திராவிட எக்ஸ்பிரஸ்
தமிழ்மணத்தில் திராவிடப் பதிவுகளுக்கு பஞ்சம் இல்லை. ஆனால் அதற்க்கான தேவை இருக்கிறதா என்றால் இருக்கிறது என்பேன். காரணம் திராவிடத்தை முழுதாக தெரியாதவர்கள் அவரை தவறாக புரிந்துகொள்ளக் கூடும் அதேபோல் திராவிடத்துக்கு எதிரான கருத்து சொல்பவர்கள் பெரியாரையும் தவராகவே விமர்சிக்கின்றனர் .. மொத்தத்தில் பெரியாரையும் திராவிடத்தையும் பிரித்துப் பார்க்க முடிவதில்லை.
அந்த வகையில் தமிழ் வலைப் பூவில் திராவிட பெரியாரிய சிந்தனைகளை பரப்புவோர் என்ற வகையில் பெரியார் தளம் ஒரு மிகச்சிறந்த பணியாற்றுகிறது, தமிழச்சியின் வலைப்பூவில் இப்போது நடக்கும் சில ஜாலி சண்டைகளை தவிர்த்துப் பார்த்தால் பெரியார் எழுத்துக்களை வலையில் தொகுக்கும் சிறந்த பணியைச் செய்கிறார்
திராவிட தமிழர்கள் வலைத்தளம் திராவிடம் பற்றிய புரிதலை வலைப்பூவில் பரப்ப முயல்கிறது ஆனால் சில காலமாக அது ஏன் செயல்பட வில்லை என்பதும் தெரியவில்லை. ஆரம்பத்தில் சில காலம் ஒன்னுமே தெரியாது என்பதுபோல் இருந்துவிட்டு இப்போது அடித்து அதகளம் செய்யும் சம்பந்தி
அவரது வலைப்பூ ஒரு திராவிடக் கதம்பம்.
ஆவேச கருத்துக்கள் அதை மிகக் கோபமான வார்த்தைகளில் சொல்லும் இவரை அந்த கோபமே தமிழ் மணத்தில் இருந்து வெளியேற்றியது ஆனாலும் வலையுலகில் என்றும் நினைவில் இருப்பார்.
மற்றும் லக்கிலுக், வரவணையான், போன்றவர்களும் திராவிடப் பதிவர்களே
|
|
//மற்றும் லக்கிலுக், வரவணையான், போன்றவர்களும் திராவிடப் பதிவர்களே//
ReplyDeleteஎங்களுக்கெல்லாம் ஒரு தொடுப்பு கொடுத்து இருக்க கூடாதா?
துடுப்பில்லாத ஓடமாய் ஆனோமே கிழுமாத்தூரரால்.... :-(((((