07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 10, 2012

விரைவாய் மலர்ந்த பூக்கள் -சரம் 7


   நேற்றைய வலைச்சரத்தில் வாசம் குறையாப் பூக்கள் பதிவில் நான் குறிப்பிட்ட வலைப்பதிவர்கள் அனைவரும் நாம் ஏற்கனவே அறிந்தவர்களே.
   பதிவுலகில் வெற்றிக்கொடி நாட்டி இருக்கும் இவர்களைப் பார்த்து என்னைப் போன்ற பதிவர்கள் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே அவர்களின் ஆரம்பகாலப் பதிவுகளை எடுத்துக்காட்டியிருந்தேன். இந்த வரிசையில் இன்னும் பலர் இருக்கிறார்கள்.
     இன்றைய சரத்தில் பதிவு தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக விரைவாக வெற்றிபெற்று தனக்கென்று தனி இடம் பிடித்திருப்பவர்களில் ஒருசிலரைப் பற்றி இன்று குறிப்பிட விரும்புகிறேன். இவையும் புதியவர்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

1. தனித் தமிழாலும் இனிய மரபுக் கவிதைகளாலும் பலரின் மனங்களில் இடம் பிடித்தவர் புலவர் இராமானுசம் அவர்கள். அவரது கவிதைகள் வலைப்பதிவு 2011 இல் தொடங்கப்பட்டது.ஆரம்ப காலத்தில் செய்யப்பட்ட கவிதைப் பதிவு தேசப் புகழை பாடுங்கள் மிகவும் அருமை. இளைஞர்கள் பலர் இவரது கவிதையை விரும்பிப் படிப்பது மரபுக் கவிதைக்கு மௌஸ் குறையில்லை என்பதை  எடுத்துக்காட்டுகிறது.

2. 2011 இன் இறுதி மாதங்களில் தென்றல் வலைப்பூவை உருவாக்கிய சசிகலா புயல் வேகத்தில் 250 பதிவுகளைக் கடந்துவிட்டார். அவரது ஆரம்பத்தில் எழுதிய இனிக்கும் நினைவுகள் என்ற சிறு கவிதை அடுத்த சந்ததியினர் தவறவிட்ட குழந்தைப் பருவ நினைவுகள் பற்றி அழகாக சொல்கிறது. இன்னும் பல மனதை வருடுகின்றன.

3. அகமும் புறமும் என்ற பொருத்தமான தலைப்புடைய கவிதையுடன் தீதும் நன்றும் பிறர்  தர வாரா  என்ற வலைப்பூவில் டிசம்பர் 2010 முதல் எழுதி வரும் ரமணி அவர்கள் சுறுசுறுப்புக்கு எடுத்துக்காட்டு. பெரும்பாலும் பிறருடைய பதிவுகளைப் படித்து வாக்களித்து பின்னூட்டம் இட்டு சளைக்காமல் பாராட்டுபவர். அதனால் இன்றும் முன்னணியுடன் இருப்பவர்.இன்னொரு படைப்பான கடவுளும், கடவுள் வாழ்த்தும் சிந்திக்க வைத்த பதிவு.

4. மிகக்குறைவான பதிவுகளை (29)எழுதியிருந்தாலும்.ஒராண்டுகூட நிறைவடையாத நிலையில் முன்னணியில் நிற்பவர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள்.நல்ல கருத்துக்களைக் அழுத்தமாகக் கூறுவது இவருடைய சிறப்பு.

5. நான் அலையல்ல சுனாமி என்று கூறும் விச்சு அவர்கள் செப்டம்பர் 2011 இல் தொடங்கி பல பயனுள்ள பதிவுகளை இட்டுவருகிறார்.கல்வி மற்றும் ஆசிரியர்கள் தொடர்பாக பதிவுகளைப் பகிர்ந்து  வருகிறார். பேனா சொல்லும் பாடம் என்ற கவிதை ஒரு நல்ல கருத்தை மிக அழகாகக் கூறுகிறது. சொற்பொழிவுகளிலும் பட்டிமன்றங்களிலும் இந்தக் கவிதையை மேற்கோள் காட்டலாம்.

6. .ஜூலை 2010 முதல் அவர்கள்-உண்மைகள்  வலைப்பூவில் எழுதி வரும் மதுரைத் தமிழன் பல்சுவைப் பதிவுகளுக்கு சொந்தக்காரர். செப்டம்பர் 2010 இல் பதிவு செய்த நக்கீரருக்கு ஒரு சந்தேகம் எனக்கு பல சந்தேகம் நமக்கும் ஐயத்தை ஏற்படுத்திவிடுகிறது.

7. இன்னொரு எக்ஸ்பிரஸ் வேகப் பதிவர் இராஜராஜேஸ்வரி அவர்களுடைய மணிராஜ் வலைப்பதிவில்  தெய்வீக மணத்துடன் திகழ்கிறது. பிற தலைப்புகளில் எழுதினாலும் அதிகமாக கோவில்கள் விழாக்கள் பற்றிய பதிவுகள் அழகான படங்களுடன்  மனதை கொள்ளை கொள்கின்றன. இவர் தனது  அசுர வேகத்தால் ..மன்னிக்கவும் தெய்வீக வேகத்தால் ஜனவரி 2011 இல பதிவிடத்  தொடங்கி மார்ச் 2011 க்குள் நூறாவது பதிவை எட்டிவிட்டார். அந்தப் பதிவு யானைவிளையாட்டு.தற்போது 550 பதிவுகளை கடந்து விட்டார்.

8.வேதாவின் வலையை வெற்றிகரமாக ஜூலை 2010 முதல் நடத்தி வரும் வேதா இலங்கா திலகம்  கோவைக்கவி என்றும் அழைக்கப்படுகிறார். கவிதை, கட்டுரை,ஆன்மிகம் போன்ற பலவேறு தலைப்புகளில் பதிவிட்டு அசத்தி வருகிறார். அவற்றில் ஒன்று கற்பனைத் தூரிகை வண்ணம் வானக் காட்சியை அழகாகப் படம் பிடித்து காட்டுகிறது.

9. அழகான முகப்புப் படத்துடன் காட்சி அளிக்கும் இந்திராவின் கிறுக்கல்கள் பல்சுவைப் பதிவுகள் உள்ளடங்கியது. அதில் ஒன்று இதைப் படிக்காதீங்க கடுப்பாயிடுவீங்க. நிச்சயமா கடுப்பாக மாட்டீர்கள்.ரசிப்பீர்கள்.

10. கோவை 2 தில்லி 2010 இல் இருந்து இன்றுவரை சிறப்பான பதிவுகளைக் கொண்டிருக்கிறது. அதில் என்னைக் கவர்ந்தது பதிவில் ஒன்று. நான் சேகரிக்கும் பொக்கிஷங்கள் மற்றொன்று மழலைகளின் சுட்டித் தனங்கள்

11. தோழர் வலிப்போக்கன் சமூகம்,சினிமா சார்ந்த பொழுதுபோக்குப் பதிவுகளை ரசிக்கும்வண்ணம் நகைச்சுவையாக அளித்துவருகிறார். மாகானின் உபதேசமும் மக்களின் வேண்டுகோளும் ஒரு வித்தியாசமான சிறுகதை.

12. கொஞ்சம் பூக்கள்; கொஞ்சம் புன்னகை; கொஞ்சம் கண்ணீர் கலந்த வலைப்பூ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் மௌன தேசத்தில் நான் ரசித்தது நீங்கள் சாமியார் இல்லை என்ற பதிவு . டிசம்பர் 2011 இல் மௌன தேசம் ஆரம்பிக்கப்பட்டது.

13.  நல்ல கவிதைகள் உட்பட பல்வேறு பதிவுகள் அடங்கிய வலைப்பூ கீதமஞ்சரி. மார்ச் 2011 இல் வெளியிடப்பட்ட இங்கிதம் அறியாதவன் கவிதை நிஜமான மன உணர்வை வெளிப்படுத்தும் அழகான கவிதை.

14.நான் சாதாரணமானவன் ஆனால் சாதிக்க நினைப்பவன் என்று சொல்லும் வை.கோபாலககிருஷ்ணன் அவர்கள் அருமையான பதிவுகளை இட்டு அசத்திவருகிறார். அனுபவங்களை அழுத்தமாக  பதிவாக்கும் வல்லமை இவருக்கு இருக்கிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 'இனி துயரம் இல்லை' என்ற சிறுகதை.இன்னொரு சிறுகதை ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும் இளமை உணர்வுகளை படம் பிடிக்கும் அருமையான சிறுகதை

15. கந்தசாமியின் நிகழ்வுகள்  கவிதை, சினிமா, கிரிக்கெட் என்று இளைஞர்களை ஈர்க்கும் வலைப்பூவாகத் திகழ்கிறது. என்னை கவர்ந்த கவிதைப் பதிவு கடவுளைக் கண்டேன் 

இவர்களைப் போன்று பல பதிவர்கள் அசாத்திய திறமையுடன் பதிவிட்டு வருகிறார்கள். இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. இவை புதிதாகக்  களம் புகுந்திருப்பவர்களுக்கு உதவட்டும் என்று வாழ்த்துகிறேன்.

***********************************************************************************
மாலையில் நன்றி மாலை! சந்திப்போம் 
வலைச்சரத்திற்கு வாருங்கள்! கருத்துக்களை தாருங்கள்!

 

22 comments:

  1. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு முதலில் மிக்க நன்றி சார் ! அருமையாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள் ! அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. என்னையும் தங்கள் சரத்தில் தொடுத்து
    எனக்கு பெருமை சேர்த்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  3. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு முதற்கண் மிக்க நன்றி முரளி! அருமையாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள் ! அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. அத்தனையும் முத்தக்கள் முரளிதரன். எதை எழுதுவது என்று தெரியாமல் தவிக்கும் எனக்கு இப்போதுதான் இப்படியெல்லாம் எழுதலாமே என்று தோன்றுகிறது. வழிகாட்டிகளுக்கு நன்றிகள் பல கோடி.

    ReplyDelete
  5. என்னையும் தங்கள் சரத்தில் தொடுத்து எனக்கு பெருமை சேர்த்தமைக்கு மனமார்ந்த நன்றி நீங்கள் வலைச்சரத்தில் பூ தொடுக்க ஆரம்பித்த அன்று வந்த நான் அதன் பின் நேரமின்மையால் வர முடியவில்லை. அதற்கு மன்னிக்கவும். கண்டிப்பாக நீங்கள் அறிமுகபடுத்தியவர்களை வந்து பார்க்கிறேன். நன்றி இளைய நண்பரே

    ReplyDelete
  6. அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருமே தங்களுக்கென்று ஒரு தனி வழியை உருவாக்கி அதில் வெற்றிகரமாக பயனித்துக்கொண்டிருப்பவர்கள், நிறைய கற்றுக்கொள்ளலாம் அவர்களின் வலையிலிருந்து.,

    ReplyDelete
  7. என் துணைவியின் வலைப்பூவையும் [கோவை2தில்லி] இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி நண்பர் முரளிதரன்.....

    செம்மையான பணி - வாரம் முழுவதும் ரசித்தேன்.

    ReplyDelete
  8. வித்தியாசமாக எழுதிவருகிறவர்களின் மத்தியில் என்னையும் வித்தியாசமாக அறிமுகப்படித்தி கருத்துரைத்த தங்களுக்கு நன்றிகள் பல...

    ReplyDelete
  9. பலரும் ஏற்கனவே நண்பர்களே. சிலர் இப்போது தான் பார்க்கிறேன் நன்றி

    ReplyDelete
  10. சகோதரா முரளி இன்றைய அறிமுகவாளர்கள் பலர் தெரிந்தவர்கள். இவர்களோடு என்னையும் அறிமுகப் படுத்தியுள்னளது மகிழ்வு தருகிறது. மிக்க நன்றி உரித்தாகுக. அத்தனை பேருக்கும் நல்வாழ்த்து. இந்த வாரத்திய தங்கள் கடின உழைப்பிற்கும் நல்வாழ்த்து. மேலும் சிறப்புகள் சேரட்டும்.
    இந்தப் பக்கத்தை முகநூலில் படம் எடுத்துப் போட்டுள்ளேன். மறுபடியும் நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.
    (முதலில் இந்தக் கருத்தைப் போட்டேன் என் கணனி மக்கர் பண்ணி மறுத்தது போல வந்தது. இது ஓரே கருத்தாக 2வது தடவையானால் தயவு செய்து ஒன்றை அழிக்கவும்.)

    ReplyDelete
  11. என்னுடைய தளத்தில் வெளியிட்ட அப்துல்காதரின் கவிதையை குறிப்பிட்டதற்கு நன்றி. மற்ற அறிமுகங்களும் அருமை.

    ReplyDelete
  12. நாள்தோறும் ஒரு சரம் தொடுத்து, பதிவுலக மலர்களைத் தெரிந்தெடுத்து வழங்கியமைக்கு நன்றி!

    ReplyDelete
  13. //14.நான் சாதாரணமானவன் ஆனால் சாதிக்க நினைப்பவன் என்று சொல்லும் வை.கோபாலககிருஷ்ணன் அவர்கள் அருமையான பதிவுகளை இட்டு அசத்திவருகிறார். அனுபவங்களை அழுத்தமாக பதிவாக்கும் வல்லமை இவருக்கு இருக்கிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 'இனி துயரம் இல்லை' என்ற சிறுகதை.இன்னொரு சிறுகதை ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும் இளமை உணர்வுகளை படம் பிடிக்கும் அருமையான சிறுகதை//

    Thank you very much, Sir.

    My Best Wishes to you & to all others introduced by you today.

    vgk

    ReplyDelete
  14. //இன்னொரு எக்ஸ்பிரஸ் வேகப் பதிவர் இராஜராஜேஸ்வரி அவர்களுடைய மணிராஜ்

    வலைப்பதிவில் தெய்வீக மணத்துடன் திகழ்கிறது.

    பிற தலைப்புகளில் எழுதினாலும் அதிகமாக கோவில்கள் விழாக்கள் பற்றிய பதிவுகள் அழகான படங்களுடன் மனதை கொள்ளை கொள்கின்றன.

    இவர் தனது அசுர வேகத்தால் ..மன்னிக்கவும் தெய்வீக வேகத்தால் ஜனவரி 2011 இல பதிவிடத் தொடங்கி மார்ச் 2011 க்குள் நூறாவது பதிவை எட்டிவிட்டார்.

    அந்தப் பதிவு யானைவிளையாட்டு.

    தற்போது 550 பதிவுகளை கடந்து விட்டார்.//

    SHE IS AN EXTRA ORDINARY EXAMPLE FOR ACHIEVEMENTS.

    DAILY SHE GIVES MORE THAN 1 POST.

    I LIKE ALL HER ARTICLES VERY MUCH.

    ALL ARE GOLDEN ARTICLES. ;)))))

    My sincere thanks to you Sir, for identifying her Blog in
    Today's Valaichcharam.

    ReplyDelete
  15. மிகச் சிறந்த பதிவர்கள்! மற்றோருக்கு உதாரணமான பதிவுகள்! அசத்திட்டீங்க. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. இன்னொரு எக்ஸ்பிரஸ் வேகப் பதிவர் இராஜராஜேஸ்வரி அவர்களுடைய மணிராஜ் வலைப்பதிவில் தெய்வீக மணத்துடன் திகழ்கிறது

    எமது பதிவினை அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    ReplyDelete
  17. நல்ல அறிமுகங்கள். நல்வாழ்த்து!

    ReplyDelete
  18. தென்றலின் வளர்ச்சியை குறிபிட்டதர்க்கு நன்றி கூறுகிறேன் . தங்கள்
    சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  19. அறிமுக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
    அழகாய் சரம் தொடுத்து இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  20. என்னுடைய பதிவினையும் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
    சக பதிவர்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்.

    ReplyDelete
  21. மிகச் சிறப்பான பதிவர்களிடையே கீதமஞ்சரியையும் குறிப்பிட்டமைக்கு மிகவும் நன்றி. அறிமுகப்படுத்தப்பட்ட அத்தனைப் பதிவர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது