07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 7, 2007

நன்றி அறிவிப்பு

ஒரு வாரமா என் தொல்லைகளைப் பொறுத்தருளிய வலையுலக மக்களுக்கு என் நன்றி. வலைச்சரத்தில் இதுவே என் கடைசி இடுகை. கடைசி இடுகைன்றதால கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு, கொஞ்ச நாளா பதிவுகள் பொடுவதை அறிவித்துவிட்டோ அறிவிக்காமலோ நிறுத்தி வைத்திருக்கும் பதிவர்களைத் தொகுக்க எண்ணம். இவங்க எல்லாம் மறுபடியும் எழுத ஆரம்பிக்கணும்ன்றதுதான் என்னோட ஆசை.

முதலில் ஒரு கூட்டு வலைப்பதிவான சக்தி/ - இதை மதி, பத்மா, செல்வநாயகி ஆகிய மூவரும் இணைந்து ஆரம்பித்து நடத்தி வந்தனர். இந்த வருடத் துவக்கத்தில் செல்வா எழுதிய கற்றதனால் ஆய பயனென்ன தொடரின் இறுதிப் பதிவோடு நிற்கிறது இவ்வலைப் பதிவு. தொடர்ந்தால் மகிழ்வோம்.

அடுத்த பதிவு எழுத்தாளர் இரா.முருகனின் வேம்பநாட்டுக் காயல். முருகன் அவர்கள் தனது லண்டன் அனுபவத்தை எடின்பரோக் குறிப்புகள் என்ற தலைப்பில் தொடராக எழுதி வந்தார். இத்தொடர் 19 பாகங்கள் வந்த நிலையில் மேற்கொண்டு ஏதும் பதிவுகள் இல்லை.

அடுத்தது எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் - சிங்கப்பூரிலிருக்கும் இவர் பற்றிய குறிப்புகள் இங்கே. இவரும் சென்ற வருடம் முதலே அதிகம் பதிவெதுவும் போடவில்லை.

இருவருமே வலைப்பூவில் மட்டும் எழுதுபவர்கள் அல்ல. அச்சு ஊடகத்திலும் பெயர் பெற்ற எழுத்தாளர்கள். - தங்களுடைய மற்ற பணிகளுக்கு நடுவே வலைக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் வலையில் மட்டுமே தமிழ் படிக்கக் கிடைக்கும் வெளிநாட்டில்/ஊரில் வாழ்பவர்களுக்கு மிகப் பயனுள்ளதாய் இருக்கும்.

இன்னும் பலர் புதிதாய் வலைப்பதிவெழுத வரவேண்டும். வலையுலகிலிருக்கும் சில்லறைத்தனங்கள் ஒழிந்து ஆரோக்கியமான விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் நடக்க (இவை மட்டுமே நடக்க) வேண்டும் என்பது போன்ற பேராசைகள் நிறைய உண்டு எனக்கு. பார்ப்போம், எவையெல்லாம் கைகூடுகிறதென.

மீண்டும் ஒரு முறை வந்து படித்த, படித்துக் கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. இந்த வாய்ப்பை வழங்கிய பொன்ஸ், சிந்தாநதி ஆகியோருக்கும் என் நன்றி.

7 comments:

  1. லக்ஷ்மி

    தாமதமாக வாழ்த்து :)

    ReplyDelete
  2. ரொம்ப அட்டகாசமா வலைச்சரத்தைத் தொடுத்துட்டீங்க லக்ஷ்மி.

    உண்மையான மனங்கனிந்த பாராட்டு(க்)கள்.

    இரா.மு. அவர்களின் லண்டன் கட்டுரைகள் தினமணிக்கதிர்லே தொடர்ந்து வந்து முடிஞ்சிருக்கு.

    இங்கே அதைப் போட நேரமில்லையோ என்னவோ?

    நானும் நீங்க சொன்னவர்களைக் காணோமேன்னுதான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.

    ReplyDelete
  3. பிசியா இருந்தாலும் சரம் நல்லா தொடுத்திட்டீங்க லக்ஷ்மி ..

    ReplyDelete
  4. ரொம்ப சூப்பரா வலைச்சரத்தைத் தொடுத்திருந்தீங்க

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அய்யனார், முத்து, துளசி, சிவா - மனமார பாராட்டிய அனைவருக்கும் நன்றி. இன்னும் கூட சிறப்பாகச் செய்திருக்கலாம் - சில திசைதிருப்பல்கள் இல்லாதிருந்திருந்தால். ஹ்ம்ம்ம்... என்ன செய்ய, எல்லாம் எப்போது ஆட்டத்தில் உள்ள விஷயம்தானே? இன்னமும் அதிக மனப்பக்குவம் வேண்டியிருக்கிறது எரிச்சலின்றி இவற்றையெல்லாம் கடந்து போக. காலம் அதையும் நமக்கு வழங்குமென்றே நம்புகிறேன்.

    ReplyDelete
  6. லக்ஷ்மி, மற்ற பதிவுகளையும் படிச்சுட்டு வரேன். இருந்தாலும் இப்போது வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்ளுகிறேன்.:)))

    ReplyDelete
  7. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வல்லி அம்மா. படிச்சு முடிச்சுட்டுப் போகையிலும் மறக்காம உங்க கருத்தை சொல்லிட்டுப் போங்க.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது