07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, January 23, 2015

வலைச்சர ராகங்கள்-4!

கண்ணில் தெரியும் கதைகள் என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் வரும். ' நானொரு பொன்னோவியம் கண்டேன்' என்று தொடங்கும் அந்தப்பாடலை எஸ்.பி.பாலசுப்ரமண்யமும் ஜானகியும் சுசீலாவும் போட்டி போட்டுக்கொன்டு அருமையாகப் பாடியிருப்பார்கள். 1980 களில் வந்த படம் இது.இந்தப் பாடல் வெளி வந்த சமயம், எங்கள் குடும்ப நண்பரொருவர் ஒரு ஆடியோ டேப் முழுவதுமாக இந்தப்பாடலைத்திரும்பத் திரும்ப பதிவு செய்து தரச்சொன்னார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் கார்ப்பயணம் செய்து அவர் இருப்பிடத்திற்குச் செல்ல வேண்டும். இந்தப்பாடலை மட்டுமே அவர் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே போவார்!

அந்த அளவிற்கு அவரை மயக்க வைத்த அந்தப் பாடலின் ராகம் எது தெரியுமா? மோகனம்!

மோகனம்

அழகும் அன்பும் நிறைந்த இடத்தில இருப்பது மோஹனம். காமம், குரோதம், மோகம் போன்ற தீய எண்ணங்களை நீக்கி நன்மை தரும் ராகம். மிக அழகாக இசைக்கும் ராகம். திரை இசையமைப்பாளர்களால் அதிகம் பயன் படுத்தப்பட்ட அழகான ராகங்களின் இதுவும் ஒன்று. பண்டைய காலத்தில் 'சிலப்பதிகாரத்தில்' 'முல்லைத்தீம்பாணி' என்று கூறப்பட்ட ராகம் மோகனம் தான் என்று இசை அறிஞர் ராமநாதன் தனது ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளார். அந்த அளவிற்கு மிகத்தொன்மையான ராகனம் மோகனம். வட இந்தியாவில் இந்த ராகத்தை ” பூப் ” , என்றும் பூபாளி என்றும் அழைக்கின்றனர். கேட்பவர்களை உருக வைக்கும் இந்த ராகம் மென்மையான உணர்வுகளையும் வீர உணர்வுகளையும் வெளிப்படுத்தும் சிறந்த ராகம். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மிகவும் புகழ் பெற்றது.

இனி பாடல்கள்!

லால்குடி ஜெயராமன் அவர்களது வயலின் எந்த ராகத்தைத் தொட்டாலும் மனதை உருக்கி எங்கோ சஞ்சரிக்க வைத்து விடும். இங்கே மோகனத்தில் கல்பனா ஸ்வரங்களை பொழிந்து எப்படியெல்லாம் நம் மனதை மயங்க வைக்கிறார்!கேட்டு ரசியுங்கள்!





அறுபதுகளில் வந்த ஒரு மோகன ராகப் பாடலை இங்கே உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். பல பேர் இந்தப் பாடலைக்கேட்டிருக்க மாட்டார்கள். இந்தக் காட்சியையும் பார்த்திருக்க மாட்டார்கள். பாடல் அழகா, வரிகள் அழகா அல்லது நடிகர் திலகத்தின் சிருங்கார ரசம் மிக்க நடிப்பு அழகா என்று இனம் பிரிக்க முடியவில்லை. எல்லாம் சேர்ந்து மோகன ராகத்தின் இனிமை விஞ்சி நிற்கிறது இங்கே!





எண்பதுகளில் வந்த ' காதல் ஓவியத்தின் பாடல் இது! எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஆலாபனைத்தொடக்கமும் கூடவே மோகனத்தில் இழையும் வயலின் இசையும் நம்மை பாடலைக்கேட்கும் முன்பே கட்டிப்போட்டு விடும்.




இனி பதிவர் அறிமுகங்கள்:

1. அன்பை எதிர்பார்த்து, அன்பின் வரவை எதிர்பார்த்து பல உறவுகள் வாழ்க்கை முழுவதும் எதிர்பார்ப்புகளுடனேயே வாழ்கிறார்கள்! இங்கே பள்ளி சென்ற பேரனை எதிர்பார்த்து காத்து நிற்கும் தாத்தாவைப்பற்றி காத்திருப்பதன் உன்னதம் என்று மிக அழகாய்ச் சொல்லியிருக்கிறார் செல்வகுமார்  SELVA SPEAKING என்ற தன் வலைத்தளத்தில்! 

2. அருமையான விழிப்புணர்வுப்பகிர்வை கயல் இங்கே தன் வலைத்தளம் THAMAASU வில்எழுதியிருக்கிறார்கள். இரத்த தானம் செய்வது பற்றி நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் உறை அணுக்கள் [பிளேட்லெட்ஸ்] தானம் செய்வதற்கான தேவை, அவசியம், அதைப்பற்றிய தெளிவான விளக்கம் என்று இவர் தெரிவித்திருக்கும் தகவல்கள் நாம் எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய அவசியமான தகவல் ஆகும்! அவசியம் படித்துப்பாருங்கள்!!

3. அடிசில் என்ற சுத்த தமிழில் இவர் தன் வலைத்தளத்திற்குப் பெயர் வைத்திருப்பது மிக அழகாக இருக்கிறது. பனை ஓலை கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதை இங்கே சுந்தரா விளக்கியிருக்கிறார். அபூர்வமான பலகாரம் இது! செய்து பாருங்கள்!

4. பனைமரக்காடே, பறவைகள் கூடே, மறுபடியும் ஒரு முறை பார்ப்போமா? 
இது ஒரு பாடலின் வரிகள் இல்லை!
புலம் பெயர்ந்த ஒரு மனிதனின் ஆழ்ந்த சோகத்தை, தன் நாட்டைப்பிரிந்து படும் மன வேதனையை ப்ரியா கதிரவன் மிகக் குறைந்த வரிகளிலேயே நம் மனதில் ஆழப்பதிக்கிறார் இங்கே!

5. THILLAIAKATHU CHRONICLES என்ற தன் வலைத்தளத்தில்இலக்கியம் கற்பித்தல் சுவைக்கும் கரும்புக்கு இணையானது என்று அனுபவித்துச் சொல்லியுள்ளார் துளசிதரன் ! கற்ற‌தையும் கற்பித்தலையும் மிக உயர்வாகச் சொன்ன விதம் மிக அழகானது. தனக்குக் கற்பித்த ஆசிரியருக்கு மகுடம் சூட்டியுள்ளார் இங்கே!

6. சரியான கழிப்பிடங்கள் இன்றி இன்றைய மனித சமூகம் படும் அவலங்களை மிக அருமையாக, மிகவும் பொறுப்புணர்வுடன் தளிர் சுரேஷ் இங்கே சொல்லியிருக்கும் விதம் மனதைப் பிசைகிறது. இந்த மாதிரியான விழிப்புணர்வு பதிவுகள் ஒரு சிலரையாவது மாற்றும் வல்லமையுடையது! இந்த மாதிரியான விழிப்புணர்வு பதிவுகள் வலைத்தளங்களில் அதிகம் வர வேண்டும்! சுரேஷ் அவர்களின் பணி தொடரட்டும்!

7. RUDYARD KIPLING எழுதிய கவிதகள் கல்லூரிப்பருவத்தில் நான் விழுந்து விழுந்து படித்தவை. ரசித்தவை. என் வண்ண‌ ஓவியங்களுக்கு அவரின் சில பொருத்தமான கவிதை வ‌ரிகளை தலைப்பாக எழுதும் பழக்கம் எனக்கிருந்தது. கால ஓட்டத்தில் அவரை நிறைய மறந்து போயிருந்த என்னை மாதவன் இளங்கோவின் இந்தப்பதிவு திரும்ப பழைய நினைவுகளுக்குக் கொண்டு சென்று விட்டது.  அவரின் மிக அழகான வரிகளை மாதவன் இளங்கோ தன் பதிவில் கையாண்டு ஏன் முதல் ஏடு வரை என்று அழகாய்ச் சொல்லியிருக்கிரார் அம்மாவின் தேன்குழல் என்ற தன் வலைத்தளத்தில்! . படித்துப்பாருங்கள்!

8. இதயச் சுவடுகள் ஸ்ரீசந்திரா இங்கு எழுதியிருப்பதுவும் ஒரு அருமையான விழிப்புணர்வுப்பதிவு தான்! தஞ்சை நெற்பயிர் நிலங்கள் மீத்தேன் வாயு எடுப்பதால் அடுத்த தலைமுறைகளுக்கு எப்படியெல்லாம் பாழ்பட்டுப்போகும் என்பதையும் மத்திய அரசின் இத்திட்டம்  மொட்டையடித்து விட்டு சீப்பு கொடுப்பது போல இருப்பதாகவும் சாடியிருக்கிறார். கை கொடுங்கள் ஸ்ரீசந்திரா! அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!!

9. சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாதாரண ஊழியனின் குரலை தன் ஒவ்வொரு பதிவிலும் தீர்க்கமாக வெளிப்படுத்துகிறார் ராமன்! உதாரணத்திற்கு சுனாமியின் போது தங்கள் குழுவினர் செய்த களப்பணிகள், அன்றைக்கு மனம் பட்ட பாடு அனைத்தும் மூன்று பதிவுகளாய் நம் இதயம் தொடுகிறது. சுனாமி அலைகளை நான் என்றுமே மறப்பதற்கில்லை. காரணம், அன்றைக்குத்தான் என் பிறந்த நாள். காலையில் தொலைக்காட்சியை பார்க்க ஆரம்பித்தது மட்டும் தான் தெரியும். அன்று இரவு வரை ஒவ்வொரு கணமும் மனிதர்களின் அழிவுகளும் அதைத்தொடர்ந்த ஓலங்களும் தொலைக்காட்சி வாயிலாக மனதைப்புரட்டிப்போட்டதை என்றுமே மறக்க இயலாது.

10. அருமையான விழிப்புணர்வு பதிவு! குப்பைகள் அகற்றி தன் பள்ளியை, அதன் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுவதில் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து வெற்றி பெற்ற‌ ஒரு ஆசிரியரின் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஒருங்கே இணைந்த குரல் இது! சாதாரண சாதனை அல்ல இது! கல்லாதது உலகளவு என்று என்று தன் வலைத்தளத்திற்கு பெயர் வைத்திருக்கிரார். கற்பிப்பது ஒரு ஆசிரியரின் பணி என்றால் அங்கே கல்வி கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல பழக்கங்களையும் நல்லொழுக்கத்தையும் கற்பிப்பதும்தான் ஆசிரியரின் கடமையாகிறது! அதை மிக அழகாய் செய்திருக்கும் இந்த நல்லாசிரியருக்கு ஒரு சல்யூட்!

11. உங்கள் அலைபேசியிலிருந்து எந்த செலவும் இல்லாமல் இந்தியாவில் யாருக்கும் அழைக்கலாம் என்று ரஞ்சித் சொல்கிறார். ஸ்மார்ட் ஃபோனில் கொசுவை விரட்டக்கூட புதிய அப்ளிகேஷன் இருக்கிறதாம்! நிறைய இது போன்ற புதிய தகவல்களை இவரின் வலைத்தளத்தில் பார்க்கலாம்!!

12. தன் வலைத்தளமான பிச்சைப்பாத்திரத்தில், நிச்சலனமாக உறங்கும் பச்சிளங்குழந்தையைப் பார்க்கையில் மனதில் அலகளாய்ப்புரண்டு வரும் சிந்தனைகளை உற‌ங்கும் துயரம் என்று தலைப்பிட்டு மிக அழகாய் இங்கு எழுதியிருக்கிரார் சுரேஷ் கண்ணன்!!!

50 comments:

  1. வணக்கம்
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் அளித்த தகவலுக்கு மிகவும் நன்றி, நண்பர் ரூபன். தொடரட்டும் உங்கள் பணி

      Delete
    2. வருகைக்கும் கருத்து8ரைக்கும் அன்பு நன்றி ரூபன்!

      Delete
  2. மோகன ராகம் கேட்டேன். அருமையான பாடல்களை ரசித்தேன். பதிவர்களைக் கண்டேன். இவர்களில் சிலர் முன்பே அறிமுகமானவர்கள். நாளை ஒரு ராகம் கேட்கத் தயாராக உள்ளோம்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் அளித்த தகவலுக்கு மிகவும் நன்றி ஐயா

      Delete
    2. வருகைக்கும் இனிய கருத்துரையும் அன்பார்ந்த நன்றி!

      Delete
  3. அருமையான பாடல்கள்.
    அறிமுகமான நண்பராகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சொக்கன் சுப்ரமண்யம்!

      Delete
  4. மோகனத்தில் எங்களுக்குத் தெரிந்த பாடல்களையும் சொல்லச் சந்தர்ப்பம் கொடுப்பதற்கு நன்றி. பத்ரகாலியில் வரும் 'கண்ணன் ஒரு கைக் குழந்தை' பாடலை நான் குறிப்பிடுகிறேன்!

    என்ன ஒரு அழகான ராகம். நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு பாடல்களும் - குறிப்பாக இரண்டாவது பாடலின் மீது பைத்தியமே உண்டு -அருமையான பாடல்கள்.

    வடநாட்டில் பூப் அல்லது பூபாளி = கபி கபி பாடல் இந்த ராகம்தானே?

    'தளிர்' சுரேஷ் தவிர மற்ற நண்பர்கள் புதியவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹலோ! நண்பரே! நாங்களும் புதியவர்களா?!!! மறந்து விட்டீர்களா? ஹஹஹஹ்......நாங்களும் அதில் இருக்கின்றோமே....எங்களுக்கே ஆச்சரியம்தான்.....மனோ சகோதரியும், திரு. ஜம்புலிங்கம் ஐயாவும், ரூபன் தம்பியும் எங்களுக்குத் தகவல் அனுப்பியிருந்தனர். நாங்களும் இருக்கின்றோம் என்று! ஆச்சரியம்!

      Delete
    2. நானும் முதலில் 'கண்ண‌ன் ஒரு கைக்குழந்தையை'த்தான் நினைத்தேன், ஆனால் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஹம்மிங், வயலின் இசையின் அழகு இரண்டும் 'கண்ண‌ன் ஒரு கைக்குழந்தை'யை பின்னுக்குத்தள்ளி விட்டது.

      வட இந்தியாவில் பூப் அல்லது பூபாளியை மோகனத்தின் சாயல் நிறைய இருப்பதாகக்கூறுகிறார்கள்!

      வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!

      Delete
    3. @துளசிதரன்ஜி!

      ஆஹா..... கவனிக்கவில்லைதான் நண்பரே.... மன்னிக்கவும்!

      Delete
  5. வலைச்சர வாசகர்கள் அனைவரையும் இசை மழையில் நனைய வைத்து விட்டீர்கள் மேடம்! தேர்வு செய்த ராகங்களும், பாடல்களும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. இனிய பாராட்டிற்கு மனம் நிறைந்த நன்றி!

      Delete
  6. பாடல்களை கேட்பதும், ராகத்தோடு தலையாட்டி ரசிப்பதும் ஒரு தனிசுகம்தான். அந்தவகையில் தங்களின் மோகன ராகத்தின் தொகுப்பு அருமை!. அதோடு எனது வலைப்பூவை பார்வையிட்டு அதில் விழிப்புணர்வு பற்றிய எனது பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சியோடு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்! மனோசாமிநாதன் அவர்களே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரீசந்திரா!

      Delete
  7. என்னுடைய வலைப்பக்கத்தை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி. துய்ரம் தோய்ந்த நினைவுகளுக்கு கொஞ்ச நேரம் சென்றாலும் லால்குடி ஜெயராமன் மோகனம் மூலம் மீட்டெடுத்து விட்டார்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் பதிவை ரசித்தற்கும் அன்பு நன்றி ராமன்!

      Delete
  8. என்றும் ரசிக்க வைக்கும் பாடல்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

      Delete
  9. முதலில் நன்றி உரைக்கின்றோம் திரு ஜம்புலிங்கம் ஐயாவிற்கும், ரூபன் தம்பிக்கும் தகவல் தந்தமைக்கு! சகோதரி தங்களுக்கும் மிக்க நன்றி எங்களையும் அறிமுகப்படலத்தில் இணைத்தற்கு. ஆச்சரியம் ஒரு புறம். மகிழ்ச்சி மற்றொருபுறம்.
    மிக்க மிக்க நன்றி! சகோதரி!

    இன்றைய ராகம் என்ன என்று அறியும் ஆவலில்தான் இருந்தோம். அதற்குள் இந்தத் தகவல்களும் வந்து விட உடனே வந்துவிட்டோம்.

    மோகனம் !!! என்ன மனதிற்கு இனிமையான ஒரு ராகம்! எந்தப் பாட்டுமே இந்த ராகத்தில் மிளிரும். வரவீணா ம்ருது பாணி...என்ற கீதத்திலிருந்து, இதோ இன்று 7 ஆம் அறிவு படத்தில் வரும் அந்தச் சீனப் பாடல் வரை.....

    60 ல் வந்த அந்தப் பாடலைக் கேட்டிருக்கின்றோம். அருமையான பாடல்...வீட்டில் மோகனக் கலெக்ஷனில் அதுவும் இருக்கின்றது.
    நீங்கள் பகிர்ந்திருக்கும் ராஜாவின் பாடல் பல முறை கேட்டாலும் அலுக்காத ஒன்று...அதே போன்று காதல் கோட்டையில் வரும் திரு தேவாவின் இசையில் ...வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா....பழைய பாடல்...நிலவும் மலரும் ஆடுது....

    லால்குடி மேதை! கல்பனா ஸ்வரம் ........ க...பா...லி...... சுகம் சுகம் .....ராக சுகம்....கண் மூடி மோகனம் மோன நிலையில்.....

    தளிர் சுரேஷ் தவிர மற்றவர்களை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி!

    மிக்க மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. அருமையாய் ரசித்து எழுதியிருக்கிறீர்கள்! மனம் கனிந்த நன்றி!

      Delete
  10. ’’நானொரு பொன்னோவியம் கண்டேன்!..’’

    இனிய மோகனம் போலவே - இன்றைய தொகுப்பும்!..

    அறிமுக நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. இனிமையான பாராட்டிற்கு அன்பு நன்றி!!

      Delete
  11. அருமையான பாடல்கள். பூவில் வண்டு மோதும் பாடல் மிகவும் பிடித்த ஒன்று....

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி!!

      Delete
  12. //அழகும் அன்பும் நிறைந்த இடத்தில இருப்பது மோஹனம். காமம், குரோதம், மோகம் போன்ற தீய எண்ணங்களை நீக்கி நன்மை தரும் ராகம். //

    அருமை ,,,, அழகு .... இனிமை .... ராகங்கள் தொடரட்டும் !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி!!

      Delete
  13. நன்றி திரு.மனோ சுவாமிநாதன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு அன்பு நன்றி!

      Delete
  14. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு அன்பு நன்றி!

      Delete
  15. மிக இனிமையான ராகம். அருமையான பாடல்கள் அக்கா. காதல் ஓவியப்பாடல் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.
    அறிமுகப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. ரசித்து, பாராட்டி எழுதியதற்கு அன்பு நன்றி பிரியசகி!

    ReplyDelete
  17. வணக்கம் இன்றைய சங்கீதம் மிகவும் அருமை கண்ணில் தெரியும் கதைகள் அனைத்து பாடல்களுமே அருமை இந்தப்படத்தில் மற்றொரு சிறப்பு இந்த திரைப்படத்திற்க்கு இசையமைப்பு இசை மேதைகள்.

    01. கே.வி.மகாதேவன்
    02. ஜி.கே.வெங்கடேஷ்
    03. அகத்தியர்
    04. இளையராஜா
    05. சங்கர்-கணேஷ்

    ஐந்து பேரும் என்பது குறிப்பிடத்தக்கது நான் மிகவும் விரும்பி கேட்டும் பாடல் நான் உன்னை நினைச்சேன் என்ற பாடலே.....
    ஐயா லால்குடி ஜெயராமன் வயலின் அசையாப் பொருளைக்கூட அசைத்து விடும் தன்மை கொண்டது.
    அடுத்தபாடலை நான் கேட்டிருக்கிறேன் அந்தப்படத்தின் பெயர் தெரியாது
    காதல் ஓவியம் பாடலும் அருமையே....

    இன்றைய அறிமுகங்கள் நண்பர்கள் - திரு. தில்லை அகத்தார் மற்றும் திரு.தளிர் சுரேஷ் அவர்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

    தமிழ் மணம் 4
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete
    Replies
    1. நான் உன்னை நினைச்சேன் பாடலும் அருமையான ஒன்று! ரசித்து எழுதியதற்கும் பாராட்டியதற்கும் அன்பு நன்றி!!

      Delete
  18. அந்தக்காலகட்டத்தில் இந்தப்பாடல் வானொலியில் ஒலிக்காத தினமே இல்லை. ராகங்கள் பற்றி எனக்கு அத்தனை அறிவு கிடையாது. என்றாலும் உங்கள் பதிவுகளால் ஓரளவு புரிதல் ஏற்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!

      Delete
  19. மனசை மயக்கியது மோகனம். தளிர் சுரேஷ், தில்லையகம் போன்ற என் நட்புகளுடன் சில புதியவர்களும் இன்று. அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி பாலகணேஷ்!

      Delete
  20. ராகங்களின் அறிமுகம் சூப்பர்...தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சமுத்ரா!

      Delete
  21. "லால்குடி ஜெயராமன் அவர்களது வயலின் எந்த ராகத்தைத் தொட்டாலும் மனதை உருக்கி எங்கோ சஞ்சரிக்க வைத்து விடும்."
    உண்மையம்மா!
    வயோதிக பருவத்தை
    வாலிப பருவமாக மாற்றி
    பருக பருக தெவிட்டாத தேனிசையினை
    செவிகளிலே புவி போற்றும் புனித இசையை கேட்டு இன்புற வைத்தமைக்கு
    நன்றியம்மா!

    இசை என்னும் மயக்கும் மாமருந்து
    ஆயுளைக் கூட்டி அகந்தையை அழிக்கும் அரு மருந்து!
    அருமை அம்மா!
    இன்றைய பதிவாளர்கள் புகழ் சிறக்க வாழ்த்துகிறேன்
    குறிப்பாக எனது வலையுலக ஆசான் அரும் பெருந்தகை
    "தில்லை அகத்தார் " அவர்களுக்கும், அன்பு நண்பர் " தளீர் சுரேஷ்"
    அவர்களுக்கும் அன்பார்ந்த வாழ்த்துக்கள்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  22. மோகன ராகத்தில் மூழ்கச்செய்தமையோடு பொறுப்பான சிறப்பான பதிவர்களோடு என்னையும் அறிமுகம் செய்து உற்சாக படுத்தியமைக்கு நன்றி! சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சுரேஷ்!

      Delete
  23. அருமையான பின்னூட்டத்திற்கு மனம் நிறைந்த நன்றி வேலு!

    ReplyDelete
  24. அருமையான கானங்களுடன் வலைப்பூ அறிமுகங்கள்.

    அனைவருக்கும் வாழ்த்துகள். சிறக்கட்டும் உங்கள் காண மழையுடன் கூடிய வலைப்பூ அறிமுகங்கள் !

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete

  25. 1961 ஆம் ஆண்டு வெளிவந்த மருத நாட்டு வீரன் என்ற திரைப்படத்தில் திரு S.V வெங்கடராமன் அவர்களின் இசையில் உருவான ‘பருவம் பார்த்து’ என்ற பாடலை திரும்பவும் இரசிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி!
    இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. அழகும் அன்பும் நிறைந்த இடத்தில இருப்பது மோஹனம். காமம், குரோதம், மோகம் போன்ற தீய எண்ணங்களை நீக்கி நன்மை தரும் ராகம். மிக அழகாக இசைக்கும் ராகம். //

    அழகாய் சொன்னீர்கள். பகிர்ந்த பாடல்கள் எல்லாம் மிக இனிமையாக இருக்கிறது. இன்று இடம்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது