07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, September 8, 2007

நான் பரிமாறிய பதார்த்தங்கள்-2

நான் பரிமாறிய பதார்த்தங்களின் முதல் அமர்வை ரசித்திருப்பீர்கள் என்று மூட நம்பிக்க கொள்கிறேன். (ஏம்ப்பா இன்னும் யாரும் படிக்கலையா? இதுக்குத்தன் சனி, ஞாயிறுகள்ல பதிவு போடக்கூடாதுன்னு சொல்றது.) சரி, அடுத்த அமர்வு!


மலேசியாவைச் சேர்ந்த சுயமரியாதைக்காரர் அ.சி.சுப்பையா எழுதி அன்றைய அரசுகளால் தடை செய்யப்பட்ட "சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்"- இந்துமதக் கடவுள்களை கூண்டில் நிறுத்திய அற்புதமான நூல். அதைப் போன்று நல்ல கற்பனை வளத்துடன் எழுதப்பட்ட சிந்தாநதியின் படைப்பு. நான்கு பாகமாக இணையத்தில் (1) (2) (3) (4) வந்த இந்த சிறுகதை, உண்மை மார்ச் 1-15, 2007 இதழில் வெளியிடப்பட்டது.


குழலியின் 'பெரியார்' திரைப்பட விமர்சனம் சுருக்கி "உணர்ச்சி காவியப் பதிவு" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.(உண்மை மே 16-31, 2007). இது முழுமையாக விடுதலையிலும் வெளியிடப்பட்டது.


"அம்பலமானது கோக் பயங்கரம்" என்ற பவானந்தியின் கட்டுரைக்காக நாங்கள் செய்த அதிரடி ஆய்வு, அநேகமாக நான் பதிந்த முதல் வலைப்பூ இதுவாகத்தான் இருக்கும். இதுவரை சுமார் 42000 பேர் youtube-இல் பார்த்து அதிலும் அமெரிக்கர்கள் ஆங்கில கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்த வீடியோ காட்சி அடங்கிய பதிவு. (அவர் தனியாக வலைப் பதிய இருப்பதால் விரைவில் இந்தப் பதிவு என்னிடமிருந்து பிரியக்கூடும்.)

அந்தா இந்தா என்று ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த கோக் தடை விவகாரத்தை விரைவுபடுத்த வலியுறுத்திய "தலைமுறைய முடமாக்கும் குளிர்பானங்கள்" என்ற இந்தப் பதிவு வெளியிடப்பட்டபோது தவறுதலாக எழுதியவரின் பெயர் உண்மையில் விடுபட்டுவிட்டது.(உண்மை ஜூன் 16-31, 2007)

"நோ கமெண்ட்ஸ்" என்று லக்கி பதிவிட்ட இலங்கை ராணுவத்தின் ஒப்புதல் வாக்குமூலம்.

இவைதவிர.... பெரியார் பிஞ்சு இதழில் பயன்படுத்திய அண்ணன் பாலபாரதியின் படைப்பு.. என்ன செடி இது?

வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் என்ற வளரும் நகைச்சுவை எழுத்தாளர் மற்றும் கவிஞரின் ராமர் பாலம் குழுவினருக்குக் கடிதம் விடுதலை ஞாயிறு மலரில் வெளிவந்தது. (நேரில் ஆளைப் பார்த்தால் இவரா இப்படி எழுதுகிறார் என்று அய்யப்பட வைக்கும் அளவுக்கு அமைதியான முகம். ஆனால் அருமையான குணத்தவர் கவுதமன்)

சரி, இன்னும் 41 மணிநேரம் தான் இருக்கு... திங்கள் காலை 10 மணி வரை நேரமிருக்கு... விடமாட்டேன்... விடமாட்டேன், இந்த வாய்ப்பை!

1 comment:

  1. பார்ப்பனர்களின் இணைய சூழ்ச்சிகள் அம்பலமாகி வர எழுதும் அனைவர்க்கும் நன்றிகளையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    பி.ஜே.பி, வி.எச்.பி கும்பல் பெரிய பண பலத்துடன்,உலகெங்கும் இந்து வெறித் தனம் வாழைப்பழத்தில் ஊசி என்று சொல்வார்களே அது போன்று செய்து வருகிறார்கள்.
    இதற்குப் பெரிய பக்க பல்ச் சூழ்ச்சிகள் உள்ளன்.பி.ஜே.பி ஆட்சியிலே செய்துள்ள அடிப்படை வேலைகள் அநேகம்.
    விடாது வாரி வீசுவோம்! உண்மைகளை உலகே உணரச் செய்வோம்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது