07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 18, 2015

வருந்துகிறேன்...விடை பெறுகிறேன்

வலைச்சர ஆசிரியப்பணி என்பது சாதாரணமான வேலையில்லை என்பது இப்போதுதான் புரிந்தது. எத்தனை மெனக்கெட வேண்டும் என்பதும் எவ்வளவு உழைக்க வேண்டும் என்பதும் அனுபவப்பூர்வமாக தெரிந்து கொண்டேன். பதிவுகளை அறிமுகப் படுத்துவதற்கும் நிறைய தேடல் வேண்டியிருந்தது.

முதல் முறை என்பதால் இந்த ஒரு வார கால பணி எனக்கு அத்தனை திருப்திகரமாக இல்லை. மிகவும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற மனக்கோட்டை கட்டியிருந்தேன். ஆனால் நான் தேர்ந்தெடுத்த நாட்கள் பொங்கல் திருவிழாவாக அமைந்து விட்டதால் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கின்ற வேளையில் இந்தப் பணியும் சுமையாக அமைந்து விட்டது. அதனால்தான் என்னால் சிறப்பாக செய்ய முடியவில்லை. தவிரவும் எனது கிராமத்தில் இணைய வேகமும் அத்தனை வேகமாக இல்லை. அதற்காக உளமாற வருந்துகிறேன்.

பிறிதொரு சமயத்தில் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற உறுதியையும் ஏற்றிருக்கிறேன். இது எனக்கொரு சவால் மாதிரிதான். நமது தளத்தில் நம் விருப்பம்போல் எப்போது வேண்டுமானாலும் பதிவிட முடியும். ஆனால் இங்கோ தொடர்ந்து ஒரு வாரம் நாள்தோறும் தவறாமல் பதிவிட வேண்டும் என்ற கடமை பயமுறுத்திக் கொண்டே இருந்தது புதுமையான அனுபவம்தான்.

இன்றைய சில அறிமுகங்கள்; அகம் புறம் தளத்தில் தம்பி பிரபு இராமனைத் திட்டித்தீர்த்த காதை என்ற கவிதையில் சரித்திர நிகழ்வோடு தற்போதைய அரசியல் சமுதாய சீரழிவையும் அழகாக எடுத்துரைக்கிறார்.

செந்தூரனின் பதிவுகளில் மதி சுதாவின் தழும்பு -ஒரு சினிமாக்காரனின் சமுகத்தின் பேச்சும் மூச்சும் வாசமும் ஒரு குறும்படத்தைப் பற்றி பேசுகிறது.

சினிமா சினிமா தளத்தில் The World's End (2013) - அடிமைப்படுத்தும் தொழில்நுட்பம் என்ற பதிவில் 'தி வோல்ட்ஸ் என்ட்' திரைப்படம் இந்த நெட்வொர்க்கின் ஒழுங்கமைவை நகைச்சுவைப் பின்னணியில் சின்னதாக கோடிட்டு காட்டுவதை அழகாக விவரிக்கிறார் ராஜ் அவர்கள்.

விதவிதமான மூலிகைகள் அதன் பயன்கள் பற்றி மூலிகை வளம் என்கிற இந்த தளம் முழுவதும் கொட்டிக்கிடக்கிறது.

தமிழ் கம்ப்யூட்டர் காலேஜ் என்ற தளம் இணையத்தில் எப்படி எச்சரிக்கையாக உலவுவது என்பதைப் பற்றிய அருமையான பதிவு

 மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த தினமான இன்று எம்.ஜி.ஆர். அவர்களைப்பற்றி கவிஞர் வாலி அவர்கள் எழுதிய இனி யாரைப் பாடுவேன் என்ற கவிதையை உத்தரவின்றி உள்ளே வா என்ற தளத்தில் பார்க்கலாம்.

இந்த சில அறிமுகங்களோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். வாய்ப்பு கொடுத்த சீனா ஐயாவிற்கும், வலைச்சர குழுவிற்கும் மீண்டுமொரு முறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வலைச்சரத்தின் மூலம் எனது மறக்க முடியாத நினைவுகள் வலைத்தளம் இன்னும் கொஞ்சம் பிரபலமாகியிருக்கிறது. தொடர்ந்து வாசகர்கள் வரும் வண்ணம் எனது தளத்தை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது. பல பதிவர்கள் முகநூல் பக்கம் போய்விட்டாலும் தொடர்ந்து வலைத்தளத்தையும் விடாமல் பதிவுகளை எழுத வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
கவிப்ரியன்.

22 comments:

 1. விடுமுறை நாள்களில் அதுவும் பொங்கல் விழாவின்போது இந்த அளவு நேரத்தை ஒதுக்கி தாங்கள் சிறப்பாக ஆசிரியப்பணியை நிறைவு செய்துள்ளீர்கள். எங்களுக்குக் குறையாகத் தெரியவில்லை. சிறப்பான அறிமுகங்களையும் செய்துள்ளீர்கள். வருந்தவேண்டிய அவசியமில்லை. மறுபடியும் உங்களைச் சந்திக்க காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்புக்கு நன்றி ஐயா.

   Delete
 2. அன்புடையீர்..
  தாங்கள் சிறப்பாக ஆசிரியப் பணியினை நிறைவு செய்திருக்கின்றீர்கள்.
  சிறப்பான அறிமுகங்களுடன் பதிவுகள் தொடர்ந்தன.
  யாதொரு குறையும் இல்லை.. எனவே வருத்தம் எதற்கு!?..

  அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 3. அருமையாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... வாழ்த்துக்கள்...

  முடிவில் சொன்னது 100% உண்மை...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி தனபாலன் அவர்களே.

   Delete
 4. ஆசிரியப்பணியை நன்றாக செய்து இருக்கிறீர்கள் சகோ.
  வாழ்த்துக்கள்.
  மீண்டும் சந்திக்க ஆவலாய் உள்ளோம்.
  தம 2

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி உமையாள் காயத்ரி அவர்களே.

   Delete
 5. வணக்கம்
  சிறப்பாக பணியை செய்து முடித்த தங்களுக்கு வாழ்த்துக்கள்..... தொடருகிறேன் பதிவுகளை.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. நன்றி கவிப்ரியன் அய்யா அவர்களே!
  வலைச்சரத்தின் வாசத்தை நுகர்கின்ற நுட்பத்தை
  நீவீர் இட்ட பதிவுகளே பறை சாற்றியது.

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
 7. அருமையான தளங்கள்! பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தளிர் சுரேஷ் அவர்களே.

   Delete
 8. எதற்காக வருந்துகிறீர்கள்? இது ஒரு நல்ல புது அனுபவம்தானே? மீண்டும் ஒருமுறை வந்து நீங்கள் விரும்பியதுபோல் செயலாற்றுங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அமுதவன் ஐயா அவர்களே.

   Delete
 9. மன்னிக்கணும் கவிப்ரியன்.

  விடுமுறை & விழாக் காலமாக இருந்ததால் தினம் வந்து வலைச்சரம் பார்ப்பதுகூட என்னால் முடியாமல் போச்சு:(

  அடுத்த முறை ஆசிரியர் பணியை சீக்கிரமாக ஏற்றுக்கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் தங்களின் அன்பிற்கும் மிக்க நன்றி துளசி கோபால் அவர்களே.

   Delete
 10. எப்போதும் நான் சொல்வது தான். திட்டமிடுதல் ரொம்பவே முக்கியம். ஒரு பொறுப்பு நம்மிடம் வந்து விட்டால் நம் சூழ்நிலையை காரணம் காட்டாமல் அதில் நின்று ஜெயித்து காட்ட வேண்டும். ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் பல அத்தியாயங்கள் நள்ளிரவில் எழுதப்பட்டது. காலை எழுந்து அவசரமாக குளித்து விட்டு அலுவலகம் கிளம்பியதும் உண்டு. நான் வருத்தப்பட்டதேஇல்லை. அத்தனை நெருக்கடியில் நான் செயல் பட்டு இருக்காவிட்டால் பலரின் பாராட்டுரைகள் கிடைத்து இருக்காது. எப்போதும் போல அந்த நேரத்தில் தூங்கித்தான் கழித்திருப்பேன். சவாலாக இன்னோரு முறை கேட்டு வாங்கி சிறப்பாக ஆசிரியர் பணி செய்ய வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஜோதிஜி அவர்களே. திட்டமிட்டிருந்தால் சிறப்பாக செய்திருக்க முடியும். இரண்டு மூன்று பதிவுகள் நன்றாக முதலிலேயே தயார் செய்தேன். அப்புறம்தான்... உங்களின் உழைப்பை என்னோடு ஒப்பிடவே முடியாது. இருப்பினும் தங்கள் ஆலோசனைக்கு நன்றி. மீண்டும் வாய்ப்பு வந்தால் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது