வண்ணம் தந்த காலம், வரப்போகும் குசும்பு
பக்தி மாலை, தமிழ்மாலை, சிறுகதை மாலை, கதம்பமாலை, கவிதை மாலை என வண்ணமாலைகளைத் தொடுத்து கோவி.கண்ணன் தமிழ் வலைப்பூக்களை வலைமாலையாக கட்டித் தந்து விட்டார்.
உதாரணக் கவிதைகளும் தமிழாய்வுக் கட்டுரையின் சாரமும் சிறப்பைக் கூட்டின.முக்கியமான தவறவிடக்கூடாத இடுகைகளை அடையாளம் காட்டித் தொகுத்ததுள்ளார்.
தொடுப்புகளைத் தந்ததோடு அருமையான விளக்கவுரைகளும் தந்து விரிவான கட்டுரைகளாகவே சரத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி.
இன்று முதல் வலைச்சரம் தொடுக்க வருகிறார் வலையுலகின் புதிய குசும்பன். கொலைவெறிக் கவிஜர்கள், அனானிகள் முன்னேற்றக் கழகம், கும்மியடிப்போர் மும்னேற்றக் கழகங்களின் தீவிர உறுப்பினரான குசும்பன் வலைச்சரத்தில் என்ன குசும்பு வைத்திருக்கிறாரோ? வாருங்கள் அவரையே கேட்போம்.
|
|
//தொடுப்புகளைத் தந்ததோடு அருமையான விளக்கவுரைகளும் தந்து விரிவான கட்டுரைகளாகவே சரத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி.//
ReplyDeleteவாய்ப்பளித்த வலைச்சரம் குழுவினருக்கும் நன்றி !
வாங்க அவரையே கேக்கலாம்..ஹ்ம்.. நல்லாருக்கே இது.... ( இப்ப மலரும் மொட்டும் ல அடுத்ததா வரப்போரவர் வலைச்சரம் தொடுக்கறவரா வேடமிட்டு வந்திருக்கார்... என்ன சொல்லப்போறாருன்னு கேட்போமா? அப்படிங்கறமாத்ரி)
ReplyDeleteமுத்துலெட்சுமி said...
ReplyDeleteவாங்க அவரையே கேக்கலாம்..ஹ்ம்.. நல்லாருக்கே இது.... ( இப்ப மலரும் மொட்டும் ல அடுத்ததா வரப்போரவர் வலைச்சரம் தொடுக்கறவரா வேடமிட்டு வந்திருக்கார்... என்ன சொல்லப்போறாருன்னு கேட்போமா? அப்படிங்கறமாத்ரி)"
மறைமுகமாக மலரும் மொட்டுவில் வரும் குழந்தைகளை போல் இருக்கிறேன் என்று நீங்க சொல்லவருவது எனக்கு புரிகிறது:)))