07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 19, 2013

கதை மலர்

அனைவரையும் இன்று சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அன்பு வணக்கம்.

நான் கதை எழுத ஆரம்பித்ததே ஒரு கதை தான்.
எல்லோருக்குள்ளும் பலவித ஆற்றல் இருந்தாலும் வெளிப்படுவதில்லை. அதற்கு செயலும், காலமும், சூழ்நிலையும் வேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் மறைந்தே போகும்.வலைப்பூ ஆரம்பித்த புதிதில் அலைவரிசை அஹமது இர்ஷாத் பெஸ்ட் ஸ்டோரி ரைட்டர் விருது தந்து என்னை தூங்க விடாமல் செய்ததால் கதை எழுதியே ஆக வேண்டிய கட்டாயம். முதன் முதலாய் நானும் ஆஷாக்குட்டி என்ற சிறுகதையை எழுதி எல்லாப்புகழும் இறைவனுக்கே தோழி ஸாதிகாவிற்கு அனுப்பி, அவர் அதனை எடிட் செய்து தந்த பிறகு எனக்கும் கதை எழுதும் தைரியம் வந்தது. ஒவ்வொருவர் எழுத்திற்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. குறை காண்பது இலகு. ஆனால் கதாசிரியர்களுக்குத்தான் தெரியும், படைப்பது எத்தனை சிரமம் என்று.

இனி வலைப்பூக்களில் நான் வாசித்த கதைகளுள் சிலவற்றைப் பார்ப்போமா?

தோழி ஸாதிகாவின்  கதாபாத்திரங்கள் படைப்பில் அனைவருமே சுவாரஸ்யமானவர்கள் தான். ஆனால் பிய்ந்த பொட்டி பீதாம்பரம்
கதையை வாசித்த பின்பு, வலைப்பூ ஆரம்பித்த புதிதில் நம்மில் பலரிடம் காணப்பட்ட ஆர்வம் இப்படி தானோ என்று ஒரு முறை திரும்பி பார்க்கச் செய்து சிந்திக்க வைத்து விட்டார் கதாசிரியர்.

காக்கைச் சிறகினிலே அகல் எழுதிய - யார் இவள் ? 
இப்படியும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அருமையான படைப்பு.

அலைவரிசை அஹமது இர்ஷாத் சுண்ணாம்பும் வெண்ணெயும் என்று நச்சென்று ஒரு சிறுகதை பகிர்ந்துள்ளார். நான் பலமுறை ஹோட்டல்களில் பார்த்ததை இயல்பாக ஒரு பாடம் புகட்டியபடி முடித்திருந்தது என்னை மிகவும் கவர்ந்தது.

மனசு குமாரின் கதைகள் எல்லாமே மனசை விட்டு அகலாது. அவர் எழுதிய   அப்பாசேர்.  இதுவும் என் மனதில் நின்ற கதை.

சிவகாசிக்காரன் ராம்குமாரின் சாமி காப்பாத்து
வாசித்து பாருங்க. மிக அருமை.

+2 முடிவு வெளியான இந்நாளில் பினாத்தல்கள் எழுதிய
தந்தை சொல் மிக்க என்ற கதையை வாசிங்க, உங்களுக்கு புரியும், இப்படி மாணவர்கள் தெளிவாக இருந்தால் பெற்றோர்களுக்கு நிம்மதி தான்.

சந்திரவதனாவில் குரு அரவிந்தன்   எழுதிய "சுமை"   சிறுகதை மனதை கனக்கச் செய்ததென்னவோ உண்மை தான்.

பரிசல்காரனின் "சார்பு"  சிறுகதை நல்ல வேடிக்கை.

இம்சையரசியின் கவிதையே தெரியுமா இம்சையாய் ஒரு கதை.

ஜெயந்தி ரமணியின் "பார்வை" - அம்மாவை மகன் புரிந்து கொண்ட அளவு அப்பா புரிந்து கொள்ளவில்லையோ !

நான் கண்ட ஒரு தோழியின் கதையை வானதி, எழுத்திலே வடித்தே விட்டார்.

என்னவொரு அருமையான எழுத்து,என்னை அசர வைத்த சிறுகதை.

ஏகப்பட்ட கதைகள் எழுதி தள்ளிய அப்பாவி தங்கமணி வலைப்பூவில் வலை போட்டு தேடி இந்தக் கதையினைத் தேர்வு செய்தேன்.
இந்தக் கதையை வாசித்த பொழுது ஆச்சரியமாக இருந்தது.  இப்படிக் கூட நடக்குமா?  என்று.  ஜோடிப் புறா போல் எப்பொழுதும் இணைபிரியாமல் இருந்த எனக்கு தெரிந்த ஒரு முதிய தம்பதியர் இந்த வருடம் ஒருவர் பின் ஒருவராக மறைந்த பொழுது, இது நடைமுறையில் கூட சாத்தியம் தான்  என்று உணர்ந்தேன்.

புவனேஸ்வரி இராமநாதனின்
நீயாய் இரு..  இல்லத்தரசியின் உணர்வை வெளிப்படுத்தும் இயல்பான கதை.

ஸ்டார்ஜனின் -பொருட்காட்சி - ஸ்டார்ஜனைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கும், எல்லாத்தட்டு மக்களையும் உள் வாங்கி தன் கதைகளில் நுழைத்து விடுவார்.
நல்ல உணர்வுப்பூர்வமான மனதை தொட்ட கதை.

ஆண்களால் தன் காதலியை அத்தனை இலகுவாய் மறக்க முடியாதோ?!
வாசித்து பாருங்க.
ஆதங்கத்தை எதார்த்தமாக எழுதிய விதம் என்னைக் கவர்ந்தது.

தமிழமுதம் ராமலஷ்மியின் ஜல் ஜல் ஜல் என்னும் சலங்கை ஓலி
கதை பற்றி சொல்லவும் வெண்டுமா?
இவருடைய  வலைப்பூவில், எந்தக் கதையை தேர்ந்தெடுப்பது? அத்தனைக் கதைகள். என்றோ வாசித்த இந்தக் கதை இன்றும் மறக்காமல் சொக்கனும்,  சோலையும் மனதில் வந்து நிற்கிறார்கள். அது தான் இந்தக் கதையின் பலம்.

இந்த எட்டுப் பகுதிகளும் விறுவிறுப்பு குறையாமல் தந்திருக்கிறார் கதாசிரியர். வாசித்து முடித்த பின்பு தான் நம்மால் வெளியேற முடியும். ஐயாவின் வலைப்பூவில்  குவிந்து கிடக்கும் கதைகள், அனுபவங்கள் மத்தியில் நான் வாசித்து என் மனதைக்  கவர்ந்த நெடுங்கதை இது.

என்.கணேசன் - மரணத்தின் விளிம்பில் ஒரு உணர்வுப்பூர்வமான கதை
வாழ்க்கையை வாழ முடிந்திருந்தால் பல நல்ல காரியங்கள் செய்திருக்கலாம் என்பது தான் அருணாசலத்தின் கடைசி நினைவாக இருந்தது. சொத்து சேர்ப்பதை விட மனிதர்களை சம்பாதித்தல் எத்தனை நல்லது என்பதை உணர்த்திய கதை.

அனைத்து கதைகளும் உங்களைக் கவரும் என்று நினைக்கிறேன்.
இத்துடன் இன்றைய நாளை நிறைவு செய்கிறேன்

மீண்டும் நாளை அருமையான பதிவர்களோடு சந்திப்போம்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.



52 comments:

  1. கதை மலரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்!அவசியம் அனைத்து பதிவுகளையும் படிப்பேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  2. பல தளங்கள்... இன்று ஒரு பகிர்வு (dindiguldhanabalan.blogspot.com/2013/06/Speak-Clearly-and-Understand.html) திரட்டிகளில் இணைக்க வேண்டி உள்ளதால்... ஒரு ரவுண்ட் சென்று பிறகு வருகிறேன்...

    ReplyDelete
  3. ஜல்ஜல் கதையை இரசித்து வாசித்து முதல் கருத்தைப் பகிர்ந்து கொண்டதே நீங்கள்தான். உங்கள் கதைமலரில் தொகுத்திருப்பதில் மகிழ்ச்சி. மிக்க நன்றி. மற்ற இணைப்புகளுக்கும் நன்றி. நேரமிருக்கையில் தொடருகிறேன். அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    உங்களின் தேடலுக்கு பாராட்டுக்கள் பல...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  5. இன்றைய ’கதை மலர்’ இல் அடையாளம் காணப்பட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள்.

    கதை மலரை மிகச்சிறப்பாகத் தொடுத்துக் கொடுத்துள்ள தங்களுக்கும் என் அன்பான பாராட்டுக்கள்.


    >>>>>>

    ReplyDelete
  6. //வை.கோபு ஐயாவின் உடம்பெல்லாம் உப்புச் சீடை
    பகுதி-1, பகுதி-2, பகுதி-3, பகுதி-4, பகுதி-5, பகுதி-6, பகுதி-7, பகுதி-8
    இந்த எட்டுப் பகுதிகளும் விறுவிறுப்பு குறையாமல் தந்திருக்கிறார் கதாசிரியர்.

    வாசித்து முடித்த பின்பு தான் நம்மால் வெளியேற முடியும்.

    ஐயாவின் வலைப்பூவில் குவிந்து கிடக்கும் கதைகள், அனுபவங்கள் மத்தியில் நான் வாசித்து என் மனதைக் கவர்ந்த நெடுங்கதை இது.//

    எனது படைப்பொன்றையும் அறிமுகம் செய்து பெருமைப்படுத்தியுள்ளதற்கு நன்றியோ நன்றிகள்.

    இந்த 8 பகுதிகளைக் கஷ்டப்பட்டுப் படிப்பதற்கு பதிலாக கீழ்க்கண்ட ஒரே பகுதியை மட்டும் படித்தாலே போதும்.

    ஏராளமான படங்களுடன் மீள் பதிவாகக் கொடுத்துள்ளேன்.

    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_2406.html

    இது தங்கள் + மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  7. அருமையான அறிமுகங்கள்.... அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. நடனசபாபதி ஐயா தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

    ReplyDelete
  9. தனபாலன் சார் மனமார்ந்த நன்றி.பாராட்டிற்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  10. ராமலஷ்மி மனமார்ந்த நன்றி.உங்கள் வலைப்பூவில் எதைப் பகிர்வது எதை விடுவது,எல்லாமே சிறப்பான இடுகைகள் தான்.

    ReplyDelete
  11. வை.கோ ஐயா தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி,மனமார்ந்த நன்றி.ஒரே பகிர்வாக சரி செய்து விட்டேன் ஐயா.

    ReplyDelete
  12. ஸ்கூல் பையன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  13. //Asiya Omar said...
    வை.கோ ஐயா தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி,மனமார்ந்த நன்றி.ஒரே பகிர்வாக சரி செய்து விட்டேன் ஐயா.//

    மிக்க நன்றி.

    ReplyDelete
  14. அறிமுகத்துக்கு மிக்க நன்றிகள்....

    ReplyDelete
  15. ஸாதிகா, ராமலக்ஷ்மி, புவனேஸ்வரி, திரு வை.கோபாலகிருஷ்ணன் சார், கணேசன் அவர்கள் கதை படித்து இருக்கிறேன்.
    மற்றவர்கள் கதையை படிக்க வேண்டும்.
    நானும் வலைச்சரப்பொறுப்பில் இருக்கும் போது திரு. வை.கோ சார் கதை

    உடம்பெல்லாம்உப்புச் சீடையை பகிர்ந்து கொண்டேன்.

    ReplyDelete
  16. அறிமுகப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    உங்களின் தேடல்களினால் கதை மலரை அழகாக தொகுத்துத்திருக்கிறீங்க வாழ்த்துக்கள் ஆசியா. பாராட்டுக்கள்.நன்றி





    ReplyDelete
  17. ஆஹா..இன்னிக்கு கதைமலரா?அட்டகாசம் ஆசியா.இந்த வரிசையில் என்னையும் இணைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி.

    இன்று அறிமுகபடுத்திய இருபது சிறுகதைகளும்ம் அந்நெகமாக நான் வாசித்தவைகள்தான்.அறிமுகப்படுத்தியது சிறப்பு.என் கதாபாத்திர வரிசையில் என்னையும் கவர்ந்தது இந்த பீதாம்பரம் கேரக்டர்தான்.அறிமுகத்துக்கு மிக்க நன்றி தோழி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. அறிமுகங்கள் அனைவருக்குக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. இன்றைய அறிமுகப் பதிவர்கள் பற்றிய அறிமுகமும் அருமை!

    அறிமுகமாகும் அனைவருக்கும் உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. வணக்கம் உமர்!
    என் பதிவை இங்கு அறிமுகம் செய்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
    மிகவும் நன்றி.
    சுமை சிறுகதை எனதல்ல. அது குரு அரவிந்தன் என்பவரது கதை.

    ReplyDelete
  21. ஆதங்கத்தை எதார்த்தமாக எழுதியவிதம் என்னைக் கவர்ந்தது. இந்த ஒருவரி எவ்வளவோ, அர்த்தங்களையும்,பாராட்டுகளையும் எழுதியதற்கு ஸமானமாக இருந்தது. இருக்கிறது. கதைமலரில் எனது கதையையும் சேர்த்திருப்பது மிக்க மகிழ்ச்சி.
    ஆசியாஉமர் உங்களுக்கு என் நன்றி.
    நீங்கள் குறிப்பிட்டுள்ள எல்லா பதிவர்களுக்கும் என் பாராட்டுதல்களும்,மூத்தவயதுடையவள் என்ற தகுதியில் ஆசிகளையும் கூறுகிறேன். எல்லா கதைகளையும்
    கட்டாயம் படித்து விடுவேன். தேடுதலில் நான் சிக்கியது எப்படி?
    வியக்கிறேன்! அன்புடன்

    ReplyDelete
  22. அழகான அறிமுகங்கள். வலைச்சரத்தை சிறப்பாக தொகுப்பதற்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  23. இன்றைய அறிமுகங்கள் அத்தனையுமே அட்டகாசம்..

    ReplyDelete
  24. இன்றைய கதை மலர் தொகுப்பு அனைத்தும் மிக அருமை ஆசியா...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. Super. Thanks for introducing me. Mr. Danapalan sir, thanks to you too.

    ReplyDelete
  26. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. வணக்கம்.
    இன்றைய அறிமுகத்தில் என்னையும் அறிமுகப் படுத்தியதில் மிகவும் வணங்கி மகிழ்கிறேன்.
    இன்று அறிமுகமான அனைத்துக்கதை ஆசிரியர்களுக்கும் என்மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete
  28. நன்றி நண்பரே.

    ReplyDelete
  29. வணக்கம்
    ஆசியா உமர்

    இன்று வலைச்சரத்தில் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  30. நன்றி ஆசியாக்கா.. நம்ம பொருட்காட்சியையும் அரங்கேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கதைகள் உயிரோட்டமானவை. அருமையான கதைத் தொகுப்பு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  31. சமுத்ரா வருகைக்கு மனமார்ந்த நன்றி.

    கோமதியக்கா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி.

    ப்ரியசகி மிக்க நன்றிபா.

    ReplyDelete
  32. ஸாதிகா கருத்திற்கு மிக்க
    நன்றி.மகிழ்ச்சி.

    இளமதி மிக்க நன்றி.மகிழ்ச்சி.

    சந்திரவதனா கருத்திற்கு நன்றி.

    ReplyDelete
  33. காமாட்சி அம்மா உங்கள் வருகைக்கும் ஆசிகளுக்கும் மிக்க மகிழ்ச்சி.மன்மார்ந்த நன்றி.உங்களை மகி ப்ளாக்கில் பார்த்தேன், தொடர்ந்து வந்து பார்த்ததில் இந்த பகிர்வு எனக்கு பிடித்திருந்தது.

    ReplyDelete
  34. வாங்க கோவை2 தில்லி நலமா? கருத்திற்கு மனமார்ந்த நன்றி.

    அமைத்ச்சாரல் சாந்தி தொடர் வருகைக்கு மிக்க நன்றி.

    ஜலீலா தொடர் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  35. வானதி வாங்க,கருத்திற்கு மனமார்ந்த நன்றி.

    மாதேவி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.,நன்றி.

    அருணா செல்வம்,வாங்க,கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி.

    ReplyDelete
  36. என்.கணேசன் மிக்க நன்றி.

    ரூபன் தொடர் வருகைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

    ReplyDelete
  37. ஸ்டார்ஜன், கவனித்தீர்களா? நம்ம ஊர் பொருட்காட்சியில் அதுவும் வேளாண்மை திடல் படம் வேறு உங்க கதையில்.ஹி.ஹி..எப்படி எல்லாம் மனசை தேத்த வேண்டியிருக்கு.
    வாழ்த்திற்கு நன்றி சகோ.

    ReplyDelete
  38. //கோமதி அரசு said...

    ஸாதிகா, ராமலக்ஷ்மி, புவனேஸ்வரி, திரு வை.கோபாலகிருஷ்ணன் சார், கணேசன் அவர்கள் கதை படித்து இருக்கிறேன்.

    நானும் வலைச்சரப்பொறுப்பில் இருக்கும் போது திரு. வை.கோ சார் கதை "உடம்பெல்லாம் உப்புச் சீடை"யை பகிர்ந்து கொண்டேன்.//

    நன்றாக நினைவுள்ளது மேடம். மிக்க நன்றி.

    இதுவரை என் வலைத்தளம், கடந்த 30 மாதங்களில், அறுபத்து ஆறு [66] முறைகள் வலைச்சரத்தில் பாராட்டிப் பேசப்பட்டுள்ளது.

    இதே கதையை இதுவரை பத்து வலைச்சர ஆசிரியர்கள், பாராட்டிப்பேசியுள்ளனர்.

    அனைவருக்கும் நன்றியோ நன்றிகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  39. கதை மலர்’ அறிமுகப்படுத்திய பதிவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  40. வணக்கம் ஆசியா உமர்.
    இன்றைய வலைச்சரத்தில் நீங்கள் கொடுத்திருக்கும் கதைச் சரம் வெகு சுவையாக இருக்கிறது. இன்றைய அறிமுகங்களில் நிறைய தெரிந்தவர்கள்.
    எனக்கு வலைபதிவு மூலம் அறிமுகமாகி வலைப்பதிவிற்கு வெளியிலும் நல்ல நட்புடன் பழகும் திருமதி காமாக்ஷியை அறிமுகம் செய்திருப்பது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கதை எல்லோரையும் கவர்ந்த கதை.

    நன்றி!

    ReplyDelete
  41. அறிமுகப் படுத்திய எழுத்தாளர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  42. ஆசிரியர் ஆசியாவுக்கு முதலில் என் வாழ்த்துக்கள்... மிக அருமையகத் தொகுத்திருக்கிறீங்க கதைமலர்களை.

    அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  43. அக்கா...
    என்னையும் கதை மலரில் சேர்த்தமைக்கு மிக்க நன்றி.

    காலையில் பார்த்தேன். தமிழில் டைப் பண்ண முடியாததால் கருத்து பதியவில்லை...

    தாங்களும் தனபாலன் சாரும் எனக்கு தெரிவித்து இருந்தீர்கள்... அதற்கு நன்றி இருவருக்கும்...

    மீண்டும் ஒரு முறை அப்பா சேர் மூலம் அறிமுகம்... என்னுடன் அறிமுகமான அனைத்து கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  44. இராஜராஜேஸ்வரிமா வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

    ரஞ்சனி மேம் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

    ReplyDelete
  45. அதிரா வாங்க,மிக்க மகிழ்ச்சி.வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி.

    குமார் வாங்க,மகிழ்ச்சி. உங்க கதைகள் அனைத்தையும் தவறாமல் வாசித்து இருக்கிறேன்.கருத்திற்கு நன்றி.

    ReplyDelete
  46. கே.பி.ஜனா வாழ்த்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

    ReplyDelete
  47. நல்ல அறிமுகங்கள். வாழ்த்துக்கள். நல்ல அழகாக முத்து முத்தாக தொகுத்திட்டிங்க் ஆசியா.

    ReplyDelete
  48. Many thanks Asiya. Congrats to all others got mentioned in this post as well. Thanks again

    ReplyDelete
  49. விஜி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

    அப்பாவி வாங்க மிக்க நன்றி.மகிழ்ச்சி.

    ReplyDelete
  50. என்ன ஆசியாக்கா. மலரும் நினைவுகளா.. நடக்கட்டும் நடக்கட்டும்.

    ReplyDelete
  51. கருத்திற்கு நன்றி ஸ்டார்ஜன்.மகிழ்ச்சி.

    ReplyDelete
  52. மிக்க நன்றி ஆசியாக்கா... உங்களின் கதை எழுதும் திறமை மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்... என்னை இங்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.....

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது