எனது தேடலும்.... பதிவர் அறிமுகமும் !!
➦➠ by:
கடல்பயணங்கள்
கடந்த மூன்று நாட்களாக என்னையும், எனது பதிவுகளை பற்றியும் மற்றும் பதிவுலக நண்பர்களை பற்றியும் சொன்னேன், இதன் மூலம் என்னை பற்றி நீங்கள் சற்று தெரிந்து கொண்டு இருப்பீர்கள். பொதுவாக எனது பதிவுகளில் நான் சென்று பார்த்த, அனுபவித்த ஒன்றை மட்டுமே கொடுக்க வேண்டும் என்று கொண்டுள்ளேன், அதை நான் நிஜமாகத்தான் சொல்கிறேன் என்பதற்காகதான் நான் அந்த இடத்தில் இருந்ததை உறுதி செய்யும் பொருட்டு எனது புகைப்படத்தை போடுவேன். ஆனால் இந்த புகைப்படங்களை எடுப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படுவேன் என்பதை நகைசுவையாக இங்கே பகிர்கிறேன்.
எல்லோருக்கும் பிடித்த பகுதி என்பது அறுசுவை. முதலில் இந்த பதிவை எழுத காரணம் கேபிள் சங்கர் அவர்கள்தான். அவர் உணவகத்திற்கு சென்று வந்து அதை விவரிக்கும்போது இங்கே எனக்கு நாக்கு ஊறும். முதலில் பதிவு எழுத ஆரம்பித்து சில நாட்களில் ஒரு உணவகம் சென்று வந்து எழுதியபோது அதற்குதான் ஏகப்பட்ட ஹிட் !! சரி, எல்லோரும் ரசிக்கிறார்களே என்று மாதம் ஒரு உணவகத்திற்கு சென்று எழுத ஆரம்பித்து, இன்று சாப்பிடவே ஒரு ஊருக்கு தேடி செல்வது என்றாகிவிட்டது. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் திரு. சமஸ் எழுதிய சாப்பாட்டு புராணம் என்ற புத்தகத்தை படித்துவிட்டு சுமார் மூன்று நாட்கள் மதுரையில் இருந்து சிதம்பரம் வரை ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு உணவகத்தில் உணவை சுவைத்த கதை உணவை விட சுவையானது !! அதில் ஒரு சாம்பிள் பார்க்க..... ஒரு ஜோடி நெய் தோசை !!
ஊர் ஸ்பெஷல் பகுதியில் நடக்கும் கதை வேறு..... இந்த பயணங்களில் அதிகம் எந்த திட்டம் இல்லாமல் ஆரம்பிக்கும் என்பதுதான் உண்மை. எந்த இடத்திலும் எனக்கு ஆள் தெரியாது..... உதாரணமாக ஒரு நாள் நான் திண்டுக்கல்லில் இருந்தபோது, நல்ல இஞ்சி, ஏலக்காய் போட்ட டீ வேண்டும் என்று என் தம்பியிடம் கேட்டேன், அவன் செம்பட்டி அருகே ஒரு டீ கடையில் நல்ல ஏலக்காய் டீ கிடைக்கிறது என்று கூட்டி சென்றான். அன்று பார்த்து கடை லீவு, அடுத்து என்ன செய்வது என்று நினைத்தபோது வத்தலகுண்டுவில் ஒரு இடம் இருக்கிறது என்றான், அங்கு நெருங்கும்போது தேனி, போடி என்று மைல் கல் கண்ணில் பட்டது. காரில் சென்றதால் இன்னும் சிறிது தூரம்தானே, போடி வேறு ஏலக்காய்க்கு பேமஸ், அங்கே சென்று ஒரு டீ சாப்பிடலாம் என்று விளையாட்டுத்தனமாக யோசித்தோம். போடி சென்று நாங்கள் ஏலக்காய் செடி பார்க்க வேண்டும் என்று கேட்க, அவர்கள் அங்கிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்த போடி மெட்டுவுக்கு செல்ல வேண்டும் என்றனர். இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது, இன்னும் சிறிது தூரம்தானே என்று அங்கும் செல்ல, அவர்களோ கேரளாவில்தான் உள்ளது, செக் போஸ்ட் தாண்டி போங்கள் என்றனர். நாங்கள் கேரளாவினில் நுழைந்து ஏலக்காய் செடி பார்த்து முடித்து திரும்பும்போது ஒருவர் இந்த ஏலக்காய் காய வைக்கும் இடம் இன்னும் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது என்றவுடன் அங்கிருந்து பூப்பாறை என்ற இடத்திற்கு சென்று முழுமையான ஏலக்காய் செய்முறையை அங்கே இங்கே கேட்டு ஒரு ஆளை பிடித்து பார்த்தோம்.
பயணங்கள்....... எல்லோரும் என்னை கேட்க்கும் கேள்வி என்பது, எப்படி இவ்வளவு பயணம் செய்கிறீர்கள் என்பது. எனது வேலை நிமித்தமாக அதிகம் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டி வரும், அது மட்டும் இல்லாமல் இந்த பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு நிறைய தேடல் அதிகமாகிவிட்டது. இப்படி பயணிக்கும்போது எவ்வளவு அற்புதமான நண்பர்கள் அமைகிறார்கள் தெரியுமா..... இப்படிதான் சிங்கப்பூரில் நண்பர் வினோத் அவர்களை ஒரு நாள் சந்தித்தேன், அவர் என்னை வானத்தை தொட வைத்து ஒரு பீர் வாங்கி கொடுத்தது இன்னும் பசுமையான நினைவு. இன்னொருவர் எனது தம்பி என்று செல்லமாக சொல்லும் ஆனந்த், இவனோடு நான் திருப்பூர் வரை சென்று பின்னலாடை எப்படி செய்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன், அப்போதுதான் நான் எப்படியெல்லாம் இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு அலைகிறேன் என்று தெரிந்தது அவனுக்கு. பதிவர் திருவிழாவில் ஸ்கூல் பையன், மெட்ராஸ் பவன் சிவகுமார், திடம் கொண்டு போராடு சீனு, ஜாக்கி சேகர், சுப்பு தாத்தா, வெங்கட் நாகராஜ் என்று பல பல பதிவர்களை சந்தித்தேன். இவர்களது ஒவ்வொரு பதிவையும் விரும்பி படிப்பவன் நான், இவர்களுடைய பதிவுகளுக்கு முன்னுரை என்பது தேவை இல்லை, நீங்கள் ஒரு முறை சென்றாலே விரும்பி படிக்க ஆரம்பித்து விடுவீர்கள் !! இப்படி ஒவ்வொரு பயணமும் சில பல நண்பர்களை உருவாக்கி கொடுத்து உலகத்தை விரிவுபடுத்துகிறது எனலாம்.
சரி, இன்று இன்னும் சில பதிவர்களை பார்க்கலாமா......
ஒரத்தநாடு கார்த்திக் - குமுதம், கற்கண்டு, விகடன் என்று எல்லா பத்திரிக்கைகளையும் இவரது பதிவுகளில் படிக்கலாம், ப்ரீ !!
டுபுக்கு - பதிவுகள் படிக்க ஆரம்பித்த பிறகு, இவரது பதிவைத்தான் விரும்பி படிப்பேன். கிண்டலும், நக்கலும் என்று அசத்துபவர்.
கார்த்திக் நிலகிரி - எனது காலேஜ் ஜூனியர், இன்று பதிவுலகை கலக்குகிறார். புத்தக விமர்சனம், நிலவை தேடி என்று அசத்துபவர், சத்தம் இல்லாமல் பதிவுகளை படித்து விடுவேன்.
அமுதா கிருஷ்ணா - அக்கம் பக்கம் என்ற பதிவில் எழுதும் இவர் அனுபவங்கள், சமையல், கோவில், சினிமா, செய்திகள், நொறுக்ஸ், நட்பு என்று காக்டெயில் விருந்து படைக்கிறார்.
அதிஷா - பிரபல பதிவர் இவர், ஒரு புத்தகத்தின் விமர்சனம் பற்றி இவரது பதிவுக்கு சென்று இன்று வரை தொடர்பவன். இவரை பற்றி நான் எப்படி சொல்வது !
ஆலிலை - கிருஷ்ணகுமார் என்னும் இவர் எழுதும் கவிதைகளும், கதைகளும் மெல்ல மெல்ல உங்களை ஆட்கொள்ளும்.
இனிய ஓவியா - வெகு சில பதிவுகளே எழுதி இருந்தாலும், நிறைய பதிவுகளை படிப்பவர், அதற்க்கு அழகாக கருத்து சொல்பவர். இவரது வலைத்தளம் முழுவதுமே ஓவியம், ஓவியம் மற்றும் ஓவியர்களை பற்றியே.
இனியவை கூறல் - இதை எழுதுவதும் மேலே சொன்ன கலாகுமரன் அவர்கள்தான். இந்த பகுதியில் அனைத்தையும் கலந்து கட்டி அடிப்பவர்.... சுவையாக !
இன்றைய வானம் - அறிவியல், புகைப்படம், அரசியல், நகைசுவை என்று ஒன்பது சுவைகளை தனது பதிவுகளின் மூலம் தருபவர்.
உலக சினிமா ரசிகன் - சினிமாவை நிரம்ப நேசிப்பவர், உலக சினிமாவில் இருந்து உள்ளூர் சினிமா வரை புரட்டி எடுப்பவர். தற்போது உடல் நலம் நன்கு தேறி விரைவில் வந்து எழுத ஆண்டவனை வேண்டுகிறேன் !
எங்கள் ப்ளாக் - ஐந்து பேர் சேர்ந்து எழுதும் பதிவுகளின் தொகுப்பு. இவர்கள் எழுதும் பாஸிடிவ் செய்திகள் நீங்கள் மிஸ் செய்யவே கூடாத ஒன்று..... கண்டிப்பாக மிஸ் செய்ய கூடாதது.
என் கண்கள் - சுய தொழில் தொடங்க வேண்டுமா அல்லது அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா, இங்கே சென்றால் உங்களுக்கு எல்லாமும் கிடைக்கும். பயனுள்ள பதிவு இது.
"தோட்டம்" சிவா - மாடி தோட்டம், தோட்டம் போடுவது பற்றிய குறிப்புகள் என்று வெகு சில பதிவுகளே எழுதி இருந்தாலும், அனைத்தும் நல்ல தகவல்கள்.
"கசியும் மௌனம்" கதிர் - கவிதை, கட்டுரை, விமர்சனம், சிறுகதைகள், விவசாயம் என்று பல தளத்தில் சுவாரசியம் காட்டுகிறார்.
புதியவன் - சிறியவன் - அஜித், அஜித், அஜித் படங்கள் பற்றிய விமர்சனம், தகவல்கள் மட்டுமே இந்த தளத்தில், ஆனால் சுவாரசியமாக இருக்கிறது.
இன்று நிறைய பதிவர்களை பார்த்தோம், எனது அனுபவங்களையும் கேட்டீர்கள். நாளை இன்னும் பல சுவையான செய்திகளோடு சிந்திப்போம் !!
|
|
அறிமுகங்களுக்கு சென்று விட்டு வருகிறேன்...
ReplyDeleteம்ம்ம்ம்... பதிவர் திருவிழாவில் நீங்கள், நான் மற்றும் ஆரூர் மூனா ஆகியோர் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ எனது பேவரிட்....
ReplyDeleteமூன்று தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅறிமுகமாகியுள்ள - அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!.
ReplyDeleteதொடருங்கள் நண்பா!
ReplyDeleteபதிவர் சந்திப்பின் போது உங்களைச் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி....
ReplyDeleteதொடரட்டும் சிறப்பான அறிமுகங்கள்.
குறிப்பிட்டதற்கு நன்றி Senior... ;-)
ReplyDeleteபாஸிட்டிவாக 'எங்களை'க் குறிப்பிட்டதற்கு நன்றி நண்பர் சுரேஷ் குமார்!
ReplyDeleteஎங்களுடன் இடம் பெற்றிருக்கும் மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்!
என்னை இங்கே குறிப்பிட்டதற்கு நன்றி..இப்படி குறிப்பிட்டுள்ளீர்கள் என்று சொன்ன திண்டுக்கல் தனபாலனுக்கும் மிக்க நன்றி...
ReplyDeleteசில தளங்கள் புதியவை சென்று பார்க்கிறேன்! நல்ல அறிமுகங்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்..!
ReplyDeleteஎனது ப்ளாக் பற்றி உங்கள் அறிமுகத்திற்கு நன்றி நண்பரே. திண்டுக்கல் தனபாலன் சொல்லி வந்து பார்த்தேன்.
ReplyDelete- அன்புடன், 'தோட்டம்' சிவா
பல புதிய பதிவர்களைக் கண்டேன். அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
ReplyDeleteஇவ்வளவு தளங்களை படிப்பதை தவிர புவ்வாவுக்கு வேலை செய்ய நேரம் இருக்கிறதா ?
ReplyDeleteத ம 3
நறுக்கு தெரித்தாற் போல சுவைபட அறிமுகங்கள். நன்றி உலகம் சுற்றும் வாலிபரே. !!
ReplyDeleteசிங்கில் ஏலக்காய் டீ க்காக அதன் உற்பத்தி வரை அலசிய தீவிரம் வியப்பானது. தமிழ் வலை உலகில் தீவிர பயண ஆராய்ச்சியாளரை காண்பது கஷ்டம். the one and only suresh!
ReplyDelete