07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 10, 2014

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன்  முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர்  ராஜலக்ஷ்மி பரமசிவம்
 இவரது  வலைத்தளம்   : அரட்டை ( http://rajalakshmiparamasivam.blogspot.com ) )- தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,   ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 
வலைச்சர விதி முறைகளின் படி பல பதிவர்களையும் அவர்களது பதிவுகளையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். சுய அறிமுகமும் உண்டு - முதல் பதிவில் அவரது பதிவுகளில் இருந்து சிறந்த - மற்றவர்களால் விரும்பக்கூடிய பதிவுகள் பலவற்றை அறிமுகப் படுத்தி இருக்கிறார்.

அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்களும் பதிவுகளூம் மட்டுமே கீழ்க்கண்ட புள்ளி விபரங்களில் வருகின்றன. 

இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 043
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 154
பெற்ற மறுமொழிகள்                            : 212
வருகை தந்தவர்கள்                              : 1512
பெற்ற தமிழ் மண வாக்குகள்             : 020

இராஜலக்‌ஷ்மி பரமசிவம்  பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   

இராஜலக்‌ஷ்மி பரமசிவத்தினை   -    அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   மாயவரத்தான் எம்ஜிஆர் ரவிஜி  ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார் 

இவரது தளத்தின் பெயர்   : 

மாயவரத்தான் எம்.ஜி.ஆர்


இவரது தளத்தின் முகவரி :: http://mayavarathanmgr.blogspot.com

 இவரைப் பாராட்டி,  வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில்  பெரு மகிழ்ச்சி  அடைகிறோம். 

 மயிலாடுதுறையில் பிறந்த மாயவரத்தான் எம்ஜிஆர் இரவி - எம்.எஸ்ஸி (கணிதம்) ,எம். . (மனோதத்துவம்),  பி.எட்.(கணிதம்),  முது நிலை பட்டயப் படிப்பு  (மக்கள் தொடர்பு) என பல்வேறு துறைகளீல் பட்டம் பெற்று தற்போது புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் துணைக்கோட்டப்  பொறியாளராகப் பணியாற்றுகிறார்.

சக பதிவர் - நாளை முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும் இரவிஜி இரவி அவர்களை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் இராஜலக்‌ஷ்மி பரமசிவம். 

நல்வாழ்த்துகள் ரவிஜி 
நட்புடன் சீனா 

16 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. நம் வாத்யார் இதயக்கனி [ மாயவரத்தான் ] எம்.ஜி.ஆர். அவர்களை வருக! வருக!! வருக!!! என வரவேற்று மகிழ்கிறோம். அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 3. அன்பின் வை.கோ - வருகைக்கும் வரவேற்பிற்கும் நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 4. அரட்டை ராஜலக்ஷ்மி மேம் அசத்தல் வாரமா பலத்த கை தட்டலோட நிறை(வா)வு செஞ்சிருக்காங்க. நல்வாழ்த்துகள் மேம். அடுத்த வாரத்துக்கு... அட... எம்ஜிஆரே வர்றாரா... சந்தோஷம். நம்பியாருக்கு இந்த தகவல் போயிடாம பாத்துக்கணும்ப்பா.... சிறப்பாகப் பணி செய்ய அட்வான்ஸ் நல்வாழ்த்துகள் ரவிஜி ஸார்.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டிற்கு நன்றி கணேஷ் சார்.

   Delete
 5. அன்பின் பாலகணேஷ் - வருகைக்கும் வாழ்த்தினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 6. வணக்கம்

  பல சுமைகளுக்கு மத்தியில் தனது கடமையை சரியாக செய்து முடித்த (இராஜலக்‌ஷ்மி)அம்மா அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி.
  புதிதாக வருகிற நமது வலைத்தள ரவிஜி ஐயா அவர்களை அன்புடன் அழைக்கிறோம் இந்த வாரம் வலைச்சரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திற்கு நன்றி ரூபன்

   Delete
 7. வாழ்த்துக்கள் ராஜலட்சுமி மேடம்! வாருங்கள் மாயவரத்தான் ரவிஜி அவர்களே! நன்றி!

  ReplyDelete
 8. சிறப்பாக இந்தவார வலையை பின்னிய ராஜலட்சுமி அம்மாவுக்கு வாழ்த்துக்களும்...
  திரு. மாயவரத்தாருக்கு வரவேற்பும் தேவகோட்டை சார்பாக அபுதாபியிலிருந்து கொடுக்கப்படுகிறது.

  ReplyDelete
 9. சிறப்பாக வலைச்சரத்தை நடத்திய ராஜலட்சுமி பரமசிவம் அம்மா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!...

  புதிதாக பணியேற்க வரும் திரு. மாயவரத்தான் எம்ஜிஆர் ரவி அவர்களுக்கு நல்வரவு!..

  வாழ்க நலம்..

  ReplyDelete
 10. சிறப்பாக பணி செய்த திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு பாராட்டுக்கள்!

  வரும் வாரத்தை சிறப்புடன் நடத்திட முன் வந்துள்ள மாயவரத்தான் ரவிஜி அவர்களுக்கு முன்னதான (அட்வான்ஸ்)
  நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. சிறப்பாக வலைச்சரம் தொடுத்த
  திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு பாராட்டுக்கள்..!
  நல்வாழ்த்துகள் இராஜலக்‌ஷ்மி பரமசிவம். அவர்களே.!

  நல்வாழ்த்துகள் ரவிஜி அவர்களே..

  ReplyDelete
 12. வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.

  ReplyDelete
 13. நாளை ஆசிரியர் பொறுப்பேற்கும் திரு. ரவிஜி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் மற்றும் நல்வரவேற்பு.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது