காதலிக்கும் பெண்ணுக்கு கடிதம் எழுதியிருக்கிறீர்களா?
➦➠ by:
கவிப்ரியன்,
வலைச்சரம்
நாம் மற்றவர்களுக்கு எழுதுகின்ற கடிதங்கள் கூட இலக்கியம்
ஆகுமா என்ன? பள்ளிப்
பருவத்தில் நூலகத்திலிருந்து நான் எடுத்துப்படித்த முனைவர் மு. வரதராசனார் அவர்களின் ‘நண்பர்க்கு’
என்ற நூல்தான் நான் முதலில் படித்த கடித இலக்கியம். அதன் பிறகு அன்புள்ள தம்பி… என்று
தொடங்கும் அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் பிரசித்தி பெற்றவை. இன்றும் தன் கழக உடன்பிறப்புக்களுக்கு
கடிதம் எழுதும் கலைஞரின் கடிதங்களும், எழுத்தாளர் ஞானி, திரு. மாலன், திரு. பாமரன்
ஆகியோர்களின் கடிதங்களும் நாம் அறிந்தவையே!
ஒத்த கருத்துடைய நண்பர்களுக்கும், பேனா
நண்பர்களுக்கு அரசியல், சமூகம், மனித உறவுகள்
குறித்து நான் எழுதிய
கடிதங்கள் ஏராளம். இப்போது அவைகள் மண்ணோடு மண்ணாகியிருக்கும். ஆனால் அந்த நண்பர்கள் எனக்கு
எழுதிய கடிதங்களை நான் இன்றுவரையிலும் பாதுகாத்து வைத்திருக்கிறேன். கடிதம் எழுதும்
கலையே மறக்கப்பட்டுவிட்ட நிலையில் எனக்கு வந்த அந்தப் பழைய கடிதங்களை எப்படியும்
பாதுகாக்க எண்ணி வலைப்பக்கத்தில் பதிவேற்றத் தொடங்கினேன்.
ஆனால் காதலிக்கும் பெண்ணுக்கு கடிதம் எழுதியதே இல்லை. தைரியமில்லாமல் இல்லை. வீணாக எதற்கு அவளுக்கு தர்ம சங்கடத்தைக் கொடுக்க வேண்டும் என்றுதான்! இப்படி பழைய
கடிதங்களை வெளியிடும்போது அதில்
ஒரு சங்கடம் இருந்தது. என்னை நம்பி எனக்காக எழுதப்பட்ட அந்தக் கடிதங்களை
அவர்களின் அனுமதியின்றி, அவர்களின் அல்லது
என் நிஜப்பெயரில் வெளியிடுவது சில சங்கடங்களைத் தரும் என்பதால் பெயர்களை
மாற்றி அந்தக்கால கடிதப் போக்குவரத்தை அப்படியே பதிவாக்க முடிவு செய்தேன்.
அந்தக்
கடிதப்பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது எனது சகோதரி செல்வி எனக்கெழுதிய
கடிதங்கள்,
மயிலாடுதுறையிலிருந்து எனது தோழி மாலா எழுதிய கடிதம்.
எனக்கு மிகவும் பிடித்த மறைந்த குமுதம்
ஆசிரியர் ஏ.எஸ்.பி. அவர்கள் தன் மகளுக்கு எழுதிய கடிதம் சந்தோஷமா
அப்பா! எக்காலத்துக்கும் பொருந்துவதாக இருக்கிறது. அதை
அவர் மகள் நினைவுகூர்ந்த விதமும் வியக்க வைக்கிறது.
அன்பில்லாதகணவனுக்கு… எனக்கு மிகவும் பிடித்த, பாதித்த கடிதம் என்பதால் வாசகர்களிடம் மீண்டும் இதை பகிர்ந்து
கொள்கிறேன். (வினவு தளத்திற்கு நன்றி) ஆண் என்ற அதிகாரத்தில் வாழும் ஆண்டைகளும்,
பெண் என்ற அடிமை
நிலையை ஏற்றுக்கொண்ட பெண்களும் அவசியம் படிக்கவேண்டிய அற்புதமான கடிதம்.
என்னுடைய ஒரு பதிவின் பின்னூட்டத்தில் திருமதி சாகம்பரி
அவர்கள் பின்வருமாறு
பின்னூட்டமிட்டிருந்தார். //ஒருவரிடம் நாம் வைத்திருக்கும் பிரியத்தை வெளிப்படுத்துவது உறவுகளை
மேன்மையடையச் செய்யும். எந்தவித தடையுமின்றி
தயக்கமுமின்றி நம்முடைய மென்மையான எதிர்ப்புக்களை
வெளிப்படுத்த கடிதங்கள் உதவுகின்றன.
தொலைபேசியில்
பேசுவது உணர்வுகளை காற்றில் கலந்துவிடச் செய்யும். ஆனால்
கடிதத்தின் உணர்வுகள் ஒவ்வொரு முறையும் அதை படிக்கும்போது உணர்வுகளை மீட்டெடுக்கும்\\ எழுதியிருந்தார்.
இப்போது
பாருங்கள் எல்லா கோபதாபங்களையும் நொடியில் கைப்பேசி வழியே கொட்டித்
தீர்த்து உறவுகளை சிக்கலாக்கிக் கொள்கிறோம். என்னதான் மின்னஞ்சல், முகநூல் என மாற்றுருவம் கொண்டாலும்
கடிதங்கள் காலத்தினால் மறக்க முடியாதது இல்லையா?
கவிஞர் மீரா பழனி அவர்களின் கடிதத்தினூடே காதலைப் பரிமாறிய
கவிதையைப் பாருங்கள்…
நீண்ட இடைவெளிக்குப் பின்
நிகழும் சந்திப்பு...
பகிர்ந்து கொள்ள
பல நினைவுகள் இருந்தும்
மௌனம் என்ற
நாகரிகப் பார்வையில்
நகர்ந்து கொண்டிருந்தது
நேரம்!
பிரிகையில்...
உன் குடும்பம் பற்றி
நீயும்
என் குடும்பம் பற்றி
நானும்
உப்புச்சப்புமில்லாமல்
பேசி முடிக்கையில...
தப்பித்தவறிக்கூட அந்த
பழைய பார்வையை
பார்க்கவே இல்லை
உன் கண்களில்.
எல்லாவற்றையும்
மறந்தது போல்
யதார்த்தமாய் பேசும் நீ!
பழகிய நாட்களில்
எனக்கு எழுதிய
பெயரற்ற கடிதங்களை
இனியும் நான்
பாதுகாத்து வைப்பதில்
பயனில்லை!
குப்பைக் கூடையில்
போடவேண்டும்!
சரி....
நீங்காமல் நெஞ்சில்
கிடக்கும்
பழைய நினைவுகளை
என்ன செய்வது?
இன்றைய அறிமுகங்கள் (மகளிர் மட்டும்);
தன்
காதலனுக்கு ஒரு பெண் இப்படி எல்லாம் கடிதம் எழுத முடியுமா என்ன? ஒரு போட்டிக்காக
எழுதப்பட்டது என்றாலும் இது நிஜமா, கற்பனையா என்று ஆராயாதீர்கள்
என்று ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறார் சுபத்ரா, சுபத்ரா பேசுறேன்
என்ற தன் வலைப்பக்கத்தில், வார்த்தைகள் தேவையா? என்ற கடிதத்தில். இன்னும் சுவாரஸ்யமான பதிவுகள் கொட்டிக் கிடக்கின்றன
இவரது பக்கத்தில்.
கடல் நுரைகளும் என் கவிதையும் என்ற பெயரில் வலைப்பூவை
வைத்திருக்கும் ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி பெண் பதிவர்களில் ஒரே நேரத்தில்
முகநூலிலும் பதிவுலகிலும் தொடர்ந்து இயங்குபவர். இவரது படைப்புக்களின் பட்டியலைப் பார்த்தாலே மயக்கம் வந்து
விடும். சுமங்கலி என்ற பதிவில் ‘’சுமங்கலி''யாகச்
செல்வது ரொம்ப முக்கியம் நம்மவர்களுக்கு! இதுபோன்ற சிந்தனையில் இருந்து என்றுதான்
விடுதலையோ.?’’ என்று
ஆதங்கப்படுகிறார்.
ஆணாதிக்கச் சிந்தனையில் இருந்து
ஆண்கள் விடுபடாத மாதிரியே,
பெண்களும் அடிமைச் சிந்தனையிலிருந்து விடுபட வேண்டும். சுமங்கலி, விதவை, மலடி போன்ற
வார்த்தைகள் அகராதியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
நினைத்தேன் எழுதுகிறேன் (MY DIARY) தளத்தில் தனது
அன்றாட நிகழ்வுகளை எளிமையாக பாசாங்கில்லாமல் பகிர்கிறார் மாலா வாசுதேவன்
அவர்கள். இவரது ‘அப்பாக்களின்செல்ல
மகள்கள்’ என்ற சுவாரஸ்யமான
பதிவைப் படித்துப் பாருங்கள்.
என்னால் இப்படி எழுத முடியவில்லையே என்ற ஏக்கத்தைத் தரும் எழுத்துக்கள்.
தி.பரமேஸ்வரி என்ற தன்
பெயரிலேயே வலைப்பதிவை வைத்திருக்கும் இவர் ஏனோ எழுதுவதை நிறுத்தி நாளாகிறது. தமிழிலக்கியத்தில்
முனைவர் பட்டம் பெற்றவர். சமூக
அக்கறை சார்ந்த இவரது படைப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக் கூடியவை. தீவிர
இலக்கியத்தில் ஈடுபாடுடைய அல்லது தொடர்ந்து எழுதக்கூடிய பெண்கள் மிகக்குறைவு. ‘தடம் பதிக்கும்
பெண்ணெழுத்து’ என்ற பதிவில் தனது
பார்வையை விரிவாக பகிர்ந்திருக்கிறார்.
தேர்வு எனும்
அகழி, கழிப்பறை காணாத
கல்விக்கூடங்கள் போன்ற பதிவுகளினூடாக நமது கல்வி அமைப்பையும் தேர்வு
முறைகளையும் மாற்றியமைக்க வேண்டியதின் தேவையை வலியுறுத்துகிறார்.
தற்கால நிகழ்வுகளை சுவாரஸ்யமாக பேச்சு வழக்கில் சரளமாகச் சொல்லிச் செல்கிறார் காயத்ரிதேவி. தன்னுடைய 'எண்ணில் உணர்ந்தவை'யில் தற்கொலைக் கதைகள் என்ற பதிவைப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.
பொங்கல் விடுமுறையில் கொஞ்சம் பொறுமையாக எழுதலாம் என்றுதான் இந்த தேதிகளில் வலைச்சரத்தில் பொறுப்பேற்க திட்டமிட்டேன். ஆனால் பாருங்கள் எல்லோருமே விடுமுறைக் கொண்டாட்டங்களில் இருக்கிறார்கள் போலிருக்கிறது. நம்ம பக்கத்துக்கு யாரையுமே காணோம். மீண்டும் சில பதிவர்களின் அறிமுகத்தோடு நாளை சந்திப்போம்.
அன்புடன்,
கவிப்ரியன்.
|
|
அனைத்தும் தொடரும் அருமையான தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..... தொடரட்டும் சிறப்பான அறிமுகங்கள்.
ReplyDeleteத.ம. +1
முதலிடம் மகளிர்க்கே!..
ReplyDeleteதங்களின் சிந்தனை நன்று.. இனிய தொகுப்பினை வழங்கிய தங்களுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்..
தொடர்ந்து கொண்டிருக்கின்றோம் ஊக்கமாய் தொடருங்கள் !
ReplyDeleteத ம 4
தங்களின் ஆசிரியப்பணிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருகும் வாழ்த்துக்கள்.
தம 5
தலைப்பும் அருமை! அழகான பதிவு! இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்! தொடருங்கள் அறிமுகங்களை!
ReplyDeleteஎங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
கடிதப் பதிவுகள் அருமை
ReplyDeleteபெண்மையை சிறப்பு செய்த மென்மை உள்ளமானது
ReplyDeleteதை மகளை வா! வா! என்றே அழைப்பது போல் இருந்தது
ஆசிரியரே!
"மகளீர் மகளீர் வாழ்க! வளர்க!
நன்றியுடன்,
புதுவை வேலு
மிக்க நன்றி புதுவை வேலு அவர்களே.
Deleteசக்திகளுடன் துவக்கம்.அமர்க்களம்.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி சேதுராமன் அனந்தகிருஷ்ணன் ஐயா.
Deleteநண்பர் கவிப்பிரியன் அவர்களின் அறிமுகத்தில் இன்றைய (மகளிர் மட்டும்) அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteஅன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
வருகைக்கு மிக்க நன்றி தேவகோட்டை கில்லர்ஜி அவர்களே.
Deleteமுதன்முதலில் ஆசிரியர் பொறுப்பு ஏற்றிருப்பதற்கும், மகளிரின் சிறப்பான பதிவுகளின் அறிமுகத்துக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்திற்கு மிக்க நன்றி கலையரசி அவர்களே.
Deleteவருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி வெங்கட் நாகராஜ் அவர்களே.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி துரை செல்வராஜ் அவர்களே.
ReplyDeleteநண்பர் பகவான்ஜி அவர்களே, தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி அவர்களே.
ReplyDeleteமிக்க நன்றி துளசிதரன் அவர்களே. தங்களுக்கும் எனது இதயங்கனிந்த உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி விஜய் பெரியசாமி அவர்களே.
ReplyDeleteதங்களது அறிமுகப்பதிவர்களைப் பற்றி அறிந்தேன். சிலர் தெரிந்தவர்கள். கவிதைகளை அதிகம் ரசித்தேன். பாராட்டுகள். நாளை சந்திப்போம்.
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி சோழ நாட்டில் பௌத்தம்.
Delete‘அப்பாக்களின்செல்ல மகள்கள்’
ReplyDeleteஅடே டே .. .இந்த தலைப்பை பார்த்தவுடனே ஓடி சென்று படித்தேன். ரெண்டு ராச்திக்களுக்கு நானும் அப்பா தானே ... என்னே ஒரு அருமையான பதிவு .
அது என்னமோ போங்க. என்னை பொறுத்தவரை ஒரு தந்தை - மகள் உறவை போல் மகிழ்ச்சியான உறவு வேறு எதுவுமே இல்லை என்று தான் சொல்வேன்.
அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் .
நானும் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை என்பதால்தான் அந்தப் பதிவு எனக்கு மிகவும் பிடித்தது விசு அவர்களே. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅறிமுகத்திற்கு மிக்க நன்றி சகோ.
ReplyDeleteநன்றி ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி அவர்களே.
ReplyDeleteஅருமையான முறையில் தொகுப்பித்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி தளிர் சுரேஷ் அவர்களே.
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=Q3LYWW92wBA
ReplyDeleteபுத்தம் புதிய குறும்பட ட்ரைலர் :- Tamil and English love horror comedy action short film trailer
மேலும் விபரங்களுக்கு Free Short films
தகவலுக்கு நன்றி அசோக்குமார்.
ReplyDelete:) சூப்பர்
ReplyDeleteநன்றி காயத்ரி தேவி.....
Delete