07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 21, 2015

இன்றே இப்படம் கடைசி!

இரண்டு வாரங்கள் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணியிருந்தேன். அதனால் தான் ஒரு நாளைக்கு நான்கு ஐந்து என குறைவான பதிவர்களை மட்டும் அறிமுகப்படுத்தினேன். நேற்றைக்குத்தான் தமிழ்வாசியிடம் கேட்டேன், இன்னொரு வாரம் எழுத அனுமதிக்க முடியுமா என்று. ஆனால் அடுத்த வாரத்துக்கான பதிவருக்கு அழைப்பு விடுத்தாயிற்றென்று கூறிவிட்டார். அதை விட அருமை அடுத்த ஆசிரியரின் ஏழு பதிவுகள் டிராப்டில் இருக்கின்றன. முதல் பதிவே அட்டகாசம்.

இன்றைய அறிமுகங்கள்:

பதிவர் ஜெய்லானி நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியிருக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு. இப்போது எழுதுவதில்லை. சுவாரஸ்யமாக பதிவுகளை எழுதியவர் இப்போது ஏன் எழுதவில்லையென்று தெரியவில்லை. மீண்டும் எழுதுங்கள் சார்.

கடைசிப் பதிவு - காய்கறி

ஸ்பெஷல் ஜூஸ்


பாண்டியன் பக்கங்கள் என்னும் தளத்தில் எழுதும் நண்பர் பாண்டியராஜ் இலக்கியங்கள் அதிகம் படித்திருக்கவேண்டும். அவருடைய எழுத்து நடையிலேயே தெரிகிறது. பதாகை பக்கிரிகள் என்னும் பதிவு என்னை ஈர்த்தது. பொறியியலில் எந்தப் படிப்பு சிறந்தது? என்னும் பதிவு நம்மையும் யோசிக்க வைக்கிறது. நன்றாக எழுதக்கூடிய இவருடைய தளத்தில் பக்கப் பார்வைகள் குறைவாகவே இருக்கின்றது. நாம் தான் உற்சாகப் படுத்த வேண்டும்.

உங்களுக்கு சேக்காளி என்றொரு பதிவர் இருப்பது தெரியுமா? எனக்குத் தெரியாது. இவருடைய பின்னூட்டங்களைப் பார்த்திருக்கிறேன். பலருடைய பதிவுகளையும் படிப்பவர். நீங்கள் ஏதாவது தளத்தில் நல்ல பின்னூட்டம் இட்டிருந்தால் அங்கே ஒரு 'டிக்' போட்டுவிட்டுப் போவார். இவருடைய பதிவுகள்:

நொந்த நூடுல்ஸ்

டச் ஸ்கின்



ஜே தா என்னும் பதிவர் இலங்கையைச் சேர்ந்தவர். பள்ளி ஆசிரியர். இவரது மாணவர்கள் சேர்ந்து எடுத்த குறும்படத்தைப் பற்றி சிலாகித்துச் சொல்கிறார்:

இப்பிடி நடக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல்ல

உண்மையாயிருத்தல்

சென்னையைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் முகநூலில் எனக்கு நண்பர். ஓரிரு முறை போனில் பேசியிருக்கிறேன். இவர் பதிவர் என்பது இப்போது தான் தெரியும். இவர் எழுதிய பதிவுகள்:

காற்று - புரட்சி

குடும்பத் தலைவிகளின் குமுறல்




ஓரளவுக்கு அதிகம் அறியப்படாத பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். மீண்டும் வலைச்சர ஆசிரியர் பொறுப்பு கிடைத்தால் இன்னும் நிறைய பேரை அறிமுகப்படுத்துகிறேன்.

நன்றி.

11 comments:

  1. ரைட்டு... விரைவில் உங்கள் எண்ணம் நிறைவேறட்டும்...

    அறிந்த அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. இன்றைய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    த ம 4

    ReplyDelete
  3. சீக்கிரமேவ வலைச்சர ஆசிரியர் பிராப்தி திரும்ப ரஸ்து. வாரம் பூரா நல்லாத் தான் செயல்பட்டிருக்கே ஸ்.பை. திருப்தியுடன் விடைபெறுக. நல்லறிமுகங்களுக்கு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. இப்படம் இன்றே கடைசி!
    யார் சொன்னது இது போன்ற மக்களின் பேராதராவை பெற்ற படங்கள்
    எத்தனை முறை வெளியிட்டாலும், வரவேற்பை பெற்றேத் தீரும்!
    மீண்டும் புத்தம் புதிய வண்ணத்தில் நண்பர் கார்த்திக் சரவணன் எண்ணத்தில்
    வெளி வர வாழ்த்துகிறேன்!
    நன்றி!
    த ம 5
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  5. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
    மீண்டும் வந்து கலக்குங்கள் சகோ...தங்கள் ஆசை விரைவில் நிறைவேறட்டும்..

    ReplyDelete
  6. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்
    பணியை சிறப்பாக செய்து முடித்தமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  8. ஜெய்லானியின் சில பதிவுகளுக்கு சென்றிருக்கிறேன்! சேக்காளியின் கமெண்ட்கள் வாசித்து இருக்கிறேன்! தளம் சென்றது இல்லை! பாண்டியனின் வலைப்பூ தொடர்கின்றேன்! மற்றவர்கள் புதியவர்கள்! வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு சிறந்த பதிவுகளை தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  9. தோழர் சரவணனின் அறிமுகத்திற்கு நன்றி , ஏனைய பதிவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  10. என்னையும் ஒரு பதிவனா மதிச்சு அத ஒங்க வலைத்தளத்திலேயும் குறிப்பிட்டதுக்கு எப்டி கைம்மாறு செய்யுறதுன்னு தெரியலியே.

    ReplyDelete
  11. இன்றைய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். இனிதே பணி செய்தீர்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது