தில்லி ஸ்பெஷல் – 5
➦➠ by:
ஆதி வெங்கட்
சரம் – மூன்று! மலர் – பன்னிரெண்டு!
தில்லியில் பூந்தோட்டங்கள் நிறையவே உண்டு – முகலாயர் காலத்தில் அமைக்கப்பட்டதும், சமீப காலங்களில் அமைக்கப்பட்டதும் என நிறையவே உண்டு. ஒரு சில பூந்தோட்டங்கள் வருடம் முழுவதும் திறந்திருந்தாலும், ஜனாதிபதி மாளிகையில் இருக்கும் முகல் பூந்தோட்டம் வருடத்தின் சில நாட்களுக்கு மட்டுமே – அதாவது ஃபிப்ரவரி மார்ச் மாதத்தில் சில தினங்கள் மட்டுமே திறந்திருக்கும். அப்படி தில்லியில் இருக்கும் சில பூந்தோட்டங்கள் பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம்.
முகல் பூந்தோட்டம்:- குடியரசுத்தலைவர் மாளிகையினுள் உள்ள ஒரு அழகான தோட்டம். வருடத்தில் சுமார் ஒரு மாதம் தான் பொது மக்கள் அதைக் காண அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த தோட்டத்தில் பலவிதமான மலர்களைப் பார்த்து ரசிக்கலாம். 15 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த தோட்டம் முதலில் செவ்வக வடிவில் ஒரு தோட்டம், அப்பால் வட்ட வடிவில் ஒரு தோட்டம், பிறகு நீளமான [பர்தா] தோட்டம் என்று மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. ரோஜா, அல்லி, டேலியா, மூலிகைச் செடிகள் போன்ற பலவிதமான பூக்களை பலப்பல வண்ணங்களில் கண்டு, கவலை மறக்கலாம். பூக்களைத் தவிர மான்கள், முயல்கள் போன்ற விலங்குகளுடைய தரிசனமும் கிடைக்கும். “கேக்டஸ் மற்றும் போன்சாய் மரங்களும் இங்கே காணக்கிடைக்கும். மாளிகைத் தோட்டத்தில் என்ற தலைப்பில் என்னுடைய பக்கத்தில் மூன்று பாகங்களாக இங்கு சென்று வந்த அனுபவத்தை வாசிக்கலாம். நான் மிகவும் ரசித்த, கண்களுக்குக் குளிர்ச்சியூட்டும், மனதுக்கு மலர்ச்சியூட்டும் இந்தப்பூங்காவை ஒரு முறையேனும் எல்லோரும் பார்க்க வேண்டும்.
லோதி கார்டன்: லோ[DH]தி என்ற பெயர் கேட்டதும் – வரலாற்று புத்தகங்களில் இப்ராஹிம் லோதி, சிகந்தர் லோதி என்று படித்தது உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? அதே லோதிகள் காலத்திய ஒரு பூங்கா தான் இந்த லோதி கார்டன். இந்த பூங்காவிற்குள் மொஹம்மத் ஷா, இப்ராஹிம் லோதி, சிக்கந்தர் லோதி போன்ற பல மன்னர்களின் சமாதிகள் இங்கே அமைத்திருக்கிறார்கள். படா கும்பட், மசூதி, காவல் கோட்டைகள் என்று பழைய கால கட்டிடங்களும் இங்கே உண்டு. இன்னமும் அவை அழியாமல் காக்க அரசாங்கமும் INTACH நிறுவனமும் போராடி வருகிறார்கள். நான் இங்கு சென்றதில்லை எனினும் முழுத் தகவலும் தெரிந்து கொள்ள என்னவரின் இந்தப் பதிவினைப் பார்க்கலாமே! [அவருக்கும் ஒரு விளம்பரம்! :)]
Garden of Five Senses: தலைநகர் தில்லியில் இருக்கும் இன்னுமொரு பூங்கா இந்த Garden of Five Senses. சாதாரண நாட்களில் இங்கே காதலர் நடமாட்டமும் சேஷ்டைகளும் அதிகம் – அதனால் குடும்பத்துடன் – குறிப்பாக குழந்தைகளுடன் செல்வதை தவிர்ப்பது நல்லது. இங்கே சில சமயங்களில் Flower Show நடத்துவார்கள் – அந்த சமயங்களில் சென்றால் நிறைய வகையான பூக்களைப் பார்த்து மகிழலாம். தில்லி சுற்றுலா மற்றும் வளர்ச்சிக் கழகத்தினால் ஃபிப்ரவரி 2003-ஆம் வருடம் திறக்கப்பட்ட ஒரு அருமையான இடம். ஏறத்தாழ 20.5 ஏக்கர் பரப்பளவில் தில்லியின் மெஹ்ரோலி பகுதியில் உள்ள இப்பூங்கா நடை பாதைகளுடன் அழகான பகுதிகளாக பிரிக்கப்பட்டு நறுமணம் கமழும் பூச்செடிகள், மரங்கள் நடப்பட்டு, ஆங்காங்கே வண்ணமயமான நீரூற்றுகள் அமைக்கப்பட்டு உள்ளது. எவர் சில்வரால் செய்யப்பட்ட பிம்பங்கள் பாறைகளுக்கு நடுவே இருந்து எட்டிப் பார்க்கின்றன. அன்பர்கள் ஐம்புலன்களினாலும் மகிழும் விதமாக இது அமைக்கப்பட்டுள்ளது தான் பெயர்க் காரணம்! தினமும் காலை 08.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை திறந்து இருக்கும் இந்தப் பூங்காவுக்கு நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு 15 ரூபாயும், சிறுவர் முதியோர்களுக்கு 10 ரூபாயும்.. காண அரிதான ருத்ராக்ஷம், கடம்பம், கல்பவிருக்ஷம், கற்பூரம் போன்ற மரங்களை கண்டு மகிழவே ஒரு முறை இப்பூங்காவிற்கு சென்று வரலாம்! ஐம்புலன்களுக்கு விருந்து என்ற தலைப்பில் நானும் இதை எழுதியிருக்கிறேன்!
மிஷ்டி தோயி:- பால் விற்பனை நிலையங்களில் நீங்கள் இந்த மிஷ்டி தோயியை ருசிக்கலாம். இனிப்பு இடப்பட்ட தயிரைத் தான் பெங்காலியில் இந்த பெயர் சொல்லி அழைக்கிறார்கள்...:) அல்லது மண்பாண்டங்களில் லஸ்ஸி கிடைக்கும். நாங்கள் அப்போது 15 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறோம். நிஜமாகவே ஒரு பானை லஸ்ஸியை ஒருவரால் குடிக்க முடிந்ததில்லை...:)
படங்கள் உதவி - கூகிள்!
டோக்ளா:- இது ஒரு குஜராத்திய உணவு வகை. தில்லியில் நான் நிறைய முறை ருசித்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தமானது. எல்லா இனிப்புக் கடைகளிலும் கிடைக்கும். கடலைமாவில் தாளிதங்கள் செய்யப்பட்டு ஆவியில் வேகவைத்து, துண்டங்கள் போட்டு எலுமிச்சம்பழம் பிழிந்து தருவார்கள். அழுத்தினால் ஸ்பாஞ்ச் போன்று மிருதுவானதாக இருக்கும். இதையும் ஒருமுறையாவது நீங்கள் ருசித்து பார்க்கத் தான் வேண்டும்...:)
என்ன நண்பர்களே இன்றைய தில்லி ஸ்பெஷலில் சொன்ன சில இடங்களையும், உணவு வகைகளையும் அடுத்த தில்லி பயணத்தில் பார்த்து, ருசித்து விடுவீர்கள் தானே! சரி வலைச்சரத்தில் இன்றைய அறிமுகங்களைப் பார்க்கலாம்!
பரிமாணம் எனும் பல்சுவை தமிழ் இணைய இதழ் திரு சரவணன் மற்றும் அமர்நாத் ஆகிய இருவர் சேர்ந்து ஆரம்பித்திருக்கும் ஒரு தளம். இத்தளத்திலிருந்து ”மது மயக்கம் நீக்கி, மனிதத்துவம் வளர வழி சமைப்போம்”என்ற பதிவு இன்றைய அறிமுகப் பதிவுகளில் ஒன்றாக.
ஜீவநதி எனும் வலைத்தளத்தில் எழுதுகிறார் தங்கராசா ஜீவராஜ். இவரது பதிவுகளில் ஒன்றான வலிக்கும் வார்த்தைகள் இன்றைய அறிமுகப் பதிவாக..
பாலமகி பக்கங்கள் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார் மகேஷ்வரி பாலச்சந்திரன். ”புது வருட வரவேற்பு”எனும் அவருடைய பதிவொன்று இன்றைய அறிமுகப் பதிவாக!
மகேஷ் என்பவரின் வலைப்பூ - விழியின் ஓவியம் – நல்ல பெயர் வைத்திருக்கிறாரே! அவரது வலைப்பூவிலிருந்து மாதிரிக்கு ஒரு பதிவு – படிக்கும் வயதில் படிப்பை மட்டும் காதலி!
வா. மணிகண்டன் அவர்களின் வலைப்பூ – நிசப்தம். அவருடைய பல பதிவுகளிலிருந்து “வேறு என்ன வேலை?”எனும் பதிவு இன்றைய அறிமுகப் பதிவாக!
என்ன நண்பர்களே இன்றைய தில்லி ஸ்பெஷலில் வந்த விஷயங்களை ரசித்தீர்களா? நாளை வேறு சில இடங்களையும் வலைப்பதிவுகளையும் பார்க்கலாம்!
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்.
|
|
மலர்கள் ஆஹா...! ஒரு பானை லஸ்ஸி யம்மாடி...!
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ஒரு பானை என்றால் பெரியளவில் இல்லை. படத்தில் போட்டிருக்கு பாருங்க, அந்தப் பானை தான். ஆனா முழுசா சாப்பிட முடியாது. அவ்வளவு திகட்டும்....:)
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.
எல்லாமே அழகாய் அற்புதமாய் இருக்கிறது.டெல்லி குளிர் எப்படி இருக்கிறது
ReplyDeleteதில்லிக் குளிர் பகலில் 10 டிகிரியும், இரவில் 2 டிகிரியும் உள்ளன...:)
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கவியாழி சார்.
கண்ணுக்கு விருந்தாக பூந்தோட்டங்களின் படங்களையும், ருசிக்க முடியாவிட்டாலும் பார்த்து ரசிக்க ‘மிஷ்டி தோயி’ மற்றும் ‘டோக்ளா’ வையும் தந்தமைக்கு நன்றி. அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் தொடர் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நடனசபாபதி ஐயா.
Deleteபடங்கள் அனைத்தும் கொள்ளை அழகு.
ReplyDeleteஅறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
படங்கள் இணையத்திலிருந்து சுட்டது தான்...:))
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சொக்கன் சார்.
லோதி கார்டன் மட்டும் போயிருக்கேன். மற்றவைகளை உங்கள் பதிவின் வழி கண்டுகொண்டேன்:-)
ReplyDeleteதீனி..... நாட் ஃபார் மீ:(
நீங்கள் பார்க்காத இடங்களை காண்பித்ததில் மிக்க மகிழ்ச்சி டீச்சர்....:)
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி டீச்சர்.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
Deleteபடங்கள் அழகு...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி குமார் சார்.
Deleteமலர் பூங்காங்களுடன் பலகாரமும் தந்து பதிவர்களையும் அறிமுகம் செய்து அசத்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமலர் பூங்காங்களுடன் பலகாரமும் தந்து பதிவர்களையும் அறிமுகம் செய்து அசத்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதில்லி பூந்தோட்டங்களின் படங்கள் கொள்ளை அழகு.
ReplyDelete////////ஜீவநதி எனும் வலைத்தளத்தில் எழுதுகிறார் தங்கராசா ஜீவராஜ். இவரது பதிவுகளில் ஒன்றான வலிக்கும் வார்த்தைகள் இன்றைய அறிமுகப் பதிவாக..//////////
அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி..
அறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நட்புடன் ஜீவன்.
மலர் மயக்க மயங்க உணவு ஊட்டம், புதியவர்கள் கண்ணோட்டம் என சிறந்த தொகுப்பு .
ReplyDeleteவாழ்த்துக்கள்
புதுதில்லி பூந்தோட்டங்களுக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. புதிய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதில்லி பூந்தோட்டம் மிக அழகு. மீண்டும் வலைச்சர பொறுப்பு ஏற்று இருப்பதை இப்போதுதான் பார்த்தேன்.
ReplyDeleteஊருக்கு போய் விட்டதால் பார்க்க வில்லை. நேற்றுதான் ஊரிலிருந்து வந்தேன்.
பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
பூக்கள் அத்துனையும் மிக அழகு. பார்த்து ரசிக்க பல கோடி கண்கள் தேவைப்படும் அப்பத்தானே.
ReplyDeleteபூக்கள் அத்துனையும் மிக அழகு. பார்த்து ரசிக்க பல கோடி கண்கள் தேவைப்படும் அப்படித்தானே.அறிமுகம் அருமை. நன்றிகள் பல.
ReplyDelete