07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, August 7, 2014

அரட்டைக் கச்சேரி-- 4








கவிதை...... எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. உடனே  எத்தனைக் கவிதை எழுதியிருக்கிறாய் என்று கேட்காதீர்கள். படிக்கப் பிடிக்கும் என்று தான் சொல்லவந்தேன் அவ்வளவு தான்.

  ஒரு முழு பக்கம் எழுதி புரிய வைக்க வேண்டியதை சுருக்கி ஒரு சில வரிகளில் எதுகை மோனையுடன் மரபுக் கவிதை வடிவிலோ அல்லது, புதுக் கவிதை வடிவத்திலோ , ஹைக்கூ  கவிதைகளாகவோ , சொல்ல வேண்டிய விஷயத்தை எல்லா சுவையும் சேர்த்து 'நறுக்'கென்று புரிய வைப்பார்கள்.


காதல் கவிதைகள் எழுதுவது இன்பம் தான் .இல்லை என்று சொல்லவில்லை  . ஆனால் அதை படிப்பது அதை விட சுகம் அல்லவா?
காதலி நெஞ்சில் தந்த காயங்கள் பற்றி திரு. ரூபன்   அவருடைய
எழுத்துப் படைப்புகளில்   என்ன சொல்கிறார் பாருங்கள்.
காதல் ரசம் சொட்டும் கவிதைகள் இவருடையது.

அவர் எழுதியிருக்கும் சிறகடிக்கும் நினைவுகள் கவிதைத் தொடரைப் படியுங்கள் . கவிதை  உங்களை சுற்றி சுற்றி வந்து உங்களை சிறைப்படுத்தும் உங்களுக்கு விடுதலை என்பதும்  கிடைக்காது.

 தீதும் நன்றும் பிறர் தர வாரா  என்று சொல்லும் திரு ரமணி அவர்களின் தளத்தில் கொட்டியிருக்கும் கவிதைகளை  இன்றெல்லாம் படித்துக் கொண்டிருக்கலாம். துரோகம் என்னும் தலைப்பில் ஒரு தொடர் கவிதை எழுதி வருகிறார்.மர்மம்  நிறைந்தத் தொடர்.

 பதிமூனாவதா? முதலாவதா?,  தினம் நன்மைகள் தொடர
என்று எல்லாவற்றிற்கும் கவிதையிலேயே பதில் தருகிறார். கொட்டியிருக்கும் கவிதை குவியலிலிருந்து  ஒரு சிலவற்றை மட்டுமே உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன்.

 திருமதி மஹாலக்ஷ்மி விஜயன் எண்ணங்கள் பலவிதம்  என்னும் தளத்தில் எதை வைத்தும் கவிதை எழுதி விடுவார். அவர் மகன் செய்யும் அட்டகாசத்தை , கைக்குட்டை  காணாமல் போனதை, தெலுங்கில் பேசி  திண்டாடியதை  என்று எதையும் கவிதை விடிவில் கொடுக்கும் சாம்ர்த்தியகாரர் இவர். 
இவர் தளத்திலும் கவிதைகள் மலையாய் குவிந்திருக்கின்றன. 

கவிதை மட்டுமல்ல , நம் எல்லோருக்கும் உபயோகமாயிருக்கும் வாழ்வின் ஆதாரத்தைத் தொலைத்து விட்டால் என்ன செய்யலாம் என்று சொல்லும் பதிவு. அவசியம் படியுங்கள் உபயோகப்பட்டாலும் படலாம்.


அமெரிக்காவிலிருந்து கவிதைகள் வடிக்கும் திருமதி தமிழ்முகில் பிரகாசம்
தன்  தோழியின் பிரிவை இங்கே சொல்கிறார் பாருங்கள்.

குழந்தையின்  முதல் ஸ்பரிசம் மெய்மறக்க வைக்கும் என்கிறார். படித்து ரசிப்போம்.

காதல் மழையில் நனைய வேண்டுமா வாருங்கள் இங்கே.

மற்றுமொரு கவிதாயினி இலங்காத் திலகம் கோவைக்கவி. இவரும்  ஒரு பிரபலமான பதிவரே .  இவருடைய கவிதைபாருங்கள்.
காதல் ஏன்  படிக்கலாம் வாருங்கள்.

திரு.திண்டுக்கல் தன்பாலனைப் பற்றி சொல்லப் போகிறேன். கொல்லன் தெருவில்  ஊசி  விற்கிறாயா என்று கேட்பீர்கள்? தெரியும்.ஆனால் அவர்  பள்ளிக் குழந்தைகளின் கவிதையைத் தன் வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டதைப் பாராட்டாமல் இருக்க முடியுமா? இதை ஒரு தொடராகவே அவர் பகிர்ந்திருக்கிறார்.

நீங்கள் மாற வேண்டும்  என்று சொல்கிறார். என்னவென்று தான் பார்ப்போமே!

மரம் நட்டவர்களை மறக்கலாமா என்று குழந்தைகளின்  கவிதை இங்கே பகிர்ந்திருக்கிறார். படிக்கலாமே.

பதிவுகளைப் படிக்கும் போதே  எதையாவது கொறிக்கும் பழக்கம் இருந்தால் திரு.பாலகனேஷ் அவர்கள் மின்னல் வரிகளில்    மொறுமொறு  மிக்சர்    தருகிறார்.கொறிப்போம் வாருங்கள்..

அவருடைய  சரிதா டார்லிங்  படித்துப் பார்ப்போமே.

இவருடைய சிரித்திரபுரம்  படித்து, சிரித்து , வயிற்று வலி வந்தால்,  நான் பொறுப்பில்லை  சொல்லிட்டேன்.

சரி , எல்லாவற்றையும் சமர்த்தாய் படித்து வையுங்கள் . .

நாளை..................... மீண்டும் அரட்டைக்  கச்சேரி தான்.

image courtesy--google.


30 comments:

  1. கவிதை நிழலில் மனம் லயித்து இளைப்பாறி வருபவர்களுக்கு கொறிக்க மிக்ஸர் தரும் தளமாக என் தளம் சிறப்புற அறிமுகமாகியிருப்பது மிகமிக அகமகிழ்வைத் தருகிறது. எனக்கு மிக அதிக வாசகர்களைப் பெற்றுத் தந்த சிரித்திரபுரத்தை நீங்கள் மிக ரசித்திருப்பதைக் காண்கையில் மகிழ்ச்சி இருமடங்காகிறது. மட்டற்ற மனமகிழ்வுடன் இதயம் நிறை நன்றி உங்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி கணேஷ் சார்.

      Delete
  2. அருமையான கவிதைகளின் தொகுப்புகளாக அழ்கான அறிமுகங்கள்.. பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  3. இன்றைய அரட்டைக் கச்சேரி - கவிதைத் தளங்களின் தொகுப்பினோடு களை கட்டியுள்ளது.

    இனியதொரு தொகுப்பு.. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. எனது தளத்தினை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் சகோதரி.

    இன்று அறிமுகமான நண்பர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழ் முகில்

      Delete
  5. //எனக்கும் கவிதைக்கும் தூ...............................ரம் கொஞ்சம் அதிகம். அதனால் யாரையும் இம்சிக்க வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறேன்.//

    என்று தாங்கள் சமீபத்தில் எங்கோ எழுதியிருந்ததைப் படித்த ஞாபகம் உள்ளது எனக்கு.

    அதனை இந்த இன்றைய தங்களின் அறிமுகங்களிலும் என்னால் நன்கு உணரமுடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் நினைப்பது சரி.என்னால் முடியாத ஒன்றை ரசித்துப் பாராட்டுவது தானே நியாயம். அதைத் தான் செய்தேன்.
      நன்றி கோபு சார்.

      Delete
  6. கவிதை பாடும் தளங்கள் மிக அருமை.
    கவிதையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. கவிதை பகிர்வு வலைப்பூக்கள் அருமை
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உமையாள் காயத்ரி.

      Delete
  8. எண்ணங்கள் பலவிதம் தளத்தில் எழுதும் திருமதி மஹா லக்ஷ்மி விஜயனின் கருத்துரை முகநூலில் இருந்து பகிர்கிறேன்.

    நன்றி ராஜி மேடம்! என் வலை தளத்தை அறிமுகம் செய்து என்னை திக்கு முக்காட செய்து விட்டீர்கள்
    மேடம் நான் வலைச்சரத்தில் பின்னூட்டம் இட முயன்றும் என்னால் முடியவில்லை.. ஒரு Blogger account கூட உண்டாக்கி விட்டேன்!! என்ன காரணம் என்று புரியவில்லை!! மிக சந்தோஷமாக இருந்தது
    Chat Conversation End

    ReplyDelete
  9. முதலில் வலைச்சர ஆசிரிய பொறுப்பு ஏற்றமைக்கு வாழ்த்துகள் அம்மா. இன்றைய அறிமுகங்கள் அருமை. அனைவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  10. ரூபன் நல்ல கவிஞர். நீங்களே சொல்லி விட்டீர்கள் காதல் ரசம் சொட்டும் கவிதைகள் என்று. இதனாலேயே இவருடைய கவிதைகளை படிப்பதோடு சரி! இவருடைய மற்ற பொருள் (OTHER SUBJECT) கவிதைகளுக்கு மட்டும் கருத்துரை தருவது வழக்கம்! .

    கவிஞர் ரமணியின் கவிதைகளை படிக்கும்போது சுவாரஸ்யத்தில் அவற்றை கட்டுரையாக எடுத்துக் கொள்வதா கவிதையாக எடுத்துக் கொள்வதா என்ற மயக்கம் வரும். எல்லாமே பொருள் பதிந்தவை.

    கவிதாயினி இலங்காத் திலகம் கோவைக்கவி. - இன்றும் வலையில் தொடர்ந்து சலிக்காமல் எழுதும் கவிஞர். இவரது வண்ணப் படங்களுடன் அமைந்த பயணக் கட்டுரைகள், மலரும் நினைவுக் கட்டுரைகள் யாவும் சலிப்பு தட்டாதவை.

    பாட்டுக்குப் பாட்டெடுத்து எழுதும் திண்டுக்கல் தனபாலன் அவர்களை பற்றிச் சொல்லும்போது, கொல்லர் தெருவில் ஊசி விற்பது போல என்று அருமையாகச் சொன்னீர்கள்.

    வாசகர்களுக்கு நல்ல நொறுக்குத் தீனி தந்த மின்னல் வரிகள் கணேஷ் அவர்கள் இப்போதெல்லாம் தமிழ்மணத்தில் அதிகம் தென்படுவதில்லை. காரணம் தெரியவில்லை.

    மஹாலக்ஷ்மி விஜயன் (எண்ணங்கள் பலவிதம்) அவர்கள் வலைத்தளம் சென்று பார்க்க வேண்டும்.

    இன்றைய அரட்டைக் கச்சேரியும் அமர்க்களம்! நன்றி!

    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய மிக விரிவான கருத்துரைக்கும்,பாராட்டிற்கும், தமிழ் மண வாக்கிற்கும்
      மிக்க நன்றி தமிழ் சார்.

      Delete
  11. எல்லோருமே நல்லபதிவர்கள்தான் அருமையாக தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள் அம்மா.

    ReplyDelete
  12. கவிதைச்சரமா இன்றைக்கு? அருமை. ரூபன் அவர்களின் கவிதைகள் கண்ணீரை வரவழைப்பவை. ரமணி ஸாரின் கவிதைகள், கதைகள் எல்லாமே ரசிக்க தகுந்தவை. வேதா இலங்காதிலகமும் கவிதை புனைவதில் கைதேர்ந்தவர். இவரது பயணக் கட்டுரைகளும் சுவாரஸ்யமானவை.

    திண்டுக்கல் அண்ணாச்சி மழலைகளின் கவிதைகளை அறிமுகப்படுத்துவதை குறிப்பிட்டு எழுதியது பாராட்டுக்குரியது.
    மின்னல் கணேஷின் மொறுமொறு என்றைக்கும் மொறுமொறுன்னு இருக்கும். அவரது சிரித்திரபுரம் நானும் படித்து சிரித்திருக்கிறேன். 'சரிதா' என் அம்மா, என் அக்கா என்று எங்கள் குடும்பமே படித்து மகிழும் ஒரு கதாநாயகி.
    நானும் மஹாவின் ரசிகை தான்.

    நான்கு நாட்களின் அசத்தல்கள் தொடரட்டும், ராஜி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. இத்தனை விளக்கமானக் கருத்துரையைப் படிக்கும் போது, இன்னுமே நன்றாக எழுத வேண்டும் என்கிற எண்ணம் மனதில் தோன்றுவது உண்மை. உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் தான் என்னை எழுத வைக்கிறது. உங்களின் ஊக்கமிக்க கருத்துரைக்கு நன்றி ரஞ்சனி.

    ReplyDelete
  14. சுவையான கவிதைப் பதிவுகளை
    இங்கே அழகாகப்
    பதிந்தீர்கள்!
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

      Delete
  15. வணக்கம்
    அம்மா.

    இரண்டு நாட்கள் மெடிக்கல்முகாம் நடைபெற்றதால் அந்த நிகழ்வுக்கு பொறுப்பாக உள்ள காரணத்தால் வலைப்பக்கம் வர வில்லை சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு எனது பாராட்டுககள் என்னுடைய வலைப்பூவை அறிமுகம் செய்து வைத்ததைப் பற்றி தகவல் வழங்கிய சகோதரி R.Umayal Gayathri அவர்களுக்கு நன்றிகள்பல...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  16. சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
    http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது