வலைச்சரத்தில் கவிப்ரியனாகிய நான்...
➦➠ by:
கவிப்பிரியன்,
மறக்க முடியாத நினைவுகள்,
வலைச்சரம்
அனைத்து வலைப்பூ உறவுகளுக்கும் எனது
முதற்கண் வணக்கம்.
வலைச்சரத்தின் இந்த வார (12.01.2015 – 17.01.2015) ஆசிரியர் பொறுப்பை முதன் முதலாக ஏற்றுள்ளேன். இந்த வாய்ப்பை எனக்களித்த வலைச்சர குழுமத்திற்கும் சீனா ஐயா அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் நாட்களில் எனக்குப் பிடித்த எத்தனையோ வலைத்தளங்களில் சிலவற்றை அறிமுகம் செய்ய உள்ளேன். அத்தளங்கள் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமாகியிருந்தாலும் மீண்டுமொரு முறை உங்கள் பார்வையை கொஞ்சம் திருப்பித்தான் பாருங்களேன். அதற்கு முன் என்னைப்பற்றியும் என் வலைத்தளம் மறக்க முடியாத நினைவுகள் பற்றியும் ஒரு சிறு அறிமுகம்
.
கவிப்ரியன் என்கிற புனைப்பெயரில் 2011 ம் ஆண்டிலிருந்து வலையுலகத்தில் இயங்கி வருகிறேன். நான் பிறந்து வளர்ந்தது வேலூர் மாவட்டம் இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோவிலுக்கு அருகில் ஒரு சின்னஞ்சிறிய கிராமம்.
வலைச்சரத்தின் இந்த வார (12.01.2015 – 17.01.2015) ஆசிரியர் பொறுப்பை முதன் முதலாக ஏற்றுள்ளேன். இந்த வாய்ப்பை எனக்களித்த வலைச்சர குழுமத்திற்கும் சீனா ஐயா அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் நாட்களில் எனக்குப் பிடித்த எத்தனையோ வலைத்தளங்களில் சிலவற்றை அறிமுகம் செய்ய உள்ளேன். அத்தளங்கள் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமாகியிருந்தாலும் மீண்டுமொரு முறை உங்கள் பார்வையை கொஞ்சம் திருப்பித்தான் பாருங்களேன். அதற்கு முன் என்னைப்பற்றியும் என் வலைத்தளம் மறக்க முடியாத நினைவுகள் பற்றியும் ஒரு சிறு அறிமுகம்
.
கவிப்ரியன் என்கிற புனைப்பெயரில் 2011 ம் ஆண்டிலிருந்து வலையுலகத்தில் இயங்கி வருகிறேன். நான் பிறந்து வளர்ந்தது வேலூர் மாவட்டம் இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோவிலுக்கு அருகில் ஒரு சின்னஞ்சிறிய கிராமம்.
பணி நிமித்தமாய் ஆரம்ப காலத்தில் பெங்களூருவிலும்
பின்னர் சென்னையிலும் அதன் பின்னர் வளைகுடா
நாடுகளில் ஒன்றான பஹ்ரைனிலும், ஐக்கிய அரபு எமிரேட்டிலும் சிறிது
காலம் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானிலும்
பணிபுரிந்து தாயகம் திரும்பி மறுபடியும் இந்திய மாநிலங்களில் மாற்றி மாற்றி பணி புரிந்து
கொண்டிருக்கிறேன். தற்சமயம் இருப்பது ஒடிஸா மாநிலத்தில்.
எழுதுவதற்கு இன்னும் எனக்கு பயிற்சி போதவில்லை
என்பதை ஒத்துக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. எழுதுவதை
விடவும் வாசிப்பே எனக்கு சுகானுபவமாக இருக்கிறது. என்னுடைய ஓய்வு
நேரங்கள் எல்லாம் இப்படி வாசிப்பிலேயே கழிந்து விடுவதால் எழுதுவதற்கென்று நேரத்தை ஒதுக்கவே
முடிவதில்லை. ஆனாலும் என்னுடைய மறக்க முடியாத பல நிகழ்வுகளை பதிவு
செய்ய ஆசைப்பட்டதன் விளைவுதான் இந்த ‘மறக்க
முடியாத நினைவுகள்’.
வலைச்சரத்திற்கும் எனது பதிவிற்குமான தொடர்பு 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் தேதியன்று மகிழம்பூச்சரம் தளத்தின் திருமதி சாகம்பரி அவர்களின் அறிமுகத்தின் மூலம்தான் முதலில் தொடங்கியது.
பின்னர், உஷா அன்பரசு வேலூர் வலைப்பூவிற்குச் சொந்தக்காரரான திருமதி.
உஷா அன்பரசு அவர்களால் 2012 டிசம்பரில் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டேன். அடுத்து 2013 நவம்பரில் இனியவை கூறல் தளத்தின் கலாகுமரன் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டேன்.
அதன் பிறகு தேவியர் இல்லம் திருப்பூர் தளத்தின் திரு. ஜோதிஜி அவர்களால் 2013 ஜனவரியில் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப்பட்டேன். சமூகச்சிந்தனையோடு மனித வாழ்வியலின் அபத்தங்களையும், அனுபவங்களையும் தான் சார்ந்த தொழிலோடு தொடர்பு படுத்தி எழுத்தாக்கும் ஆற்றல் மிக்க ஜோதிஜி அவர்கள்தான் நான் தொடர்ந்து எழுத ஊக்கம் கொடுப்பவர். ஜோதிஜி அவர்களின் விருப்பதிற்கிணங்க ‘ஒடிஸா வாழ் அனுபவங்களை’ அவ்வப்போது எழுதி வருகிறேன்.
இப்போது முதல் முறையாக வலைச்சரத்தில் பங்கேற்க வந்திருக்கிறேன். கடந்த நவம்பர் 2014-ல் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க சீனா ஐயாவிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனாலும் பணிச்சூழல் காரணமாக அப்போது முடியவில்லை. இப்போது வந்தேவிட்டேன்.
நான் எழுதிய பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தவற்றை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்.
எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் குறித்து நான் எழுதிய பதிவு...
நான் எழுதிய கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தவை
ஒடிஸாவில் கடந்த 2013-ம் வருடம் ஃபைலின் புயல் அனுபவங்கள் குறித்து நான் எழுதிய பதிவு...
எனது கடந்த கால நினைவுகளின் ஒரு பகுதி...
நண்பர் ஜோதிஜி அவர்களின் டாலர் நகரம் குறித்த எனது விமர்சனம்...
எனக்கு தமிழ் கற்பித்த தமிழாசிரியர்கள் குறித்த பதிவு...
மறக்கமுடியாத தமிழாசிரியர்கள்
மீண்டும் நாளை வலைச்சரத்தில் சில அறிமுகங்களோடு உங்களைச் சந்திக்கிறேன்.
நட்புடன்,
கவிப்ரியன்
மீண்டும் நாளை வலைச்சரத்தில் சில அறிமுகங்களோடு உங்களைச் சந்திக்கிறேன்.
நட்புடன்,
கவிப்ரியன்
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteபஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சூடானில் பணிபுரிந்த அனுபவங்களுடன் தற்சமயம் ஒடிசாவில் பணியாற்றிவருகிறீர்கள். இத்தனை நாடுகளின், மற்றும் இடங்களின் அனுபவங்களைக் கொஞ்சம் சுவாரஸ்யத்துடன் எழுதினாலே போதும். ஆனாலும் 'எழுதுவதற்கு இன்னும் பயிற்சி போதவில்லை' என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறீர்கள். இதனைப் பணிவு என்று எடுத்துக்கொள்வதைக் காட்டிலும் இப்படிச் சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டியிருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். வலைச்சரம் பொறுப்பை சிறப்பாக முடியுங்கள், வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் கருத்திற்கு மிக்க நன்றி அமுதவன் ஐயா. எழுத்தும் ஒரு தவம்தான். நானும் எழுதுகிறேன் என்று சொல்வதைக்காட்டிலும், இவர் நன்றாக எழுதுகிறார் என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதில்தானே பெருமை இருக்கிறது! வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
ReplyDeleteநண்பர் கவிப்பிரியன் அவர்களின் அறிமுகத்துடன் இன்றைய அறிமுகங்களும் நன்று வாழ்த்துகள்
ReplyDeleteஅன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தேவகோட்டை கில்லர்ஜி அவர்களே.
ReplyDeleteஇன்றைய அறிமுக அன்பர்கள் அனைவருக்கும்
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்!
வலைச்சரம் ஆசிரியர் கவிப்ரியன் அவர்களது
எழுத்தோவியம் எழுச்சியுடன் எழில் நிறைந்து
காணப்படுகின்றது.
புதுவை வேலு
நன்றி புதுவை வேலு அவர்களே.
ReplyDelete//எழுதுவதற்கு இன்னும் எனக்கு பயிற்சி போதவில்லை என்பதை ஒத்துக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.//
ReplyDeleteநீரில் துள்ளிக் குதித்து விளையாடும் மீன் -
எனக்கு நீந்தத் தெரியவில்லை என்பதைப் போலிருக்கின்றது!..
வளமும் நலமும் பெற்று வாழ்க!..
தற்புகழ்ச்சி இல்லை, துரை செல்வராஜ் அவர்களே. உண்மையைத்தான் சொன்னேன். தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஉங்களது அனுபவங்கள் தற்போது உங்கள் எழுத்துக்கு துணை நிற்கும் என நம்புகிறேன். தங்களின் அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteசோழ நாட்டில் பௌத்தம் தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி.
Delete