பிரபஞ்சக்குடில்
➦➠ by:
சின்னப்பயல்
இன்றைய எனக்குப்பிடித்த நண்பர்களின் வலைப்பூ வரிசை :)
_______________________________________________________________________________________________________________
“வானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை “
போஸ்ட் ஆஃபீஸ்
என்று ஒரு கவிதை எழுதியிருப்பார், அதில் அந்த போஸ்ட் ஆஃபீஸ் எங்கே இருக்கிறது
என்று கேட்க வந்தவனையே மடித்து ஒட்டி போஸ்ட்டே செய்துவிடுவார் இந்த ‘தியாகு
பன்னீர்’. இது போல வியக்கவைக்கும் பல கவிதைகளை எழுதி வாசிப்பவரை கொஞ்சம்
யோசிக்கத்தான் வைத்துவிடுவார். இந்த தோழர் தியாகு பன்னீர்.
முழுக்கவிதையையும்
வாசிக்க இங்கே சொடுக்கலாம்.
கவிதைகள், நூல்
மதிப்புரைகள்,வாசிப்பனுபவம் இதில் இவர் வாசித்த நல்ல பிற எழுத்துகளின் அறிமுகங்கள்
என எல்லாத்துறைகளிலும் கலந்து அடிப்பவர்.
இந்த ஏழு
கவிதைகள் என்ற தலைப்பில் எழுதியிருக்கும் ஏழும் ஏழு வண்ணங்கள் கொண்ட வானவில்.
எடுத்துக்காட்டுக்கு ஒன்று
நிழலாடுகிறதென்று
எட்டிப்பார்த்தேன்
நீயில்லை
என்றானதன் நரகம்
நின்றிருந்தது வாசலில்.
எட்டிப்பார்த்தேன்
நீயில்லை
என்றானதன் நரகம்
நின்றிருந்தது வாசலில்.
முழுதுமாக
வானவில்லின் வர்ணங்களைக்காண இங்கே சொடுக்கலாம்.
‘எலிக்குஞ்சுகளோடு
எனக்குக்குரோதமில்லை’ என்ற கவிதை நூலை இப்போது வெளியிட்டிருக்கும் ‘தியாகு
பன்னீர்’ன் வலைப்பூவை இங்கு ரசிக்கலாம்.
____________________________________________________________________________________________________________
கூர்வாள்
கூர்வாள் இன்னும்
என்னவெல்லாம் கூறுவாள் என ஒரு கவிதைக்கு நான் பின்னூட்டமிட்டிருந்தேன் இவரின்
வலைப்பூவில். அதிலிருந்து இவரின் கவிதைகளையும், இன்னபிற ஆக்கங்களையும் தொடர்ந்து
வாசிக்கும் வாசகனாகிவிட்டேன். தொடர்ந்தும் கூர் கிழிக்கிறது இவரின் ஆக்கங்கள்
என்னுள். முகநூலிலும் கவிதை மழை பொழியும் எப்போதும் இவர் சுவரில். எடுத்துக்காட்ட
ஒன்று :)
நெகிழா குமிழியொன்றில்
கனவுகள் நிரப்பி வைத்திருந்தேன்
கனத்த மனத்திரையின் பின்னே
புறவெளி கிரணங்கள் புகுந்திடா
நிலவரைப் பொக்கிஷம் தளும்பியபடியிருக்கிறது
இன்றோ நாளையோ
ஏதோவொரு மயிலிறகு
திறந்திடக்கூடும்
விலங்கிடாத கவிதையின் தொடக்கத்தை...
கனவுகள் நிரப்பி வைத்திருந்தேன்
கனத்த மனத்திரையின் பின்னே
புறவெளி கிரணங்கள் புகுந்திடா
நிலவரைப் பொக்கிஷம் தளும்பியபடியிருக்கிறது
இன்றோ நாளையோ
ஏதோவொரு மயிலிறகு
திறந்திடக்கூடும்
விலங்கிடாத கவிதையின் தொடக்கத்தை...
இப்படி ஒரு கவிதையை எழுதிவிட்டு
அமைதியாகவே இருப்பார் இந்தக் ‘கயல்விழி சண்முகம்’, இவருக்கு அறிமுகம் என நான்
சொல்வதற்கில்லை. எழுத்தும், சமூக சீர்திருத்தமும் பின்னிப்பிணைந்த ஒரு
குடும்பத்திலிருந்து வந்தவர் , அதே முனைப்போடு எத்தனை வேலைகளுக்கிடையேயும் இன்னமும்
தொடர்ந்து கவி பாடிக்கொண்டிருப்பவர்.
இது அனைவருக்கும் பிடிக்கும்
இதழ்
சாலச் சிறந்த கவிகளெல்லாம்
’இதென்ன பிரமாதம்’
இளப்பமாய் விமர்சித்தவன்
’உன் இதழ்களைத்
தா’
எழுதிக்காட்டுகிறேன்
’சிற்றின்பக் கதம்பம்’
என்றான்
வழமை போல் அன்றும்
இமை தாழ்த்தி இம்சித்தேன்
.....
பிறகு என்னவாயிற்று... ஹ்ம் :) முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கலாம்
“சட்டெனத் தொடங்கிய பூமழைத் தூவலில், மேலடுக்குக் கலைந்துச் சிறுமியெனவானாள்,கிளித்தட்டுச் சுற்றி மழையுள் கலந்தாள் பனிச்சிற்பமாயிருந்தவள்.பம்பரக்கால்கள் மெல்ல மெல்ல வேகம் குறைத்த போது மென் புறாவாய் மேலெழும்பி அவன் வசமடைந்தாள்.”
இதை என்னவென்று
சொல்வது ? உரைநடைத்தமிழா இல்லை கவிதையா..? ஹ்ம்.. முழுதும் இங்க வாசிங்க
சொக்கிப்போவீர்கள்.!
இவரின் பக்கம்
இங்கே, இனி என் பக்கம் யாரும் வரப்போவதில்லை :)
_____________________________________________________________________________________________________________________
பிரபஞ்சக்குடில்
சூஃபி, ரூமி, இஸ்லாமிய இலக்கியங்கள், அவர்களது சிந்தனைகள் இவை குறித்த நல்ல பல தகவல்களை வழங்கிவரும் ‘ரஸீம் பிஸ்லாலி’ அவர்களின் வலைப்பூ இந்த ‘பிரபஞ்சக்குடில்’ இதுகாலம் வரை நம்மில் புழக்கத்தில் இருந்த பல சொற்றொடர்கள், கவிதைகள் அவற்றின் இன்னபிற ஆக்கங்கள் எல்லாம் ‘ரூமி’ என்ற சூஃபி கவிஞனின் பார்வையிலிருந்து உதித்தவை.
அதன் சான்று ஒன்று இங்கு
தினம் தினம்
வெவ்வேறு வண்ணங்களில் ஆடைகள் அணிந்தாலும் அவற்றை அணிபவன் அந்தகன் என்றால் அவன்
அவற்றைக் கண்டு களிக்க முடியுமா? இறைவனை அறியாத அகக் குருடர்களின் நிலை
இவ்வாறுதான் இருக்கிறது!
அகப்பார்வை
அருளப் பெற்றவர்களோ தம்மிலேயே தம் இறைவனை அடைந்து ஆனந்த நிலையில்
திளைத்திருக்கிறார்கள்!
”உன்னைக் காதலிக்கும் முன்புவரை
வெறும் கோட்டோவியமாய் இருந்தேன்
நீயே வண்ணங்களாய்
நிரம்பிவிட்டாய் என்னில்!”
இப்போது எழுதப்படும் அத்தனை காதல் கவிதைகளும் இந்த நான்கு வரி மற்றூம் மூன்று
வரிகளில் எழுதப்படுபவை சூஃபி ஞானி ரூமி’யின் தாக்கத்திலேதான் வந்திருக்கவேணும் என
வலுவாக நம்புபவன் நான். மேலிருக்கும் அந்தக்கவிதையே ஒரு சான்று.
சூஃபி இலக்கியங்களும், அதில் பொதிந்து கிடக்கும் நல்மணி முத்துகளை,
பெரும்பாலும் அவை பாரசீக மொழியிலோ இல்லையெனில் உருது மொழியிலோ இருப்பவை, அவற்றை
நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து நமக்கென கொடுக்கிறார் ரஸீம்.
ஒருமுறை ரூமி’யை வாசித்தால் போதும் , கவிதைகள் அருவி போல் கொட்ட
ஆரம்பித்துவிடும்.பிறகு எல்லாவற்றிற்கும் ஆசைப்பட ஆரம்பித்துவிடுவோம். எல்லாம்
மாயை, எதிலும் ஒன்றுமில்லை என்றெல்லாம் கூறித்திரியாது எல்லாவற்றும் ஆசைப்பட
வைக்கும் இவரது கவிதைகளை தமிழில் கொடுக்கிறார். அதுமட்டுமல்லாது இஸ்லாமிய
சமூகத்துள் கொட்டிக்கிடக்கும் இலக்கியங்களை அறிமுகம் செய்துவைக்கிறார். கஸல்
பாடல்கள், அவர்களின் இசை வடிவம், இவையென எப்போதும்
புதுப்பித்துக்கொண்டேயிருப்பார்.
இங்கே சொடுக்கி வாசிக்கலாம்.
எடுத்துக்காட்டாக ஒன்று
“நமது கண்கள் பிறரின் முகங்களை எல்லாம் பார்க்கும், தன் முகத்தைப் பார்க்க இயலாது. கண்ணாடியே பார்த்தறியாத குழந்தையைக் கவனியுங்கள். தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் அனைத்தையும் அது பார்க்கிறது. ஆனால் தன்னைப் பார்க்க வேண்டும் என்னும் சிந்தனையே அதனிடம் இருக்காது. கண்ணாடியை அதன் முன் காட்டினாலும் அதில் விழும் பிம்பத்தை அக்குழந்தை தான் என்று அடையாளப் படுத்திக் கொள்ளாது. தன்னை அடையாளப் படுத்திக் கொள்வதே ஆணவம் திரள்வதற்கான முதற்புள்ளி. அப்புள்ளி இன்னும் குழந்தையிடம் உருவாகவில்லை. ஆணவம் இல்லாத அந்த நிலையே சொர்க்கத்திற்குள் சேர்க்கும் என்பதையே ’பிள்ளைகள் போல் ஆகுவீர்’ ஈசா நபி குறிப்பிடுகிறார்கள்
இந்தக்கட்டுரையை முழுதுமாக வாசிக்க
முழுதுமாக நமது எண்ணங்களை
விசாலப்படுத்திக்கொள்ள, இதுகாறும் யோசித்திருந்தவைகளை இன்னொரு கோணத்தில்
கண்டெடுக்க இந்த வலைப்பூவை எப்போதும் வாசிக்கலாம். நானும் அவ்வாறே
செய்கிறேன்.
நிர்மல் அ.க.அ ம்ரின்ஸோ பேஜ் ( நிர்மல் என்ற ம்ரின்ஸோ’வின் பக்கம் )
இவருடைய
வலைப்பூவில் நுழைய உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேணும். கவிதைகளோ, இல்லை
வெற்றுக்கூச்சல்களோ, இல்லையெனில் வெறுதே நேரம் போக்கும் பதிவுகளோ காணக்கிடைக்காது.
அத்தனையும் சீரியஸ் பதிவுகள். இப்படியெல்லாம் உலகத்தில் இருக்கின்றனவா என நம்மை
நாமே சோதித்துக்கொள்ள இவரின் வலைப்பூவை அணுகினால் போதும்.
ஐரோப்பிய/தென்னமேரிக்க
எழுத்தாளர்களின் புத்தகம் குறித்த புரிதல்கள் அவை தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரைகள்,
சிறுகதைகள், அவரின் சொந்த அனுபவங்கள் , அவர் செய்த பயணங்கள் என தொடாத பகுதி இல்லை.அவரின்
பக்கத்தில் காணப்பட்ட, ஒரு புதினத்தை விவரிக்க எடுத்துக்கொண்ட வரிகள் இவை.
“ஒரு நாவல் எதை பேசுகிறது எதை சொல்கிறது என்பதுதான் எல்லோரின் முதல் கேள்வியாக இருக்கும். இந்த நாவலை பொருத்தவரையில் அது எதை சொல்லவில்லையென்றுதான் கேட்க வேண்டும் எனென்றால் அந்த அளவிற்கு நாவலை சமுக , சரித்திர, அரசியல், மனிதவியல், உளவியல் என பல கோணங்களில் இந்த நாவலை அணுக முடியும். அந்த அளவிற்கு மேட்டர் இருக்கு. பொதுவாக இப்படி விஷயம் அதிகமாக இருக்கும் நாவல்கள் வாசிக்க சுவாரஸ்யமாக இருக்காது, அந்த சுவாரஸ்யத் தன்மையை
அவரது கதை சொல்லும் விதத்தில் கொண்டு வருகிறார் தென் அமேரிக்காவில் உள்ள கொலம்பியா நாட்டைச் சார்ந்த மார்கேஸ்.”
முழுதுமாக வாசிக்க இங்கே சொடுக்கலாம்.
கடல் படைத்தை ஒட்டிய
ஒரு ‘லூசிபர் கதையும்
கடல் படமும்’ என்ற கட்டுரையிலிருந்து ஒரு
பகுதி உங்களுக்காக.
மனிதனின்
மரணம் பற்றிய பயத்தில்
வைப்பது, பாவத்திலிருந்து மீள
வழி இல்லாமல் செயவது
இதுவே சாத்தானின் செயலாக
இருக்கிறது. மரணத்தை எப்படி
மரணம் கொண்டு வெல்வது, பாவத்திலிருந்து எப்படி
விமோசனம் கொடுப்பது, அன்பின்
கடவுள் மனிதனுக்கு தந்தது
அவரின் ஒரே மகன். பாவத்தின் சின்னமான
சிலுவையை கொண்டு பாவத்தை
வென்ற கதை எல்லோருக்கும்
தெரிந்ததுதான். மன்னிப்பு எனும் கருவியை
கொண்டு பாவ விமோசனம்
பெறுவதை மனிதனுக்கு தனது
பாடுகளாலும் ரத்தத்தாலும் மரணத்திலிருந்து உயிர்தெழுதலாலும் சாத்தானை
மீண்டும் வெல்கிறார் இறைவன்.
முழுக்கட்டுரையையும் வாசிக்க
எப்போதும் கேலியும்
கும்மாளமுமாக வாழ்வை நகர்த்திச்செல்லும் நமக்கு, கிடைக்கும்
இன்னபிற சமயங்களில் நாம் சார்ந்திருக்கும் சமூகத்தையும் ,அதன்
குறைபாடுகளையும் சொல்லி அதனாலேயே தான் நான் இப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற
சுயபச்சாதாபத்திலும் கழித்த நாட்களை விடவும் இது போன்ற பதிவுகளையும்,பக்கங்களையும் வாசித்தால் இனியும் கழிக்கும் பொழுதுகள் நல்ல நினைவுகளை நம்
மனதில் வைத்துச்செல்லும்.
அவரின் வலைப்பூ முகவரி.
ரேவாவின் பக்கங்கள்
“வாசித்தல் பழக்கம் நேசித்தலின் பொருட்டு வந்ததா
என்று தெரியவில்லை ஆனாலும் நேசிக்கிறேன் இந்த வாசித்தலை” இப்படி எழுதி அனைவரையும் நண்பனாக்கிவிடுவார்
இந்த ரேவா. இது அவர் எழுதிய ஒரு ‘இதுவும் காதலே’ என்ற கவிதையின் முதல் வரிகள்
இன்னமும் முழுதாக வாசிக்க
நிறைய கொடுத்துக்கொண்டேயிருப்பார் , மொழிக்கு
சொற்கள் பஞ்சமேற்பட்டாலும் இவருக்கு ஒருபோதும் ஏற்படுவதேயில்லை.
“பம்பரத்தைப் போல் நம்மைச் சுழற்றிப்
போடுகிற
அன்பின் சாட்டையில் தான்
எத்தனை இறுக்கம் “
அன்பின் சாட்டையில் தான்
எத்தனை இறுக்கம் “
“கொடுக்கப்படா முத்தங்களின் ஈரத்தில்
தான்
இன்னமும் நீ ஒளிந்திருக்கிறாய் “
இன்னமும் நீ ஒளிந்திருக்கிறாய் “
இப்படி ஒன்றிரண்டு வரிகளில் என்னைப்பின் தொடர
வைத்தவர்.
“எத்தனை சத்தத்திலும்
என்னை அதிரச் செய்வது
உன் மெளனம் மட்டும் தான் “
என்னை அதிரச் செய்வது
உன் மெளனம் மட்டும் தான் “
இப்படியெல்லாம் எழுதி நம்மைப்பேசாது
இருக்கவைத்துவிடுவார். விளக்க ஒன்றுமில்லை எனக்கு வார்த்தைகள். ஏற்கனவே வெகு
பிரபலமானவர். நானும் இவரை வாசிக்கிறேன் என்றூ கூறிக்கொள்ள இங்கௌ இவரின்
பக்கங்களைப்பகிர்கிறேன்.
அழகியலின் அற்புதங்கள் மட்டுமின்றி,
பிரிவுத்துயரத்தையும் சொற்களால் வீசிச்செல்கிறார் இந்தக்கவிதையில்
“ஒரு பாலைவனத்தை யாருமற்றுக்கடப்பது போலிருக்கிறது இந்நாட்கள் எப்போது வருமென
வானம் பார்க்க தொடங்கியிருக்கிறது வார்த்தைக்குள் சிக்காத மேகக்கூட்டமொன்று “
முழுதும் வாசிக்க இங்கே...
அவர் பக்கத்தை தொடர இங்கே சொடுக்கலாம்.
நாளை நான் ரசித்த இன்னும் சில பிரபலங்களின் வலைப்பூக்களை உங்களுக்கு பரிசளிக்கிறேன். கொஞ்சம் லிஸ்ட் பெரியது தான் :) ஆவலுடன் காத்திருங்கள்.
|
|
தலைப்புத் தளம் தவிர மற்ற அனைத்து தளங்களும் தொடரும் தளங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
சில தளங்கள் அறிமுகப்படுத்தப்படுத்தியமைக்கு நன்றி.
ReplyDelete