07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 15, 2015

சென்று வருக காயத்ரி தேவி அவர்களே ! வருக ! வருக ! யாதவன் நம்பி அவர்களே !

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்று பல பதிவர்களையும் அவர்களது பதிவுகளையும் அறிமுகப்படுத்திய என்னில் உணர்ந்தவை வலைப்பதிவர் காயத்ரி தேவி அவர்களைப் பாராட்டி வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 
அவர் தனது வலைச்சர வாரத்தில் எட்டு இடுகைகள் பகிர்ந்து சுமார் 200 மறுமொழிகளும், 1700க்கு மேற்பட்ட பக்கப்பார்வைகளும் பெற்றுள்ளார்.
                                                          
தனது வலைச்சர வாரத்தை அழகாக தொடுத்த காயத்ரி தேவி அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க பிரான்ஸில் வசிக்கும் அருமை நண்பர் யாதவன் நம்பி என்கிற இரா.வேலு அவர்கள் அன்புடன் இசைந்துள்ளார். இவரது வலைப்பூ குழல் இன்னிசை என்பதாகும்.
அவரைப் பற்றிய ஒரு அறிமுகம் :
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த மண், ஆன்மீகப் புருஷர் அரவிந்தர் வாழ்ந்த மண், தேசியக் கவி பாரதிக்கு அடைக்கலம் அருளிய மண்
ஆம் புதுவை என்கிற புதுச்சேரி மாநிலம் தான் இரா.வேலு, ஆகிய யாதவன் நம்பி பிறந்து வளர்ந்தது. .
இவரது தந்தையார் பெயர் : அமரர். தியாகி. கே.இராமச்சந்திரன்,
இவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதுவை மாநில முன்னாள் தலைவர் மற்றும், AI INTUC (All Indian trade union congress ) யினைச் சார்ந்த முன்னாள் இணைச் செயலாளர்.
இவரது கல்வித் தகுதி : M.A. B.Ed., PGDJMC., ( post graduate diploma in Journalism and Mass Communication ).
இவர் படித்த கல்லூரி : தாகூர் கலைக் கல்லூரி, புதுவை.
ஆற்றும் பணிகள் : புதுவை அருங்காட்சியகத்தினுள் செயல்பட்டு வந்த வரலாற்றுச் சங்கத்தின் (The Historical Sosiety of ondicherry) மேலாளர்.

INTACH (Indian National Trust for Art and Cultural Heritage -Pondicherry) யின் சுருக்கெழுத்தாளார்.

புதுவை கல்வித் துறையின் முறை சாரா கல்வித் திட்டத்தின் பகுதி நேர ஆசிரியர்.

"தினமலர் " நாளிதழில் எடிட்டோரியல் மற்றும் விளம்பரம் பிரிவில் பணி.

பிறகு குடும்ப சூழ்நிலையின் காரணமாக பிரான்சு தேசத்தில் குடியேற்றம் (1995)

இவரது மனைவியின் பெயர் இராஜலட்சுமி வேலு

இவரது மனைவி ஒரு பள்ளி ஆசிரியை.

இவர்களுக்குப் பிள்ளைகள் மூவர்.

தகுதி நிலை:
புதுவை அகில இந்திய வானொலி நிலையத்தின் நிலைய நாடகக் கலைஞர் (vocal)

புதுவை ஆனந்தா ஆர்ட்ஸ் அகாடமி நாடக சபையின், பொறுப்பாளர்.

புதுவை இளம் எழுத்தாளார் சங்கத்தின் துணைத் தலைவர்.

பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் அவர்கள் இதன் தலைவர்.

இவரது சாதனை :
புதுவை இளைஞர் விடுதியின் சார்பில் தேசிய ஒருமைப் பாட்டினை வலியுறுத்தி, புதுவையிலிருந்து புது தில்லி வரை (2300 km) மிதி வண்டிப் பயணம் (Cycle Tour) கல்லூரி மாணவர்கள் 9 பேருடன் வெற்றியுடன் சென்று திரும்பி வந்து மத்திய / மாநில அரசுகளின் பாராட்டினைப் பெற்றது.

பத்திரிகைகள் இவ்வரிய செயலைப் பாராட்டி புகைப் படத்துடன் செய்தி வெளியிட்டது குறிப்பிடத் தக்கது.

புதுவையில் உள்ள அகில இந்திய பாரதிராஜா ரசிகர் நற்பணி மன்றத்தின் பொருளாளர்.

யாதவன் நம்பி அவர்களை வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி "வருக.... வருக.." என வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நல்வாழ்த்துக்கள் காயத்ரி தேவி...
நல்வாழ்த்துக்கள் யாதவன் நம்பி....

நட்புடன் சீனா...

23 comments:

  1. Replies
    1. சோதனை மறுமொழி
      சாதனை செய்வதற்கு வழி செய்யட்டும்
      நன்றி தமிழ்வாசி பிரகாஷ் அய்யா அவர்களே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  2. From
    கோடரி.
    To
    குழனின்னிசை.

    புதுவை வேந்தனே வருக....
    புதுக் கவிதை தருக....
    சிவப்பு கம்பளத்தில் கோடரியால் பறித்தெடுத்த மஞ்சள் பூக்கள் பரத்தி வெள்ளை மனதுடன் வரவேற்கிறேன்.

    கடந்த வார ஆசிரியர் செல்வி. காயத்ரி தேவி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. பூப்பறிக்க கோடரி எதற்கு? நண்பரே!
      வெள்ளை மனதோடு தும்பைப் பூவினை பறித்து வந்து
      பாராட்டியமைக்கு மிக்க நன்றி கில்லர்ஜி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  3. நல்வரவு ஐயா...நீங்களும் புதுவையா,நானும் தான் சந்தோஷமா இருக்கு நாமிருவரும் ஒரே ஊர் என்பதில்..

    ReplyDelete
    Replies
    1. தங்களது சிறப்பால் பெருமை அடைந்தது புதுவை.
      தங்களது பணியினை தொடர்ந்து தற்போது நானும்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  4. வாய்ப்பினை தந்த நல்லுள்ளங்களுக்கு நன்றி!
    வலைச்சரம் என்னும் புகழ் மேகங்கள் சூழ்ந்த, பரந்த வானத்தில் வட்டமடிக்க வருகிறது
    குழலின்னிசை. வாழ்த்தி வழி நடத்த வேண்டுகிறேன்.
    நன்றி! நன்றி! நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. வணக்கம்!
    என்னை பற்றிய அறிமுக குறிப்பில் எனது தந்தையாரை பற்றி குறிப்பிடுகையில்

    இவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதுவை மாநில முன்னாள் தலைவர் என்று உள்ளது. இதில் ஒரு திருத்தம்.
    அமரர். தியாகி கே.இராமச்சந்திரன்,

    இவர் அகில இந்திய காங்கிரஸ் (S) கட்சியின்,

    புதுவை மாநில முன்னாள் தலைவர் என்பதே சரியாகும்.

    திருத்தம் செய்து படிக்க வேண்டுகிறேன்.

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  7. வலைச்சரம் ஆசிரியர் பணியை சிறப்பாக செய்து விடைபெற்றுச் செல்லும் சகோதரி காயத்ரி தேவி அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    நாளை முதல் வலைச்சரம் ஆசிரியர் பணி பொறுப்பேற்க வரும் சகோதரர் யாதவன் நம்பி (புதுவை இரா.வேலு) அவர்களை வருக! வருக! கருத்துக்களை அள்ளித் தருக என்று அன்புடன் வரவேற்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள அய்யா!
      தங்களது பெயரில் தமிழ் (இளங்கோ) இணந்திருக்க
      அந்த அற்புத தமிழை கொஞ்சம் கிள்ளி தந்தால் மனம் மகிழ்வுறுவேன்.
      அள்ளித் தர வந்தமைக்கு மிக்க நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  8. Replies
    1. இனிய துவக்கம் இனிதே நிகழ வாழ்த்த வந்தமைக்கு மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  9. பணி நிறைவு செய்த காயத்ரி தேவி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்..
    பணியேற்க வரும் யாதவன் நம்பி அவர்களுக்கு நல்வரவு!..

    நண்பர் யாதவன் நம்பி அவர்களே வருக.. வருக!..
    நாளும் நற்றமிழ் கவிதை மழை பொழிக.. பொழிக!..

    ReplyDelete
    Replies
    1. ஆன்மீக நிலவாய் அழகுற வலைவானில் வலம் வரும் துரை செல்வராஜூ அய்யாவே!
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன். நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  10. கலக்கிச் சென்ற சகோதரருக்கும்.... கலக்க வரும் சகோதரருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. பரிவட்டம் கட்டி பாராட்டு செலுத்தும் படைப்புகளுக்கு சொந்தக்காரரே!
    நண்பர் பரிவை சே.குமார் அவர்களே!
    வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன். நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  12. வணக்கம்
    ஐயா

    தங்களின் சுய விபரத்தை பார்த்தேன் மகிக்க மகிழ்ச்சியாக உள்ளது... இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு வளர்த் தமிழ் நன்றி கவிஞரே!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Delete
  13. உங்களை பற்றிய குறுந்தகவலில் பேராசிரியர் ராஜன், பிரான்சில் செய்யும் தொண்டு, மற்றும் உங்கள் மகள்களுக்கு தமிழ், இசை, நாட்டியம் போன்ற தமிழ் பித்தை ஏன் சொல்ல வில்லை ? அடுத்த தலைமுறை தமிழ் கலை பயணம் சிறப்புதானே புதுவை வேலு அவர்களே ? வாழ்த்துக்கள்.

    sattia vingadassamy

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அன்பின்மிகு சத்தியா அவர்களே!
      அறிமுக குறிப்பு குறுந்தொகை வடிவம் போன்று
      குறுகிய தொகை போன்ற செய்திகளை உள்ளடக்கி இருந்தால் போதுமென நினைத்தேன்.
      இருப்பினும் ,நீங்கள் குறிப்பிட்டது போன்று "தாகூர் கலைக் கல்லூரி "முன்னாள் முதல்வர் பற்றி குறிப்பிடாமல் விட்டது தவறுதான் நண்பரே!
      கல்லூரியில் N.S.S இல் இருந்தபோது எனது இலக்கிய ஆர்வத்திற்கு அமுதமாய் நின்று
      ஆசி வழங்கி ஆதரவுக் கரம் நீட்டியது அய்யாவின் கை.

      புது தில்லி மிதி வண்டி பயணத்தின் ஒருங்கிணைப்பாளரே அவர்தான் நண்பரே!

      மேலும் சென்ற வருடம் பாரிஸ் (பிரான்சு) வந்தபோது, என்னை தேடி எனது வீட்டிற்கு வந்து நலம் விசாரித்து விட்டு சென்ற அவரது பண்பினை எண்ணி மனம் மகிழ்கின்றேன்! எனது தமிழ் பணி குறித்தும்,
      பிள்ளைகளின் தமிழ் ஆர்வம் குறித்தும் நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி! நண்பரே!

      அய்யா விருது பெற்றபோது அவருக்கு நான் எழுதிய கவிதையை
      இங்கே இந்த வேளையில் நினைவூட்டுகிறேன்!

      சேவையே உன்னை சேவிக்கிறோம்


      இன்பத் தமிழ் இனிதுவந் தளித்த எனது

      வண்புதுவை பேராசிரியரே எ.மு.ராஜனே

      பண்முகக் கலையின் பொக்கிஷம் - நீ!

      விண்புகழ் தொட்டு விருதினைப் பெற்றாய் வாழி!


      நாடு விட்டு நாடு பறந்துவந்த பறவையின்

      கூடு சென்று புகழுரைத்தாய் புகழ்மணியே வாழி!

      தேடிய தெய்வத் தமிழ் ஈந்திடும் இறவாப் புகழ்

      சூடிய உன்னை போற்றுகிறோம் சாதனையாளரே வாழி!


      பூபாளம் இசைத்தபடி நேபாளம் அழைத்ததடி!

      உலகம் உனக்கு விருதுபொட்டு வைத்ததடி

      மரம் இல்லாத காடுகளில் உன் தொண்டு

      வானுயர்ந்த சோலைக்கு சேலைதனை கட்டுதடி!


      நாதனை நினைத்தபடி நாயகனை போற்றுகிறோம்

      "தினமும் முப்பது மணி நேரம்" செலவோடு


      சேவையே உன்னை சேவிக்கிறோம்-விருதுக்கு

      விருந்து படைத்து திரும்பி வருக! வாழ்க!

      புதுவை வேலு

      Delete
  14. வலைச்சர ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள்.
    தங்களுக்கு நாடகத்தின் மேல் இருக்கும் ஈர்ப்பை கண்டு மகிழ்ச்சியாக இருக்க்ரியாது நண்பரே.

    ReplyDelete
  15. ஆஹா வாழ்த்துகள் சகோ...புதுவை தியாகராஜா வீதியில் உள்ள என் தாத்தா குமரகுரு ஆசிரியர் அவர்களின் வீட்டிற்கு விடுமுறைக்குச்செல்வதுண்டு.தற்பொழுது அவர்மகள் உமாதேவி ரேணுகா திரையரங்கு உள்ள வீதியில் இருக்கிறார்கள் .அவர்களும் பிரஞ்ச் குடியுரிமைப்பெற்றவர்கள்...நீங்களும் புதுவை என்பதில் தனிப்பாசம் உண்டு

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது