07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, November 1, 2007

தமிழீழ எக்ஸ்பிரஸ்

நேற்றே எழுதி போஸ்ட் செய்திருக்க வேண்டியது தவிற்கவியலாத காரணங்களால் எனது பதிவு இன்றும் காலம் தாழ்த்தி வருகிரது ....

தமிழ் வலைப்பதிவுகளில் புலி ஆதரவு அல்லது எதிர்ப்பு என கொண்டால் புலி ஆதரவுப் பதிவுகள் ஒரு சேர விடுதலைப் புலிகளை கண்மூடித் தனமாக ஆதரிப்பதையும் எதிர்க்கும் பதிவுகள் அதற்கான காரணங்களை மிகத் தெளிவாக வைப்பதும் இங்கே தவிற்க இயலாத ஒன்றாக இருக்கிரது. உண்மையில் புலிகளுக்கு ஆதரவாக எழுதுபவர்கள் அல்லது எதிர்ப்பவர்கள் தங்கள் மனநிலை , மட்டுமே கருத்தில் கொண்டு எதிர்ப்பாளர்கள் எடுத்து வைக்கும் காரணங்களை கொலைசெய்ய முயல்வது கொஞ்சம் எதிர்பார்க்காத சம்பவமாகவே இருக்கிரது.

அதே போல புலி ஆதரவாளர்கள்- புலி ஆதரவாளர்கள் என்பதை விட ஈழ விடுதலை ஆதரவாளர்கள் எனக் கொண்டால் அவர்கள் எதிர்க்க வேண்டியது சிங்கள பேரினவாத அரசையே அன்றி புலிகளை அல்ல. மேலும் இலங்கை முஸ்லிம்கள் எடுத்து வைக்கும் எந்த அடியும் நடுக்கோட்டிலேயே இருப்பது ஏன்?( அதாவது போராடவும் மாட்டோம் ஆனால் எங்களுக்கும் விடுதலை வேண்டும் விடுதலை கிடைக்கும் வரை சிங்கள அரசை ஆதரிப்போம் புலி எதிர்ப்பு பிரச்சாரம் செய்வோம் எனும் ஒரு சட்டிக்குள் நண்டு கதையாக இருக்கிரார்கள்.

இலங்கை முஸ்லீம்களும் தமிழ்தான் பேசுகிரார்கள் ஆனால் அவர்களை கேட்டால் எவரும் நான் தமிழன் என்று சொல்லுவதில்லை இலங்க முஸ்லீம் என்றே சொல்கிறார்கள் ( எனது அனுபவம்) தனது மதமே தனது அடையாளமாக காட்டிக்கொள்ள விரும்புவது ஏனோ?

ஆனால் இந்த தேன்கூட்டில் கை வைத்து வலைச்சரத்தை கொலைச்சரமாக ஆக்க ஆசை இல்லை எனக்கு

:)

இந்த ஈழ விடுதலை விவகாரம் எல்லாம் தள்ளி வைத்து பேரினவாத அரசுக்கு எதிராகவும் ஆதரவாகவும் எதப்பட்ட இந்த கட்டுரைகள் கொஞ்சம் சிந்திக்கவும் நிறைய செய்திகளையும் கொடுக்கின்றன. அதிகம் பார்வையில் படாத இவர்களின் பதிவுகள்

தனித்தனி கட்டுரைகளாக தருவதை விட அந்த வலைப்பூக்களையே அறிமுகம் செய்கிறேன் வாசித்துப் பாருங்கள்.... நாளை காலையாவது சரியான நேரத்தில் பதிவிட முயல்கிறேன் :P

அகதி

திரு

சத்தியக் கடதாசி

தமிழமுதம்

கருப்பியின் இந்த கட்டுரை

தேடல்சரம்

தகவல்.

5 comments:

  1. //மேலும் இலங்கை முஸ்லிம்கள் எடுத்து வைக்கும் எந்த அடியும் நடுக்கோட்டிலேயே இருப்பது ஏன்?( அதாவது போராடவும் மாட்டோம் ஆனால் எங்களுக்கும் விடுதலை வேண்டும் விடுதலை கிடைக்கும் வரை சிங்கள அரசை ஆதரிப்போம் புலி எதிர்ப்பு பிரச்சாரம் செய்வோம் எனும் ஒரு சட்டிக்குள் நண்டு கதையாக இருக்கிரார்கள்.//

    முஸ்லிம் மக்கள் ஏதாவதொரு தரப்பை எதிர்த்துப் போராடுவதை விட நடுவில் நிற்பது தமக்கு சாதகமானது என்று கருதலாம். மிகச்சிறுபான்மை இனம் ஒன்று எடுக்கக்கூடிய நல்ல முடிவு இதுதான். முஸ்லிம்கள் எல்லோரும் சிங்கள அரசைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதற்கில்லை. சிங்களப்பேரினவாதத்தின் மிக முதன்மை எதிரி முஸ்லிம்கள் தான் என்பது அவர்களுக்கு அல்லது அவர்களின் தலைமைக்கு மிக நன்றாகத் தெரியும். ஆயுதப்போராட்டத்துக்குள் முஸ்லிம்களையும் இறக்கிவிட்டால் மிகப்பயங்கரமான பின்விளைவுகள் ஏற்படும்.


    //இலங்கை முஸ்லீம்களும் தமிழ்தான் பேசுகிரார்கள் ஆனால் அவர்களை கேட்டால் எவரும் நான் தமிழன் என்று சொல்லுவதில்லை இலங்க முஸ்லீம் என்றே சொல்கிறார்கள் ( எனது அனுபவம்) தனது மதமே தனது அடையாளமாக காட்டிக்கொள்ள விரும்புவது ஏனோ//

    ஏனென்றால்,

    1917 (?) இல் இஸ்லாத்தைப் பின்பற்றிய தமிழர்களை சிங்களப்பேரினவாதம் தாக்கியபோது மற்றைய மதங்களைப் பின்பற்றும்/பின்பற்றாத் தமிழர்கள் சிங்களவர்களோடு சேர்ந்து நின்று பல்லாக்கிலெல்லாம் தூக்கப்பட்டார்கள்.

    தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் பல்வேறு சமூகங்களையும் சேர்ந்தவர்கள் புலிகளைக் காட்டிக்கொடுக்கும் வேலைகளில் ஈடுபட்டார்கள். இஸ்லாமியர்களும் ஈடுபட்டார்கள். புலிகளோ, இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் தமிழர்களை மாத்திரம் ஒரேநாளில் உடமைகளையும் பறித்து ஓட ஓட விரட்டிவிட்டு மற்றைய தமிழர்களை யாழ்ப்பாணத்தில் இருக்க ஆசீர்வதித்தார்கள். இதனை யாழ்ப்பாணத்தமிழர்கள் (மற்றைய மதங்களை பின்பற்றும்/பின்பற்றா) சும்மா இருந்து ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

    வரலாற்றில் இவை வெறும் இரண்டே உதாரணங்கள் தான்.
    ஆக மொத்தத்தில் மற்றைய மதம் பின்பற்றும்/பின்பற்றா தமிழர்கள் இஸ்லாத்தை பின்பற்றும் தமிழ் பேசுபவர்களை தம்முள் ஒருவராக கருத விரும்பவில்லை. அவர்களை தம்மிலிருந்து வேறான இனத்தவர் போலவே நடத்தினர்.

    ஆக, தமிழ் பேசும் இஸ்லாமியர்களை வேறு இனமாக்கி துரத்தியவர்கள் தமிழர்களே.

    முஸ்லிம் கள் தம்மை ஒரு தனித்த இனமாக மத அடையாளத்தை முன்னிறுத்தி இனம் காண்பார்களேயானால், அவர்கள் தனித்துவமான இனமே. இன அடையாளங்களை வெளியில் இருந்துகொண்டு ஒரு மக்கள் கூட்டத்தின் மீது திணிக்க முடியாது.

    ReplyDelete
  2. //இலங்கை முஸ்லீம்களும் தமிழ்தான் பேசுகிரார்கள் ஆனால் அவர்களை கேட்டால் எவரும் நான் தமிழன் என்று சொல்லுவதில்லை இலங்க முஸ்லீம் என்றே சொல்கிறார்கள் ( எனது அனுபவம்) தனது மதமே தனது அடையாளமாக காட்டிக்கொள்ள விரும்புவது ஏனோ?//

    இந்தக் கட்டுரை உங்களிற்குச் சில சமயம் சில விளக்கங்களைக் கொடுக்கலாம்
    http://thesamnet.net/?p=25

    ReplyDelete
  3. மயூரன்,
    1915ம் ஆண்டு சின்ஹல-முஸ்லீம் கலவரத்தில் முஸ்லீம்கள் கை ஓங்கியே இருந்தது. அதுமட்டுமல்ல முஸ்லீம்கள் ஆங்கிலேய ஆட்சியுடன் நல்லுறவு கொண்டிருந்தனர். அவர்களின் ஆசியுடனே சிங்கள மக்கள் வேட்டையாடப்பட்டனர். இதற்கெதிராக தமிழர்கள் சிங்களவர்களுக்கு உதவி (மனிதாபிமான) செய்தனர். இதைப்போய் நன்றாகத்திரிக்கிறீர்கள்.
    “The Sinhalese-Muslim riots of 1915 strengthened the trend towards collaboration with the British, with whom the Muslim elite had already developed close relations. Indeed, throughout the next two decades, the Muslims formed part of a phalanx of minorities under Tamil leadership for safeguarding the rights of the minorities in the processes of transfer of power. However, in the forties, the Muslims seemed to have decided to move closer to the Sinhalese leadership.”
    தமிழர் சொல்வார்கள் அன்றே மிஸ்லீம்களுடன் நின்றிருந்தால் சிங்களவர்களை ஒழித்துக்கட்டி இருக்கலாம் என்று. நியாயம் என்கிறீர்களா?? சிங்கள-முஸ்லீம் பிரச்சனை பற்றி மேலும் அறிந்து பதிவிடவும்!

    //தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் பல்வேறு சமூகங்களையும் சேர்ந்தவர்கள் புலிகளைக் காட்டிக்கொடுக்கும் வேலைகளில் ஈடுபட்டார்கள். இஸ்லாமியர்களும் ஈடுபட்டார்கள். புலிகளோ, இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் தமிழர்களை மாத்திரம் ஒரேநாளில் உடமைகளையும் பறித்து ஓட ஓட விரட்டிவிட்டு மற்றைய தமிழர்களை யாழ்ப்பாணத்தில் இருக்க ஆசீர்வதித்தார்கள்..//

    எல்லோரும் காட்டிக்கொடுத்தார்கள். காட்டிக்கொடுத்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது என அறிவீர்கள். ஆனால் முஸ்லீம்கள் மட்டும்தான் தாம் முஸ்லீம் என்பதற்காக கொல்லப்படுவதாகவும் உலக முஸ்லிம்களை ஜிகாத்துக்கும் அழைத்தனர். தேவை எனை சரிநிகர் பத்திரிகையில் வந்த முஸ்லிம்-தமிழ் சமாதான பேச்சில் கலந்துகொண்டவரின் கட்டுரையைப் படிக்கவும். விபரங்கள் தேவை எனை தருகிறேன். மேலும் அண்மையில் பேராசிரியர் இம்தியாஸ் எழுதிய கட்டுரையில் திரு.அஷ்ரஃப் விடுத்த அறைகூவல் பற்றியும் படியுங்கள்.

    ReplyDelete
  4. மு.மயூரன் அவர்களுக்கு தேசியத் தலைவர் பற்றியோ இல்லை ஈழப்போராட்டம் பற்றியோ தெளிந்த அறிவு இல்லை எனப்து சோமியின் எங்கள் ஊர் வெள்ளாளரும் பள்ளரும் என்ற பதிவைப் படித்தவர்களுக்கு புரிந்திருக்கும்.

    மூஸ்லிம்களை சிங்களவர்களின் எதிரி என்கிறார், ஆனால் சகல முஸ்லீம் பாராளமன்ற உறுப்பினர்களும் எப்படி மந்திரிகளாக இருக்கிறார்கள் என்ற சின்ன விடயம் அவருக்குத் தெடரியவில்லை அல்லது மறைத்துவிட்டார்.

    யாழில் இருந்த் முஸ்லீம்களை வெளியேற்றாவிட்டால் யாழ் என்றொ மட்டக்களப்பு அம்பாறை போல் சுடுகாடாக மாறியிருக்கும். யாழில் இருந்த ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியும் அங்கே முஸ்லீம்கள் என்ன துரோகம் செய்தார்கள் என.

    மு.மயூரன் அவர்களே மேலதிக தகவல்களை உங்கள் குரு கா.சிவத்தம்பி அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  5. முஸ்லிம் மக்களிற்கும் சிங்களவர்களிற்குமிடையிலான முரண்பாடு (கைகலப்பு) 1898 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே ஏற்பட்டது. இதுபற்றிய முழுமையான தகவலினைப் பின்னர் இணைக்க முடிந்தால் இணைக்கின்றேன்..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது