07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 19, 2014

வலைச்சரத்தில் இரண்டாம் நாள்

புதியதொரு அனுபவத்தை அளித்த திரு அன்பின் சீனா அவர்களுக்கும், என்னை வரவேற்று வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

’மூத்தோர் சொல்லும் முது நெல்லியும்
முன்னே கசக்கும், பின்னே இனிக்கும்’
இது பழமொழி.

இன்று நாம் மூத்த குடிமக்களின் (SENIOR CITIZENS) வலைத்தளங்களை அறிமுகப் படுத்தி கௌரவிப்போமா?

என் மானசீக குருநாதர் திரு வை கோபால கிருஷ்ணனும் ஒரு மூத்த குடிமகன் தானே.

அடுத்தவங்கள கௌரவிக்கறதுல கோபு அண்ணாவுக்கு இணை அவரே தான்.   இந்த இழையைப் படித்து தெரிந்து கொள்வோமே.


அறிமுகம் 

இனி அறிமுகம் சிலர் புது முகம், சிலர் முன்பே அறிமுகம் ஆனவர்.
1.    நான் மிகவும் மதிக்கும் என் முகப்புத்தக நண்பர் திரு சுபாஷ் கிருஷ்ணஸ்வாமி.  இவர் ஒரு விவசாயி.  சமூக அக்கறை உள்ள ஒரு மிகச் சிறந்த மனிதர்.  ’சத்தியத்தீ’ வலைத்தளத்தில் இவரது இடுகைகள் பிரமிக்க வைப்பவை.

புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதை இளைஞர்களுக்கு அறிவுரையாக சொல்லுவதைப் பாருங்களேன்.  இது மாதிரி இன்ஸ்பிரேஷன்ஸ்தான் இந்தக் கால இளைஞர்களுக்குத் தேவை


ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் என்ற தலைப்பில் இருபத்தைந்து கட்டுரைகள் கொண்ட ஒரு சிறு தொகுதியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.  அதன்மூலம் ஒரு சிறந்த பண்பாளனுக்கு இருக்கவேண்டிய அடிப்படைஅம்சங்களை வெளிப்படுத்தியுள்ளார்.


இவரது விவசாயக் கட்டுரைகள் மிகவும் அருமையானவை. 


உணவே மருந்து என்ற தலைப்பில் இவரது தொடர் கட்டுரைகள் அருமையானவை.


மொத்தத்தில், இவரது வலைப்பூவை அறிமுகப் படுத்துவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.


2.    இவர் உங்களுக்கு முன்பே அறிமுகம் ஆனவர் தான்.  காஞ்சியில் உரையும் அம்மனின் பெயர் கொண்டவர்.  எனக்கு இவரது எழுத்துக்களைப் படிக்கும் பொழுது ஒரு சிறு குழந்தையின் மழலை போல் தோன்றும்.  இவரைப் பாராட்ட என் அகராதியில் வார்த்தைகளே இல்லை. யார் தெரிகிறதா?


     ’சொல்லுகிறேன்’ வலைப்பூவில் எழுதும் காமாட்சி அம்மா.

இவர் பூஜைகளை வர்ணிக்கும் அழகே அழகு.


இளம் பெண்களுக்கு, சமையலறைக்குள் புதிதாக நுழையப் போகும் பெண்களுக்கு, முக்கியமாக சுத்த சைவக்காரர்களுக்கு இவரது வலைப்பூ ஒரு வரப்பிரசாதம்.
வரப்போகும் நவராத்திரியில் விதம் விதமான சுண்டல்கள் செய்து மூன்று தேவியருக்கும் படைத்து, விருந்தினருக்குக் கொடுத்து மகிழ்வியுங்கள் காமாட்சி அம்மாவின் சுண்டல் குறிப்புகளைப் படித்து.


காமாட்சி அம்மா கதை எழுதுவதிலும் கெட்டிக்காரி.  இவரது இந்த சிறுகதையை படித்துத்தான் பாருங்களேன்.


காமாட்சி அம்மா நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து இன்னும் பல நல்ல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.


3.    ‘பலராமன் பக்கங்கள்’.  இவரும் எங்கள் நிறுவனத்தில் (BSNL) பணியாற்றியவர். 

இவர் ஒரு அன்புக் கணவர் என்பதற்கு இவர் மனைவிக்கு எழுதியுள்ள கடிதமே சாட்சி.

’மகளிர் மட்டும்’ அருமையான ஒரு சிறுகதை.  படித்துத்தான் பாருங்களேன்.

இன்றைய இளைஞர் சமுதாயம் நம் தாய் மொழியினைப் பற்றி என்ன நினைக்கின்றது?
அருமையான ஒரு கட்டுரை.



”மாயன் காலண்டராவது, மச்சான் காலண்டராவது”

என் எழுத்துக்களில் எனக்குப் பிடித்த ஒன்று.  மாயன் காலண்டர் முடிந்தவுடன் உலகம் அழிந்து விடும் என்ற செய்தி வந்த போது நான் எழுதிய கவிதை ”மாயன் காலண்டராவது, மச்சான் காலண்டராவது”

நாளை சந்திப்போமா? வருகிறேன். நன்றி வணக்கம்.
அன்புடன்

ஜெயந்தி ரமணி

35 comments:

  1. இன்றைய தொகுப்பு அழகு.. இனிய அறிமுகங்கள்..

    காமாட்சி அம்மா அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து இன்னும் பல நல்ல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நானும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. திரு துரை செல்வராஜூ

      வருகைக்கு வணக்கம்.
      பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  2. சிறப்பான அறிமுகங்கள்..வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  3. திருமதி இராஜராஜேஸ்வரி

    வருகைக்கும், வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.

    அன்புடன்
    ஜெயந்தி ரமணி

    ReplyDelete
  4. இன்றைய அறிமுங்களுக்கு எமது வாழ்த்துக்கள். இதோ நுளைந்து விட்டேன்.

    அன்புடன்
    கில்லர்ஜி
    அபுதாபி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திரு கில்லர்ஜி

      வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  5. சிறப்பான பதிவர்களின் சிறந்த படைப்புக்களை தொகுத்தவிதம் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. திரு ‘தளிர்’ சுரேஷ்

      வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  6. //இன்று நாம் மூத்த குடிமக்களின் (SENIOR CITIZENS) வலைத்தளங்களை அறிமுகப் படுத்தி கௌரவிப்போமா?//

    இன்னும் 273 நாட்களில் [JUST 9 மாதத்தில்] மூத்த குடிமகளாக எங்களுடன் வந்துசேர உள்ள ‘ஜெ’வை வருக! வருக!! வருக!!! என அன்புடன் வரவேற்க துடிப்புடனும் ஆவலுடனும் கையில் துடுப்போடு படகினில் காத்திருக்கிறோம் ...... 'ஜெ' யுடன் ஜே ஜே ன்னு சேர்ந்து ஜாலியாப் பயணம் செய்ய ! ;)

    20.05.2015 என்ற அந்தநாளும் வந்திடாதோ !
    http://gopu1949.blogspot.in/2011/04/blog-post.html

    LVB யில் FD போட்டால் சுளையாக 10% ROI கிடைக்கக்கூடும். அதனால் அழைக்கிறோமாக்கும் - ஹூக்க்க்க்கும். ;)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. கோபு அண்ணா,

      ஒரு ரகசியம். RECORDSபடி SR. CITIZEN ஆயாச்சு. அதோட இந்த RAILWAY DEPT. எங்களுக்கு (அதான் பெண்களுக்கு) 58 வயசிலயே SENIOR CITIZEN அந்தஸ்து கொடுத்துடுத்து. தயவு செஞ்சு இந்த ரகசியத்தை வெளியில சொல்லிடாதீங்கோ.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
    2. அப்போ ’ஜெ’யும் கோபுவும் ஒரே கேஸ்தான் போலிருக்கு.
      Both of us are sailing on the same Boat !

      எனக்கும், நான் என் அம்மா வயிற்றில் ஜனித்த தேதியையே பிறந்த தேதியாக ரிகார்டுகளில் பதிவு செய்து விட்டார்கள்.

      அநியாயமாக 10 மாதங்கள் முன்பே அனாவஸ்யமாக ரிடயர்மெண்ட் கொடுத்து விட்டார்கள். அன்றைய நிலவரப்படி இதனால் எனக்கு 6 முதல் 7 லட்சங்கள் வரை கூடுதல் இழப்பாகிவிட்டது. அதையும் என் பதிவினில் எழுதியுள்ளேன். http://gopu1949.blogspot.in/2012/03/1.html

      இதுவும் நமக்குள் மட்டும் இரகசியமாக இருக்கட்டும். தயவுசெய்து நீங்களும் யாரிடமும் சொல்லிடாதீங்கோ.

      Delete
    3. நானும் ஒரு வருடம் முந்தி வீட்டுக்கு வந்து விட்டேன். பரவாயில்லை. NO REGRETS. எங்க அம்மாவுக்கு நன்றி சொல்றேன். இல்லைன்னா லயாக்குட்டி கூட ஆட்டம் போட முடியுமா? அதோட கிட்டத்தட்ட 41 வருஷம் வேலை பாத்தாச்சு.

      Delete
  7. //சிறப்பான அறிமுகங்கள்..வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..! //

    என்று ஏற்கனவே ’எங்காளு’ ஒருத்தர் மேலே சொல்லியிருக்காங்கோ.

    அதைமீறி நான் என்ன சொல்ல இருக்கிறது...... ’ஜெ’.

    அதே அதே ...... சபாபதே !

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நன்றி, நன்றி, நன்றி

      இதைத்தவிர நான் சொல்ல என்ன இருக்கு.

      Delete
  8. /என் மானசீக குருநாதர் திரு வை கோபால கிருஷ்ணனும் ஒரு மூத்த குடிமகன் தானே.//

    மூத்த ‘குடி’ மகனே தான். அதில் என்ன சந்தேகம்? அதுவும் பிறந்ததுமே முட்ட முட்ட FULL FULL ஆக அடிக்கடி அ(கு)டித்த பெருங் ‘குடி’ மகன் தான்.

    சந்தேகமானால் இதோ இந்தப்பதிவினில் முதல் 2-3 பாராக்களிலேயே சொல்லியுள்ளேன். பாருங்கோ:

    http://gopu1949.blogspot.in/2012/03/1.html

    >>>>>

    ReplyDelete
  9. //அடுத்தவங்கள கௌரவிக்கறதுல கோபு அண்ணாவுக்கு இணை அவரே தான். இந்த இழையைப் படித்து தெரிந்து கொள்வோமே.

    http://gopu1949.blogspot.in/2014/08/blog-post.html//

    என்னுடைய வலைத்தளப்பதிவு ஒன்றை இன்றும் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ‘ஜெ’ .....

    என் கற்பனையில் பனை [பண] விசிறியால் ’ஜெ’ வுக்கு இன்னும் விசிறிக்கொண்டு இருக்கிறேன். http://gopu1949.blogspot.in/2014/03/blog-post_29.html

    பதிவுகளை ‘ஜெ’ மழலையில் இழைகள் என்று சொல்வது கேட்க புதுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இழைவாகவும் இசைவாகவும் உள்ளது. நம் லயாக்குட்டி பேசுவது போல ........

    ஆனால் அந்த தங்களின் இனிய ருசியான
    அ தி ர ஸ ங் க ள் இன்னும் எனக்கு
    வந்து சேரவில்லை. நினைவிருக்கட்டும்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. விசிறிக்கறேன்.

      அதிரசங்களா, இன்னும் வாலாம்பா மன்னியிடம் இருந்து APPROVAL வரவில்லை.

      Delete
    2. //இன்னும் மன்னியிடம் இருந்து APPROVAL வரவில்லை.//

      ;) ’ஜெ’ யின் சமாளிப்பு மிகவும் அருமை. என்ன இருந்தாலும் ஆபீஸில் வேலை பார்த்தவர்கள் அல்லவா ! அதுவும் PA to GM - BSNL அல்லவா ! எதற்கு GM's approval இருந்தால் மட்டுமே முடியும் என்பது ரொம்பவும் Strict ஆக இருக்கக்கூடும் தான்.

      GM's approval ஆவது கஷ்டப்பட்டு வாங்கிவிடலாம். ஆனால் உங்க மன்னியிடம் அப்ரூவல் வாங்குவது மிகவும் சிரமமாக்கும். ஏனெனில் உங்க மன்னி கணினி பக்கமோ, என் வலைத்தளப்பக்கமோ சுத்தமாக வருவதில்லையாக்கும். ;)

      Delete
    3. ஆஹா கண்டு பிடிச்சிட்டீங்களே.

      Delete
  10. வலைச்சர்த்தில் இரண்டாம் நாளும் கலக்கியுள்ள
    ஜெயந்திக்கு என் அன்பான பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    இன்றும் நாளையும் என் நெருங்கிய சொந்தக்காரர்களின்
    திருமணம். அதனால் என் வருகையில் தாமதம்.

    அமர்க்களமான அந்த விழாவின் நடுவே யாருக்கும் தெரியாமல் எஸ்கேப் ஆகி நான் வந்துள்ளேன்.

    அதுவும் நம் ‘ஜெ’ க்காக மட்டுமே !

    வாழ்க !

    அன்புடன் கோபு அண்ணா

    -oOo-

    ReplyDelete
    Replies
    1. நன்றியோ நன்றி.

      அந்த திருமணத்துல அதிரசம் கிடைச்சதா.

      ‘ஜெ’க்காக வந்த உங்களுக்கு ஜே ஜே

      நன்றியுடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
    2. //அந்த திருமணத்துல அதிரசம் கிடைச்சதா.//

      நாட்டிலே அடிக்கடி ஆயிரம் திருமணங்கள் நடக்கலாம்.

      ஆயிரம் அதிரஸங்களும் எனக்குக் கிடைக்கலாம்.

      இருப்பினும் அந்த அதிரஸங்களெல்லாம் என் ‘ஜெ’ எனக்கு ஸ்பெஷலாகத் தந்த அதிரஸம் போல வருமா !

      ‘ஜெ’ யின் அதிரஸம் மட்டும் தனிச் சுவையாக இருந்ததாக்கும். அதன் டேஸ்ட் [தனி ருசி] இன்னும் என் நாக்கில் அப்படியே உள்ளதாக்கும். ;)

      Delete
    3. வரும், வரும் அது வரும் வரை சற்றுப் பொறும். பொறும்.

      Delete
  11. ஜெயந்தி என்னைப் பற்றிய உன் அபிமானம், நல்லெண்ணத்தைப் பிரதிபலிப்பாக இன்று வலைப்பூவில் என்னை அறிமுகம்
    செய்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நன்றியும் கூட. மற றவர்களின் அறிமுகம் பார்த்து மிக்க ஸந்தோஷம்.
    படித்து மகிழ்ச்சியடைய நல்ல ஸந்தர்ப்பம். எல்லோருக்கும் என் அன்பு. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. காமாட்சி அம்மா,
      வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
      உங்களை நினைக்கும் பொழுது பெருமையாக இருக்கிறது.
      உங்கள் வலைப்பூவிற்கு வருகை தராவிட்டாலும் உங்கள் நினைவு என்றும் எனக்கு உண்டு.

      நன்றியுடனும்,
      வணக்கத்துடனும்
      ஜெயந்தி ரமணி

      Delete

  12. வணக்கம்!

    தமிழ்மணம் 1

    செயந்தி அளித்துள்ள இப்பதிவு சீரார்
    உயா்ந்த நிலையை உடைத்து! - முயன்றளித்த
    வண்ண வலைகளைக் கண்டு மகிழ்கின்றேன்!
    உண்ணும் விருந்தாய் உவந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு


    ReplyDelete
    Replies
    1. கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களுக்கு

      வருகைக்கும் வாழ்த்துக்கும்
      மனமார்ந்த நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  13. Replies
    1. திரு John Simon C

      வாழ்த்துக்கு நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  14. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். அந்த தளங்களைப் படிக்கிறேன்.

    ReplyDelete
  15. திரு விச்சு

    வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  16. மாமீஈஈஈஈஈஈஈஈஈஈ்்அசத்தறேள் போங்கோ்அருமையான அறிமுகங்கள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது