07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 3, 2007

நான் ரவா உப்புமா மாதிரி!

'அழகன்' படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் பானுப்பிரியாவின் மேடை ஆடல்பாடலை பாராட்ட வரும் மம்முட்டி மேடையில "நான் ரவா உப்புமா மாதிரி"ன்னு பேச்சை ஆரம்பிப்பார். 'ஹோட்டல்-ல சரக்கு தீர்ந்துடுச்சுன்னா அவசரத்துக்கு ரவா உப்புமா போட்டு சமாளிப்பாங்க. நானும் அந்த மாதிரிதான். தலைமை தாங்க ஆளில்லைன்னு என்னை பிடிச்சுகிட்டு வந்துட்டாங்க. ஆனா ரவா உப்புமாவும் சில சமயம் நல்லா இருக்கும்'பார். இப்ப நானும் அதே மாதிரிதான்.


நான் தான் வழக்கமா பொன்ஸ் அக்காவுக்கு போன் பண்ணியோ மெயில் அனுப்பிச்சோ ப்ளாக்-ல இந்த பிரச்சினை என்ன தீர்வுன்னு கேட்டுகிட்டிருப்பேன். ஆனா திடீர்னு வராது வந்த மாமணி மாதிரி அவங்க கிட்டயிருந்து கூகிள்-ல அழைப்பு!

"இந்த வாரம் ப்ரீயா இருக்கீங்களா?" பொன்ஸ் அக்கா கேட்டார்.

"இதென்ன கேள்வி... நீ எப்ப வேலை பார்த்துக்கிட்டிருந்த?" என்னைப் பார்த்துக் கேட்டான் தம்பி புருனோ.

"அடுத்த வாரம் எழுத ஆள் தேவை... குறுகிய காலம்... அதான் உங்களைக் கேட்கலாம்னு நினைச்சேன்."

"சரி, பழைய வலைச்சரங்கள் பார்த்துட்டு சொல்றேன்." என்றேன்.
"ஏற்கனவே உன்னையும் கம்ப்யூட்டரையும் பிரிச்சு வைக்க வேண்டியதாயிருக்கு. இந்த லட்சணத்தில் வலைச்சரம் ஒரு வாரத்துக்கா...சுத்தம்.. நீ கிட... நான் போய் சாப்பிடப்போறேன்" என்று கிளம்பிவிட்டான் தம்பி.

என்னுடைய பழைய புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான், நான் இந்த வலைப்பதிவர் குடும்பத்துக்குள் வந்து ஓராண்டு நிறைவடைகிறதுங்கிறதே எனக்குத் தெரிந்தது. அதை ஒட்டி ஒரு பதிவு போடனும்னு நினைச்சுகிட்டு இருந்தப்போதான் பொன்ஸக்காவோட அழைப்பும் வந்தது.. சரி, நம்மளோட ஆண்டுவிழாவை வலைச்சர வாரமா அறிவிச்சிருக்காங்க போலிருக்குன்னு சந்தோசமா ஒத்துக்கிட்டேன்.

ஒப்புக் கொண்டதும், பழைய சரங்களையெல்லாம் ஒருதடவை முகர்ந்து பார்த்தேன். எல்லாம் நல்லாத் தான் கட்டியிருக்காங்க. சரி, நம்முளும் ஆட்டத்தை ஆரம்பிப்போம்னு வந்துட்டேன். இந்த சரம் மணக்கிறதும் இல்லாததும் நான் கட்டுற பூக்களைப் பொறுத்துதான் இருக்கு. இப்பவெல்லாம் நார் வச்சு யாரும் கட்டுறதில்லைங்கிறதால் ஒரு நூலாக இருந்து என் பணியைத் தொடங்குகிறேன். நிச்சயம் முப்புரி நூல் இல்லை...

தொகுப்பாசிரியர் பணி நமக்கொன்னும் புதுசு இல்லைன்னாலும், மேசையில கிடைக்கிறதை தொகுப்பதற்கும், தேடித் தேடித் தொகுப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. நமக்குப் பிடிச்சு படிச்சதை எல்லோரும் குறிச்சு வச்சிருப்போமுன்னு சொல்ல முடியாது. ஏதோ கொஞ்சம் "notable sites"னு ஒரு பட்டியல் வச்சிருக்கேன். ஆனாலும் அதில் வலைப்பூக்கள் கொஞ்சம் தான். மற்றதெல்லாம் படிச்சு வாழ்த்திட்டு வந்ததோட சரி. தேடிப் பிடிச்சு தொகுக்க முயல்கிறேன்.
ஒரு பேராசிரியருக்குப் பிறகு இந்த மாணவனுக்குக் கிடைத்திருக்கிறது வாய்ப்பு! எல்லாத் தரப்பிலயும் தேர்ந்தெடுக்குறதுக்கு முன்னாடி உங்க கிட்ட இருக்குற சரக்கைக் கொஞ்சம் காட்டுங்கன்னு வலைச்சர வழிகாட்டியில் சொல்லியிருக்காங்க...அதனால் இப்போ என் பக்கம் இருந்து ஆரம்பிக்கிறேன். இந்தியாவில் இருந்துகிட்டு இரவு நேரத்தில்தான் பதிவுகள் போடுறேன்கிறதால பல பதிவுகள் காலைக்குளேயே இன்றைய இடுகைகளில் கீழ போயி, கவனம் பெறாமல் போயிடுறது உண்டு. அதனால அதிகம் படிக்கப்பட்ட பக்கங்களைவிட எல்லோரும் படிக்கணும்-னு நான் நினைச்சு பலர் படிக்கவிட்ட பதிவுகளைத் தொகுத்து தரலாம்-னு நினைக்கிறேன்.
ண்மையிலதான் ஆங்கிள், லென்சுன்னு பிலிம்/ டிஜிட்டல் காட்டுறாங்க தமிழில் புகைப்படக்கலை பதிவுல...ஆனா வலையுலகுக்கு வந்து நாலாவது நாள் நான் போட்ட பதிவு- லோ ஆங்கிள் மற்றும் பயன்பாடுகள் பற்றி!

ராக் போர் நடந்த போது, ரத்தக்கொதிப்பு(!)ல நான் எழுதின ஒன்னுக்குக் கீழ ஒன்னு(அதாங்க கவிதை). ரசனைக்காக வைரமுத்து குரல்-ல படிச்சுப் பார்க்கிறது உங்க சாமர்த்தியம். ஆனால் இது அனைவரின் குரலாய் இருக்கணும்கிறதுதான் என்னோட ஆசை.

நான் ரொம்ப ரசிச்ச ஆயிரத்தில் ஒருவனை திரையில் பார்த்த அனுபவம்.

மெரிக்காவோட நிமிட்சு கப்பல் வந்து போனப்போ, அதோட சேர்ந்து கப்பலேறிப்போன நம்ம மானத்தைப் பற்றி எங்கள் தங்கம் பாணியில எங்களோட 'இனநலம் இசைக்குழு' உருவாக்கின கதாகலட்சேபம்.
பலரால் படிக்கப்பட்ட கட்டுரைகளையும் இப்பவே தந்தால் பழைய நிலைமைதான் மேற்கண்ட கட்டுரைகளுக்கும்!

அதனால் அது இன்னொரு சமயத்தில்...

யாம் பெற்ற இன்பம் நீவீரும் பெற என்னுடைய தொகுப்பு தொடரும்.....

இது அறிவிப்பு அல்ல;
எச்சரிக்கை!
பொறுப்பாசிரியருக்கு:பொன்ஸ்அக்கா, ஒரு கட்டுரை போட்டுட்டேன். இன்னும் ரெண்டுதானே பாக்கி....!
பதிப்பாசிரியருக்கு: பதிப்புல எந்த பாதிப்பும் இல்லாம இருந்தா சரி!

9 comments:

  1. கலக்குங்கள் பிரின்ஸ் !

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் பிரின்சு!

    ReplyDelete
  3. நன்றி பொன்வண்டு!

    ReplyDelete
  4. தருமி யாருமே படிக்கல அப்படின்னு சொல்லிட்டுப்போயிட்டார்..

    அதனால அட்டெண்டென்ஸ்..போட்டுக்கோங்க..

    அப்புறம்..பெரியார் வரதா சொன்னாங்க..

    எப்போ அப்படின்னு சொன்னா கருப்பு சட்டை மாட்டிக்கிட்ட தயாராகிடுவோம்ல...

    ReplyDelete
  5. முந்திரி பருப்பு, நெய், கிஸ்மிஸ் எல்லாம் நிறைய போட்டு கிண்டுங்க

    ReplyDelete
  6. ஐயா கலக்குங்கள்! உப்புமான்னும் சொல்லலாம், நிலைய வித்துவான்ன்னும் சொல்லலாம் :-) ( அந்த கால வானொலி கேட்டவர்களுக்கு இது
    புரியும்)

    ReplyDelete
  7. ரெண்டுநாளா அறிமுகத்தையே வெச்சிக்கிட்டு உதார் உட்டுக்கினு இருந்தா எப்படி தலை? பதிவு போடு...

    ReplyDelete
  8. உப்பாமா ஊசிப்போச்சு! சீக்கிரம் வாங்க

    ReplyDelete
  9. //உப்பாமா ஊசிப்போச்சு! சீக்கிரம் வாங்க//

    -இன்னொரு உப்புமா ரசிகன்.

    விளம்பரம்: http://kasilingam.com/?item=179

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது