07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, December 6, 2014

கொடிகட்டிப் பறந்தவர்கள் - ஆறாம் நாள்

வலைச்சரம் ஆறாம் நாள்   6-12-2014 சனிக்கிழமை

கொடிகட்டிப் பறந்தவர்கள் 

வலைப்பதிவின் போக்கை கவனித்து வருபவர்களுக்கு ஒரு உண்மை புலப்பட்டிருக்கும். 2009 -10 ம் வருடங்கள்தான் தமிழ் வலைப்பதிவின் பொற்காலம். நிறைய புது பதிவர்கள் பதிவுகள் எழுத வந்தார்கள். நிறைய எழுதினார்கள். நன்றாகவும் எழுதினார்கள்.

அதில் சிலர் அதி சீக்கிரத்தில் மிகப் பிரபலம் ஆனார்கள். பதிவுலகத்தின் சாபக்கேடு என்னவென்றால் எப்படிப்பட்ட பிரபல பதிவராக இருந்தாலும் மூன்று அல்லது நான்கு வருடத்தில் சோர்வடைந்து பதிவிடுதலைக் குறைத்துக் கொள்வார்கள். அதில் பெரும்பாலானோர் காணாமல் போய் விடுவார்கள்.

ஒரு சிலரே தொடர்ந்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சில பதிவர்களை இங்கு அறிமுகப்படுத்துகிறேன்.

1.சி.பி.செந்தில்குமார்
 தளத்தின் பெயர் : அட்ரா சக்கை
 லிங்க் : http://www.adrasaka.com/

இதுவரை 4000 பதிவுகள் போட்டிருக்கிறார். ஒரு கோடி ஹிட்ஸ் வாங்கியிருக்கிறார். இந்த சாதனையை முறியடிக்க தமிழ்ப் பதிவுலகில் யாரும் இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன் தமிழ்மண ரேங்க் வரிசையில் முதாவது இடத்தில் வெகு நாட்கள் இருந்தார்.

வெகு துடிப்பான இளைஞர். நெல்லையில் நடந்த பதிவர் சந்திப்பில் 90 சதம் இவர்தான் பேசிக்கொண்டு இருந்தார்.


எல்லாவிதமான டாபிக்குகளிலும் பதிவுகள் போட்டிருக்கிறார். மிகவும் துணிச்சல்காரர்.

சாருவைப் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார் பாருங்கள். 



2.ஈரோடு கதிர்

My Photo
தளத்தின் பெயர் : கசியும் மௌனம்
லிங்க் : http://maaruthal.blogspot.in/

மிக இனிமையான பதிவர். இவர்தான் நான் முதல்முதல் சந்தித்த பதிவர். ஈரோடுதான் இவர் ஊர். முதல் முதல் பதிவர் சந்திப்பு விரிவான முறையில் நடத்திய பெருமை இவரையே சேரும்.

கொங்குத் தமிழில் எழுதிய இந்தப் பதிவைப் பாருங்கள்.
யாருக்கு கல்யாணம்?”

ஃப்ரெண்டுக்குங்ண்ணா… கொடுமுடில.. மத்யானம் ரிசப்சனுக்கு போகனும்ங்… அப்ப நீங்ககொடுக்கிறத கொடுத்துடுவேன்

என்னைத் தெரிஞ்ச ஃப்ரெண்டா?”

இல்லீங்ண்ணா… என்னோட ஃப்ரெண்ட்ங்


அதே ட்ரேட் மார்க் சிரிப்பு


இப்பவும் காக்கா கத்துதா?  கோவை கிராமங்களில் வீட்டுக்கு முன்னால் காகம் கரைந்தால் அன்று வீட்டுக்கு விருந்தினர் வருவார்க்ள என்ற நம்பிக்கை உண்டு. இதைப் பற்றி அழகு தமிழில் கதிர் எழுதியிருப்பதைப் படியுங்கள்.



3. எழிலாய்ப் பழமை பேச...

லிங்க் ; http://maniyinpakkam.blogspot.in/
இந்த தளத்தின் பதிவர் "பழமை பேசி" என்னும் மௌன.மணிவாசகம்.


கோயமுத்தூர்க்காரரான இவர் அமெரிக்காவில் வேலை பார்த்துக்கொண்டு ஊர்ப் பாசத்தை விடாமல் இருக்கிறார். 

ஈரோடு வலைப் பதிவர் சந்திப்பில் பெரும் பங்கு எடுத்திருக்கிறார். 

அமெரிக்க வாழ்க்கையைப் பற்றியும் பதிவுகள் போட்டிருக்கிறார்.


4. பாமரன் பக்கங்கள்.. 
பதிவர் பெயர் :திரு. வாசு. பாலாஜி 





 எவ்வளவு நேரம்தான் கையால க்ளிப் போடுறது
                     சும்மா சும்மா முடி பறந்து மூஞ்சில விழுதுங்ணா.



2009 லிருந்து பதிவு எழுதும் இவர் ஏறக்குறைய இப்போது எழுதுவதே இல்லை. இவருடைய சில பதிவுகள். அரேஞ்டு லவ் என்று ஒரு பதிவு. அந்தக்காலத்தில் இருந்த போன் வசதியைப் பற்றி சொல்கிறார். அன்புள்ள மம்மி என்று ஒரு புலம்பல் பதிவு படிக்க சுவையாக இருக்கிறது.


5.தாராபுரத்தான்
 திரு.பழனிசாமி அவர்கள், தாராபுரம்.
லிங்க் : http://tharapurathaan.blogspot.in/


தன் ஊரின் பெயரையே தளத்தின் பெயராகவும் வைத்துள்ள இவர்  அரசு உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றவர். காற்று வாங்க வாருங்கள் என்று தன் ஊருக்கு அழைக்கிறார்.


இவரை பதிவர் சந்திப்புகளில் சந்தித்திருக்கிறேன். இவரையும் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டும்.



6.சுரேஷ்(பழனியிலிருந்து)
தளத்தின் பெயர் : கனவுகளே..,

லிங்க் : http://kanavukale.blogspot.com/


சுமித்ராவின் சரித்திரம் என்ற தொடர்கதை எழுதியிருக்கிறார். நிறைய சினிமா விமர்சனங்கள் பதிவிட்டிருக்கிறார். கடைசியில் காணாமல் போய்விட்டார்


7. பன்னிக்குட்டி ராமசாமி
பதிவின் பெயர் ; ஸ்டார்ட் மியூசிக்
லிங்க் : http://shilppakumar.blogspot.in/




2010 ல் இருந்து பதிவு எழுதும் இவர் அந்தக்காலத்தில் பண்ணாத குறும்புகள் இல்லை, சேம்பிள் பாருங்கள்.
ங்ணா.... வெட்டி நாயம் பேசுறவங்க தெரியாம வந்துட்டீங்கன்னா அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டுக்குங்ணா...

மெதுவாக காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்



8. ஜாக்கி சேகர்
பதிவின் பெயர் : பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.
லிங்க் : http://www.jackiesekar.com/
2008 ல் இருந்து பதிவு எழுதி வரும் இவர் பெரும்பாலும் சினிமா விமர்சனங்கள் எழுதுவார். சமூகப் பிரச்சினைகள் பற்றியும் எழுதுவார்.

இவர் புதிதாக ஒரு முயற்சி மேற்கொண்டுள்ளார்.


அதில் விடியோ பிளாக் வெளியிடப்போகிறார். மாதிரி பாருங்கள்.

லிங்க் : http://youtu.be/JZM9ykwAsJk

விடியோவை கிளிக் செய்து பாருங்கள்.

9. நைஜீரியா ராகவன்.
 லிங்க் : http://raghavannigeria.blogspot.in/
நான் இவரைச் சந்தித்திருக்கிறேன். சமகாலப் பிரச்சினைகளை அலசுகிறார்.

10. சாரு நிவேதிதா
லிங்க் : http://charuonline.com/blog/
இந்தப்பெயரைக் கேள்விப்படாதவர்கள் தமிழ்நாட்டிலேயே யாரும் இருக்க முடியாது. most controversial writer.
இவருடைய பிரதாபங்களை விவரிப்பதைப் பாருங்கள்.

இவருடைய சிறப்பு என்னவென்றால் இவரை மோசமாக விமரிசிக்காத எழுத்தாளரோ, பதிவரோ இல்லை. ஆனால் அவை எல்லாவற்றையும் அனாயாசமாக எதிர்கொண்டு அவர்களுக்கு பதில் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.

நிறைய புத்தகங்கள் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவருடைய தளத்தைக் கட்டாயம் பார்க்கவேண்டும்.

11.வால் பையன்
2010 ல்  கொடிகட்டிப் பறந்தவர்களில் இவரும் முக்கியமானவர். எனக்கு நன்கு அறிமுகமானவர். அப்பொழுது இருந்த இவர் தளத்தின் தமிழ்மண ரேங்க்கைப் பாருங்கள்.
2010 blog rank 6

புரட்சிகரமான பதிவுகள் போடுவார். சூன்யம் வைப்பதைப் பற்றி இவரிடம்தான் கற்றுக்கொண்டேன். இவருடைய தற்பெருமையைப் பாருங்கள்.

"நான் டோண்டு சார்,தருமி சார் கூட அமர்ந்து கூட பூஸ்ட் சாப்பிட்டிருக்கேன், "

"டிஸ்கி" என்கிற வார்தையையே இவர் பதிவிலிருந்துதான் நான் கற்றுக்கொண்டேன்.

 தற்போதும் சில சமயம் பதிவுகள் போடுகிறார்.

சில புது பதிவர்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

22 comments:

  1. கொடிகட்டிப் பறந்தவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. என்னங்க இது! நீங்க சொன்னபிறகுதான் போய் எண்ணிப்பார்த்தேன். நம்ம அட்ரா சக்க 4294 பதிவுகள் இதுவரை போட்டுருக்கார்!!!!

    அப்பப்ப அவர் வீட்டுக்குப்போய்ப் பார்த்தாலுமே இவ்ளோ இருக்குமுன்னு நினைச்சும் பார்க்கலை!

    ஹைய்யோ!!!

    1626க்கே நாக்குத் தள்ளிப் போச்சுல்லெ எனக்கு :(

    ReplyDelete
    Replies
    1. அதோடயா, இன்னும் ஸ்டெடியாப் போய்ட்டு இருக்காரு பாருங்க துளசியம்மா.

      Delete
  3. நன்றாகவே நினைவலைகளைக் கொண்டு வந்தீர்கள். நீங்கள் குறிப்பிட்ட 2009 – 10 வருடங்களில் வலையுலகில் நானொரு வாசகன் மட்டுமே. நீங்கள் இங்கு குறிப்பிட்ட அனைவருமே சக்கை போடு போட்டவர்கள். “வவ்வால்” அய்யாவை மறந்து விட்டீர்களே
    த.ம.1.

    ReplyDelete
    Replies
    1. வவ்வால் விட்டுப் போச்சுங்க. காரணம் இந்த மாதிரி பதிவு போடறதுக்கு நிறைய டைம் இருந்தாத்தான் எல்லா தளங்களுக்கும் போய் தகவல் திரட்ட முடியும். எனக்கு வலைச்சர ஆசிரியர் கொடுத்த டைம் இரண்டே நாட்கள். என்னால் முடியல.

      Delete
  4. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    வீடு திரும்பல் உட்பட இன்னும் பல தளங்கள் உள்ளன ஐயா...

    ReplyDelete
    Replies
    1. 100 சதம் திருப்தியாப் போடறதுன்னா ஆயுசு பத்தாது. இந்த வலைச்சரப் பதிவு வேலை ஏதோ சாதாரணம் என்று நினைத்தேன். ஆனா நிறைய வேலை வாங்கிட்டது.

      Delete

  5. கொடிகட்டிப் பறந்த வலைப்பதிவர்களில் திரு ஜாக்கி சேகர் மட்டும் வலையுலகில் இருக்கிறார். மற்றவர்கள் மீண்டும் வலையுலகம் வர விழைகின்றேன். இவர்களை அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நடனசபாபதி. அது ஒரு பொற்காலம். பதிவுலகத்திற்குள் புகுந்தால் நேரம் போவது தெரியாது. அதை அனுபவித்த பிறகு இப்போது வரும் பதிவுகள் எல்லாம் குப்பையாகத் தெரிகின்றன.

      Delete
  6. கொடிக்கட்டி பறந்துக்கொண்டு இருக்கும் இன்றைய பதிவர்கள் அறிமுகம் அட்டகாசம் ஐயா..

    பதிவர்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள் ...

    த.ம.3

    ReplyDelete
  7. இன்றைய அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகள்

    ReplyDelete
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. //4. பாமரன் பக்கங்கள்..
    பதிவர் பெயர் :திரு. ராதாகிருஷ்ணன்.//

    இவர் பெயர் வாசு. பாலாஜி

    அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. சரி செய்து விட்டேன்.

      Delete
  10. பதிவுலக ஜாம்பவான்கள் அறிந்தோம். அப்போதைய காலங்களில் வலைப் பதிவு ஒன்று இருப்பதே தெரியாது. அதில் எல்லோருக் எழுதமுடியும் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை

    ReplyDelete
  11. கொடி பறந்தவர்கள் மீண்டும் முன்பு போல் பறக்கட்டும்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    எல்லோரையும் பற்றி அழகாய் சொன்னீர்கள்.

    ReplyDelete
  12. வலைப் பதிவில் மூத்தவர்களுக்கு வயதில் மூத்தவன் வாழ்த்து!

    ReplyDelete
  13. ஃபேஸ் புக்ல இருக்கோமுங்க.., அப்பப்ப தோணுறத அப்பப்ப போட்டுடறோம்..,

    ReplyDelete
    Replies
    1. நான் இன்னும் ஃபேஸ் புக்கை சரியாக உபயோகப்படுத்தப் பழகவில்லை.

      Delete
  14. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. பழனி கந்தசாமி சார்..

    என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது