07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 9, 2014

அரட்டைக் கச்சேரி -- 6

நாளை எனக்குப் பணி நிறைவு .அட.....வலைச்சர  ஆசிரியப் பணியை சொன்னேன். பலருடைய தளங்களை  என்னால் குறிப்பிட முடியாது போலிருக்கிறதே என்கிற ஆதங்கத்துடன் தான் இன்றைய வலைச்சர  பதிவை  ஆரம்பிக்கின்றேன்.

சிலருடையப் பதிவுகளைப் படிக்கும் போது  தகவல்கள் கொட்டிக் கிடக்கும். சந்தேகமில்லை. அவர்களுக்கு வரும் பின்னூட்டங்கள்  பதிவிற்கு மேலும் சுவை சேர்க்கும் வகையில் அமைந்து விடும் .அதுவும் சூடான  விவாதமான பின்னூட்டங்கள் அமைந்து விட்டால்   ஆஹா.....எத்தனை எத்தனை விஷயங்கள் நமக்குத்  தெரிய வரும் .
அப்படிப்பட்ட ஒரு தளம் தான் திரு. ஜெயதேவ் தாஸ்  அவர்களின் தளம்.அவருடைய  மைதா மாவா?கோதுமை மாவா  என்கிறப் புதிர்  பதிவுடன்  பின்னூட்டம் என்கிற விவாத மேடையும் இணைந்தே இருக்கிறது. சண்டையோ என்கிற பயம் வேண்டாம். ஆரோக்கியமான  விவாதம் தான்.
அரபு எண்கள் உருவம் எப்படி வந்தது ? என்று திரு.ஜெயதேவ் தாஸ் நமக்காக சொல்கிறார்.பார்ப்போம்.

வைரத் தோடு வேண்டுமா? வைர வளையல் ......இல்லையில்லை ...... வைர அட்டிகை வேண்டுமா?  ஏன் நீ வாங்கித் தரப் போகிறாயா? என்று கேட்காதீர்கள் .வாருங்கள் ' 55 கேங்கரி ' என்கிற கிரகத்திற்குப் போவோம்.வைரமாய் கொட்டிக் கிடக்கிறதாம் அங்கே.  எப்படிப் போக வேண்டும், எவ்வளவு நேரம்,செலவு  ஆகும் என்கிற மேலதிக தகவல்களுக்கு முதலில் இங்கே செல்லவும் .

இவர்  அறிவியல் மட்டுமே எழுதுகிறார் என்று நினைத்து விட வேண்டாம்.
யக்ஷனுக்கு யுதிஷ்டிரர் சொன்ன பதில்கள் பற்றியப் பதிவும் இருக்கிறது.

 மைதா மாவா ? கோதுமை மாவா ? தீர்மானித்தீர்களா? இல்லையா..... திரு .ஜெயதேவ்  அவர்களுடன், அவர் தளத்தில் விவாதித்த திரு. வருண் அவர் பங்கிற்கு அவரும் ரிலாக்ஸ் ஆக மைதாமாவு பற்றி எழுதியிருக்கிறார் பாருங்கள்.

அமெரிக்கவாழ் இந்தியர்களை  எதற்கு எச்சரிக்கிறார்  இவர் என்று பார்ப்போம்.
முதல் உலகப் போரின் ஹீரோ என்று யாரையோ சொல்கிறார் ? அவரையே கேட்போம்.


பணிவு, உயர்வை நல்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.
 மன்னிப்புக் கேட்கும்  திரு. சுப்பு தாத்தா  உங்கள் மனதில் எந்த உயரத்திற்கு செல்கிறார் என்று படித்த பின் சொல்லுங்கள்.
யாரோ அவரிடம் " தாத்தா  தாங்க்ஸ் " என்றும் சொல்கிறார்கள். அதையும் பார்ப்போம்.
ஆட்டோகாரர்களின்  மனக்குறையை இங்கே பதிவிடுகிறார் இவர்.
அவருக்குப் புரியாத சமாசாரம் பற்றியும்  சொல்கிறார். முடிந்தால் புரிய வையுங்களேன்.தீபாவளிக்கு என்ன வேண்டும் என்று ஜாலியாக ஒரு பதிவு எழுதியிருக்கிறார். வெகு சுவாரஸ்யம். தவற விடாதீர்கள்.

தீபாவளி என்றவுடன் நினைவிற்கு வருவது ஸ்நாக்ஸ். அதுவும் வீட்டில் செய்யும்  ஸ்நாக்ஸ் என்றால் இன்னும் சுவை அதிகம்.

திருமதி சித்ரா சுந்தர் பிளாக் இல்  ஸ்நாக்ஸ் மட்டுமில்லாமல் எல்லா வகை சமையல் ரெசிபிக்களையும் படங்களுடன், விளக்கங்கள் நன்கு புரியும்படி விளக்குகிறார்.. இவருடைய பால் கொழுக்கட்டை சாப்பிடலாம் வாருங்கள்.

தும்பைப்  பூ  போன்ற இட்லி சாப்பிட ஆசைப்படுபவர்கள் சாப்பிடலாம்..
பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டுகிறது  இந்த சமோசாக்கள்.
அவருடைய இன்னொரு தளத்தில்  கீரை  சமைப்பதற்கு மட்டுமல்ல , கீரை அறுவடையையும்  சொல்லித் தருகிறார். எளிமையாக இருக்கிறது. முயற்சித்துப் பார்க்கலாம் .


சிறு தானியங்கள் நம் உடல் நலத்திற்கு  ஏற்றது  என்று மிக பரவலாக சொல்லப்படுகிறது.சிறு தானியங்களை  சமைக்கும் விதம் மட்டுமல்லாமல், அதில் அடங்கியிருக்கும் சத்துக்கள் , அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்று  நம்ம  வீட்டு சமையலில் பட்டியலிடுகிறார் திருமதி சித்ராரவீந்திரன் .

( இவர் இன்னொரு சித்ரா. சித்ராக்களே நன்றாக சமைப்பார்கள், சமைத்ததை  வலைத்தளம் வழியாக  நம்முடன் பகிரவும் செய்வார்கள் என்று நினைக்கிறேன். )
 
சட்னி  வகைகள்,   அலுவலகம், பள்ளிக்கு எடுத்து செல்லும்படியாக மதிய உணவு   ரெசிபிகள்  என்று அசத்துகிறார் இவர்.

இல்லத்தரசிகளுக்கு  ஒரு ரகசியம் சொல்கிறேன். வெறும் இட்லியும் தோசையும் தவிர எதுவும் உனக்கு செய்யத் தெரியாதா என்று உங்களவர் கிண்டலடிக்கிறாரா ? கவலை வேண்டாம்  திருமதி சித்ரா ரவீந்திரனின்  டிபன் வகைகள் செய்து  " உன்னைப் போல் உண்டா ..... "என்று பெயர் தட்டிப் போங்கள் .

இன்றைய கச்சேரியை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
நாளை  மீண்டும் சந்திப்போம்........

image courtesy--google


29 comments:

 1. மிஸஸ் ராஜி பரமசிவம்:

  தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன். அந்த தூதுப் புறா "டியர் ஃப்ரெண்ட்" பத்தி எழுதியது எனக்கே மறந்து போச்சு. எனக்கு புறானா ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் டியர் ஃப்ரெண்ட் பத்தி எழுதினேன். :)

  மற்றபடி எழுதியதை நானே மறந்துவிட்ட என் பதிவுகளை தேடி கண்டு பிடித்து அறிமுகம் செய்ததுக்கு நன்றிங்க. :)

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி வருண்.

   Delete
 2. இன்றைய அரட்டைக் கச்சேரி - பல்சுவைத் தொகுப்பாக மலர்ந்துள்ளது.

  அறிமுகமாகியுள்ள அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. so good....
  iamramnadboy.blogspot.in

  ReplyDelete
 4. அருமையான தளங்கள். அனைத்தும் படிக்க வேண்டும். வருண், சுப்புதாத்தா இருவரும் தெரிந்தவர்கள்.
  இன்று இடம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. ருசிமிக்க சில அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 6. அறிமுகப்படுத்திய அனைத்து பதிவர்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 7. சகோதரர் ஜெயதேவ் தாஸ் அவர்களைப் பற்றி நன்றாகவே சொன்னீர்கள். நிறைய சுவாரஸ்யமான விஷயங்களோடு வலைப்பதிவில் எழுதி வருகிறார். நிறைய விவாதங்களை இவருடைய பதிவில் ரசிக்கலாம். நீங்கள் குறிப்பிட்ட
  “யக்ஷனின் கேள்விக்கு யுதிஷ்டிரரின் பதில்கள்” என்ற பதிவினை மீண்டும் படித்தேன்.

  சுப்புத் தாத்தாவின் ரசிகர்ளில் நானும் ஒருவன். நீங்கள் அவரைப் பற்றி தனியே ஒரு பதிவு எழுதும் அளவுக்கு, நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

  சித்ரா சுந்தர், சித்ரா ரவீந்த்ரன் - ஆகியோர் வலைப் பக்கம் படித்ததில்லை. இனிமேல்தான் சென்று படிக்க வேண்டும். நாளை மீண்டும் சந்திப்போம்........
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. நீங்கள் சொல்வது போல் திரி ஜெயதேவ் தாஸ் அவர்களின் தளம் சுவாரஸ்யம்.
   இரண்டு சித்ராக்களின் தளமுமே உள்ளே நுழையும் போதே சமையல் வாசனை , நாவில் நீர் ஊறச் செய்யும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி தமிழ் சார்.

   Delete
 8. திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம்,
  என்னுடைய ' நம்ம வீட்டு சமையல் ' வலைதளத்தை அறிமுகப்படுத்தி விமர்சனம் செய்துள்ளமைக்கு நன்றி.
  தாங்கள் தொடர்ந்து என் வலைதளத்திற்கு விஜயம் செய்து குற்றம் குறை இருப்பின் சுட்டிக் காட்டவும். தங்களுடைய விமர்சனம் என் வலைதளத்தின் தரத்தை மேலும் உயர்த்த உபயோகமாக இருக்கும்.
  தங்களுடைய நல்வாழ்த்துக்கள் என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டது.
  தினமும் செய்யும் புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பேன், ஆதரிக்கவும்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உங்களுடைய தளம் நிஜமாகவே "நம்ம வீட்டு "சமையல் தளம். பலரின் கண்களில் படாமல் இருந்திருக்கிறது.
   அதனாலேயே இங்கே அறிமுகம் செய்தேன்
   இது பதிவர்களை அறிமுகம் .செய்யும் தளம். உங்களால் முடிந்த போதுஎன் தளத்திற்கும் வருகை செய்யுங்கள்.
   http://rajalakshmiparamasivam.blogspot.com.
   உங்கள் கருத்துரைக்கு நன்றி சித்ரா.

   Delete
  2. நன்றி ராஜலக்ஷ்மி. தங்களுடைய வலைதளத்தை கட்டாயமாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் விஜயம் செய்கிறேன்.

   Delete
 9. பல புதியவர்களைக் கடந்த சில நாள்களாக உங்களின் பதிவு மூலமாகக் காணும் வாய்ப்புகிடைத்தது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி ஐயா.

   Delete
 10. என்னை தங்களது பதிவில் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி மேடம். இணையத்தில் எழுதத்தான் வேண்டுமா என்ற எண்ணம் எட்டிப் பார்க்கும் சமயங்களில் அதை தட்டி வைத்து ஊக்கப் படுத்துவது தங்களைப் போன்றவர்களின் எழுத்துக்களே, எனது பதிவுகளையும் படித்து கருத்துரையிடுமாறு தங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் எழுத்துக்களை ஆர்வமுடன் படித்து வருகிறேன் சார். இனி அவசியம் கருத்திடுகிறேன்.
   இங்கே உங்கள் கருத்துக்களைப் பதிந்தமைக்கு மிக்க நன்றி .

   Delete
 11. எங்கே சித்ரா(சுந்தர்) வைக் காணோமே என்று பார்த்தேன். இன்று வந்துவிட்டார். சித்ரா ரவீந்திரனின் தளத்தையும் படிக்கிறேன். வருண் மற்றும் ஜெயதேவ் அவர்களின் பின்னூட்டங்களை பல தளங்களில் பார்த்திருக்கிறேன். பதிவுகளைப் படித்ததில்லை. இனி படிக்க ஆரம்பிக்கிறேன்.

  சுப்புத்தாத்தா மிகவும் நன்றாகப் பாடவும் செய்வார். அவர் மீனாட்சிப் பாட்டியை வேடிக்கையாகக் கலாய்ப்பதும் நன்றாக இருக்கும்.
  உங்களுக்கும், இன்று வலைச்சரத்தில் பாராட்டுப் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வேலைகளுக்கு நடுவில் வந்து கருத்துத் தெரிவித்து ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி ரஞ்சனி.

   Delete
 12. அருமையான தளங்களின் அசத்தலான பதிவுகளை தேடிப்பிடித்து கொடுத்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. thanks a lot for introducing my blog.
  because of unforeseen encounter with a household pomaneriun dog and badly bruised or bitten I had to stay away for more than two weeks
  what happened?
  subbu thatha.
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
 14. சிறந்த அறிமுகங்கள்

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் அம்மா ! காலில் அறுவைச் சிகிச்சைகள் மாறி மாறி நிகழ்த்தப்பட்ட
  நிலையில் உள்ளேன் ஆதலால் அதிகமாக வலைத் தளத்தில் கருத்துரைகளை
  இட முடியாமல் போய்விட்டது .இப்போது ஓரளவு குணமடைந்த நிலையில் உள்ளேன் .
  விரைவில் எல்லோரது தளத்திற்கும் முடிந்த அளவு கருத்திட காத்திருக்கின்றேன்
  தங்களின் இயல்பான பேச்சுநடை என் உள்ளத்தைக் கவர்ந்து இழுகின்றது அம்மா!
  அயர்வின்றி தங்களின் ஆக்கங்கள் வலைத் தளத்திலும் வலம் வரட்டும் .மிக்க
  நன்றி பகிர்வுகளுக்கு .

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது