07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 7, 2015

மூத்தவர்களும் முன்னவர்களும்! வழிகாட்டிகள்!

வலைச்சரம் இரண்டாம் நாள்: மூத்தவர்களும் முன்னவர்களும்!


  வணக்கம் நண்பர்களே! நேற்றைய முதல் நாள் இடுகையை பாராட்டியும் குறைகளை கலையச்சொல்லி ஆலோசனை வழங்கிய அனைத்து பதிவர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது நன்றிகள். வலையில் எழுதுவது என்பதும் ஓர் கலைதான். பத்திரிக்கைகளில் நமது படைப்புக்கள் வெளியாக வேண்டுமானால் ஆசிரியர் குழுவினர் படித்துப்பார்த்து அவர்களுக்குப் பிடித்திருந்தால் ஆசிரியர் முன் சென்று அதற்குப்பின் வெளியாகும். இதற்கு சில மாதங்கள் நாம் காத்திருக்க வேண்டும். அப்படி காத்திருந்த பின் நமது படைப்பு வெளியிட்ட அந்த இதழ் ஓர் தகவல் தெரிவித்தால் பராவாயில்லை! அதைக்கூட பல இதழ்கள் செய்வது இல்லை. இதனால் சுறுசுறுப்பாக எழுதத் துவங்கும் எழுத்தாளர்கள் அப்படியே துவண்டு போய்விடுவார்கள்.

    ஆனால் வலைப்பூ என்பது அப்படி அல்ல! இங்கு நீங்களே எழுத்தாளர்! நீங்களே ஆசிரியர். உங்கள் வலையில் நீங்கள் எதுவேண்டுமானாலும் எழுதலாம் படிக்கத் தகுந்த வரையில். எழுதும் படைப்புக்கள் உடனுக்குடன் பதிவாகி பல வாசகர்களின் பார்வைக்குச் செல்கின்றது. உடனே கருத்துரைகளும் திரட்டிகளில் சேர்த்திருந்தால் வாக்குகளும் குவிகின்றது. உங்கள் எழுத்துக்கள் தரமானதாக இருந்தால் உங்களுக்கென ஓர் நட்புவட்டம் உருவாகி ஓரளவுக்கு பிரபலம் ஆகிவிடுவீர்கள். அப்படி ஓர் பொன்னான வாய்ப்பை நம் எழுத்தை யாராவது ரசிக்க மாட்டார்களா? என்று ஏங்கிய  ஏக்கத்தை துடைத்து  உங்களை நல்ல எழுத்தாளராக மாற்றுகின்றது வலைப்பூ.

    இப்படி ஓர் அருமையான அடித்தளத்தை நமக்கு அமைத்து தரும் வலைப்பூவில் நாம் சேற்றினை இரைக்கலாமா? கண்டிப்பாக கூடாது அல்லவா? ஆகவே நாம் எழுதும் எழுத்துக்களில் கொஞ்சம் பொறுப்புணர்ந்து எழுதவேண்டும். அசிங்கமான அநாகரிகமான வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். நாகரீகமாக எழுத வேண்டும்.  பெண்கள் சிறுவர்கள் குடும்பத்தினர் அனைவரும் படிக்கும் வகையில் நமது வலைப்பூ அமைய வேண்டும்.

       நாம் கதை, கவிதை, கட்டுரை, சொந்த அனுபவங்கள், நகைச்சுவைகள் என்று எது வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அது நாகரீகமாகவும் மற்றவர்கள் மனதை புண்படுத்தா வண்ணமும் இருந்தால் நல்லது. வலைப்பூக்களை எடுத்துக்கொண்டால் ஒரு சிலர் கவிதை மட்டும், சிலர் கதை மட்டும், சிலர் நகைச்சுவை மட்டும், சிலர் சினிமா விமர்சனம் மட்டும் என்று ஒரேவிதமாக எழுதுவர். சிலர் அனைத்தையும் கலந்து கட்டி எழுதுவர். நான் அப்படித்தான்.

    பல்சுவையாக எழுதும் போது அனைத்து தரப்பு வாசகர்களும் கிடைப்பார்கள். ஒரே துறை குறிப்பாக கவிதை, கதை மட்டும் என்றால் அதற்கான வாசகர்கள் குறைவு. ஆகவே எதை எழுதுவது என்பது உங்கள் விருப்பம் போல தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதை யார் பாணியிலும்  இல்லாமல் உங்கள் நடையில் எழுதுங்கள். எளிமையாகச் சொல்லுங்கள். புரியாதவார்த்தைகள் தவிர்த்தல் நலம். உங்கள் எழுத்துக்கள் பலரை சென்றடையும்.

     நம்முடைய எழுத்துக்கள் முதிர்ச்சி அடைய பிரபலமான பதிவர்களின் படைப்புக்களையும் எழுத்தாளர்களின் படைப்புக்களையும் தொடர்ந்து வாசியுங்கள்! உங்கள் எழுத்தும் நடையும் கொஞ்சம் பக்குவப்படும். அப்புறம் என்ன? வலைப்பூ உலகில் வெற்றி நடைதான்.

      புதிதாக வலைப்பூ எழுதுபவர்கள் செய்யக் கூடாத ஒன்று என்றால் வெட்டி ஒட்டுவதுதான்! பிற வலைப்பூக்களில் இருந்தோ, பிற முன்னனி தளங்களில் இருந்தோ தகவல்களையோ, படைப்புக்களையோ காப்பி செய்து நமது தளத்தில் பதிவது என்பது தற்கொலைக்கு சமம் ஆனது. இதைச்சொல்ல எனக்கு முழு உரிமை இருக்கிறது. ஏனென்றால் நான் அடிபட்டு திருந்தியவன். வலைப்பூ தொடங்கிய சமயத்தில் பார்வையாளர்கள் வரவில்லை என்று அவசரப்பட்டு, தினமலர், தட்ஸ் தமிழ் தளங்களில் இருந்து செய்திகளை வெட்டி ஒட்டினேன்.  அதுவும் சினிமா கிசுகிசுக்கள் அதிகம் வெட்டி ஒட்டினேன். நிறைய பார்வைகள் கிடைத்தது. ஆனால் நல்ல வாசகர்கள் விலகத் தொடங்கினார்கள். இதைத்தான் தளிருக்கும் ஓர் களங்கம் இருக்கிறது என்று நேற்று சொன்னேன்.

        ஆனால் அது எனக்கு அப்போது தவறாகத் தோன்றவில்லை! காப்பி-பேஸ்ட் பதிவர் என்று  நண்பர் ஒருவர் கிண்டலடித்தபோதுதான் உரைத்தது. பின்னர் அவ்வகைப்பதிவுகளை தவிர்த்தேன். என்னுடைய பாலோயர் எண்ணிக்கை 2012ல்  அறுபதை தாண்டவில்லை!  ஆனால் இன்றோ 226 பேர் பின் தொடர்கின்றனர். இது சுயமாக எழுதுவதால் கிடைத்த பெருமை அல்லவா?  நான் இழந்த முக்கிய பாலோயர் ஒருவர் இருக்கிறார். புதிய வலைப்பூ ஆரம்பித்தால் அப்போதெல்லாம் இவர்தான் முதல் நபராக இணைந்து உற்சாகம் ஊட்டுவார். என்னுடைய தளத்திலும் இணைந்தார். பின்னூட்டம் ஏதும் இட்டதில்லை. நான் காப்பி- பேஸ்ட் செய்ய ஆரம்பித்ததும் விலகிவிட்டார்.  அவர் மிகவும் சுவையாக நகைச்சுவை மிளிர எழுதக்கூடிய ஓர் எழுத்தாளர். இப்போது எழுதாவிட்டாலும் அவரது பதிவுகள் என்றென்றும் படிக்க தகுந்தவை இதோ அவரது பதிவு ஒன்று. நைட்டியும் லுங்கியும் பட்டைய கிளப்புது!

   இனி இன்று பார்க்க இருக்கும் பதிவர்களைப் பார்ப்போம்!  எந்த நிகழ்வாக இருந்தாலும் முதல் என்று ஓர் இடம் இருக்கிறது. முதலில் பிறந்தவர், முதலில் கண்டுபிடித்தார், முதலில் அமைச்சர் ஆனார் என்று சொல்லுவோம். வலைப்பூ உலகிலும் முன்னவர்களாக வலைப்பூ பிரபலம் ஆகாத சமயத்தில் இருந்து எழுதிக் கொண்டிருக்கும் சிலரை பார்க்க உள்ளோம். அடுத்து மூத்தவர்கள். வீட்டிலும் சரி! நாட்டிலும் சரி! மூத்த குடிமக்களுக்கு தனி மரியாதை உண்டு. வலை உலகிலும் அவர்களுக்கு தனி இடம் தான். நான் ரசித்து படிக்கும் மூத்த பதிவர்கள் சிலரையும் முன்னவர்கள் சிலரையும் இங்கே அடையாளம் காட்டுகின்றேன். இந்த முன்னவர்களும் மூத்தவர்களும் நமக்கு முன்னரே இணையத்தில் தடம் பதித்து முத்திரை பதித்து நமக்கு வழிகாட்டிகளாக இருக்கின்றார்கள். அவர்களை பின் தொடர்வோம்!

முன்னவர்கள் இங்கே!

1.   வலையுலகில் மிகப் பிரபலமான பதிவர் இவர். 2006 முதல் எழுதுகின்றார். சினிமாவிமர்சனங்கள், சிறுகதைகள், கவிதைகள், உணவு சார்ந்த பதிவுகள் எல்லாவற்றையும் எளிமையாக எழுதுவார். நிறைய புத்தகங்களும் வெளியிட்டு உள்ளார். தற்போது சினிமா மீதுள்ள ஆர்வத்தினால் அந்த துறையில் கவனம் செலுத்திவருகின்றார் ஒரு படத்தையும் இயக்கி உள்ளார். இன்னுமா அவர் பெயர் தெரியவில்லை! வலையுலகின் பிதாமகர்களில் ஒருவரான் அவர் கேபிள் சங்கர். இவரின் இந்த பதிவுகள் அவசியம் படிக்க வேண்டியவை: காக்கா முட்டை படத்திற்கு இவர் எழுதிய அருமையான விமர்சனம் இங்கே! காக்கா முட்டை

2.    2005 ஆம் ஆண்டில் இருந்து எழுதும் இந்த பெண்மணி முன்னவர் மட்டும் அல்ல! மூத்தவரும் கூட  தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை சுவாரஸ்யமாக எழுதுவதில் மிகவும் சமர்த்தர். அவ்வப்போது இந்த வயதிலும் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு பயணக்கட்டுரைகள் எழுதுவார். சமையல் குறிப்புக்கள் சொல்லுவார். அதில் கரண்டியோடு படம் எடுத்து போடுவார். திருச்சி ரங்க நாதர் கோயிலுக்கு அடிக்கடி செல்லும் இவரின் ஆன்மீக பதிவுகளும் அசத்தல் தமிழ் தாத்தாவின் உறவினரும் கூட! இவர் யார்? திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் தான். அவரின் சில பதிவுகள்: நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் இதோ இறைவன் என்ன நினைக்கின்றான் இறைவன் என்ன நினைக்கின்றான்?  புத்தக விமர்சனமும் அருமையாக எழுதுவார்  இங்கே படியுங்கள்  பஞ்ச நாராயணகோட்டம்

3.    முன்னவர்களில் இவரை குறிப்பிட்டே ஆகவேண்டும் 2006 முதல் எழுதிவருகிறார். இளைஞர் புதிய தலைமுறை இதழில் பணியாற்றி தற்சமயம் வண்ணத்திரையில் பணி புரிகின்றார். வலையுலகின் ரசிக்கத்தக்க எழுத்துக்களில் இவருக்கும் பங்குண்டு. யுவகிருஷ்ணா லக்கி ஆன் லைன் தளத்தில் எழுதி வருகின்றார் ஸ்ரீ வித்யா பற்றி இவர் எழுதிய அருமையான பதிவு இது! விழிகளால் மொழி பேசிய வித்யா

4.     தூரிகையின் தூறல் என்னும் தளத்தில் எழுதிவரும்  கவிஞர் மதுமதி இவர் பன்முகத் திறமையாளர். கவிஞர், பாடலாசிரியர், குறும்பட இயக்குனர், நாவலாசிரியர் என்ற பலமுகங்களுக்கு சொந்தக்காரர், தன்னுடைய வலையில் இவர் எழுதும் டி.என்.பி.சி தகவல்கள், பெரியாரியல் சிந்தனைகள் , கவிதைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

5.    தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற தளத்தில் எழுதி வரும் ஆர்.வி.எஸ் என்ற வெங்கட சுப்ரமண்யன் ராமமூர்த்தி 2007 முதல் எழுதி வருகிறார். சுவையான சிறுகதைகள் மட்டுமின்றி பல்சுவையில் எழுதக் கூடியவர் அவரது படைப்பொன்று இங்கே!  தற்சமயம் முகநூலில் அதிகம் காணப்படுகின்றார்   போகாதே!  இந்த சிறுகதை நம்மை அப்படியே அதனுள் இழுத்துச்செல்லும்

6.    உண்மைத் தமிழன்! சினிமா விமர்சனங்களை எழுதுவதில் கெட்டிக்காரர். 2007 முதல் எழுதி வரும் இவரது சமீபத்திய பதிவு. இது.  பாபநாசம்

7.   குழலி பக்கங்கள் என்ற தளத்தில் எழுதி வரும் இவரது சிந்தனைகள் புரட்சிகரமானவை இதோ:  சே குவேராவின் பிறந்த நாள்

8.    துளசி தளம் என்ற தளத்தில் 2004 முதல் எழுதி வருகின்றார் துளசி கோபால். ஆன்மீகத் தகவல்கள் முதற்கொண்டு அனைத்துவிதமான வகைகளிலும் இவரது பதிவுகள் உண்டு. இவரது பயணக்கட்டுரைகள் மிகவும் ரசிக்க வைக்கும்: ஒட்டகத்தை கட்டிக்கோ!

9.   யோ திருவள்ளுவர் தனது தளத்தில் 2006 முதல் எழுதி வருகின்றார் அரசியல் கட்டுரைகள் இவரது சிறப்பு:  ஆர்.எஸ்.எஸ் கலாசார அமைப்பு

10.  அதிஷா தற்போதைய முகநூல் பிரபலங்களில் ஒருவர்; 2008 முதல் எழுதி வருபவர். சினிமாவிமர்சனங்களில் தேர்ந்தவர் இவரது இந்த பதிவு:  கன்னட சினிமா கண்டண்டே!

11.  சுரேகா அவர்கள் 2007ல் இருந்து எழுதி வருகின்றார். சுயமுன்னேற்ற நூல்கள் சில வெளியிட்டுள்ளார் வாழ்ந்து காட்டுதலைவிட பழிவாங்கல் வேறொன்றுமில்லை என்ற இவரது முகப்பு வாசகம் என்னை கவர்ந்த ஒன்று   அருகாமை  எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் பற்றிய இந்த பதிவு மிகவும் நெகிழவைத்த ஒன்று.

12.  தீராத பக்கங்கள் என்ற தளத்தில் எழுதும் மாதவராஜ் அவர்கள் 2007 முதல் எழுதி வருகின்றார். அரசியல் தொடங்கி அனைத்தும் பகிர்வார் இவரது ஜெயக்காந்தன் பற்றிய கட்டுரை படிக்க:  எங்கள் காதலில் எழுத்தாளர் ஜெயக்காந்தன்

13.  குந்தவை  செப்பு பட்டயம் என்ற தளத்தில் 2005 முதல் எழுதி வருகின்றார்  பல்சுவைப்பதிவர் இவர் பதிவுலக அரசியல் பற்றி இவர் சொல்வது எனக்கு புரியவில்லை! பதிவுலக அரசியல்

14. கானா பிரபா 2005  முதல் எழுதி வருகின்றார் ஈழத்து பதிவரான இவரது இடுகைகள் கலக்கல் ரகம் மாதிரிக்கு ஒன்று.  அண்ணை றைர்



15.  நிலா ரசிகன் இவரும் 2005 முதல் எழுதி வருகின்றார் பல்சுவையில் எழுதுவார் ஒரு கருவுக்கு நான்கு கதைகள் சொல்கிறார் இங்கே!  ஒரு கரு நான்கு கதைகள்


மூத்தவர்கள்:
1.வலையுலகில் சதாபிஷேகம் செய்து கொள்ள போகும் பதிவர் இவர்.கோவையில் இருந்து எழுதும் இவரது பதிவுகளில் குசும்பு மட்டுமல்ல குறும்பும் அதிகம். வீட்டில் நாலைந்து ராணிகளை கட்டி மேய்க்கிறார். வலையுலகில் ஏதாவது சர்ச்சை என்றால் வரிந்துகட்டுவார். இதைப்பற்றி எழுதுங்கள் என்று சொல்லிவிட்டால் அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராய்ந்து பதிவிடுவார். முனைவர் திரு பழனி கந்தசாமி அவர்கள். நுன் கணிமங்களை பகுப்பாய்வு செய்வது எப்படி?

2.வலையுலகின் மூத்தவர்களில்  தமிழார்வம் கொண்ட தமிழாசிரியர், மரபுக் கவிதைகளால் வலையுலகை கவர்ந்தவர். நாட்டுநடப்புக்களை மரபுக்கவிதைகளாக பாடக்கூடிய வல்லவர். பதிவர்களுக்கென ஓர் சங்கம் அமைக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் புலவர்  கவிதைகள் தளத்தில் எழுதி வரும் ஐயா திரு இராமானுஜம் அவர்கள். தீண்டாமை குறித்து பாடிய கவிதை இங்கே!என்றேதான் ஒழியுமோ?

3.இவர் பேச நினைப்பதையெல்லாம் எழுத்துக்களாக எழுதி கொட்டிவிடுவார். தத்துவங்களும் சொல்லுவார். நகைச்சுவையும் பேசுவார். சில சமயம் குட்டிக்கதைகள்  மூலம் உபதேசமும் நடத்துவார். இவருக்கு பித்து பிடித்தாலும் நம்மை எல்லாம் தெளிவாக ஆக்குவார். அவர் சென்னைப்பித்தன் ஐயா அவர்கள்.  முழி பிதுங்க வைத்த மொழி


4.விக்கிபீடியா இணையத்தில் ஐநூறு பதிவுகள் எழுதிய பெரியவர் இவர். சோழநாட்டில் பௌத்தம் என்ற வலைப்பூவில் பௌத்தமதம் எப்படி பரவியது என்று ஆராய்ச்சி செய்து எழுதுகின்றார். ஆலயங்களுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து அதன் தகவல்களை புகைப்படங்களுடன் அழகாக பதிவிடுவார். முனைவர் திரு ஜம்புலிங்கம் புள்ள மங்கை பிரம்ம புரீஸ்வரர்


5.மதுரையில் வசிக்கும் இவரின் பதிவுகள் ஒவ்வொன்றிலும் அர்த்தம் புதைந்து இருக்கும் சாதாரணமாக வழங்கும் ஓர் பழமொழியைக் கூட விரிவாக்கி அதில் ஓர் நல்ல கருத்தை நமக்கு எடுத்துரைக்கும் விதமாக கவிதைகள், பதிவுகள் படைப்பதில் வல்லவர். யாதோ ரமணி. சில சந்தேகங்கள்

6.திருச்சியில் வசிக்கும் இவரின் பதிவுகள் ஜொலிக்கும் விதவிதமான அலங்காரங்கள் பதிவில் நம்மை லயிக்க வைக்கும். சிறுகதை விமர்சனப்போட்டி நடத்தியவர். வை கோபாலகிருஷ்ணன். உடம்பெல்லாம் உப்பு சீடை

7.சூரியசிவா என்ற சுப்பு தாத்தாவின் இசை ஆர்வம் மிகவும் வியக்க வைக்கும் ஒன்று.  பாடி மகிழ்விக்கிறார் இங்கே! பட்டுரோசா என்னை பார்க்கிறே


8.அகச்சிவப்புத் தமிழ் என்ற தளத்தில் எழுதி வரும் புலவர் அ.ஞானப்பிரகாசம் திராவிடக் கொள்கைகளில் ஈடுபாடு உடையவர். பகுத்தறிவு கருத்துக்கள் ஒளிரும் இவரது பதிவுகள் அட்டகாசம். தாலி பற்றிய இவரின் பதிவு  தாலி சில கேள்விகள்

9.எண்பதை நெருங்கினாலும் எழுச்சியுடன் செயல்படும் பதிவர். கருத்துகளை தயங்காமல் எடுத்துரைப்பதில் சிறந்தவர். இராமாயணப் பதிவுகள் எழுதி பாராட்டுக்கள் பெற்றவர் அய்யா ஜி.எம்.பி அவர்கள் விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றிய பதிவு இது! விஷ்ணு சகஸ்ரநாமம்

 10.இவரது எழுத்துக்கள் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. ஓய்வுபெற்ற ஆசிரியரான இவரது படைப்புக்கள் அனுபவத்தால் விளைந்தவை தருமி ஐயா அவர்கள் இவர் மூத்தவர் மட்டுமல்ல! முன்னவரும் கூட 2005ம் ஆண்டில் இருந்து எழுதுகின்றார். ஆசிரியரான இவர் ஆசிரியை ஒருவருக்கு கண்டனம் தெரிவிக்கிறார் இங்கே!  ஒரு வாத்தியானின் கண்டணங்கள்

11.திருமதி ரஞ்சனி நாராயணன். இவரும் ஓர் ஓய்வுபெற்ற ஆசிரியர். வேர்ட்பிரஸ் தளத்தில் எழுதும் இவரது படைப்புக்கள் சுவாரஸ்யமானவை. விவேகானந்தர் குறித்த நூலொன்று வெளியிட்டுள்ளார். மலாலா குறித்து ஓர் புத்தகம் எழுதியுள்ளார். குழந்தை வளர்ப்பு ஆலோசனைகளை செல்வக்களஞ்சியமே என்று நான்கு பெண்கள் தளத்தில் எழுதி வந்தார். இப்போது ப்ளாக் ஸ்பாட்டிலும் எழுதுகின்றார் தமிழ் இணையம் பற்றி இங்கே!  தமிழ் இணையமும் நானும்

12.திருமதி ருக்மணி சேஷசாயி; பாட்டிச்சொல்லும் கதைகள் தளத்தில் குழந்தைகளுக்கான அருமையான கதைகளை எழுதியவர். தற்போது அதிகம் எழுதுவது இல்லை. இவரது  குறள்வழிக்கதைகளை படிக்கலாமே!

13.கம்யூனிச வாதியான இவர் தீக்கதிர் நாளிதழில் ஆசிரியராக பணிபுரிந்தவர். கம்யூனிச கருத்துக்கள் மிளிரும் இவரது வலைப்பூ காஷ்யபன். சுப்பையாவை எதற்கு பிடிக்கும் என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள் சுப்பையா

14.வலைச்சரத்தின் ஆசிரியர். மூன்று வலைப்பூக்களில் எழுதி வருகிறார். இவர் அசைபோடும் எண்ணங்கள் எழுத்துக்களாகி மிளிரும்போது நமக்கு சுவாரஸ்யமான பதிவுகள் கிடைக்கும். தந்தையர் தினத்தன்று இவர் எழுதிய தந்தையை சிறப்பிக்கும் கவிதை  தந்தையர் தின வாழ்த்து

15.நாச்சியார் என்ற தளத்தில் எழுதி வரும் வல்லி சிம்ஹன் மூத்த பதிவர் மட்டும் அல்ல! முன்னவரும் கூட! நிறைவாக எழுதும் இவரது பதிவுகள் எல்லாம் வாசிக்கத் தகுந்தவை!  டி.கே.சியின் கம்பச் சித்திரம் இங்கே

16.கணக்காயன் என்ற தளத்தில் எழுதி வரும் கவிஞர் இ.சே. இராமன் சிறப்பான கவிஞர். இந்தவயதிலும் சுறுசுறுப்பாக பதிவுகள் எழுதி அசத்துபவர். கவிதைப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்று அசத்துகின்றார் மாதிரிக்கு இதோ!  ரூபன் கவிதைப்போட்டியில் வெற்றிபெற்ற படைப்பு


17.கடுகு தாளிப்பு என்ற தளத்தில் எழுதி வரும் அகஸ்தியன் அவர்கள். இவரது படைப்புக்களில் நகைச்சுவை மிளிரும். ஒரே மாதிரியாக எழுதாமல் பல்சுவையில் எழுதுவது இவரது பலம். ஒருவரி ஒரு ரூபாய்!

18.வேர்கள் என்ற தளத்தில் எழுதி வருவம் பாண்டியன் ஜி (வில்லவன் கோதை) பல அருமையான பதிவுகள் எழுதிவருகின்றார்.  தமிழ்க்கடல் மறைமலை அடிகள்  பற்றி இங்கே படியுங்கள்

19. வே. நடனசபாபதி அவர்கள் வங்கிப்பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். தமது துறை சார்ந்த அனுபவங்களை சுவைபட எழுதி வருகின்றார். ஏமாற்றுக்காரர்கள் குறித்து இவர் எழுதிவரும் விழிப்புணர்வு பதிவு அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. ஏமாற்றுவதும் ஓர் கலைதான்

20. ரேகா ராகவன், பிரபல எழுத்தாளர், பல இதழ்களில் இவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளது. வலையில் தற்சமயம் எழுதுவது இல்லை! இவரது கதை ஒன்று.  மனைவி ஒருபக்க கதை


இன்னும் நிறைய முன்னவர்களும் மூத்தவர்களும் இருக்கலாம்! என்னுடைய தேடல் சிறிது! கண்ணுக்கெட்டிய தூரம் வரை தேடி முடிந்தவரை அடையாளம் காட்டியுள்ளேன்.  நாளை இன்னும் சில பதிவர்களை இன்னுமொரு தலைப்பில் அடையாளப்படுத்துகின்றேன்! உங்களின் ஆலோசனைகளை நல்கி வலைச்சரத்தை மேலும் சிறப்பாக்க உதவுங்கள்! மிக்க நன்றி!

39 comments:

  1. வணக்கம் சகோதரரே...
    மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்....
    மூத்த பதிவர்கள் வரிசை அருமை...
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் தங்கள் பாணி... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! தொடர்கின்றேன்!

      Delete
  2. நல்ல ஆலோசனைகள்... களங்கத்திலிருந்து மாறியது - இதை சொல்லவே ஒரு மனசு வேண்டும்... பாராட்டுகள்...

    மூத்த பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

    பாலோயர் எண்ணிக்கை வைத்து எந்த தளத்தையும் மதிப்பிட முடியாது... ஏன் என்றால் பல தளங்களில் அவை வேலையும் செய்வதில்லை... Google Friend Connect-யை google நிறுத்தி வைத்ததால்...! அவை மறுபடியும் வேலை செய்ய --->http://www.tamilvaasi.com/2013/07/add-follower-widget-in-tamil-blogs.html

    குறிப்பு : விலகியதாக நீங்கள் குறிப்பிட்ட தளம் 2012 பிறகு பதிவுகளே தொடரவே இல்லை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! தவறை ஒத்துக்கொள்ள என்றுமே நான் தயங்கியது இல்லை! பாலோயர் குறித்து தாங்கள் சொன்ன தகவல்கள் புதிது குறிப்பிட்ட தளம் சென்று பார்க்கிறேன். அந்த தளத்தில் அவர் பதிவுகள் எழுதுவது இல்லை என்பதும் தெரியும். நன்றி!

      Delete
  3. அடேயப்பா எத்தனை வலை தளங்களுக்கு சென்று இருக்கிறீர்கள் . அனைவரும் சிறந்த பதிவுகளை தந்து வருபவர்கள். அவர்களுக்கு என் வணக்கங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே! நேற்று இரவு மூன்று மணிநேரம் இன்று காலை மூன்று மணிநேரம் ஒதுக்கினேன். அதுவே போதவில்லை! இன்னும் பலர் விடுபட்டு இருக்கிறார்கள் வருத்தமாக இருக்கின்றது!

      Delete
  4. ஆகா !!!! மிக நீண்ட பட்டியல்! உங்கள் முயற்சி பாராட்டத் தக்கது! என்னையும் குறிப்பிட்டீர் நன்று!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா! பட்டியல் நீண்டு கொண்டுதான் செல்கிறது வலையுலகம் பெரியது அல்லவா?

      Delete
  5. அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். பணிசிறக்க தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் சகோ !

    ReplyDelete
  6. சுரேஷ் கலக்கல் போங்க!!!! ஏன் களங்கம் என்று நீங்கள் நினைக்க வேண்டும்? அறியாத செய்த தவறு...தெரிந்ததும் திருத்துக் கொண்டுவிட்டீர்கள்...நேர்மையாக அதை வெளிப்படுத்தவும் செய்கின்றீர்கள் திறந்த புத்தகம் போல! எல்லோருக்கும் வராத ஒன்று. எனவே களங்கம் அல்ல களஞ்சியம்! அதை அமைக்க, பெற வழிவகுத்த ஒன்று, பாதை என்று எடுத்துக் கொள்ளவும் செய்யலாம் தானே..தவறிலிருந்து பிறப்பதுதான் பெரிய பெரிய பொக்கிஷமான தத்துவங்கள், அறிவுரைகள், பெரியவர்கள், அறிஞர்கள்! வாழ்த்துகள் சுரேஷ்!

    இன்றைய அடையாளப்படுத்தலில் சிலரை அறிவோம். பலரை அறிந்ததில்லை...அறியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!

    அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தவறுகளில் இருந்துதான் திருத்தங்கள் பிறக்கின்றன! உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி!

      Delete
  7. அருமையாக எழுதி இருக்கிறீர்கள். வலைத்தளத்தை நன்கு மற்றவர்களுக்கும் உணர்த்துகிறீர்கள். மூத்த பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சிலர் அறிமுகம் ஆனவர்கள். சிலர் அறிமுகம் இல்லாதவர்கள். அவர்களின் தளத்தை காணச் செல்கிறேன். தம +1

    ReplyDelete
    Replies
    1. கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற என் அக்கறை அது! உங்கள் பாராட்டுக்கள் மூலம் திறம்பட செய்துள்ளேன் என்று தோன்றுகிறது! நன்றி!

      Delete
  8. இன்று அடையாளம் காட்டப் பட்டவகளின் பட்டியல் நீளம். பலரும் பரிச்சயமானவர்கள். ஓரிருவர் இப்போது வலைத் தளங்களில் எழுதுவது மிகவும் குறைவுஅறிமுகம் இல்லாதவர்களின் தளங்களுக்குச் சென்று படித்தால்தான் அவர்களைப்பற்றிப் புரியும் . ஆனால் லிஸ்ட் நீளமானால் எதைப் படிப்பதுஎதை விடுவது என்று புரியாமால் எதையுமே படிக்காமல் போகிறவர்களே அதிகமாய் இருப்பர். தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா! பட்டியல் கொஞ்சம் நீண்டுவிட்டது! இன்னமும் நீண்டிருக்கும் ஆனால் தவிர்த்துவிட்டேன்! நாளை முதல் குறைத்துக்கொள்ளலாம் என்று உத்தேசம். எல்லா தளங்களுக்கும் எல்லோரும் செல்ல வேண்டும் என்பதில்லை! படிக்காத செல்லாத தளங்களுக்கு சென்று வரலாம் அல்லவா? உங்கள் ஆலோசனைகளை கருத்தில் கொள்கின்றேன்! நன்றி!

      Delete
  9. மூத்த பதிவர்களின் திறனை முத்தமிட்டு வணங்குவோம்!
    அவர்களது போற்றுதலுக்குரிய பதிவுகளை வாசித்து பயன் பெறுவோம்.
    எண்ணற்ற பதிவுகளை ஏற்றமாய் வழங்கியமைக்கு பாராட்டுக்கள்!நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! எண்ணற்ற பதிவுகள் வழங்கியிருப்பினும் எண்ணத்தில் உள்ளதில் குறைவாகவே வழங்கியுள்ளேன்! பாராட்டுக்களுக்கு நன்றி!

      Delete
  10. இன்றைய வலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. முன்னவர் மூத்தவரான தாங்கள் இல்லாமல் இன்றைய பதிவு எழுத முடியுமா? மிக்க நன்றி!

      Delete
  11. வணக்கம் ஆசிரியரே,
    தங்கள் தேடல் வெகு அருமை, அதனைத் தொகுத்ததும் அருமை,
    அனைவருக்கும் வணக்கம்,
    தங்கள் பணித் தொடர வாழ்த்துக்கள்,
    நன்றி.

    ReplyDelete
  12. நிறையத் தெரிந்தவர்கள்!

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பிளாக்கையும் இந்த பட்டியலில் சேர்க்க நினைத்திருந்தேன்! காலையில் அவசரமாக பதிவிடுகையில் விடுபட்டது. உங்கள் காலத்தில் எழுதிய சக பதிவர்களை நீங்கள் அறிந்திருப்பதில் ஆச்சர்யமில்லை! மிக்க நன்றி!

      Delete
  13. தவறினை ஒத்துக் கொள்ளும் பரந்த மனம்!..
    நலங்கொண்டு நாளும் நாளும் வாழ்க!..

    சிறந்த தளங்களைச் சுட்டிக் காட்டிய பதிவு!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  14. வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துக்கள் இன்றைய அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. பிழைகள் மூலம்தான் பலதை தேடி உணர்கின்றோம் வலையில்! தங்களின் காப்பி பேஸ்ட் பற்றி கவலை வேண்டாம்! ஆனால் தாங்கள் தமிழ்மணத்தில் விலகியது தவறு என்பது என் நிலை அதிகம் தங்கள் பகிர்வுகள் அதனால்தான் என் பார்வைக்கு வருவதில்லை! தேடி வர நேரச்சிக்கல் இதை உணர்வீர்கள் என நம்புகின்றேன். இன்றைய அறிமுகங்கள் சிலர் புதிவர்கள்கள் ஓய்வில் படிக்கின்றேன். இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. ஒரு காலத்தில் நீங்கள் காப்பி பேஸ்ட் செய்தது பற்றி அடிக்கடி சொல்லிக்காட்டுகிறீர்கள் என்று நினைக்கிறேன்...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  17. நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள். இங்கே இடம் பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய வாழ்த்துகளும், அடையாளம் காட்டிய உமக்கு மனம் நிறைந்த பாராட்டுகளும்!

    ReplyDelete
  18. முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள் விக்கிப் பீடியாவில் எழுதிய பதிவுகள் எண்ணிக்கை ஐநூறு என்று எழுதி உள்ளீர்கள். தயைகூர்ந்து மறுபடியும் செக் செய்யுங்கள். தவறாக இருக்கக் கூடாது அல்லவா? வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. விக்கிபீடியாவில் 200+ பதிவுகள் எழுதியுள்ளேன் ஐயா. நன்றி.

      Delete
  19. சுரேஷ்! இன்ருதான் பார்த்தேன் தாமதத்துக்கு மன்னிக்கவும்.
    அறிமுகத்துக்கு நன்றி.
    ஒரே நாளில் எத்தனை அறிமுகங்கள்!
    வாழ்த்துகள்

    ReplyDelete
  20. இன்றுதான் பதிவினைக் கண்டேன். பிறரது பதிவுகளுடன் எனது பதிவுகளையும் அறிமுகப்படுததியமைக்கு நன்றி. தாங்கள் அதிகமான எண்ணிக்கையில் பதிவர்களை அறிமுகப்படுத்தும் விதம் ஆச்சர்யமாக இருக்கிறது. சிறப்பான பணியினை மேற்கொண்டு வருகின்றீர்கள். நாளை சந்திப்போம். (விக்கிபீடியாவில் நான் எழுதியது 200க்கு மேல் என திருத்திக்கொள்ள வேண்டுகிறேன். நன்றி)

    ReplyDelete
  21. வருகை தந்து வாழ்த்திய உள்ளங்களுக்கு எனது நன்றிகள்!

    ReplyDelete
  22. இன்றுதான் இந்தப் பதிவு பார்த்தேன். என்னையும் இங்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி, சுரேஷ். தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது