07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, January 10, 2015

தில்லி ஸ்பெஷல் – 6



சரம்மூன்று! மலர்பதிமூன்று!


நேற்று வரை சுற்றுலா செல்லத் தகுந்த இடங்களைப் பார்த்தோமல்லவா! இன்று தில்லியில் கொண்டாடப்படும் பண்டிகைகள் சிலவற்றை பற்றிப் பார்க்கலாம். பல மாநிலத்தவர்கள் வசிப்பதால் அவரவர்களின் கலாச்சாரப்படி குடும்பத்தில் பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும், பொதுவாக வட இந்தியர்கள் தில்லியில் கொண்டாடும் பண்டிகைகள் சில


ஹோலி:-ஹோலி    என்றுவட இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகை, குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் ஆரம்பிக்கப் போகிறது என்ற அறிவிப்புடன் பொதுவாக மார்ச் மாதத்தில் வரும். நரகாசுரனை  கொன்ற நாளை எப்படி தீபாவளியாக கொண்டாடுகிறோமோ அதே மாதிரி ஹோலிகாஎன்ற அரக்கியை வதம் செய்த நாளைத்தான் அந்த அரக்கியின் பெயரிலேயே பண்டிகையாக சந்தோஷமாக கொண்டாடுகிறார்கள். .  . .     

இப்போதும் ஹோலிக்கு முதல் நாளான சோட்டி ஹோலி அன்று மாலை முச்சந்தியில் காய்ந்த சருகுகள், விராட்டி, விறகுகள் எல்லாவற்றையும் கோபுரமாக அமைத்து நூலால் கட்டி வெளியில் விளக்குகள் ஏற்றி வைத்து வணங்குவார்கள்.  பின்பு அதை எரித்து விடுவார்கள். சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக வண்ணங்களை ஒருவர் மீது மற்றவர் பூசி மகிழ்வர்.



ரக்ஷா பந்தன்:- ராக்கிப் பண்டிகை என்று சொல்லக்கூடிய ரக்ஷா பந்தன் சகோதரப் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய பண்டிகையாகும். ஆவணி மாத பெளர்ணமியில் வரும் இந்த பண்டிகையன்று ஒரு பெண்ணானவள் தன்னுடைய சகோதரர்களுக்கோ அல்லது சகோதரனாக நினைப்பவருக்கோ மஞ்சள் கயிறை கட்டி விடுவர். அந்த கயிறை கட்டிக் கொண்ட ஆணோ அந்த பெண்ணிற்கு பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் இருப்பேன் என்று உறுதி செய்து கொள்கிறான். ராக்கி கட்டி விட்ட சகோதரிக்கு பரிசுப்பொருளும் பணமும் தருவர்.



KARVA CHAUTH:- கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமியின் அடுத்த நான்காம் நாள் இந்த பண்டிகை வட இந்தியப் பெண்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தன் கணவனின் நீண்ட ஆயுளுக்காகவும், நலனுக்காகவும் காலை சூரியோதயம் முதல் மாலை சந்திரோயதம் வரை விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இரவு சந்திரனை சல்லடை வழியே பார்த்து விட்டு கணவனிடம் ஆசி பெற்ற பின்னரே விரதத்தை முடித்து உணவு உண்பர். எனக்கு பிடித்த பாடல் ஒன்று உங்களுக்காக.....




இது ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண்களால் KARVA CHAUTH எனவும், சட்டிஸ்கர், ஜார்கண்ட், பீகார், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண்களால் ”சத்” பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை ஒட்டி கண்ணாடி வளையல்கள் ரக வாரியாக கொட்டிக் கிடக்கும். ஒரு டஜன் 70லிருந்து 7000 வரை கூட விற்கப்படும்….:)


ராம் லீலா:- நவராத்திரியின் இறுதி நாளான விஜய தசமியன்று தீமையை நன்மை வெல்வதாக வட மாநிலங்களில் ராம் லீலா எனப்படுகிற ராவண வதம் சிறப்பாக கொண்டாடப்படும். ஆங்காங்கே மைதானத்தில் பட்டாசுகளால் ராவணனின் பொம்மை செய்யப்பட்டு அது எரிக்கப்படும்


வருடந்தோறும் இதே நாளன்று தில்லியில் ராம் லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில்  குடியரசுத் தலைவர், பிரதம மந்திரி ஆகியோர் கையால் அம்பு எய்யப்பட்டு ராவண வதம் நடைபெறும். ராவணனுடன், கும்பகர்ணன், இந்திரஜித் ஆகியோரும் ஒருவர் பின் ஒருவராக எரிக்கப்படுவர். வானிலும் வாண வேடிக்கை இடம்பெறும்.


ஹோலிப்பண்டிகை ஸ்பெஷல்:- இந்த பண்டிகையின் சிறப்பாக குஜியாஎன்ற இனிப்பை எல்லோரும் சாப்பிடுவார்கள். . நம்ம ஊர் சோமாசி மாதிரி தான். உள்ளே பூரணமாக பால்கோவாவுடன் முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, சோம்பு முதலியவற்றை சேர்த்திருப்பார்கள்


அதே போல் பாங்க்என்ற ஒருவகை கீரையை பாலிலோ, அல்லது பக்கோடா போன்றோ ஏதோ ஒரு வகையில் அன்றைய தினம் உணவில் சேர்த்துக் கொள்வார்கள். இந்தக் கீரையின் சிறப்பு என்னவென்றால் அதைச்  சாப்பிட்டவுடன் ஒன்று சிரித்துக் கொண்டே இருப்போம், அல்லது அழுது கொண்டே இருப்போம்  இதைப் பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்


அதே போல் பாப்பட்என்று சொல்லப்படும் மசாலா அப்பளத்தை சுட்டும் சாப்பிடுவார்கள்.


SHIKANJVI:- கோடைக் காலங்களில் வட மாநிலங்களில் அலுமினிய சம்படம் போன்று வண்டியில் வைத்துக் கொண்டு சிலர் காணப்படுவர். அவர்கள் தயாரித்து தரும் பானத்திற்கு பெயர் தான் SHIKANJVI. 

எலுமிச்சை சாறில், கருப்பு உப்பு, இஞ்சிச் சாறு, புதினா போன்றவை கலந்து ஐஸ் போட்டுத் தருவது தான் இது. அடிக்கிற வெய்யிலுக்கு புத்துணர்வை தரக்கூடியது.

படங்கள் உதவி - கூகிள்

ஜல்ஜீரா:- இதுவும் கோடையில் பருகப்படும் பானம். எலுமிச்சையுடன் சோம்பு, மிளகு, இஞ்சி, கறுப்பு உப்பு போன்றவை கலந்து தரப்படும்.

என்ன நட்புகளே! பண்டிகைகளையும், உணவுகளையும் தெரிந்து கொண்ட பிறகு இன்றைய அறிமுகங்கள் யாரென்று பார்க்கலாமா?

சொல்லுகிறேன் என்ற தன்னுடைய தளத்தில் மூத்த பதிவரான காமாட்சி அம்மா தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களையும், சமையலையும் கதையாக சொல்லுகிறார். இவரது மாலாடு ரெசிபியை பார்த்து செய்து பாருங்கள். அருமையாக வரும். நான் தீபாவளிக்கு இதைத் தான் செய்தேன்.

ரஞ்சனி நாராயணன் என்று தன்னுடைய பெயரிலேயே வலைத்தளம் வைத்திருக்கும் ரஞ்சனிம்மா ரசனையான எழுத்துக்கு சொந்தக்காரர். இவரின் அரியலூர் அடுக்கு தோசையை வாசித்திருக்கிறீர்களா?

துளசிதளத்தின் உரிமையாளர் துளசி டீச்சரை தெரியாதவங்க பதிவுலகில் மிகவும் குறைவு தான். நியூசிலாந்தில் வசிக்கும் இவர் உலகம் சுற்றுபவர். சமீபத்தில் இந்தியாவுக்கு வந்ததில் நான்கு வாரங்களில் மூன்று மாநிலங்களைச் சுற்றியுள்ளார். நாமும் அவரோடு சுற்றுவோமா? முதல் பகுதி இங்கே

நாச்சியார் தளத்தில் வல்லிம்மா இந்த மார்கழியின் சிறப்பாய் ஆண்டாள் அருளிய பாவைப் பாடல்களை அதன் அர்த்தத்துடன் பகிர்ந்து வருகிறார். ஒரு பாடல் உங்களுக்காக இங்கே

பாட்டி சொல்லும் கதைகள் என்ற தன்னுடைய தளத்தில் சிறுவர்களுக்கான நீதிக்கதைகளை பகிர்ந்து கொண்டு வருகிறார் ருக்மணி சேஷசாயி அம்மா. தற்போது 1961ல் கலைமகளில் வெளிவந்த தியாகச்சுடர் என்ற சரித்திர கதையொன்றை தொடராக பகிரத் துவங்கியுள்ளார்.

இந்த ஐவரில் காமாட்சி அம்மாவைத் தவிர மீதி நால்வரையும் நான் சந்தித்து உரையாடியிருக்கிறேன் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

நாளை நிஜமாகவே வலைச்சரத்திலிருந்து விடைபெறும் நாளாதலால் தில்லியின் வேறு சில விவரங்களையும், அறிமுகங்களையும் பார்க்கலாம்....:)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

10 comments:

  1. தில்லியில் கொண்டாடப்படும் பண்டிகைகளையும், உணவு வகைளையும் விரிவாக விளக்கியமைக்கு நன்றி! இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. கீரையின் சிறப்பு - அப்படியா...?

    சந்தித்த பதிவர்கள் உட்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இடங்கள் அறிமுகத்தைவிட பண்டிகைகள் அறிமுகம் மிக அருமையாக உள்ளது. அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அன்பு ஆதி,என் பெயரையும் வலைத்தளத்தில் ,சரப்பூவாக இணைத்ததற்கு மிக நன்றிமா. மற்றவர்கள் என்னைவிடச சிறந்த உழைப்பாளர்கள்.

    ReplyDelete
  5. வடஇந்தியப் பண்டிகைகள் சிறப்பாக இருக்கின்றன. ஒரேவண்ணமயம். கர்வாசௌத் விவரங்களும்,ஹோலிகா விவரமும் மிகக் சிறப்பு.

    ReplyDelete
  6. பண்டிகைகள் அறிமுகம் மிக அருமை ரசித்தேன்.

    ReplyDelete
  7. அன்பின் ஆதி வெங்கட்

    அருமையான பதிவு - அறிமுகங்கள் அத்தனையும் அருமை - அனைவருக்கும் வாழ்த்துகள். வட இந்தியப் பண்டிகைகள் தகவல்கள் அனைத்தும் நன்று.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  8. வட இந்தியாவின் பண்டிகையும் படங்களும் அருமை. சரத்தில் இடம்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அன்புப் பெண்ணே மூத்தபதிவர் என்ற முறையில் என்னையும் சரத்தில் தொடுத்தமைக்கு மிகவும் நன்றி.

    அன்பு யாராவது பொழிந்தால் கண்களில் நீர்கசிகிறது. அன்பின் மகத்துவம். உன்னோடு சுற்றுலா வந்ததில்
    தெரியாத சில பண்டிகைகளையும் அறிய முடிந்ததில் ஸந்தோஷம். தகவல்கள் மிக்க அழகாகக் கொடுத்திருக்கிறாய். நான் ஒரு வீட்டுப்பரவை. யாரையுமே ஸந்தித்ததில்லை. ஆனால் நெடுநாட்கள் பழக்கம்போல அவர்கள் மனம் நிறைந்து விடுகிரார்கள் அவர்களின் பதிவின் மூலம்.
    நீ அறிமுகப்படுத்திய எல்லோருக்கும் என் அன்பு மொழிகள்.. உன் ஆசிரியச் சேவையும் அபாரம். அன்புடன்

    ReplyDelete
  10. அன்புள்ள ஆதி,
    எனது பதிவையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி. தாமதமான வருகைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன். வடமாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகளையும், குளிர்பான வகைகளையும், இனிப்பு வகைகளையும் வண்ண வண்ணமாக புகைப்படங்களுடன் தந்து புதுவித வலைச்சரம் தொடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது