07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, September 1, 2007

பல பதிவர்களில் சில பதிவர்கள்…

‘ஆணி புடுங்குற இடத்தில எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க; அப்படி ரொம்ப தமாஸா இருந்தது உங்க பதிவு.’

‘சிரிச்சி சிரிச்சி வயிறு வலிச்சிருச்சி.’

இப்படியெல்லாம் சில பதிவுகளுக்குப் பின்னூட்டம் பார்த்த போது இந்த மக்கள் ரொம்ப ஓவரா ரியாக்ஷன் கொடுக்கிறாங்களா, இல்ல நமக்குத்தான் நகைச்சுவையுணர்வு இல்லையோன்னு ஒரு சந்தேகம் இருந்துக்கிட்டே இருந்தது. அதை முதலில் உடைத்தது வரவனையின் ட்ரவுசர் பாண்டி ரவுசுதான். அன்னைக்கி தனியா உக்காந்துகிட்டு திடீர்னு இருந்தாப்போல சிரிச்சதைப் பார்த்து பயந்துபோய் தங்கமணி என்னன்னு பதறிப் போய் ஓடி (?) வந்து கேட்டது இன்னொரு கிரியாஊக்கியா செயல்பட்டுது. ஆனா இப்ப, அப்படி இருந்த வரவனையான் இப்படி ஆயிட்டாரேன்னு ஒரு வருத்தம்தான்.


அங்க ஒண்ணு இங்க ஒண்ணுன்னு இருந்துகிட்டு இருந்த நகைச்சுவைப் பதிவுகள் திடீர்னு வைகை ஆத்து வெள்ளம் மாதிரி இப்பல்லாம் கரை புரண்டு ஓடுதுன்னா அதுக்கு (எனக்குத் தெரிந்தவரை) இரண்டு குழுக்கள் காரணம். ஒண்ணு – வ.வா.ச. அடுத்தது பா.கு. –அதாங்க பாசக்காரக் குடும்பம். அதிலும் செலக்டிவா சொல்லணும்னா – மொதல்ல - அபி அப்பா. எந்தப் பதிவைத் தேர்ந்தெடுத்து இங்க கொடுக்கலாம்னு நினச்சா அனுமார் வால் மாதிரி நீண்டுகிட்டு போகுது. சும்மா சொல்லக் கூடாது மனுஷனை – ரொம்பவே இயல்பான நகைச்சுவை. பிடிச்சதில இருந்து ரெண்டே பதிவுகள்:
பாரதிக்கும் பாரதமாதாவுக்கும் என்ன பிரச்சனை?

துபாயில் 1 மணி நேரம் டைம் பாஸுக்கு 2 திர்காம்!!! – நல்ல ‘வாலுத்தனம்’ இந்தப் பதிவு. அவரது நடராஜும் இதுபோன்ற நகைச்சுவையுணர்வோடு அபியோடு சேர்ந்து வளர வாழ்த்துக்கள்.

பாசக்காரக் குடும்பத்தின் தானைத்தலைவி, கொ.ப.ச., அம்புஜம் மாமியின் ஏஜண்ட் – all rolled into one – கண்மணி. இருக்கிறதில பிடிச்சதுன்னா, மாமி கண்மணியின் ரங்கமணிகூட ஸ்கூட்டர்ல போய்..பெரியார் சிலைகிட்ட .. அந்தப் பதிவுதான். (பதிவின் லின்க் கிடைக்கலை; சொன்னால் போட்டுரலாம்சொன்னாங்க; போட்டாச்சு !) ஆனா மொதல்ல படிச்சு எங்க குடும்பம் இம்ப்ரெஸ் ஆனது - ச்சுப்பிரமணிக்கு என்ன இனிஷியல்?

ஆனந்தம் காலனியில் அல்வாத் திருடன்.....இதுவும் அவரின் ஒரு நல்ல நகைச்சுவைப்பதிவு.


அடுத்து பாசக்காரக் குடும்பத்தின் இளையமகன், செல்லப்பிள்ளை குசும்பன். இவரது கடைசிப் பதிவு சரியான நேரத்தில் வந்து இன்னும் சக்கைப்போடு போடும் பதிவு: சாதி மத சண்டைகளுக்கு எதிராக தமிழ் பதிவர்களே ஒன்று சேருங்கள்.


நகைச்சுவையில் இப்படி தூள் கிளப்பும் மக்கள்ஸ் இப்போ நிறைய வந்துக்கிட்டே இருக்காங்க. ரொம்ப சந்தோஷமான காரியம் இது. லைட் ரீடிங் அப்டின்னு சொல்றது மாதிரியான பதிவுகள் பதிவுலகத்துக்குத் தேவையான ஒரு ventilation. இறுக்கமான சூழலில் தென்றலாய் வரும் இப்பதிவுகள் மேலும் பெருகட்டுமே!

தலைப்பில் சொன்னது மாதிரி பலர் இருந்தாலும் சிலரைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். காரணம் தெரியவேண்டுமானால் என் வலைச்சர முதல் பதிவில் என்னைப் பற்றி நானே சொல்லியுள்ளதை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள் ...



இன்னும் வருவேன் (என்று நினைக்கிறேன்!)…….

5 comments:

  1. //வரவனையின் ட்ரவுசர் பாண்டி ரவுசுதான். //

    //ச்சுப்பிரமணிக்கு என்ன இனிஷியல்?
    //

    //
    ஆனந்தம் காலனியில் அல்வாத் திருடன்.....//

    //சாதி மத சண்டைகளுக்கு எதிராக தமிழ் பதிவர்களே ஒன்று சேருங்கள்.//

    இணைப்பு வேலை செய்யவில்லை. ( 404 Error-Page Not Found)

    ReplyDelete
  2. // சரி என்ன பண்ணுறது. அதுல இந்த வாரம் ஆசிரியர் வாராமாம். "கிழிஞ்சது லம்பாடி லுங்கி" ( லம்பாடிகள் என்போர் ஜிப்சிகள், அவர்களின் உடை பல்வேறு ஒட்டுத்துணிகாளால் தைக்கப்பட்டிருக்கும் ) . வாத்தியானுங்கன்னா எனக்கு ஜென்ம பகை, எதோ கூட சேர்ந்து நம்ம ரேஞ்சுக்கு யங்கா இருக்காருன்னுதான் தருமியை கூட ஏத்துகிறேன். எனக்கு பிடித்தது நகைச்சுவை மட்டுமே , காரணம் முன்னும் இப்பவும் போதுமான சோதனைகளை பார்த்துவிட்டதால். சிரிப்பு ஒன்றுதான் மருந்து இடுக்கண் வருங்கால் மட்டுமல்ல இடுக்கண்ணை கண்டால் கூட சிரிக்கவேண்டும் . சரி ஒரு வாரம் என் பதிவுகளை படிப்பீர்கள் என்று நம்புகிறேன். வாங்க கும்மலாம் //


    நாளைக்கு வரப்போகும் பதிவு. உங்கள் மன வருத்தம் போக்கப்படும். வாரம் முழுவதும்....

    ReplyDelete
  3. அடுத்து பாசக்காரக் குடும்பத்தின் இளையமகன், செல்லப்பிள்ளை குசும்பன்.

    யப்பா எல்லாம் பார்த்துக்குங்க பார்த்துகுங்க நான் இளையமகன் இளையமகன் இளையமகன்(சின்னபுள்ளன்னு அர்த்தம்)...யாரும் எனக்கு வயசாச்சுன்னு சொன்னீங்க தருமி சார் அடிப்பார்:)))

    ரெம்ப நன்றி தருமி சார்:))

    ReplyDelete
  4. உரல் சேர்த்ததுக்கு நன்றி.
    ஆனாலும் எங்களை விட்டு புதியவர்களைச் சொல்லியிருக்கலாம்.
    குசும்பன் கவனிக்கத் தக்கவர்தான்

    ReplyDelete
  5. கண்மணி said...

    "குசும்பன் கவனிக்கத் தக்கவர்தான் "

    அக்கா இதில் உள் குத்து ஏதும் இல்லையே????:))))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது