07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, June 22, 2013

கவிதை மலர்

கற்பனையும் உண்மையும் கலந்து தான் கவிதை மலர்கிறது. மனத்திரையில் எழுதி, பின்பு  முழுவடிவம் பெறுகிறது. அப்படி வடிவம் பெற்ற என் தேடலில் கிடைத்தநான் ரசித்தசில கவிதைகளை இன்று பகிர்ந்திருக்கிறேன்.

வலைச்சரப் பொறுப்பாசிரியர் மதிப்பிற்குரிய சீனா அய்யா,  வாழ்க்கை பற்றி எழுதிய புதுக் கவிதை. இது மொக்கையா ? இல்லவே இல்லை.

சிறுமுயற்சி கயல்விழி முத்துலெட்சுமியின்  கண்ணாடிகளற்ற அறை - ஏனோ மனதை மிகவும் தொட்டு விட்டது.

முத்துச்சரம் ராமலஷ்மியின் தேவதைக்கு பிடித்த காலணிகள். அருமை. தளத்தில் எந்தக் கவிதையை நான் தேர்ந்தெடுப்பது. குவிந்து கிடக்கிறதே !

தோழி ப்ரசாவின் படத்துடன் கவிதை தொகுப்பில் அன்னையைப் பற்றி எழுதிய கவிதைகள்.

தேனக்காவின் ரசனையில்  சூரியத்தாய்.

தோழி இளமதியின் இயற்கை பற்றிய கவிதை தொகுப்பு. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் பற்றிய பகிர்வு. தேடலில் எப்பொழுதும் அவர் கவிதைகள் ஒன்றை ஒன்று விஞ்சும் படியாய்..

ஹேமாதன் குழந்தை நிலாவில் பகிர்ந்த சாத்தியக்கூறுகளின் போது -அருமை
ஹேமாவின் எல்லாக் கவிதைகளும் எனக்கு பலமுறை வாசித்தால் தான் புரியும்.

கவிநயாவின் நெற்றிக்கண் என்னை மிகவும் கவர்ந்தது.

சமையலறை கூட போதிமரம் தான் என்கிறார் கவிஞர் ரமணி. என்னமோ! சமையலறையே என் உலகமாய் இருப்பதால், இந்தக் கவிதையையே தேர்ந்தெடுத்தேன்.

ஆயிஷா ஃபரூக்கின் உழவைக் காப்போம் கவிதையின் வரிகள் என் உள்ளத்தை பிரதிபலிப்பதாய் இருக்கிறது. உழவின்றி  உணவிற்கு வழியேது, உழவனன்றி உழவிற்கு ஆள் ஏதுநாம் அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டிய வரிகள்.

நாடோடியின் பார்வையில்விவசாயியின்கவலை உனக்கு என்ற கவிதை எத்தனை உண்மை.

சீனியின் பக்கத்து வீடுஇனம், மதம், மொழி கடந்து பக்கத்து வீட்டாருடன் பரிவோடு நடப்பது நன்மை பயக்கவல்லது என்கிறார்.

மீனவர்கள் எதிர்பார்க்கும் தீர்ப்புகள் திருத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை தானே!

கவிதைவீதி சௌந்தரின் கண்ணீர் வடிக்கும் வேப்பமரம்  கருத்துள்ள கவிதை,

உங்க விஞ்ஞானத்துல 
ஒரு அரிசி செய்யுங்க 
காலமெல்லாம் உங்க வீட்டில் 
கால்புடிச்சு நிப்போமுங்க..............

நட்பும் காதலும் குறித்த கோபியின் இந்தக் கவிதை தொகுப்பு மிகவும் அருமை.

கிருஷ்ணப்ரியாவின் தஞ்சை கவிதையில் இல்லத்தரசியின்

கல்யாணசுந்தரத்தின் கனவு மெய்ப்பட வேண்டும் -    கருத்துள்ள கவிதை.

தமிழ் நிலாவின் நிச்சயமில்லை கவிதைஉலகம் எப்போதோ அழிந்து விட்டது. இறக்கப் பயப்படாதே. மனிதம் இறந்து நாளாகிவிட்டது என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்மனிதங்களை நேசிக்கும் சக்தி ஒன்று தான் நிலையானது. மதங்கள் அல்ல என்கிறார்.

சிநேகிதன் அக்பர் – வெளிநாட்டுவாசியின் விடுமுறை நாட்கள் - நச் கவிதை.

இளம் தூயவனின் – அழகுஅருமை.


தேனி சூர்யாவின் உன்னில் தேடியவை உன்னிலே கிடைத்து விட்டால் நீயும் ஒரு மகாத்மாவே  என்கிறார்.

எங்கள் வாழ்வுக்கு ஒரு விடிவு வராதா? என்ற மனவேதனை நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

ரேகா ராகவனின் ஆனால் ...
கவிதை வரிகளில் நாட்டின் நடப்பை பகிர்ந்த விதம் அருமை.

நிம்மதி என்னும் வெளிச்சத்தில் என்ற நீரோடை மலிக்காவின்  கவிதைப் பகிர்வு  வானொலியில் புத்தாண்டுக்கவிதையாக வாசிக்கப்பட்டதை கேட்டு ரசியுங்கள்..

தோழி ஸாதிகாவின் சாம்பிராணி கவிதை சிந்திக்க வைத்தது.

இதயத் துடிப்பின் கவிதை துடிப்பு - ப்ரசாந்தின் இதயத் துடிப்பில் வெளிவந்த கவிதை 



நேற்று இறந்து விட்டேன் - மணிகண்டவேல்  கவிதையை வாசித்து பாருங்க, அவர் இறந்ததின் காரணம் தெரியும்..


அப்பாதுரைநிழலின் ஒளிவித்தியாசமான ஒரு கவிதை.

ரஹீம் கஸாலி பகிர்ந்த - கண்ணீரில் ஒரு கவிதாஞ்சலி
கலைஞரின் கவிதைகளுக்கும் அவருடைய குரலுக்கும் நான் பெரிய ரசிகை, அவ்வளவே

அடுத்து நான் ரசிப்பது கவிஞர் வைரமுத்து
இதோ தமிழ்வாசி பகிர்ந்த தன் அம்மாவிற்காக - பெத்தவளே உன் பெருமை, ஒத்த வரி சொல்லலையே  அவரே வாசிக்கிறார். கேட்டுப் பாருங்கள்.


இத்துடன் இன்றைய பகிர்வை முடித்துக் கொள்கிறேன்.

மீண்டும் அசத்தலான பதிவர்களுடன் நாளை சந்திப்போம்.

என்றென்றும் அன்புடன்,

ஆசியா உமர்.







37 comments:

  1. ஆசியா!.. கவிதை மலர் அறிமுகப் பதிவர்கள் அனைவரும் மிகச்சிறப்பானவர்கள்.அருமை!
    இவர்களுள் ஒருவராக என்னையும் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது ஆச்சரியமாகவும் ஐயோ இது ரொம்ப அதிகம் என்றும் இருக்கிறது...:) இவர்கள் அனைவரும் மிகமிகத் திறமைசாலிகள். இவர்களுடன் நானுமா?...

    கவிதை மலர் அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் என்னையும் அறிமுகப்படுத்திய உங்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. உங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் பல ஆசியா!...

    ReplyDelete
  3. இன்று கவிதை மலர் இருக்கலாம் என்று நினைத்திருந்தேன்... புதிய தளங்கள் இருந்தால் ரசித்து விட்டு வருகிறேன்...

    ReplyDelete
  4. மிகவும் நன்றி.
    நான் எழுதிய சிலவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று உங்களைக் கவர்ந்ததில் பெருமகிழ்ச்சி.

    ReplyDelete
  5. மூன்று தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. கதை மலரைத் தொடர்ந்து கவிதை மலரிலும் என்னை இணைத்துக் கொண்டிருப்பதற்கு நன்றி ஆசியா. தங்களுக்கும், அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. கவிதை மலரில் 'நெற்றிக்கண்' இடம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் ஆசியா. ரசனையுடன் தளங்களைத் தேர்வு செய்து சிரத்தையாகப் பகிர்ந்து வருகிறீர்கள். உங்களுக்கும், அறிமுகம் பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. சீனி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  9. இளமதி உங்களின் ஒவ்வொரு பகிர்விலும் கவிதைகள் இருக்கிறதே!
    எதை தேர்ந்தெடுப்பது என்று எண்ணுமளவு நீங்களும் கவிதைகள் எழுதி வருகிறீர்கள்.தொடர்ந்து எழுதுங்க,கவிதை எழுதுவதை விட்டு விடாதீர்கள்.எல்லோராலும் முடியாது.
    வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  10. தனபாலன் சார் வாங்க சகோ,எங்கு சென்றாலும் நீங்கள் இருப்பது எனக்கு மிக்க ஆச்சரியத்தை தந்த விஷயம்.உங்கள் தயாள மனசையும்,மனித நேயத்தையும் எண்ணி வியக்கிறேன்.உங்கள் பகிர்வுகள் அனைத்தையும் படித்திட நினைக்கிறேன்,ஒவ்வொன்றும் முத்து தான்.மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  11. அப்பாதுரை சார், வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.இந்தக் கவிதை மலர் தேடலில் தான் அதிகம் நேரம் செலவழித்தேன்.
    மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  12. ராமலஷ்மி வாங்க,கதை ,கவிதை,போட்டோகிராபி என்று பல திறமைகள்.உண்மையைச் சொல்லப் போனால் எல்லாத் துறையிலும் நீங்க இருக்கீங்க.வருகைக்கு
    மகிழ்ச்சி,மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  13. கவிநயா வாங்க,உங்களின் ஒரு கவிதை போதாதே பா.கருத்திற்கு நன்றி,மகிழ்ச்சி.

    ReplyDelete
  14. வலைச்சரம் வாரம் ஓர் ஆசிரியப் பணிக்கு வாழ்த்து.
    சிறந்த பதிவுகளை, பதிவர்களை
    அறிமுகம் செய்வது உயர்ந்த பணி!
    வலைச்சரத்தின் பணியை
    எனது தளத்திலும் பாராட்டி உள்ளேன்!
    http://yarlpavanan.wordpress.com/2013/06/21/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85/

    ReplyDelete
  15. வலைச்சரத்தில் இன்று இடம்பிடித்த அனைத்து உறவுகளுக்கும் என்
    அன்புகலந்த நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோ என் தளத்தினையும்
    இங்கே அறிமுகப் படுத்திக் கொண்டமைக்கு .உங்கள் பணி மேலும்
    சிறப்பாகத் தொடரவும் என் வாழ்த்துக்கள் இங்கே உரித்தாகட்டும் !

    ReplyDelete
  16. வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியிருக்கும் அனைத்து அறிமுகப்பதிவாளர்களுக்கும், உங்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள் ஆசியா.

    ReplyDelete
  17. ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  18. அம்பாளடியாள் வாங்க,வருகைக்கும்,வாழ்த்திற்கும்,
    கருத்திற்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  19. ப்ரியசகி உங்களின் தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்கும் மீண்டும் மிக்க நன்றி.மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  20. இன்று வலைச்சரத்தில் சிறப்பாக அடையாளம் காணப்பட்டு, அறிமுகம் ஆகியுள்ள அனைவருக்கும் என் அன்பான இனிய பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

    வலைச்சர ஆசிரியருக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

    ReplyDelete
  21. மிக அருமையாக பயனுள்ள கவிதை மலர் தொகுத்து இருக்கீங்க ஆசியா, அனைத்து சுட்டிகளையும் படிக்க தான் நேரம் பத்தவில்லை,
    கண்டிப்பாக நேரம் கிடைக்கும் போது எல்லா பதிவுகளை படிக்கனும்.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. கவிதை மலரில் ஒருசில கவிதைகளை படித்து விட்டேன்.
    எல்லா கவிதைகளையும் படிக்க ஆவல்.
    உங்கள் கவிதை தேடல் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.
    கவிதைபடைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. கவிதைமலர் நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. வை.கோ சார் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  25. கருத்திற்கு மிக்க நன்றி ஜலீலா, நேரம் கிடைத்த பொழுது வந்து பார்வையிட்டதே மகிழ்ச்சிபா.

    ReplyDelete
  26. கோமதியக்கா வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.வாழ்த்திற்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  27. மாதேவி வாங்க,கருத்திற்கு மகிழ்ச்சி,நன்றி.

    ReplyDelete
  28. நன்றி ஆசியா பகிர்வுக்கு. வலைச்சரத்தில் இரண்டாம் நாளாக கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பகிர்ந்தமைக்கு நன்றி தனபாலன் சார் & சீனா சார்.

    ReplyDelete
  29. என் பதிவையும் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  30. கவிதை மலரில் அற்புதமான கவிதைகளை செவ்வன தேர்ந்தெடுத்து அழகிய வர்ணனையுடன் அறிமுகப்படுத்திய விதம் அருமை தோழி.வலைச்சர ஆசியைப்பணியில் ஜொலிஜொலிக்கின்றீர்கள்.சந்தோஷமாக உள்ளது.வாழ்த்துக்கள்.

    எனக்கு பிடித்த அந்த சாம்பிராணிக்கவிதையை அறிமுக்கப்படுத்தி இருக்கின்றீர்கள்.மிக்க நன்றி.

    ReplyDelete
  31. தேனக்கா மிக்க நன்றி,வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியை தருகிறது.

    ReplyDelete
  32. வாங்க,ரஹீம் கஸாலி,உங்க கருத்திற்கு மனமார்ந்த நன்றி.மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  33. ஸாதிகா வாங்க தோழி, உங்களைக் காணோமே என்று நினைத்தேன்,வந்து விட்டீர்கள்.கருத்திற்கு மகிழ்ச்சி.நன்றி.

    ReplyDelete
  34. வணக்கம்
    ஆசியா உமர்

    வலைச்சரத்தில் என்னுடைய படைப்புகளை அறிமுகம் செய்தமைக்கு மிக நன்றி
    அத்தோடு அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  35. நல்ல அறிமுகங்கள் நன்றிகள்.

    ReplyDelete
  36. ரூபன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    இராஜ முகுந்தன் மிக்க நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது