கடல்பயணங்கள்...... வாருங்கள் பயணிப்போம் !!
கடல்பயணங்கள்...... இந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்க்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும் !! எனது தளத்துக்கு வருபவர்கள் படிப்பது பயண கட்டுரைகளை அல்ல, நான் வாழ்வில் அனுபவித்த சில தருணங்களையும், இந்த உலகத்தில் வியப்பதற்கு எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பதையும்தான். இந்த தளம் 14-ஜூன்-2012ம் ஆண்டு ஒரு மதிய வேளையில் தொடங்கப்பட்டது. முதலில் எனது எழுத்துக்களை நான் பார்க்கும்போது ஒரு உந்துதலில் எழுத ஆரம்பித்தேன், பின்னர்தான் தெரிந்தது எனக்கு எழுதுவதற்கு நிறைய விஷயம் இருப்பது !! கற்றது இன்னமும் நகமுனை அளவுதான்....... எனது முன்னே ஒரு பரந்து விரிந்த கடல் இருக்கிறது !
இந்த பதிவுலகில் நிறைய ஜாம்பவான்கள் இருக்கிறார்கள், அதில் ஒரு ஓரத்தில் நின்று நானும் எனது பதிவுகளை தருகிறேன். சரி, சுருக்கமாக எனது தளத்தில் நான் எதை பற்றி எழுதுகிறேன் என்று சொல்கிறேன்..... நாளையில் இருந்து ஒரு சிறு விருந்து தினம் தினமும் !!
அறுசுவை :
ஒரு சுவைக்காக நீங்கள் எவ்வளவு தூரம் செல்வீர்கள் ?! ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றால் நீங்கள் அதன் சுவையை விரும்புவீர்களா அல்லது அதன் அழகையா ? இந்த பகுதியில் நீங்கள் நான் தேடி தேடி சுவைத்த சுவைகளை காணலாம். கையேந்தி பவனில் இருந்து, முக்கு கடை, பாரம்பரியம் மிக்க கடை, ஐந்து நட்சத்திர ஹோட்டல் என்று ரகளையாக பதிவுகளை நீங்கள் காணலாம். சில சுவைகளை நீங்கள் இங்கே காணலாம்......
ஊர் ஸ்பெஷல் :
எந்த ஒரு ஊருக்கு சென்றாலும் அங்க என்ன சிறப்பு என்று கேட்டு அதை வாங்கி வீட்டில் வைக்கிறோம் அல்லது அந்த ஊரின் சிறப்பான உணவை அல்லவா...... உதாரணமாக தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, போடி ஏலக்காய், ஊத்துக்குளி வெண்ணை, போளியம்மனூர் மோர் மிளகாய் என்று !! இப்படி தமிழ்நாட்டில் எத்தனை ஊர்கள் இருக்கின்றன, அதன் சிறப்பு என்ன என்றெல்லாம் தெரியுமா ? இந்த பதிவுகளில் சும்மா அந்த ஊருக்கு சென்று அதை பார்ப்பது மட்டும் இல்லாமல், அதன் தயாரிப்பு முறை, எப்படி செய்கிறார்கள் என்று அந்த அந்த இடத்திற்கே தேடி சென்று அரும்பாடுபட்டு சேர்த்த விஷயங்கள் இருக்கிறது. படித்து பார்த்தால் நீங்களே வியப்பீர்கள் !!
எண்ணங்கள் :
ஒரு சில விஷயங்களை பார்க்கும்போது சில எண்ணங்கள் மனதில் தோன்றும். அதை வித்யாசமான கோணத்தில் பார்த்து எழுதுவதே எண்ணங்கள். நீங்கள் பார்க்கும் எந்த பொருளும் எந்த வடிவத்தில் இருக்கின்றன என்பதை செவ்வக வடிவ வாழ்க்கை என்றும், இன்றைய நகரத்தில் வசிக்கும் பறவைகள் எங்கு கூடு கட்டி குடி இருக்கின்றன என்பதை நகரத்து பறவையின் எச்சம் என்றும், நீங்கள் ஒரு புகைப்படம் எடுக்கும்போது எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை போட்டோவுக்கு போஸ் குடுங்க என்றும் ......... இப்படி பல பல தலைப்புகளில் இந்த வாழ்க்கையில் நான் புரிந்துகொண்டதை பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். உங்களுக்கும் இது கண்டிப்பாக பிடிக்கும் !
சாகச பயணம் :
பயணம் என்பதில் பல வகை இருக்கிறது..... இயற்கையை ரசிப்பது, மறக்க முடியாத பயணங்கள், காரில் செல்வது, விமானத்தில் பறப்பது, கடற்கரையோரம் தங்குவது என்று. இந்த பயணங்களில் இன்னொரு வகை என்பது சாகச பயணங்கள் ! ஆப்ரிக்காவின் தங்க சுரங்கம், ஹெலிகாப்ட்டர் பயணம், நீர்மூழ்கி கப்பல் பயணம், தண்ணீரில் இறங்கும் விமான பயணம் என்று நிறைய நிறைய மயிர் கூச்செறியும் பயணங்களை மேற்கொண்டு இருக்கிறேன், அதை சுவாரசியமாக பகிர்ந்துகொண்டும் இருக்கிறேன் !
இப்படி பல பல தலைப்புகளில் சுவாரசியமாகவும், படங்களுடனும் விஷயங்களை என்னுடைய பதிவுகளில் தருகிறேன். இந்த பதிவுகளை படித்து நிறைய நண்பர்கள் கிடைத்தனர், அதுதான் இந்த பதிவுகலகத்தை நேசிக்க வைத்த தருணங்கள். இந்த பதிவுகளை படிக்கும் நீங்களும் ஒரு நண்பர் ஆவீர்கள் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நாளை முதல் நிறைய சுவாரசிய தகவல்களையும், புதிய பதிவர்களையும், பிரபல பதிவர்களை நான் விரும்பும் காரணங்களையும், பயணத்தில் ஏற்பட்ட சுவாரசிய தருணங்களையும் பகிர்கிறேன்.........!!
நாளை முதல் நிறைய சுவாரசிய தகவல்களையும், புதிய பதிவர்களையும், பிரபல பதிவர்களை நான் விரும்பும் காரணங்களையும், பயணத்தில் ஏற்பட்ட சுவாரசிய தருணங்களையும் பகிர்கிறேன்.........!!
|
|
அட்ராசக்க .. வாங்க வாங்க..
ReplyDeleteஎன்ன ஆவி, என்னை மாட்டி விட்டுடீங்களே !
Deleteஅருமை.. அருமை!..
ReplyDeleteஉண்மையில் வியப்புத் தான் மேலிடுகின்றது!..
நன்றி சார்.... வியப்பதற்கு இன்னமும் நிறைய உள்ளது ! விரைவில் எழுதுகிறேன் !
Deleteதஞ்சாவூர் - தலையாட்டி பொம்மைகள் செய்யும் இடத்தைக் கண்டறிந்து - அவற்றைப் பற்றிய விவரங்களுடன் கூடிய பதிவு அருமை!..
ReplyDelete"ஊர் ஸ்பெஷல்" என்ற தலைப்பில் என்னுடைய வலைபக்கதிர்க்கு போனால் இன்னமும் நிறைய கிடைக்குமே !
Deleteபதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்தபின் உங்கள் தளத்தினை தொடர்ந்து வாசித்து வருகிறேன்! அருமையாக எழுதுகிறீர்கள்! வலைச்சரத்திலும் அது தொடரட்டும்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்.... உங்களது மனம் திறந்த பாராட்டு உற்சாகம் தருகிறது. மீண்டும் சிந்திப்போம் !
Deleteஇந்த வாரம் முழுவதும் கொண்டாட்டம் தான்... அசத்துங்க நண்பரே...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன் சார், நீங்கள் போடும் ஒவ்வொரு கருத்தும் என்னை உற்சாகம் கொள்ள வைக்கிறது !
Deleteவணக்கம் சகோதரர்
ReplyDeleteதங்களின் வலைச்சர ஆசிரியர் சிறப்பாக அமைய எனது அன்பான வாழ்த்துகள். மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கனுமா என்ன? தங்கள் பணி சிறப்பாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. கலக்குங்கள். நன்றி சகோ. தொடர்ந்த நட்பில் இணைந்திருப்போம்.
மிக்க நன்றி பாண்டியன்..... இப்படி புதிய நட்புகள் கிடைக்க வழி செய்த வலைச்சரத்திற்கு நன்றி. உங்களது வார்த்தைகளுக்கு நன்றி !
Deleteவாழ்த்துக்கள்... தொடருங்கள்...
ReplyDeleteஉங்கள் பணி சிறக்கட்டும்.
நன்றி நண்பரே !
Deleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி நண்பரே !
Deleteஅட்டகாசம்!!! அதென்னவோ எனக்குக் கடலில் பயணம் ஒத்துக்கொள்வதில்லை. டேஷ் டேஷ் வந்துரும், அதுக்கான மாத்திரைகளைப் போட்டுக்கொண்டாலுமே:(
ReplyDeleteபோடி ஏலக்காய்! நம்மூட்டுலே இதுதான் எப்பவும். கோபால் போடிக்காரர்தான். மாமியாவூட்டு சீதனமா அனுப்பி வச்சுருவாங்க.
நன்றி மேடம்... நீங்கள்தான் உலகம் சுற்றுவதில் முன்னோடி ! கோபால் சாரை கேட்டதாக சொல்லவும் !
Deleteவாங்க சுரேஷ். வலைச்சர ஆசிரியப் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி சகோதரி..... கருத்துக்கள் சொல்ல மறக்க வேண்டாம் !
Deleteசிறப்பான தொடக்கம் சுரேஷ்.....
ReplyDeleteதொடர்ந்து அசத்தலான பதிவுகள் வெளியிட வாழ்த்துகள்.
நன்றி நாகராஜ்... ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் சொல்லும் கருத்துக்கள்தான் சிறப்பு !
Deleteஅழகான இரண்டு சிப்பிப்பாறை இன dogs ..நம் நாட்டில் ..டாபர்மானும் ,கிரேட்டேனும் ,வளர்த்த காலம் போய் இப்போ இந்த சிப்பிபாறை ,ராஜபாளையம் எல்லாம் நிறைய வீட்ல வளக்கறாங்க .
ReplyDeleteஇவங்க உங்க வீட்டில் வளர்ப்பதா இல்லை போட்டோக்கு போஸ் கொடுத்தாங்களா சுரேஷ் ?
Angelin
இல்லை நண்பரே, நான் ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ராஜபாளையம் சென்று நாய் வளர்க்கும் இடத்தில் எடுத்த படம் இது ! வரவுக்கும், கருத்துக்கும் நன்றி !
Delete