பல்சுவை பதிவர்கள் பகுதி -2
சென்ற பதிவின் தொடர்சி இது . சென்ற பதிவில் பார்த்ததுபோலவே இந்த பதிவிலும் பல வித தளங்களில் தங்கள் பதிவுகளை எழுதி பெயர் ஏற்ற அருமையான சில பதிவர்களை பார்க்க போகிறோம் . இவர்கள் அனைவரையும் உங்களுக்கு பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . வாருங்கள் பதிவிற்கு .செல்லலாம்
கவிதை வானம் :
நண்பர் பருத்தி முத்துராசன் அவர்களின் வலைபூ இது . பல அருமையான கவிதைகள் , கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது . இதில் நான் ரசித்தது உங்களுக்காக ...
மீண்டும் இந்தி திணிப்பு அவசியமா ?
தேவயாணி கைதில் நடந்தது என்ன ?
நிலவை தேடி :
பல ஆன்மிக பதிவுகள் மற்றும் சமுக பதிவுகள் கொண்ட வலைத்தளம் இது . படிக்க படிக்க ஆவலை தூண்டும் எழுத்துநடை இவரின் சிறப்பு .
ராமேசுவரம் புண்ணிய தீர்த்தங்கள்
வெளியே செல்லும் போது மகளீர் கவனிக்க வேண்டியவை
பிரபஞ்ச வெளியில் :
ஜெயகாந்தன் பழனி என்ற பதிவர் நடத்தும் வலைபூ இது . பக்கி சம்பந்தபட்ட பல பதிவுகள் இங்கு உள்ளது . இதுவரை நாம் அறியாத பல தகவல்கள் இங்கு கொட்டிகிடகிறது .
தசாவதாரம் - அறிவியலும் அவதாரமும் 17
திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்..!
கிறுக்கல்கள் :
ஜாலியான அதே சமயம் அருமையான பதிவுகள் கொண்ட தளம் இது . பாம்பு வீட்டுக்கு வந்தா நாம ஓடுவோம் . இவர் பதிவு தேத்துவார் . என்ன நடந்தது என படித்து பாருங்கள் .
- பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் என்ன செய்யலாம் அருமையான தகவல்!
- ஸ்ருதிஹாசன், தமன்னா ஏற்படுத்திய 'முத்தப் பரபரப்பு'!
விசுAwesomeமின் துணிக்கைகள்
எனக்கு தமிழின் மேல் ஒரு தலை காதல். அம்புடுதேன்! என்ற பதத்துடன் தனது பக்கத்தை நகைசுவையால் நிரம்ப வைத்துள்ள வலைபூ இது .
"திண்டுகல் தனபாலுக்கும்" அடிசறுக்கும்
"மண் வாசனை" , இல்ல இது "பன் வாசனை
கார்த்திக்கின் கிறுக்கல்கள் :
கார்த்திகேயன் லோகநாதன்என்ற நண்பரின் வலைபூ இது கவிதை கட்டுரை என எழுதி தள்ளியுள்ளார் . அனைத்தும் கருத்துபோதிந்த பதிவுகள் ஆகும் . படித்து உங்கள் ஆதரவை சொல்லுங்கள் .
இறுதி வரை
இந்த கொடுமை தொடரவேண்டுமா??
வல்வயூரன் :
ராஜமுந்தன் வல்வயூரன் என்ற நண்பர் நடத்தும் வலை தளம் இது . இதுவும் பல்சுவை வலைத்தளம்தான் . அனைத்தை பற்றியும் எழுதும் அருமையான பதிவர் இவர்.
கனக்கின்ற இதயங்கள்
புலத்து வாழ்க்கை.
தமிழ் இலக்கிய மின்வலை :
கவிஞ்சர் பாரதிதாசன் அவர்கள் நடத்தும் கவிதை வலைபூ . இங்கு தமிழ் புகுந்துவிளையாடுகிறது . கவிதை , தமிழ் பிடித்தவர்களுக்கு மிகவும் பிடிக்கும் தளம் இது .
கல்வியே கண்
தொடுத்தலும் விடுத்தலும்மழைச்சாரல்
தோழி பிரியா , எழுத்தை அதிகம் நேசிப்பவள் என தன்னை அறிமுகம் செய்யும் இவர் தனது தளத்தில் பல அருமையான கவிதைகள் எழுதியுள்ளார் .
நான் இதுவே
நடந்தேறா முயற்சி
ஒரு வாரமாக என் தொல்லையை தாங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி . அவசரபடாதீங்க அடுத்த வாரமும் நான்தான் ...(மாட்டிகிட்டிங்களா !!!!)
|
|
சிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteதொடருங்கள்
வணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க பாஸ் ...
Deleteஇனிய முகவுரையுடன் நல்ல அறிமுகங்கள்..
ReplyDeleteவாழ்க நலம்..
சிறப்பான அறிமுகங்கள் சிறப்பாய்!
ReplyDeleteஅந்த கடைசி வரி...
கலகலகலகல .....
எதோ உங்க சந்தோஷத்தை கெடுக்க என்னால் முடிந்த முயற்ச்சி
Deleteஎன் வலைதளத்தையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே
ReplyDeleteநன்றி என பெரிய வார்த்தை சொல்லாதிங்க சார்
Deleteஅன்பின் ராஜ பாட்டை ராஜா - அறிமுகங்கள் அத்தனையும் அருமையானவை - அடுத்த வாரமும் தாங்கள் தானா ? - பலே பலே !
ReplyDeleteஆமா மாட்டிக்கிட்டது யாரு ? அறிமுகப்படுத்தப் பட்ட பதிவர்களா ?
தங்கள் பதிவினை வாசித்து மகிழும் நண்பர்களா ?
கடும் பணிச்சுமைக்கு நடுவிலும் இங்கு இரு வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராகப் மகிழ்வுடன் பொறுப்பேற்றுக் கொண்ட தாங்களா ?
பொறுப்பளித்த வலைச்சரக் குழுவினரா ?
இக்குழுவினரின் பொறுப்பாசிரியரா ?
அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
எல்லாருமே மாட்டிகிட்டாங்க
Deleteஅடுத்தவாரமும் தங்களின் தேடல் வெகு சிறப்பாக அமையட்டும் சகோ !
ReplyDeleteஅனைவருக்கும் என் இனிய நல் வாழ்த்துக்கள் .
நன்றி சகோ
Deleteநல்ல அறிமுகங்கள், அனைவருக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள். இது வரை அறிமுகங்களான அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்... தொடர்வதற்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி
Deleteஅறிமுகங்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
ReplyDeleteகில்லர்ஜி
நன்றி கில்லர்ஜி ... தொடர்ந்து வாருங்கள் ..
Deleteஅறிமுகங்களுக்கு அனைவ்ருக்கும் என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி
Deleteஎன் வலைதளத்தையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி
ReplyDeleteமிக்க நன்றி
Deleteசூப்பர் இன்ட்ரோ ணா !!! //அடுத்தவாரமும் நான்தான்// அஞ்சானையே தாங்கிட்டோம் ! இத தாங்கமாட்டோமா ? ஹி ஹி !! சும்மா விளையாட்டுக்குணா !!!
ReplyDeleteசிறப்பான பதிவர்களின் அணிவகுப்பு! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
என்னை ஒருபொருட்டாய் இங்கே எடுத்துரைத்த
உன்னை வணங்கி உவக்கின்றேன்! - அன்னை
அருந்தமிழாள் அள்ளி அளித்த அருளால்
தரும்அமிழ்தை என்..பா தழைத்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
http://prabanjaveliyil.blogspot.com/
ReplyDeleteபிரபஞ்சவெளியில்..வலைப்பூவினை இங்கு அறிமுகப்படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி..பூக்கள் யாருக்காக பூத்ததோ அவர்களை சென்று சேர்ந்தே தீரும்..அப்படி சேர்ப்பிக்க உதவிய உங்களுக்கு ஒரு பூங்கொத்து..நன்றி..நன்றி..நன்றி..!