சமையலில் நளபாகம் :)
➦➠ by:
Angelin
அனைவருக்கும் பொன்னான புதன்கிழமை
வணக்கங்கள் :)தலைப்பை பார்த்தவுடன் அனைவருக்குமே
விளங்கியிருக்கும் ..:)
பெண்கள் வசமிருந்து ஆண்களுக்கு சென்றுவிட்டதோ
இத்துறை எனும் அளவுக்கு நிறைய ஆண்கள் சமையல் துறையில் கோலோச்சுகிறார்கள் . நம்மூரில் ஆண்கள் சமைக்க பற்பல காரணங்கள் உண்டு தனிக்கட்டை வாழ்க்கை ,
ஹோட்டல் உணவை தவிர்க்க ,பணத்தை சேமிக்க ..இப்படி
வெளிநாட்டில் உள்ள சமையல் நிபுணர்களை
பாருங்கள் ,Heston Blumenthal ,Marco Pierre white, Gordon Ramsey ,
James Martin, Keith Floyd,Anthony worral thompson ...இவர்கள்
அனைவருமே இங்கிலாந்தின் பிரபல சமையல் நிபுணர்கள் .
நம்ம தொலைகாட்சிகளிலும் தாமு ,அறுசுவை அரசர்
என அதிகம்ஆண்களையே சமையல் நிகழ்சிகளில்
காட்டுகிறார்கள் இதில்வேறு தல//தலப்பாக்கட்டு பிரியாணி
செய்தார் //என்று அடிக்கடி செய்தி ,படிக்க பொறாமையாக
இருக்கும் :)
எனக்கு திருமணம் நிச்சயமானதும் வருங்கால கணவர்
வெளிநாட்டில் படித்து வேலை செய்கிறார் .அங்கே அவரது
சகோதரர்களுடன் இருக்கார் என்று சொன்னார்கள்....
மணமாகி கணவருடன் ஊருக்கு போனதும் முதல் இரண்டு
மூன்று நாட்களுக்கு அவரின் சகோதர்கள் வீட்டுக்கு விருந்து
சாப்பிட சென்றோம் .
அங்கே கண்ட காட்சிகள் வேறு எனக்கு மிகவும்
ஆனந்தமாக இருந்தது ! ஒவ்வொருவர் வீட்டிலும்
மைத்துனர்கள் அழகா ஏப்ரன் கட்டிக்கொண்டு கிச்சனுக்கும்
டைனிங் ஹாலுக்கு நடந்த வண்ணம் இருந்தாங்க ..:)
இப்படியே ஒரு வாரம் போனது எனக்கு ப்ரெட் பட்டர் ஜாம் ..
ரெடிமேட் நூடில்ஸ் மட்டுமே என் கணவர் பரிமாறினார்
இதுவே இரண்டாம் வாரமும் தொடரவும் அவரே சொல்லிட்டார்
தனக்கு சமையல் தெரியாதென்று !....
.....(நான் மிரட்டவில்லை ).
நான் கேட்டேன் //அப்போ ஊரிலிருக்கும்போது எனக்கு போனில் சொன்னீங்களே ?அண்ணன் டின்னருக்கு வர்றார் ,தம்பி டின்னருக்கு
வரார்னு ?....கணவர் ..//அது ..நான் காய்கறிகளை வாங்கி நறுக்கி
வைத்துவிடுவேன் அவர்களே வந்து சமைப்பாங்க !!!//அவ்வ்வ்வவ் !
அங்கேயே மயங்கி விழாத குறைதான் எனக்கு .....
சரி இப்போ நம்ம பிரபல பதிவர்கள் யார்யாரெல்லாம் சமையல்
சிங்கங்கள் என்று பார்ப்போமா :) அம்மா ,பெரியம்மா ,சித்தி ,
அத்தை ,அண்ணி ,அக்கா தங்கச்சிங்க எல்லோரையும் வருக !
வருக ! என அழைக்கிறேன் :)
அனைவரும் வந்து தட்டில் உள்ள நொறுக்குகளை எடுத்துகிட்டு
நாற்காலியில் அமர்ந்துக்கோங்க :)
ஆண்கள் அனைவரும் இந்தாங்க சுவையான பன்னீர் சோடா
கையில் எடுத்துக்கிட்டு சமையலறைக்கு போகலாம் :)
பிரபல எழுத்தாளரும் புத்தக பதிப்பாளருமான பத்ரி சேஷாத்ரி
அவர்களின் பேட்டியும் ,கலக்கல் சமையல் குறிப்பும் இங்கே
இது தினகரன் பத்திரிகையில் வெளியானது ..
தான் சமையல் செய்ய ஆரம்பித்த காரணத்தை தொடராக
சொல்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி இங்கே அவரின் ஸ்பெஷல்
ரெசிப்பியும் அங்கே உள்ளது .
முதலில் இவர் ஆஹா என்ன அழகு என்று அடை சாப்பிட அழைக்கின்றார்
வெண்ணிலவை தொட்டு முத்தமிட ஆசை மிளகாய் பொடிகொஞ்சம்
தொட்டுக்கொள்ள ஆசை என்று பாட்டு பாடி அழைக்கின்றார் :)
சும்மா சொல்ல கூடாது .அருமையான சுவை !!
அடுத்த பதிவர் இவர் புது வித பயத்தம் பருப்பு அல்வா
செய்ய சொல்லிதறார் ..அதுமட்டுமன்றி ஒரு விழிப்புணர்வு
தகவலையும் பகிர்ந்துள்ளார் ..கண்டிப்பா படிங்க .
இவரை உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும் ..தெரியாத விஷயம்
இவர் இவ்ளோ அருமையா காஜர் பராட்டா செய்வார் என்பது
இவ்ளோ சுவையா ,ஆரோக்கியமான எலுமிச்சை ரசம் குறிப்பு
தர இவர் ஒருவரால் மட்டுமே முடியும் ...இவர் தொலைக்காட்சி நிலையம்
வேறு வைத்திருக்கிறாராம் ..குறிப்பு இங்கே :)
அடுத்து இவர் ஒரு சர்வதேச சமையல் ரெசிப்பி தந்திருக்கார் :)
ஸ்பானிஷ் உணவு நானும் செய்து பார்த்தேன் ..ருசி அபாரம் !
ம்ம் அடுத்தவர் இவர் :)உருகி உருகி காதலித்தாலும் சமையலும்
நல்லாவே செய்யறார் PANNA COTTA
அத்துடன் ஒரு ஆரோக்கியமான ஸ்டார்டர் இனிமே பால் கோபி குடிக்க மாட்டாரா ? :)
ஆஹா இவர் குறிப்பும் சூப்பர் :) திரட்டிப்பால் குறிப்பு வழங்குவது
பிரபல DOHA பதிவர் :)
இவர் வாயூறும் சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் செய்ய
சொல்லிதருகின்றார் இங்கே ...
இவங்க இ எ மி கா ஊறுகாய் போடசொல்லித்தராங்க இங்கே
இவரின் ப்ளாகில் நிறைய குறிப்புகள் இருக்கு ஒவ்வொன்றா
குறித்துகொள்ளவும் :)
சமைக்க தெரியாதவங்களுக்குன்னு அற்புத வழிகள் :)
இவரின் குறிப்புக்கள் பலருக்கு உதவலாம்
இவரது மகனும் வருங்காலத்தில் சமையல் புலியாக
வருவாரா :) இப்பவே எவ்வளவு விவரமா இருக்கார்னு பாருங்க
மிக அருமையா இலையில் எப்படி உணவு பரிமாறணும் என்று
விவரமாக சொல்றார் இங்கே கொட் ரசம் சூப்பருங்கோ !
வெந்நீர் போடுவதற்கு கூட இவ்வளவு அழகா குறிப்பு தர
இவரால் மட்டுமே முடியும் :)
நிறைய குறிப்புகள் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன் அப்படியே
இந்த பாடலையும் கேட்டு ரசியுங்கள் :)ஒவ்வொரு உணவையும்
அருமையா பேர சொல்லி ,சொல்லி பாடுகிறார் இந்த பதிவர் :)
https://www.youtube.com/watch?v=JROigL20fwA
இன்றைய பதிவில் பகிர்ந்தவற்றை அனைவரும் செய்து பார்த்து
சொல்லுங்க ..மீண்டும் நாளை சந்திப்போம் :)
அன்புடன் ஏஞ்சலின் .