07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 23, 2013

முத்துக்களின் அணிவகுப்பு இன்று முதல் நாள்



மரபுக் கவிதை முத்துக்கள் இவை எம்
மனதை மயக்கும் சொத்துக்கள் !...........
உலவும் தென்றற் காற்றுக்கும் நல்
உணர்வை ஊட்டும் கீற்றுக்கள் ......

(1)

புலவர் கவிதை பாருங்கள் அதன்
புதுமை உணர்ந்து கூறுங்கள்
வளரும் இளையோர் எமக்கெல்லாம்
வளமாய் வாழ வழிகாட்டும் ......!!!!!!!

 http://www.pulavarkural.info/2013/07/4.html

அச்சம் கொள்ள கேட்டவரும்-அந்தோ
     அழுது அலற பார்த்தவரும்
பச்சிளம் பாலகன் படுகொலையை-இன்று 
     பார்த்தன உலகமே கொலைவெறியை
துச்சமா? எம்மினம் எண்ணாதீர்-சிறு
     துரும்பும் தூணாம்! பண்ணாதீர்
மிச்சம் உள்ளவர் வாழட்டும்-ஈழம்
     மேன்மை கொண்டே மலரட்டும்


ஓயாத அலைபோல முயற்சி வேண்டும்
   உறவல்ல என்றாலும் உதவ வேண்டும்!
சாயாத நீதிவழி என்றும் வேண்டும்
   சாதிமதம் பார்க்காத மனமே வேண்டும்!
காயாகிக் கனியாகக் காக்க வேண்டும்
   காலத்தை பயனாகக் கழிக்க வேண்டும்!
ஆயாத செயல்தன்னை நீக்க வேண்டும்
   ஆணவத்தை அடியோடு அகற்ற வேண்டும்!
(2)
அவரைப் போல இன்னொருவர் 
அன்பைப் பொழிந்து வருகின்றார் 
காதல் ஆயிரம் என்கின்றார் தமிழையே 
காதல் செய்தும் வாழ்கின்றார் .........!!!!!

கம்பன் கழகத் தலைவன் இவர் 
கவிதை மழையைப் பொழிகின்றார் 
என்றும் புதுமை நிறைந்திருக்கும் 
எங்கே இதையும் கொஞ்சம் பாருங்கள் 

வில்லழகா! விந்தைமிகு பேரழகா! என்ராமா!
வெல்லழகாய் மின்னும்என் வேல்விழிபோல் - நல்லழகா
உன்சீதை? உண்மை உரைப்பாய்! அவள்பெயரே
இன்போதை ஏற்றும் எனக்கு!

887.
அரங்கன் அடியை அணுவும் அகலாது
இரங்கும் எனதுயிர்! காதல் - சுரங்கமாம்
என்னவள் நெஞ்சுள் இடம்பிடிக்க! இப்..பா
பொன்னவள் நெஞ்சுள் புகும்!

(3)
பக்திப் பரவசம் ஊட்டிடும் இனிய நற் 
பாமாலை கண்டேன் மனம் மகிழ்ந்தேன் 
அர்த்தம் தெளிவுற உரைக்கின்றார் 
அறிவோம் இத்தளம் பயன் தருமே !.....

பணியோ டலையா.. றதனோடு 
...பனிவா .னிலவை.. அணிவானே 
தணியா நனிகோ..பமதாலே 
...தழலாய்..மதவேள்.. பொடியானான் 
பணிவே உருவா .. முழவாரப் 
.. படையா ளிபரா .. வியநாதன் 
அணியார் பொழில்சூழ் .. மழபாடி 
...அகலா துறைமா.. மணிதானே....3 

(5)
வெண்புறா எதனைச் சொல்கிறதோ அதை 
வெறுத்தவர் யாரும் இல்லையுங்கோ .......;)
இன்புற இது போல் கவிதையைத் தான் 
இனியவர் எல்லாம் தேடி அலைகின்றார் .....!!!!!

குட்டிக் கதைகள் சொல்லும் தோழி 
குழந்தை மனம் தான் படைத்தவளோ :...!!!
எட்டிப் பார்த்து ஒரு தடவை 
என் ஏக்கம் அதனையும் உணருங்கள் 

போகப் போகத் தெரியும் முடிவு (நிமிடக் கதை )

(6)
மரபுக் கவிதை முத்துகளோடு பயணிக்க வந்த பக்தி தரும் முத்துப் பகிர்வுகள் .
இவரது தளத்தில் ஆக்கங்கள் படித்துத் தான் கதையைப் புரிந்து கொள்ள வேண்டும் 
என்பது கிடையாது .அத்தனை அழகான படங்களைப் பகிர்வதில் இவருக்கு நிகர் 
இவரே தான் என்று சொல்லலாம் ............!!!!

                                                    தோழி இராஜேஸ்வரி யின் தளம் 
ஆடி வெள்ளி வழிபாட்டின் நற் பழங்கள் சொல்லும் அழகிய பகிர்வு .

(6)
அதே பக்தி தரும் மற்றுமொரு முத்து .http://gopu1949.blogspot.ch/ 
வை .கோபாலகிருஸ்ணன் ஐயாவின் வலைத் தளம் இங்கே குறிப்பிட்டுச் 
சொல்லத் தேவை இல்லை .கண் பார்க்க மனம் நாடும் நற் கருத்து நிறைந்த 
இவரது தளம் .புதிவர்கள் அறிந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்பதே 
எனது நோக்கம்.
                                                       
தெய்வம் இருப்பது எங்கே ?.......
 http://gopu1949.blogspot.ch/2013/04/11_24.html

முத்துக்களின் அணிவகுப்பு மீண்டும் நாளை தொடரும் .மிக்க நன்றி உறவுகளே 
தங்கள் வருகைக்கும் நல்லாதரவிற்கும் .
                                                                   
                                                           வணக்கம் ...

61 comments:

  1. முத்தான கவிதைகள் எழுதும் கவி சோலைகள் அறிமுகம் மனதிற்கு குளிர்ச்சி....!

    ReplyDelete
  2. முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரா !

    ReplyDelete
  3. இன்றைய வலைச்சரத்தில் தங்களால் அடையாள்ம் காட்டி சிறப்பித்து புகழப்பட்டுள்ள அனைத்து பதிவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.


    >>>>>>> தொடரும் >>>>>>>

    ReplyDelete
  4. //இவரது தளத்தில் ஆக்கங்கள் படித்துத் தான் கதையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது கிடையாது.

    அத்தனை அழகான படங்களைப் பகிர்வதில் இவருக்கு நிகர்
    இவரே தான் என்று சொல்லலாம் ............!!!!//

    மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    இவருக்கு நிகர் இவரே தான் என்று நான் அடிக்கடி மனதில் நினைத்து மகிழ்வதையே தாங்களும் சொல்லியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    தங்களுக்கு என் மனமார்ந்த ஸ்பெஷல் நன்றிகள்.

    >>>>> தொடரும் >>>>>

    ReplyDelete
  5. வணக்கம்

    இன்று அறிமுகமான அனைத்து தளங்களு மிக அருமை இவர்கள் பதிவு இடுவதில் பெரிய ஜம்பவான்கள் தொடருகிறேன் பதிவுகளை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. ஓயாத அலைபோல முயற்சி வேண்டும்
    உறவல்ல என்றாலும் உதவ வேண்டும்!
    எல்லோருக்குமே ஏற்ற அறிவுரை அய்யாவின் பேருரை.

    ReplyDelete
  7. //தோழி இராஜேஸ்வரி யின் தளம்
    http://jaghamani.blogspot.com/
    ஆடி வெள்ளி வழிபாட்டின் நற் பழங்கள் சொல்லும் அழகிய பகிர்வு .
    http://jaghamani.blogspot.com/2012/07/blog-post_19.html//

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இவரின் ஆயிரககணக்கான, அற்புதமான பதிவுகளில், மேலாக ஒன்றை, சுடச்சுட எடுத்துக்காட்டியுள்ளீர்கள்.

    என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ;)

    பல அம்பாள்களைப்பற்றி அடிக்கடி எழுதும், திருமதி இராஜராஜேஸ்வரி அம்பாள் அவர்களைப்பற்றி, அம்பாள் அடியாள் ஆகிய தாங்கள் இன்று மங்களவாரமாம் செவ்வாய்க்கிழமையில் எழுதியுள்ளது என்னைப் புல்லரிக்கச் செய்கிறது.

    என் மனமாந்த இனிய நன்றியோ நன்றிகள் உங்களுக்கு.

    >>>>> தொடரும் >>>>>

    ReplyDelete
  8. ஆஹா, கடைசியில் [அஸ்திவாரம் போல என் ப்டத்தையும் காட்டி] என் பெயரையும், என் வலைத்தளத்தையும் கூட அறிமுகம் செய்து அசத்தியுள்ளீர்களே!

    ஆச்ச்ர்யமாகவே உள்ளது.

    இந்த ’அறி’முகம் கிடைக்க நான் ’நரி’முகத்தில் தான் விழித்துள்ளேன் இன்று. ;)))))

    //தெய்வம் இருப்பது எங்கே ?.......
    http://gopu1949.blogspot.ch/2013/04/11_24.html //

    ஆஹா, இது என் பொக்கிஷம் பதிவின் நிறைவுப்பகுதி. மனதுக்கு நிறைவான பகுதி தான்.

    இதில் கடைசியில் சொல்லப்பட்டுள்ள ஓர் உண்மைக்கதையை படிக்காதவர்கள் படிக்கட்டும்.

    தெய்வம் இருப்பது எங்கே? எனத் தெரிந்து கொள்ளட்டும்.

    நான் என் தெய்வமாகவே மனதில் நினைத்துக் கொண்டாடி வரும் திருமதி இராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு அடியில், பூவோடு பின்னிப்பிணைந்த நாராக என்னையும் இன்று மணக்கச் செய்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    கோபு

    ReplyDelete
  9. //தோழி இராஜேஸ்வரி யின் தளம்
    http://jaghamani.blogspot.com/
    ஆடி வெள்ளி வழிபாட்டின் நற் பழங்கள் சொல்லும் அழகிய பகிர்வு .
    http://jaghamani.blogspot.com/2012/07/blog-post_19.html//

    எமது பதிவை சிறப்பாக குறிப்பிட்டு அறிமுகப்படுத்தியதற்கு இனிய நன்றிகள்..!

    ReplyDelete
  10. இன்றைய அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
  11. வணக்கம் சகோ..

    அனைவருமே சிறந்த பதிவர்கள்...

    அறிமுகமான அனைவர்க்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  12. அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  13. இன்றைய அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்..


    ReplyDelete
  14. நான் விரும்பித் தினம் தொடரும்
    அருமையான பதிவர்கள்
    அனைவரையும் ஒட்டுமொத்தமாக
    அருமையாக அறிமுகம் செய்தமைக்கும்
    தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்....

    சிறப்பான பகிர்வு.....

    ReplyDelete

  16. தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!

    என்னை இங்கே ஒருபொருட்டாய்
    ஏந்திப் படைத்த நல்லம்பாள்!
    பொன்னை நிகா்த்த மனமுடையார்!
    புலமை கமழும் மதியுடையார்!
    அன்னைத் தமிழின் திருவருளால்
    அமுதைப் பொழியும் குரலுடையார்!
    தென்னை நல்கும் இளநீராய்த்
    திரட்டித் தந்தார் இப்பதிவே!

    ஆக்கும் விருந்தின் அறுசுவையை
    அளிக்கும் இந்த வலைச்சரத்தில்
    பூக்கும் சோலை எழிலாகப்
    புனைந்த பதிவு! நம்துயரைப்
    போக்கும்! பூந்தேன் சுரந்துாட்டும்!
    புதுமை பொதுமை புகழ்ந்துாட்டும்!
    காக்கும் அம்பாள் அடியார்க்குக்
    கவிஞன் நன்றி உரைத்தனனே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  17. சிறப்பான அறிமுகங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  18. அன்புத் தோழி!
    முத்தான அறிமுகங்கள் அத்தனையும் நற் சொத்தாகும்!
    இன்று அறுமுகமாகும் பதிவர்களுக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. அம்பாள் அடியாள் செய்திருக்கும்
    அறிமுகம் அனைத்தும் மிகஅருமை

    பொன்போல் படங்கள் மிளிருகின்ற
    பதிவர் மணிராஜ் தளம் இனிமை

    அன்பால் பதிவர் அனைவரையும்
    அணைக்கும் தனபாலன் உரிமை!

    என்போல் பதிவரை ஊக்குவிக்கும்
    இசைமிகு வலைச்சரம் அதன் பெருமை!

    ReplyDelete
  20. நன்றி நன்றி அம்பாளே -அதனை
    நவின்றிட எழுதினேன் இப்பாவே
    அன்றில் பறவை குணங்கொண்டே-கவி,
    அழகுற நாளும் அதைவிண்டே
    இன்றெனை அறிமுகம் செய்தீரே-மனம்
    இனித்திட அன்பைப் பெய்தீரே
    என்றும் வாழ்க நீவீரே -யாரும்
    இணையில் எனவும் ஆவீரே

    ReplyDelete
  21. முத்து முத்தான கவிதை தளங்களின் அறிமுகங்கள் அருமை. எல்லோருமே தெரிந்தவர்களாக, விரும்பிப் படிப்பவர்களாக அமைந்துள்ளது இன்னும் அருமை.

    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. முத்தான முத்துக்கள் அறிமுகம் சிறப்பு தோழி.. இனிதே தொடருங்கள் தொடர்கிறோம்.

    ReplyDelete
  23. முத்தான மரபின் அறிமுகம் அருமை

    ReplyDelete
  24. அன்புள்ள அம்பாளடியாள்,
    என்னையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு
    மகிழ்வுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    அனைத்து அறிமுகப் பதிவர்களுக்கும்.என் அன்புவாழ்த்துகள்.

    ReplyDelete
  25. வணக்கம்.

    அம்பாள் அடியாள் அறிமுகம் கண்டவளின்
    அன்பில் உருகிநின்றேன்! நம்அன்னை – செந்தமிழைப்
    பண்பாய் வளர்த்திடும் பாடகியே! உன்னாலே
    அங்கம் குளிர்ந்தேன் அசைந்து!

    (வர்க்க எதுகை)

    என்னை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி தோழி.
    உங்களுக்கும் மற்ற அறிமுக பெரியவர்களையும் வணங்குகிறேன்.

    ReplyDelete
  26. வலையுலகத்தின் அற்புத பதிவர்களை அழகாக அறிமுகம் செய்தமை சிறப்பு! நன்றி! தொடருங்கள்!

    ReplyDelete
  27. வணக்கம் அக்கா...
    ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் நான் வாசிக்கும் அற்புதமான பதிவர்கள்... அருமையான எழுத்தாளர்கள்...

    இதுவரை படிக்காத ஒருவரையும் படிக்கிறேன்..

    முத்துக்கள் அருமை...

    தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
  28. முத்துக்கள் அணிவகுப்பு மிக அருமை.
    நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் அனைவரும் சிறந்த முத்துக்கள்.
    வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

    ReplyDelete
  29. இன்றைய அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
  30. தொகுப்பு அருமை. தொகுக்கப்பட்டவர்க்கு பெருமை.

    ReplyDelete
  31. அறிமுகங்கள் அனைவரும் நான் பின்தொடரும் அருமை கவிதை யாக்கும் மூத்தவர்கள்§ வாழ்த்துக்கள் அனைவருக்கும்

    ReplyDelete
  32. சிறப்பானஅறிமுகங்கள்.

    முத்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  33. மிக்க மக்ழிச்சி சகோ முதல் வரவாக வந்தென்னை வாழ்த்தியமைக்கு .

    ReplyDelete
  34. மிக்க மக்ழிச்சி ஐயா !

    ReplyDelete
  35. மனம் மகிழ்ந்தேன் ஐயா !

    ReplyDelete
  36. மிக்க நன்றி சகோதரரே (ரூபன் )வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  37. ஓயாத அலைபோல முயற்சி வேண்டும்
    உறவல்ல என்றாலும் உதவ வேண்டும்!
    எல்லோருக்குமே ஏற்ற அறிவுரை அய்யாவின் பேருரை.

    மிக்க நன்றி சகோதரரே தங்கள் வருகைக்கும் சிறந்த நற் கருத்திற்கும் .

    ReplyDelete
  38. ஆன்மீகத்தில் ஒன்றிப் பிழைத்திருக்கும் தாங்கள் சொன்ன கருத்தைக் கண்டு
    என் மனமும் மகிழ்ந்ததையா !

    ReplyDelete
  39. நிலவுக்கு அறிமுகம் சொல்லி நீருக்கு அறிமுகம் சொல்லி உழவர்க்கு என்ன பயன் ?.........!!!!!! உழுதுண்டு வாழ்பவனுக்கு இவை எப்படியோ அது போன்று தான் வலைத் தளத்துக்கு நீங்கள் .உங்களை பொட்டுப் போல கிள்ளி வைத்ததன் நோக்கம் வேறு .
    புதியவர்கள் எவரேனும் புதுசாய் இங்கு நுழைந்தால் அறிய முற்படுவார்கள் .மற்ற படி மங்கள கரமாய் இருக்கும் இங்கே தாங்களும் அணிவகுத்து நின்றால் .இனி நரியின் முகத்தில்
    நீங்கள் முழிக்க வேண்டாம் :))) உங்களைத் தெரியாதவர்கள்
    இங்கு கிடையாது என்றே மனம் உறுதியாகி விட்டதையா எமக்கும் ;)

    ReplyDelete
  40. //தோழி இராஜேஸ்வரி யின் தளம்
    http://jaghamani.blogspot.com/
    ஆடி வெள்ளி வழிபாட்டின் நற் பழங்கள் சொல்லும் அழகிய பகிர்வு .
    http://jaghamani.blogspot.com/2012/07/blog-post_19.html//

    எமது பதிவை சிறப்பாக குறிப்பிட்டு அறிமுகப்படுத்தியதற்கு இனிய நன்றிகள்..!

    மிக்க நன்றி தோழி !!

    ReplyDelete
  41. மிக்க நன்றி சகோ (பிரகாஸ் ) வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  42. மிக்க நன்றி சகோ (இரவின் புன்னகை ) வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  43. மிக்க நன்றி ரமணி ஐயா தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  44. மிக்க நன்றி சகோ (வெங்கட் ) தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  45. தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!

    என்னை இங்கே ஒருபொருட்டாய்
    ஏந்திப் படைத்த நல்லம்பாள்!
    பொன்னை நிகா்த்த மனமுடையார்!
    புலமை கமழும் மதியுடையார்!
    அன்னைத் தமிழின் திருவருளால்
    அமுதைப் பொழியும் குரலுடையார்!
    தென்னை நல்கும் இளநீராய்த்
    திரட்டித் தந்தார் இப்பதிவே!

    ஆக்கும் விருந்தின் அறுசுவையை
    அளிக்கும் இந்த வலைச்சரத்தில்
    பூக்கும் சோலை எழிலாகப்
    புனைந்த பதிவு! நம்துயரைப்
    போக்கும்! பூந்தேன் சுரந்துாட்டும்!
    புதுமை பொதுமை புகழ்ந்துாட்டும்!
    காக்கும் அம்பாள் அடியார்க்குக்
    கவிஞன் நன்றி உரைத்தனனே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
    வணக்கம் !
    மிக்க மகிச்சி ஐயா இனிய வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  46. மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  47. மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  48. மிக்க நன்றி தோழி சமுத்திரா தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் .

    ReplyDelete

  49. நன்றி நன்றி அம்பாளே -அதனை
    நவின்றிட எழுதினேன் இப்பாவே
    அன்றில் பறவை குணங்கொண்டே-கவி,
    அழகுற நாளும் அதைவிண்டே
    இன்றெனை அறிமுகம் செய்தீரே-மனம்
    இனித்திட அன்பைப் பெய்தீரே
    என்றும் வாழ்க நீவீரே -யாரும்
    இணையில் எனவும் ஆவீரே

    இனிய நற் பாவெழுதி எம் இதயத்தைக் குளிர வைக்கும் முதிவர் பண்பும் இதுவே மனம் போற்றிடும் எந்நாளும் உனையே அதிதகு மாணிக்கமே இவ் அகிலமும் வாழ்த்தும் உம் பா அடியவள் பெற்ற வரம் இதுவென அன்போடும் ஏற்றுக் கொண்டேன் ..!!!!
    மிக்க நன்றி ஐயா .........

    ReplyDelete
  50. முத்து முத்தான கவிதை தளங்களின் அறிமுகங்கள் அருமை. எல்லோருமே தெரிந்தவர்களாக, விரும்பிப் படிப்பவர்களாக அமைந்துள்ளது இன்னும் அருமை.

    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    மிக்க நன்றி அம்மா வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  51. மிக்க நன்றி தோழி சசிகலா

    ReplyDelete
  52. மிக்க நன்றி சகோதரரே (செய்தாலி ) தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  53. அன்புள்ள அம்பாளடியாள்,
    என்னையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்குமகிழ்வுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    அனைத்து அறிமுகப் பதிவர்களுக்கும்.என் அன்புவாழ்த்துகள்

    மிக்க நன்றி அம்மா தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  54. மிக்க நன்றி தோழி (அருணா செல்வம் )வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  55. மிக்க நன்றி சகோ (தளிர் )வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  56. மிக்க நன்றி சகோ (குமார் )வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  57. மிக்க நன்றி தோழி (கோமதி அரசு )வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  58. மிக்க நன்றி" ஸ்கூல் பையா ":)தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  59. தொகுப்பு அருமை. தொகுக்கப்பட்டவர்க்கு பெருமை.

    மிக்க நன்றி சகோதரரே தங்கள் வருகைக்கும் இனிய நற் பாராட்டிக்கும் .

    ReplyDelete
  60. தொகுப்பு அருமை. தொகுக்கப்பட்டவர்க்கு பெருமை.

    மிக்க நன்றி சகோதரரே(தனிமரம்)வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .

    ReplyDelete
  61. மிக்க நன்றி மாதேவி தங்கள் வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் .

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது