சிதறிய முத்துக்களை கோர்க்கின்றேன்!
நண்பர்களே வணக்கம்! நன்றி கூறி முடித்துவிட்டாலும்
இரவெல்லாம் தூக்கம் சிறிதும் பிடிக்கவில்லை! என் தொகுப்பில் சிலர் விடுபட்டுவிட்டார்கள்
என்ற வருத்தம்தான். பூக்களை எப்படித்தான் கோர்த்தாலும் சில பூக்கள் சிதறிவிடும் மிகுந்துவிடும்
அல்லவா? அப்படி வலைச்சரத்தில் பதிவு முத்துக்களை கோர்க்கையில் விடுபட்ட முத்துக்கள் சில. அவற்றினை மீண்டும் எடுத்துக் கோர்க்கின்றேன்.
வலையில் எழுதுபவர்களுக்கு பின்னூட்டங்கள்
முக்கியம் என்று சொல்லியிருந்தேன். அதே சமயம் சில பின்னூட்டங்கள் எரிச்சல் ஊட்டும்.
நம்மை வெறுப்பேற்றுவதற்கு என்றே முகவரியில்லாமல் வந்து தொல்லை செய்வார்கள். அவர்களின்
கருத்துக்கள் ஏற்புடயைதாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். வம்பு இழுக்க வேண்டும் என்று
வந்தால் என்ன செய்வது?
உங்கள் பிளாக்கர் செட்டிங்ஸ் சென்று கமெண்ட் பார்மில் மட்டுறுத்தல் செய்துவிடுங்கள்.
இனி எந்த பின்னூட்டமாயினும் உங்கள் அனுமதியின்றி வெளியாகாது. இதனால் சர்ச்சையான பின்னூட்டங்கள்
நமது வலையில் இடம்பெறுவதை தவிர்க்க முடியும்.
அதே போல பின்னூட்டத்தில் வாசகர்கள் சொல்லும் எல்லாவற்றையும் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய
அவசியம் இல்லை. ஏனேனில் இது உங்கள் வலைப்பூ. வாசகர்கள் சொல்வதில் அவசியமானது, உங்களுக்கு
உதவக்கூடியது மட்டுமே நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு செயல்பட ஆரம்பித்தால் யாரையும் திருப்தி செய்ய முடியாது.
இது உங்கள் தளம் எனவே அதில் உறுதியாக இருங்கள்.
பதிவுகள் எழுதுகையில் பத்தி பிரித்து எழுதுங்கள்
போதுமான இடைவெளி விடுங்கள். மிகச்சிறியதான எழுத்துருவில் எழுதாமல் நார்மல் வியுவில்
எழுத்துரு அமைத்தால் படிப்பதற்கு வசதியாக இருக்கும். எழுத்துக்களை போல்ட் செய்து லைட்
பிளாக் கலரில் பதிவிடுங்கள், முக்கியமான ஒன்று பதிவுகளில் தேவையற்ற ஆங்கிலக் கலப்பை
செய்யாதீர்கள். முடிந்தவரை தமிழில் சுவையாக எழுதுங்கள். உங்கள் வலைப்பூ மிளிரும். ஒளிரும்.
.
1. விமலன் சிட்டுக்குருவி என்ற தளத்தில் எழுதி
வருகின்றார். எளிமையான நடையில் வாழ்க்கைச்சம்பவங்களை விவரிப்பது இவருக்கு கைவந்த கலை
இதோ வாட்டர் டேங்க்
2. தென்றல் என்ற தளத்தில் எழுதி வரும் ஆசிரியை
கீதா அவர்களின் இந்த கேள்விக்கு பதில் தெரியுமா?
3. அலையல்ல சுனாமி என்ற தளத்தில் எழுதிவரும்
விச்சு அவர்கள் சாணி வண்டின் கதையைக் கூறுகின்றார்.
4. வாசகர் கூடம் தளத்தில் பதிவர்கள் அழகாக தாம்
படித்த நூல்களை விமர்சனம் செய்கின்றார்கள். பதிவர்கள்.
5. மனதில் உறுதி வேண்டும் தளத்தில் மணிமாறன்
நகைச்சுவைத் ததும்ப எழுதுகின்றார். இவரது சப்பாத்தியை ஓட்டைப்போடுவது எப்படி?
6. மதியோடை தளத்தில் மதிசுதா எழுதிய குறியீட்டுசினிமா குறித்து படித்துப் பாருங்கள்.
7. இளையநிலா தளத்தில் சகோதரி இளமதி அவர்களின்
கவிதைகள் மிகவும் சிறப்பாக இருக்கும் தற்சமயம் உடல்நலம் குன்றியிருக்கும் இவர் மீண்டுவர
வாழ்த்துவோம்! அன்னையிட்ட தீ இது
8. அருணா செல்வம் தமது தளத்தில் அழுகைவருவது
பற்றி கூறுகின்றார்
9. ஒரத்தநாடு கார்த்திக் தம்முடைய தளத்தில்
மின்நூல்களை பகிர்கின்றார். தற்சமயம் பூந்தளிர் காமிக்ஸ்களை பகிர்ந்து நம்மை சிறிய
வயதுக்கு அழைத்துச்செல்கின்றார்
10. அமுதவன் பக்கங்களில் எழுதிவரும் எழுத்தாளர்
அமுதவன் சிவக்குமாரை பற்றி எழுதியுள்ள கட்டுரை இது
11. ஓர் ஊழியனின் குரல் என்ற தளத்தில் எழுதிவரும்
எஸ்.ராமன் தான் பார்த்த ஒரு சம்பவம் பற்றி எழுதுகின்றார்
12. கும்மாச்சி என்ற தளத்தில் எழுதி வரும் கும்மாச்சி அரசியல் நையாண்டிகள் செய்வதில் சமர்த்தர் கலக்கல் காக்டெயில் இவரது டிரேட்மார்க்
13. கே.பி. ஜனா தன் தளத்தில் நல்லதா நாலு வார்த்தை என்று பொன்மொழிகளை
பகிர்வார் அன்புடன் ஒரு நிமிடம் என்று ஆலோசனைகள் வழங்குவார்
14. சித்தர்கள் ராஜ்யம் என்ற தளம் அருமையான சித்தமருத்துவக் குறிப்புக்கள்மாதிரிக்கு
16. இல.விக்னேஷ்
சுயம்பு என்றபெயரில் வலைப்பூ எழுதுகின்றார் விலை ஆண்கள் பற்றி இங்கே சொல்கின்றார்
17. அரங்கேற்றம் தளத்தில் எழுதிவரும் பி.எஸ்.டி
பிரசாத் நகைச்சுவை ததும்பும் பதிவுகள் தருபவர். ஒரே நாளில் எத்தனை டெலிவரி இவருக்கு!
18. உஷா அன்பரசு வேலூரில் இருந்து எழுதும் பதிவரான
இவர் பிரபல் எழுத்தாளர். தினமலர் பெண்கள் மலரில் இவரது படைப்புக்கள் பலதும் வெளிவந்துள்ளது. பாதைகள் காட்டுகின்றார் இங்கே!
19. என் கணேசன் தனது தளத்தில் ஆன்மீகம் சம்பந்தமான
தகவல்களை பகிர்கின்றார். இவரது தொடர்கதை பெரும் வரவேற்பு பெற்றது. இருந்தும் இல்லாமலும் இறைவன்
20. கற்றலும் கேட்டலும் என்ற வலைப்பூவில் எழுதி
வரும் சகோதரி ராஜி அருமையாக கதைகள் எழுதுவார். தொப்பை யை குறைக்க என்னவழி இங்கே பாருங்கள்!
21. கலியுகம் என்ற தளத்தில் 2010 முதல் எழுதிவரும்
தினேஷ் குமார் பஹ்ரைனில் வேலை செய்கின்றார் இவரது கவிதைகள் இலக்கிய ரகம் இதோ உத்தம உருவிது
22. குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் என்ற
தளத்தில் எழுதும் குட்டன் நகைச்சுவை ததும்ப எழுதுவார் பணமே மதம் என்கிறார்
23. கே.ஆர்.பி. செந்தில் தன்னுடைய வலைத்தளத்தில்
எழுதும் எழுத்துக்கள் அசத்தல் ரகம். இதோ இரவுகளின் இசை
24. பஜ்ஜிக் கடை என்ற தளத்தில் எழுதிவரும் முத்தரசு தொட்டால் தொடரும் என்கின்றார்
25. திருமதி பக்கங்களில் எழுதி வரும் கோமதி அரசு
கோயில்களுக்கு சென்றுவந்ததை சுவைபட பகிருவார் தேடிவந்த பறவைகள் இங்கே
26. புதுகைத் தென்றல் தம் தளத்தில் தன் மகளுக்கு டியுசன் ஏற்பாடு செய்தது பற்றி பகிர்கின்றார்
27. பெண் என்னும் புதுமை தளத்தில் எழுதும் கோவை.மு.சரளா தாய்மொழிக்கல்வியின் அவசியம் பற்றி கூறுகின்றார்
28. முத்துச்சரம் என்ற தளத்தில் சகோதரி ராமலஷ்மி
புகைப்படங்களை அழகாக பகிர்வார் போர்ட்ரெய்ட்என்றால் என்ன? கற்றுத்தருகிறார்
30. தூரிகைச்சிதறல் தளத்தில் கவி காயத்ரி கவிதை
மழை பொழிகின்றார். இதோ மவுனத்தை நோக்கி
31. ஹிஷாலியின் கவித்துளிகள் தளத்தில் எழுதும்
ஹிஷாலி குட்டிக்கவிதைகள் நிறைய எழுதுவார் இதோ உலகமே இருண்டிருக்கும்என்கிறார்.
32. மணவை என்ற தளத்தில் எழுதிவரும் நண்பர் மணவை
ஜேம்ஸ் தமிழார்வலர். சிறுகதைகள் சிறப்பாக எழுதுவார். இவரது ஒரு சிறுகதை ஒரு பார்வையின் மவுனம்
33. சும்மா என்ற தளத்தில் எழுதிவரும் தேனம்மை
லட்சுமணன் கோடை விடுமுறை குறித்து எழுதுகின்றார்
34. பிரபல பதிவர் நாஞ்சில் மனோ தற்போது அதிகம்
எழுதுவது இல்லை. பெண்களின் சின்ன சின்னஆசைகள் பற்றி இங்கே
36. எண்ணிய முடிதல் வேண்டும் என்ற தளத்தில் எழுதி
வரும் ஷைலஜா நாலயிரத்தை மீட்ட நாதமுனிகள் குறித்து பகிர்கின்றார்
37. சங்கவி என்ற தளத்தில் எழுதிவரும் சதிஷ் சங்கவி
சுவையான பதிவுகள் எழுதுவார். பயணமும் சுவையும் இதோ
39. ஹரணி பக்கங்கள் என்ற தளத்தில் எழுதி வரும்
எழுத்தாளர் ஹரணியின் பத்தி வாசனை இது
.40.ரிலாக்ஸ் ப்ளீஸ் என்ற தளத்தில் எழுதி
வரும் வருண் பின்னூட்டங்களில் விவாதம் செய்வதில் மன்னர். மேகி நூடுல்ஸ் பற்றிய இவரது
பதிவு வாசித்து பாருங்கள்
41. சேட்டைக்காரன் நகைச்சுவை பதிவுகளில் கில்லாடி! இவரது
நூல் ஒன்றும் வெளியாகி பாராட்டுதல்கள் பெற்றுள்ளது. இவரது இந்த கிட்டாமணியின் கிப்ட் வவுச்சர் படித்து சிரியுங்கள்
42. மனோசாமிநாதன். முத்துச்சிதறல் கைமணம் என்ற
இரண்டு வலைப்பூக்களில் தன் சிந்தனைகளை பகிர்கின்றார். முத்துச்சிதறல் வலைப்பூவில் இவர்
வரைந்த பிரபலங்களின்ஓவியங்கள் ஆட்டோகிராபுடன்
43.தஞ்சையம்பதி தளத்தில் எழுதும்
நண்பர் துரை செல்வராஜ் ஆன்மீக கருத்துக்கள் பகிர்வார் இதுவா மானிடம் என்று கேட்கிறார்
இன்னும் எத்தனையோ முத்துக்கள் இணைய வெளியில் சிதறி இருக்கலாம்! என் கண்ணுக்கு தென்பட்ட முத்துக்களை வலைச்சரத்தில் கோர்த்து அழகு சேர்த்தேன்! இந்த முத்துக்களில் குளித்தெழுங்கள்! உங்களை புத்தாக்கம் செய்திடுங்கள்! வாழ்த்துக்கள்.
ஒரு வார காலமாய் என் பதிவுகளை நீளம் அதிகமாக இருந்தாலும் படித்து பாராட்டியும் ஆலோசனைகள் வழங்கியும் உதவிய வலைச்சர வாசகர்கள் நண்பர்கள் வலைச்சர குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள். காலம் ஒத்துழைத்தால் மீண்டும் ஒரு சந்தப்பத்தில் வலைச்சரத்தில் சந்திப்போம்! நன்றி!
மேலும் வாசிக்க...
வலைச்சரம் ஏழாம் நாள்! வலைப்பூ கதம்பம்!
அன்பார்ந்த வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும்
எனது முதற்கண் நன்றிகள். ஒரு வாரகாலமாய் எனது பதிவுகளை படித்து கருத்திட்டு ஊக்கம்
வளர்த்த உறவுகளே இந்த ஒருவாரத்தில் நிறைய பதிவுகளை பல்வேறு தலைப்புக்களில் தந்திருக்கிறேன்.
நண்பர்களும் தொடர்பவர்களும் வாசிப்பவர்களும் என என் பட்டியல் பெரிது. அனைவரையும் அறிமுகம்
செய்ய ஆசைதான்! ஆனால் இடமும் நேரமும் குறைவு. எனவே அடையாளப்படுத்தப்படாத நட்பூக்கள்
மன்னித்தருள்க!
வலையில் எழுத வந்தாகிவிட்டது. பதிவும் எழுதி,
அட்டகாசமான தலைப்பும் வைத்தாகிவிட்டது. வெளியிட்ட பின் அதை திரட்டிகளிலும் இணைத்தாகிவிட்டது
அவ்வளவுதானா அடுத்த பதிவுக்கு செல்ல வேண்டியதுதான் என்று நினைத்தீர்கள் என்றால் அது
மிகவும் தவறு.
நாம் எழுதியது நமக்குச் சரியாக இருக்கலாம்!
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல நமக்கு நம் பதிவில் குறைகளே இருக்காது.
ஆனால் அதை வாசித்தவர்கள் கண்ணில் நிறைய தென்படும். பின்னூட்டங்களில் அதை தெரிவித்து இருப்பர். சிலர் பாராட்டி மட்டும் இருப்பர். முதலில்
அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். எல்லோருக்கும் எல்லா பதிவுக்கும் இப்படி நன்றி கூறிக்கொண்டு
இருக்க முடியாதுதான். ஆனால் கொஞ்சம் வலையுலகில் கால் பதிக்கும் வரையாவது இதை கடைபிடித்தல்
நலம்.
பெரும்பாலான சக பதிவர்கள் நன்றி கூட சொல்லவில்லையே
என்று எதிர்பார்ப்பார்கள்! சக பதிவர் ஸ்கூல்பையன் கார்த்திக் சரவணன் கூட இதைப்பற்றி
வலைச்சரத்தில் எழுதி இருந்தார். பிரபல பதிவர்கள் தங்களுக்கு வரும் அனைத்து பின்னூட்டங்களுக்கும்
சளைக்காமல் பதிலும் நன்றியும் தெரிவிக்கிறார்கள். அவர்களே செய்யும் போது புது நாற்றான
நாம் செய்வதில் தவறேதும் இல்லை.
பின்னூட்டங்கள் மூலம் நமது பதிவினை திருத்திக்கொள்ள
மெருகேற்றிக் கொள்ள ஓர் வாய்ப்பு கிடைக்கின்றது. எனவே நீங்களும் பிறருடைய தளங்களுக்குச்
சென்று கருத்திடுங்கள் உங்கள் கருத்தையும் ஆகா, அருமை வாழ்த்துக்கள் என்று சொல்லாமல்
பதிவில் நீங்கள் பெற்ற ஓர் கருத்தை சொல்லி கருத்திடுங்கள். உங்களுக்கு வரும் பின்னூட்டங்களுக்கும்
மதிப்பு கொடுங்கள்
தமிழ் வலைப்பூக்கள் எண்ணற்று விரிந்து கிடக்கின்றன!
நான் படித்து ரசித்து தொடர்ந்து கொண்டிருக்கும் சில வலைப்பூக்களை கதம்பமாய் இங்கே தொகுத்திருக்கின்றேன்!
1. ஊமைக் கனவுகள் என்ற தளத்தில் எழுதி வரும்
விஜி ஓர் ஆங்கில ஆசிரியர். ஆயினும் அவரது தமிழ் அறிவும் இலக்கணப் புலமையும் அபாரமானது.
ஒவ்வொரு இடுகையிலும் ஓர் புதிய தகவலை தரும் இவரது பதிவுகள் சில! பிறவிக்கோளாறுகளின் வகைகள் , வெளிநாட்டில் சம்பாதிக்க சென்றவன்
2. தேன்மதுரத் தமிழ் என்ற தளத்தில் எழுதி வரும்
கிரேஸ் பிரதிபா அவர்கள் தமிழ் இலக்கியங்களில் இருந்து செய்யுள் விளக்கம் தருவது அருமை!
அதற்கு இணையாக ஓர் கவிதையும் தந்து அசத்துவார். தீயில் மெழுகாய் உருகுகின்றார்
3. கி. பாரதிதாசன் ஐயா அவர்கள் தமது தளத்தில்
பல வெண்பாக்கள், மரபுக்கவிதைகளை படைக்கின்றார்.இவரது ஓரெதுகை வெண்பா
4. பாலமகி பக்கங்கள் என்ற தளத்தில் எழுதிவரும்
மகேஸ்வரி பாலச்சந்திரன் ஓர் தமிழ் பேராசிரியை. கவிதைகள் எழுதுவதோடு தமிழார்வத்தோடு
இலக்கியங்களை பகிர்கின்றார். அண்ணே கொஞ்சம் சீக்கிரம் போங்க!
5. இலக்கியம் –litereture என்ற தளத்தில் இலக்குவனார்
திருவள்ளுவன் தமிழ் இலக்கிய சுவைகளை பகிர்ந்து
கொள்கின்றார் சங்க இலக்கியங்கள் மங்கா புகழுடையன
என்கிறார் இங்கே!
6. யாழ்பாவாணன் தமிழ் வெளியீட்டகம் என்ற தளத்தில்
தமிழார்வலரும் கவிஞருமான யாழ்பாவாணன் ஊடகத்தில் தமிழை தமிழை பயன்படுத்துவது எப்படி என்று
கற்றுத்தருகின்றார்
7. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் என்ற தளத்தில்
எழுதும் கவிஞர் ரூபனின் நெஞ்சை உருக்கும் கவிதை இது!
8. தமிழார்வலர் தமிழாசிரியர் முத்துநிலவன் ஐயா
அவர்களின் வலைப்பூ வளரும் கவிதை இதில் வளரும் எழுத்தாளர்களுக்கு சில அறிவுரைகள் தருகின்றார்
இங்கே!
9. தமிழா தமிழா என்ற தளத்தில் எழுதிவரும் டி.வி
இராதாகிருஷ்ணன் அவர்கள் குறுந்தொகைக்குஅழகான விளக்கம் தருகின்றார்
10. வேர்களைத் தேடி என்ற தளத்தில் எழுதிவரும்
முனைவர் திரு குணசீலன் மிகச்சிறந்த ஆர்வலர் தனித்தமிழில் திருமண பத்திரிக்கை மாதிரிகளை
தருபவர். சங்க இலக்கியங்களை பகிர்ந்து கொள்வார் கலித்தொகை காட்டும் ஏறுதழுவல் இங்கே!
11. காவியக்கவி என்ற தளத்தில் எழுதி வரும் சகோதரி
இனியா அவர்களின் கவிதைகள் அசத்தல் ரகம். புலம் பெயர்ந்து வாழும் சோகம் தென்பட்டாலும்
இவர் கவிதைகள் தென்றலாய்வீசி மகிழ்விக்கிறது
12. மகிழ்நிறை என்ற தளத்தில் எழுதிவரும் சகோதரி
மைதிலி கஸ்தூரி ரங்கன் குறுங்கவிதைகள் அழகாய் எழுதுவார். சமூக நலம் விரும்பி இவர் இடும்
இடுகைகள் அருமையாக இருக்கும் தற்கொலை செய்துகொள்ளப் போகிறவர்களிடம் அவர் கேட்கும் கேள்வி
இது!
13. பாண்டியனின் பக்கங்கள் என்ற தளத்தில் எழுதி
வரும் பாண்டியன் ஜெபரத்தினம் ஓர் நிகழ்வைஎத்தனை அருமையாக புனைகின்றார்
14. ARROW SANKAR அன்பு-அமைதி- ஆனந்தம் என்ற
தளத்தில் எழுதிவரும் ஜோதிடர் சங்கர் அற்புதமான தகவல்களையும் ஆன்மிக கட்டுரைகளையும்
பகிர்கின்றார் நேர்த்திக்கடன் குறித்த அவரது கட்டுரை
15. காகிதப்பூக்கள் என்ற தளத்தில் எழுதிவரும்
சகோதரி ஏஞ்சலின் அருமையான கைவேலைப்பாடுகள் கற்றுத்தருவார். வியக்கும்வைக்கும் விசாலினி பற்றி கூறுகின்றார் இங்கே!
16. Killergee என்ற தளத்தில் எழுதிவரும் தேவகோட்டையை சேர்ந்த கில்லர்ஜி
அமீரகத்தில் பணி புரிகின்றார். இவரது பதிவுகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்கிறார்
17. அம்பாளடியாள் என்ற தளத்தில் கவிதைகள் எழுதி
வரும் சகோதரி அம்பாளடியாளின் கவிதைகள் உணர்ச்சிப் பிழம்பானவை! இதோ நீயும் மகாத்மாவே என்கிறார்
18. அரும்புகள் மலரட்டும் என்ற தளத்தில் ஆசிரியர்
பாண்டியன் அருமையான கட்டுரைகள், சமூகநல ஆக்கங்கள் தருகின்றார் இதோ சம்பவங்களும் சாதனைகளும் பற்றி பகிர்ந்து கொள்கின்றார்
19. இரவின் புன்னகை என்ற தளத்தில் எழுதிவரும்
நண்பர் வெற்றிவேல் இலக்கிய ஆர்வலர் வானவல்லி என்ற அருமையான நாவலை தொடராக எழுதினார்.
தற்சமயம் தேர்த்துகன் என்ற தொடரை எழுதுகின்றார்
20. உணவு உலகம் என்ற தளத்தில் எழுதி வரும் நண்பர்
உணவுக் கலப்படங்கள் குறித்த விழிப்புணர்வும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்தும் பதிவுகளை
தருகின்றார் குழந்தைகளுக்கான பால் பவுடரில் கலப்படம் பற்றி இங்கே!
21. ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் சொக்கன் சுப்ரமணியன்
தனது உண்மையானவன் தளத்தில் ஆத்திச்சூடி கற்றுத்தரும் பாடம் பற்றி சொல்கின்றார்
22. ஒண்ணும் தெரியாதவன் தளத்தில் இல்யாஸ் அபுபக்கர் சுயம் பற்றி எழுதுகின்றார்
23. கரைசேரா அலைகளில் அரசன் நீந்தி கரையேறி பதிவுகள்
இடுகின்றார் ஒவ்வொன்றும் கடலில் குளித்த முத்துக்கள் அதில் ஒன்று இளமதி அத்தை
24. கீதமஞ்சரி தளத்தில் எழுதும் சகோதரி கீதமஞ்சரி
இயற்கையை அதிகம் நேசிப்பவர். தற்சமயம் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இவர் அங்கு புதிதாக
சேர்ந்த பிராணிகள் குறித்த கட்டுரை எழுதுகின்றார் அதில் ஒன்று ஒண்ட வந்த பிடாரிகள்
25. குடந்தையூர் தளத்தில் எழுதும் நண்பர் ஆர்.வி
சரவணன் சிறந்த நாவலாசிரியர், குறும்பட இயக்குனர் குறும்பட நடிகர் இவர் அடிக்கடி வெளியூர்
பயணிப்பதால் பயண அனுபவங்கள்ஏராளம் இதோ ஒன்று!
26. சாமானியனின் கிறுக்கல்கள் தளத்தில் சாம்
எழுதி வருகின்றார் அருமையான பதிவுகள் நிரம்பிக் கிடக்கும் தளம். நிறைய எழுதாமல் நிறைவாக
எழுதுபவர் பொறுமை எனும் புதையல் இங்கே!
27. தனிமரம் என்ற தளத்தில் எழுதிவரும் நண்பர்
நேசன் தன்னுடைய அனுபவங்களை தொடராக எழுதி பாராட்டு பெற்றவர் இவரது கவிதையும் கிறுக்கலும் இங்கே!
28. மனசு என்ற தளத்தில் நண்பர் பரிவை சே. குமார் எழுதும்
பதிவுகள் மனசோடு பதிபவை சிறுகதைகள் அருமையாக எழுதுவார் பரிசுபெற்ற கதை ஒன்றினை இங்கே
படியுங்கள் விழலுக்கு இரைத்த நீர்
29. மலர் தரு என்ற தளத்தில் எழுதிவரும் ஆசிரியர்
கஸ்தூரி ரங்கன் உலக சினிமாக்களை பகிர்கின்றார். சிறப்பான கட்டுரைகள் பலதும் எழுதி இருக்கின்றார் இவரைத் தெரியுமா?என்று கேட்கிறார் பதில் சொல்லுங்கள்
30. வசந்த மண்டபம் தளத்தில் கவிஞர் மகேந்திரன்
அருமையாக எழுதுகின்றார் இப்போது குறைத்துவிட்டார் இவர் எழுதிய அருமையான கவியொன்றுஇங்கே!
31. ஸ்கூல் பையன் என்ற தளத்தில் எழுதி வரும்
நண்பர் கார்த்திக் சரவணன் அருமையாக சினிமாவிமர்சனங்கள் அனுபவ பகிர்வுகள் சிறுகதைகள்
எழுதுவார் இவர் எழுதிய இந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது உத்தம வில்லன்
32. எனது எண்ணங்கள் என்ற தளத்தில் எழுதிவரும்
ஐயா தமிழ் இளங்கோ திருச்சியில் வசிக்கின்றார் சுவையாக எளிமையாக கருத்துக்களை பகிர்வார்
இவரது கட்டாய ஹெல்மெட்எதிர்ப்பு ஏன்? என்ற கட்டுரையை படித்துப்பாருங்கள்
33. எண்டர் + என்ற தளத்தில் ஸ்டாலின் வெஸ்லி
தொழில் நுட்ப குறிப்புக்கள் தருகின்றார் பிளாக்கரில் தலைப்புக்கள்எப்படி இருக்க வேண்டும்
இதோ
34. கடவுளின் கடவுள் தளத்தில் எழுதிவரும் பசி பரமசிவம்
தீவிர பகுத்தறிவு கொள்கையாளர். அக்கொள்கைகள் பதிவில் பிரதிபலிக்கும் இதோ ஒன்று! கங்கையை எரித்தவர்கள்
35. கவியாழி என்ற தளத்தில் கவியாழி கண்ணதாசன் எழுதிவருகின்றார்
காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றுமிவர் சிறந்த கவிஞர் ஒரு காலத்தில் தினம் ஒரு கவிதை
எழுதி மகிழ்வித்த இவர் உடல் நலக்குறைவினால் தற்சமயம் அதிகம் எழுதுவது இல்லை! என்னடா வாழ்க்கையிது என்கிறார்
36. செங்கோவி என்ற தளத்தில் எழுதிவரும் நண்பர்
சினிமா ஆர்வலர் சினிமா எடுக்க திரைக்கதை முக்கியம் அதற்கான சூத்திரங்களை சொல்லித்தருகின்றார் ஹிட்சகாக் பற்றிய ஓர் அலசல் இங்கே!
37. ஜெயதேவ் தாஸ் ஜெயதேவ் என்ற வலைப்பூவில் பல்சுவை
பகிர்வுகள் தருவார் விழிப்புணர்வு தரும் செய்திகள் நகைச்சுவையாக இருக்கும் இரண்டு கொள்ளையர்கள் கதை
38. அறிவியல் புரம் என்ற வலைப்பூவில் என் ராமதுரை
அறிவியல் செய்திகள் பகிர்கின்றார் இதோ எல்லாமே அதே நிலா
39. எப்படி ஏன் எதனால் என்ற தளத்தில் சதிஷ் சில நல்ல விஷயங்கள் கற்றுத் தருகின்றார்
40. முகுந்த் அம்மா தன்னுடைய தளத்தில் இப்போது வாக்கிங் செல்பவர்களை பற்றி சொல்கின்றார்
41. முத்துவின் புதிர்கள் என்ற தளம் குறுக்கெழுத்து போட்டி பிரியர்களுக்கு பிடிக்கும் இதோ
43. திருப்பதி
மகேஷ் தன்னுடைய பதிவில் இனி அந்த தவறு செய்யக்கூடாது என்கின்றார்
44. ஆடுமாடு என்ற தளத்தில் ஏக்நாத் ஆவிகளுடன்பேசுகின்றார்
45. பூனைக்குட்டி என்ற தளத்தில் ஆஹா யோகாஎன்று கலக்குகின்றார் இவர்
48. கரிகாலன் என் மனவெளியில் என்ற தளத்தில் எழுதியுள்ள
இந்த நிகழ்வு மனதை அப்படியே பிழிகின்றது
49. எழிலாய் பழமை பேசி என்ற தளத்தில் பழமை பேசி தன் தந்தை பற்றி பகிர்ந்து கொள்கின்றார்
50. மை மொபைல் ஸ்டுடியோஸ் தளத்தில் விஜயகுமார்
தான் எடுத்த சில படங்களை பகிர்ந்து கொள்கின்றார்
51. கண்ணம்மா என்ற தளத்தில் கார்த்திக் கண்ணம்மா பிரிவின் வலி பற்றி கவிதை எழுதுகின்றார்
53. அடுத்த வீட்டு வாசம் என்ற தளத்தில் வடகோவையூரான் நாவல்களை பகிர்ந்து கொள்கின்றார் பார்த்திபன் கனவு
57. கனவுத்திருடி என்ற வலைப்பூவில் எழுதி வரும் ஸ்ரீதேவி செல்வராஜன் டீவியில் பார்த்த சித்த மருத்துவம் பற்றி சொல்லி விழிப்புணர்வு ஊட்டுகின்றார்.
58. புன்னகையே வாழ்க்கை என்ற தளத்தில் எழுதும் பெய்க் நகைச்சுவையாக எழுதுவார் இவரது என் உச்சி மண்டையிலே! படித்தால் சிரிக்காமல் இருக்க முடியாது.
59 அனுராதா ப்ரேம் தன்னுடைய தளத்தில் கிராப்ட் ஒர்க் செய்ததை அழகாக போட்டோக்கள் மூலம் பகிர்கிறார்.
வலைச்சர வாரத்தை இனிதே இத்துடன் நிறைவு செய்கின்றேன்!
இன்றைய பட்டியல் பெரியது! ஆயினும் இந்த தளங்கள் புதியதாய் எழுதுவோருக்கு மிகவும் பயனளிக்குமென்று
நம்புகின்றேன். இன்னும் எண்ணற்ற தளங்கள் இருக்கின்றன. எடுத்துக் காட்ட ஆளில்லை!
உரமூட்ட பாராட்ட நிறை குறைகளை சொல்லிட பார்வையாளர்கள் கிடைத்தால் படைப்பாளியும்
அவன் படைப்பும் மிளிரும்.
இந்த வாரம் முழுக்க எண்ணற்ற படைப்பாளிகளின் தளங்களுக்கு
சென்று வாசித்து அவர்களின் படைப்புக்களை அடையாளம் காட்டிட உதவிய வலைச்சர ஆசிரியர் திரு
சீனா ஐயா அவர்களுக்கும் வலைச்சர குழுவினர் திரு தமிழ்வாசி பிரகாஷ் திரு யாதவன் நம்பி
அவர்களுக்கும் தொடர்ந்து வந்து கருத்துரைகளும் வாக்குகளும் இட்ட நண்பர்களுக்கும் மிக்க
நன்றிகள். மீண்டும் சந்திப்போம் இறைவன் சித்தம் இருந்தால்! நன்றி! நன்றி! நன்றி!
மேலும் வாசிக்க...
வலைச்சரம் ஆறாம் நாள் நம்பிக்கை ஊற்றுக்கள்!
வணக்கம் வாசகர்களே! நேற்றைய
பதிவினை படித்து ரசித்து கருத்திட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். வலைப்பூ துவங்கி எழுத
ஆரம்பித்திருக்கும் அனைவருக்கும் ஓர் குழப்பம் இருக்கும். அது தலைப்பு வைப்பதுதான்.
நமது இடுகை என்பது நம்முடைய குழந்தைமாதிரி! குழந்தைக்கு
பெயர் சூட்டுவது போலவே இடுகைக்கு பெயர் வைத்திருப்போம். பொருத்தமாகவும் இருந்திருக்கும்.
ஆனால் அந்த இடுகைக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
வலைப்பூ துவங்கி கொஞ்சம் பிரபலமானவராக இருந்தால்
தொடர் வாசகர்களைப் பெற்றிருப்பார். அவரைப்பொறுத்தவரையில் தலைப்புக்கு மெனக்கெடுவது
இரண்டாம் பட்சம் தான். ஆனால் புதியவர்கள் தம்முடைய இடுகைகளுக்கு வைக்கும் தலைப்புக்களில்
கொஞ்சம் கவனம் செலுத்தினால் வாசகர்களை கவரலாம்.
தலைப்புக்கள் நீண்டதாக இல்லாமல் எளிமையாக சின்னதாக
இருத்தல் அவசியம்.
அப்போதைய நேரத்துக்கு தகுந்தார்
போல தலைப்புக்கள் வைத்தல். மதுரைத் தமிழன், ராஜபாட்டை ராஜா போன்றோர் கச்சிதமாக தலைப்புக்களை
வைத்து வாசகர்களை இழுப்பர்.
நானும் சில வகை தலைப்புக்கள்
வைத்து வாசகர்களைப் பெற்றுள்ளேன். பங்குனி உத்திர திருவிழா பற்றிய பதிவொன்றிற்கு உலகநாயகனின்
திருமணநாள் என்று பெயர் வைத்தேன். வருகை அதிகமாக இருந்தது. ஆனால் இவ்வாறு தலைப்புக்கள்
மூலம் வாசகர்களை இழுத்துவர முடியுமே தவிர தக்க வைக்க முடியாது. அப்படி தக்கவைக்க உங்கள்
எழுத்துக்கள் தான் உதவும். நீங்கள் எழுதும் மொழிநடை, எளிமை, வாசகர்களை மதிக்கும் பண்பு
உள்ளிட்டவை உங்கள் வாசகர்களை தக்க வைக்கும்.
சுய அலசல், தன்னம்பிக்கை, எழுத்துப்பிழையின்றி
எழுதுதல் ஆபாசம் தவிர்த்தல் போன்றவை உங்கள் வலைப்பூவை மிளிரவைக்கும். வலைப்பூவில் உங்களுக்கு
இருக்கும் தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு பிளாக்கர் நண்பன் மிகவும் உதவியாக இருக்கும்.
முன்பு தொடர்ந்து எழுதிவந்த நண்பர் அப்துல் பாசித் இப்பொழுது எழுதுவதை குறைத்துவிட்டார்
ஏனோ தெரியவில்லை. வந்தேமாதரம் சசிக்குமார் அன்பைத் தேடி மென்பொருள் பிரபுவின் சுதந்திர மென்பொருள் ஆகிய
தளங்களும் தொழில்நுட்ப சந்தேகங்கள் போக்கி கொள்ள உதவும்.
இன்றைய அறிமுகப்பதிவாளர்களுக்கு
எடுத்துக் கொண்ட தலைப்பு தன்னம்பிக்கையாளர்கள். வாழ்க்கை நிறைய சோதனைகளை கொண்டது. காட்டாறாய்
சோதனைகள் குறுக்கிட அதில் போராடி நீந்தி வெற்றிபெறுபவர்கள் சொற்பமே! ஒருவனிடம் எல்லாம்
இழந்து போகலாம் ஆனால் நம்பிக்கை இழக்க கூடாது. நம்பிக்கை என்ற ஒளி இருப்பின் வாழ்க்கையின்
இருள் அகன்று வெளிச்சம் பிறக்கும். இணையத்தில் சில தன்னம்பிக்கை பதிவுகளை காண உள்ளோம்.
1.
தன்னம்பிக்கை
என்ற தளத்தில் தன்னம்பிக்கை கட்டுரைகள் பல எழுதி வந்த கவுதம் இப்போது எழுதுவது இல்லை!
இவர் கண்ணதாசன் வாழ்வில் தன்னம்பிக்கை பற்றி சொல்கிறார்
2.
சிந்தனைத்துளிகள்
தளத்தில் எழுதிவந்த பாலாஜி சரவணனும் பதிவுகள் எழுதுவது இல்லை! அவரது தன்னம்பிக்கை கட்டுரை
3.
பாண்டியனின்
வலைப்பதிவு என்ற தளத்தில் சிவகிருஷ் தலைக்கணம் இல்லா தன்னம்பிக்கை பற்றி கூறுகின்றார்
5.
டேக்
ஆப் வித் நடராஜன் என்ற தளத்தில் வந்துள்ள ஒரு தன்னம்பிக்கை தமிழரின் கதையை படித்தால்
நெகிழ்ந்துவிடுவீர்கள்!
6.
முகமூடி
என்ற தளத்தில் சோமசுந்தரம் சில தன்னம்பிக்கைஊட்டும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்கின்றார்
இவரும் இப்போது எழுதுவது இல்லை
7.
மணிராஜ்
என்ற தளத்தில் எழுதி வரும் வலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி அவர்கள் தன்னம்பிக்கை தித்திப்பு
தத்துவங்களை அழகாக பகிர்கின்றார் இங்கே!
8.
குருகுலம்
என்ற தளம் ஆன்லைனில் இலவசமாக் டி.என்.பி.சி டி.இ.டி பி.ஜி. டி.ஆர்.பி தேர்வுகளுக்கு
செல்பவர்களுக்கு வகுப்பு எடுக்கின்றது. இந்த தளத்தில் வந்த ஓர் தன்னம்பிக்கை சம்பவம்
9.
லைப்
மச்சி என்ற தளத்தில் எழுதிவந்த சிவப்பிரகாஷ் தற்சமயம் எழுதுவது இல்லை. அந்த தளத்தில்
சில தன்னம்பிக்கை கதைகள்
10. தென்றலின் வீதி என்ற தளத்தில் எழுதிவந்த
சங்கர் நீதிமாணிக்கம் தன்னம்பிக்கைவளர்த்துக்கொள்ள தரும் கட்டுரை இது!
11. தமிழ்ப் பேரண்ட்ஸ் தளம் குழந்தைவளர்ப்புக்கான
ஆலோசனைகள் வழங்குகின்றது. இந்த தளமும் தற்சமயம் இயங்குவது இல்லை! வளரும் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை வளர கற்றுக்கொடுக்கிறது
12. இ தூத்துக்குடி என்ற தளத்தில் நொண்டி விளையாட்டு எவ்வாறு தன்னம்பிக்கையை தருகின்றது என்று சொல்கிறார்கள்
13. அறுசுவை சமையல் களஞ்சியம் என்ற தளத்தில்
பிரேமா பாஸ்கர் தன்னம்பிக்கை கதை ஒன்றினை பகிர்கின்றார்
15. கிருஷ்ணாலயா என்ற தளத்தில் எழுதிவரும் நண்பர்
ரவி தன்னம்பிக்கை எதிர்மறை எண்ணங்கள் பற்றி கூறுகின்றார்
16. மேலத்தெரு- கொடிநகர் தளத்தில் வந்துள்ள இந்த நம்பிக்கை மனிதரை அறிந்து கொள்ளுங்கள்!
17. நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலைபாதுகாப்பு
சங்கம் என்ற வலையில் சாந்தி சோஷியல் சர்வீஸ் பற்றி சொல்வது நம்பிக்கை அளிக்கின்றது.
18. துளசிதரன் தில்லை அகத்து என்ற தளத்தில் எழுதிவரும்
நண்பர்கள் துளசிதரன் மற்றும் கீதா அவர்கள் பல்சுவை தகவல்களை பகிர்வர். குறும்படங்கள்
பல எடுத்துள்ளனர். அவர்களின் தன்னம்பிக்கை பதிவு நமது சக பதிவரின் தாயாரின் தன்னம்பிக்கை இது.
19. கரந்தை ஆசிரியரான திரு ஜெயக்குமாரின் ஒவ்வொரு
பதிவுகளும் பொக்கிஷம். வாழ்ந்து சாதித்த சாதனைமனிதர்களை தனக்கேயுரிய பாணியில் இவர்
அறிமுகம் செய்யும்விதம் ரசிக்கவைக்கும் ஹாரிபாட்டர். கதையின் எழுத்தாளார் தான் சந்தித்த
சோதனைகள சாதனையாக மாற்றியவிதம் இங்கே!
20. ஜானகி மணி என்ற தளத்தில் எழுதிவந்த டி.ஆர்
சுமதி நான்கு பதிவுகளுடன் நிறுத்திவிட்டார். அவர் தனக்கு ஏற்பட்ட ஓர் சம்பவத்தை விவரிக்கிறார்
21. குழலின்னிசை தளத்தில் எழுதி வரும் யாதவன்
நம்பி அவர்கள் ஒரு சிறு செய்தியைக் கூட கவிதையாக்குவதில் வல்லவர். தினகரனில் வந்த ஓர்
நம்பிக்கை வாசகம் இந்த கவிதையை தந்திருக்கிறது
22. கதம்ப உணர்வுகள் தளத்தில் எழுதி வருகின்றார்
மஞ்சுபாஷினி சம்பத் குமார் முன்பெல்லாம் நிறைய எழுதியவர் தற்போது குறைவாகவே எழுதுகின்றார்.
இவர் பதிவில் தேஜஸ்வினி யின் நம்பிக்கை!
23. இது தமிழ் என்ற தளத்தில் செப்டம்பர் 11ல்
அமெரிக்காவில் இரட்டை கோபுரம்சரிந்த கதையும் அவர்கள் நம்பிக்கை உயிர்த்தெழுந்ததையும்
விவரிக்கிறார் லதா
24. கவிதாயினி சசிகலாவின் வலைப்பூ தென்றல். இதில் நம்பிக்கை குறித்து அவரது கவிதையை ரசியுங்கள்!
25. மதுரை சரவணன் அவர்கள் வகுப்பறையில் மாணவர்களுக்கு
பாடம் கற்பிக்க கற்றுத்தரும் வழிமுறைகள் எதிர்காலம் மேல் நம்பிக்கை கொள்ளவைக்கிறது.
இவரது கவிதை நம்பிக்கை
26. from Bala’s desk என்ற தளத்தில் இலக்கிய
பீடத்தில் தான் எழுதிய ஆடிட்டர் NRK யின் கதையை பகிர்கின்றார் இவர்.
27. என்னில் உணர்ந்தவை தளத்தில் எழுதி வரும்
காயத்ரி தேவியின் எழுத்துக்கள் எளிமையானவை அதே சமயம் வலிமையானவை கேன்சர் பாதித்த ஒருவரை
மீட்டெடுத்ததை சொல்கிறார் இங்கே! எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா?
என்கிறார்
28. பிருந்தாவனமும் நொந்த குமாரனும் என்ற தளத்தில்
எழுதிவரும் ஜாக்கி சேகர் தன் வாழ்க்கையில் எத்தனை சோதனைகளை கடந்து இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறார்.
இந்த பதிவைப் பாருங்கள்!
29. தேவியர் இல்லம் வலைப்பூவில் எழுதிவரும் ஜோதிஜி
அவர்கள் ஓர் தன்னம்பிக்கை மனிதர். இதுவரை ஐந்து மின் நூல்கள் வெளியிட்டுள்ளார். பின்னலாடைத்
தொழிலில் ஈடுபட்டுவரும் அவரது அனுபவங்கள் பதிவுகளாகின்றன நமக்கு பாடங்கள் ஆகின்றன
30. உயிர்மொழி என்ற தளத்தில் வந்துள்ள இந்த மனதைத் தொடும் கவிதை உங்கள் பார்வைக்கு
பதிவுகளை படிக்கையில் உங்கள் மனதிலும் நம்பிக்கை ஊற்றெடுக்கிறது இல்லையா? ஊற்றெடுத்தால் வறண்டு கிடந்த கிணற்றில் தூர் வாறி நீர் சுரக்க வைத்த திருப்தி கிடைக்கும் எனக்கு! துவளாமல் துணிவோடு நம்பிக்கையோடு உயிர்த்தெழுங்கள்! உலகம் உங்கள் வசமாகும். நாளை சந்திப்போம்! உங்கள் கருத்துக்களை பகிருங்கள்! நன்றி!
மேலும் வாசிக்க...