. சளைக்காதவர்களை சளைக்காமல் தேடி அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. இவர்கள் அனைவரின் தளங்களும் எனக்கு அறிமுகமானவை என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. மணக்கும் வலைச்சரம். தொடரட்டும்...

    ReplyDelete
  9. அருமையான அழகான தொகுப்பு. பலரையும் தெரிந்திருந்தாலும் இவ்வளவு காலமாக எழுதுகிறார்களா என்றதும் மலைக்க வைத்தது. இதுவரைக்கும் எனக்குத் தெரிந்திராத சாதனையாளர்களையும் அறிந்து கொள்ள முடிந்தது. ஒரே இடத்தில் தொகுத்துத் தந்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  10. அருமையான அழகான தொகுப்பு. பலரையும் தெரிந்திருந்தாலும் இவ்வளவு காலமாக எழுதுகிறார்களா என்றதும் மலைக்க வைத்தது. இதுவரைக்கும் எனக்குத் தெரிந்திராத சாதனையாளர்களையும் அறிந்து கொள்ள முடிந்தது. ஒரே இடத்தில் தொகுத்துத் தந்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  11. இந்த சிறியவன் பதிவையும் அறிமுகபடுத்தியமைக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  12. அனைவருமே மூத்த பதிவர்கள்.., இன்றும் ஜொலித்துக் கொண்டிருப்பவர்கள் ..!

    ReplyDelete
  13. இன்றைய வலைச்சரத்தில் எனது பதிவை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் பல திரு T.N.முரளிதரன் அவர்களே!

    ReplyDelete
  14. அருமையான சரம் அழகாய் தொடுத்த விதம் அருமை .

    ReplyDelete
  15. வாசம் மிக்க மலர்களில் எனது வலைப்பூவையும் சேர்த்தமைக்கு எனதன்பு நன்றிகள்..

    ReplyDelete
  16. வாசம்குறையாப் பூக்களில் பலரும் அறிமுகமானவர்கள்.
    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. ஓஓஒஒ!!!!!.....நாங்க எல்லாம் 2010ல் தானே தொடங்கினோம். பழைய பதிவர்கள் அறிமுகத்திற்கு நல்வாழ்த்து. தங்களின் தொடர் முயற்சிக்கும் வாழ்த்து. நாளை இறுதிப் பதிவு. மீண்டும். சந்திப்போம் சகோதரா..
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  18. சீனியர் பதிவுகளில் சில பதிவுகளை நல்ல முறையில் செய்தீர்கள், அறிமுகம்...
    நாளையும் தொடர்க...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது