07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 5, 2007

வந்த பாதையும் வரவிருக்கும் நாட்களும்..


பதிவுலகம் மற்றும் வலைப்பூக்களின் மீதான என் ஆரம்பகால ஈர்ப்பும் கவர்ச்சியும் சிறிது சிறிதாய் நீர்த்துக் கொண்டே வரும் வேளையில், மீண்டும் பதிவுகளைப் படிக்கவும் எழுதவுமான கட்டாயத்திற்குள் வலைச்சரம் தள்ளியிருக்கிறது என்னை. பொறுப்பேற்றுக் கொண்ட நிர்பந்தத்தின் பேரிலேயே இதை எழுதத் தொடங்கியிருப்பதால் வலையுலகிற்கு எப்படி வந்தேன், ஏன் வந்தேன் போன்ற தகவல்களை தெரிவிக்க மீண்டும் துவக்கத்திலிருந்து யோசிக்க வேண்டியிருக்கிறது!

நான் அடிக்கடி சொல்லிக்கொள்வது போல இந்த வலையுலகிற்குள் வந்ததும் கூட ஒரு 'திட்டமிட்ட விபத்து' என்றுதான் சொல்வேன்! சென்ற வருடத்தில் இதே போன்ற நவம்பர் மாத நாளொன்றில் எந்தவித முக்கியத்துவங்களுமில்லாத வழக்கமான உரையாடலின் நடுவே, வலைப்பதிவுகள் பற்றி நண்பரொருவர் தற்செயலாய் உதிர்த்த வார்த்தைகளுக்கு நான் மெனக்கெட்டு முக்கியத்துவம் கொடுக்கப்போக, அதன்பின் மிகமிகத் தாமதமாய் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தான் அது "பாலைத்திணை"யாய் செயல் வடிவம் பெற்றது. அன்றிலிருந்து கடந்த ஆறுமாதங்களாய் என் பேச்சிலும் எழுத்திலும் 'தமிழ்மணம்' சற்று அதிகமாகவே வீசிக் கொண்டிருக்கிறது!!

கற்றது தமிழென்பதாலும், கணினி அறிவு சொற்பம் என்பதாலும் வரையறுக்க முடியாத எல்லைகளோடு பிரம்மாண்டமாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த பரப்பில் தயங்கித் தயங்கித்தான் கால் பதிக்க வேண்டியிருந்தது. ஆனால் அன்றைய நாளிலிருந்து, வெகுநாட்களாய் என்னுடனிருந்த தனிமையுணர்வு சுவடுகளற்று சுத்தமாய்த் தொலைந்து போயிருப்பதை பலமுறை மகிழ்ச்சியாய் உணர்ந்திருக்கிறேன். ஆரம்பகாலத்தில் என்னிடமிருந்த ஏராளமான கணினிக் குழப்பங்களை, வார்ப்புரு சிக்கல்களை,
பதிவுலகம் தொடர்பான சந்தேகங்களையெல்லாம் வெகு சிரத்தையாய் தீர்த்து வைத்து, இன்று வரை உடனிருக்கும் ராம், ஜி3, மைஃப்ரண்ட் போன்ற அருமையான நண்பர்கள் தொடங்கி, என்றுமே மறந்துவிட இயலாத சில அற்புதமான மனிதர்களை இந்த வலையுலகம் எனக்களித்திருப்பது இந்த கணத்தில் வெகுவாய் திருப்தியளிக்கிறது!

வந்த புதிதில் 'எதைத் தின்றால் பித்தம் தெளியும்' என்ற ரீதியில் நேரங்காலம் பார்க்காமல் எல்லோருடைய பதிவையும் மேய்ந்ததால் 'இவர் அல்லது இவர்கள் தான் என் வழிகாட்டிகள்' என்று சொல்லிக் கொள்ளும்படியாய் எவரும் இல்லை. என்றாலும் இளவஞ்சி, இட்லிவடை, டுபுக்கு, பிரதீப்பின் பெய்யென பெய்யும் மழை, மை ஃப்ரண்ட், ஆசீப் அண்ணாச்சியின் சாத்தான் குளத்து வேதம், ராமின் வைகை, அய்யனாரின் தனிமையின் இசை ஆகியோர் பதிவுகளில் வழி மறந்தது போல சுற்றிச் சுற்றித் திரிந்ததாய் நினைவு!

என்னைப் பொறுத்தவரை எழுத்தை நெம்புகோலாக்கி உலகத்தையோ சில உள்ளங்களையோ ஒட்டுமொத்தமாய் புரட்டிப் போடுவது பற்றிய சிந்தனையோ நம்பிக்கையோ ஏதுமில்லை.. மனம் சலித்துப் போகையில் என்னை மீட்டெடுக்கும் களமாக பாலைத்திணை செயல்படுகிறது என்பதை தவிர அதைப்பற்றி சிறப்பித்துச் சொல்ல ஏதுமில்லை என்றே நினைக்கிறேன்.
அதேசமயம் என்னை அசர வைத்த பதிவுகள், உறக்கம் தொலைத்து கலங்க வைத்த அனுபவங்கள், சிரிக்கவும் ரசிக்கவும் உதவிய இடுகைகள், தவிர்க்கவே முடியாதபடி எந்த சூழலிலும் என்னைப் பற்றித் தொடர்ந்தபடியிருக்கும் எழுத்துக்களை இந்த வலையில் நிறைய சந்திக்க முடிந்திருக்கிறது. அந்த எழுத்துக்கள் மீதான என் ரசனை, விமர்சனம் மற்றும் பகிர்தல்களை
அடுத்து வரும் தினங்களில் என்னால் இயன்ற அளவு திரட்டித் தர முனைந்திருக்கிறேன். காத்திருங்கள்.. இன்று போய் நாளை வருகிறேன்.. கை நிறையக் கவிதைகளோடு!

15 comments:

  1. அக்கா.. வாழ்த்துக்கள்.. நீங்க என்ன சொல்றீங்கன்னு நாங்கெல்லாம் கேட்க ஓடோடி வந்திருக்கோம். :-)

    ReplyDelete
  2. //நான் அடிக்கடி சொல்லிக்கொள்வது போல இந்த வலையுலகிற்குள் வந்ததும் கூட ஒரு 'திட்டமிட்ட விபத்து' என்றுதான் சொல்வேன்! //

    ம்ம்.. உங்களுக்கு இது திட்டமிட்ட விபத்து.. எங்களுக்கிது திட்டமிட்ட கொலை. :-P

    ReplyDelete
  3. ஆமா.. என் தம்பி பவன் எங்கே? ஆளையே காணோம்???

    ReplyDelete
  4. //கற்றது தமிழென்பதாலும், கணினி அறிவு சொற்பம் என்பதாலும் வரையறுக்க முடியாத எல்லைகளோடு பிரம்மாண்டமாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த பரப்பில் தயங்கித் தயங்கித்தான் கால் பதிக்க வேண்டியிருந்தது. ஆனால் அன்றைய நாளிலிருந்து, வெகுநாட்களாய் என்னுடனிருந்த தனிமையுணர்வு சுவடுகளற்று சுத்தமாய்த் தொலைந்து போயிருப்பதை பலமுறை மகிழ்ச்சியாய் உணர்ந்திருக்கிறேன். //

    வாவ்.. சூப்பர் வரிகள்.. எப்படிக்கா இப்படி சூப்பரா எழுதுறீங்க. ஓ.. தமிழ் MAங்கறதுனாலேயா.. ம்ம்.. நல்லது. :-)

    ReplyDelete
  5. //இன்று போய் நாளை வருகிறேன்.. கை நிறையக் கவிதைகளோடு! //

    ஆஹா.. கவுஜ கவுஜ.. எதிர்கவுஜ வித்துவான்களே.. நாளைக்கு மறக்காமல் வாங்க இங்கே.. உங்களுக்கு விருந்து ஒன்னு காத்திருக்கு போல. ;-)

    ReplyDelete
  6. //ஆனால் அன்றைய நாளிலிருந்து, வெகுநாட்களாய் என்னுடனிருந்த தனிமையுணர்வு சுவடுகளற்று சுத்தமாய்த் தொலைந்து போயிருப்பதை பலமுறை மகிழ்ச்சியாய் உணர்ந்திருக்கிறேன். //

    ஹ்ம்ம்... எங்களுக்கு தான் மகிழ்ச்சி தொலைந்து போயிருச்சு... ;)

    ReplyDelete
  7. தமிழ் வலையுலகத்தில் நீங்கள் ஒரு தவிர்க்க முடியாத நபர். உங்கள் நகைச்சுவை உணர்வு கலந்த பதிவுகள் (சினிமா விமர்சன பதிவுகள் உள்பட) கவலை மறப்பதற்கல்ல கவலை தீர்ப்பதற்கும் உதவலாம். கவிதைகளை பற்றி சொல்லவே வேண்டாம், காதல் தோல்வி பற்றி நிறைய எழுதி விட்டீர்கள், ஏமாற்றம், வலி, வன்முறை, மதச் சண்டை , சாதி சண்டை இதையெல்லாம் பற்றி கவிதைகள் எழுதுவீர்களா?
    நாகூர் இஸ்மாயில்

    ReplyDelete
  8. .:: மை ஃபிரண்ட் ::. said...
    அக்கா.. வாழ்த்துக்கள்.. நீங்க என்ன சொல்றீங்கன்னு நாங்கெல்லாம் கேட்க ஓடோடி வந்திருக்கோம். :-)

    ரிப்பிட்டெய்ய்...

    ReplyDelete
  9. .:: மை ஃபிரண்ட் ::. said...
    //நான் அடிக்கடி சொல்லிக்கொள்வது போல இந்த வலையுலகிற்குள் வந்ததும் கூட ஒரு 'திட்டமிட்ட விபத்து' என்றுதான் சொல்வேன்! //

    ம்ம்.. உங்களுக்கு இது திட்டமிட்ட விபத்து.. எங்களுக்கிது திட்டமிட்ட கொலை. :-P

    ரிப்பிட்டெய்ய்...

    ReplyDelete
  10. .:: மை ஃபிரண்ட் ::. said...
    ஆமா.. என் தம்பி பவன் எங்கே? ஆளையே காணோம்???

    வந்துட்டொம்ல
    வந்துட்டொம்ல
    வந்துட்டொம்ல

    ReplyDelete
  11. வாவ்.. சூப்பர் வரிகள்.. எப்படிக்கா இப்படி சூப்பரா எழுதுறீங்க. ஓ.. தமிழ் MAங்கறதுனாலேயா.. ம்ம்.. நல்லது. :-)

    ச்சூப்பரூ ச்சூப்பரூ ச்சூப்பரூ

    ReplyDelete
  12. காயத்ரி அக்கா வலைச்சரம் தொடுத்துஇருக்காங்க.

    .:: மை ஃபிரண்ட் ::. அக்கா கும்மி அடிக்க கூப்பிட்டிருக்காங்க....

    நிலா பாப்பா வாம்மா வந்து நீயும் கொஞ்சம் கும்மி அடிச்சிட்டு போம்மா...

    ReplyDelete
  13. கும்மியா? இங்க அப்படி ஒன்னயும்ம் கானோமே?

    ReplyDelete
  14. //பதிவுலகம் மற்றும் வலைப்பூக்களின் மீதான என் ஆரம்பகால ஈர்ப்பும் கவர்ச்சியும் சிறிது சிறிதாய் நீர்த்துக் கொண்டே வரும் வேளையில்,//

    வலைபதியும் எல்லாருக்குமே இது நேர்ந்துவிடும் போல? முன்பு அடிக்கடி பதிவு போட்டு பிரபலமாய் இருந்தவர்களில் வெகு சிலரே இப்போதும் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள். இது எதனால் என்று தெரியவில்லை, கம்ப்யூட்டர் முன்பு செலவழியும் நேரம்தான் காரணமாக இருக்கும். முக்கியமான பதிவுகள் அனைத்தையும் படித்து பின்னூட்டமிட ஒரு நாளின் பெரும்பாண்மை நேரம் பிடித்து விடுகிறது. அப்படி ஆகும் பட்சத்தில் நீங்கள் சொல்வது போல ஆவதை தவிற்க முடியாதுதான்.

    ReplyDelete
  15. காயத்ரி அக்கா இந்த வார வலைச்சரக எக்ஸ்பிரஸா? ம் ஜமாய்ங்க. வாழ்த்துக்க்கள். இங்கயும் மை பிரண்ட் அக்கா தலைமையில கும்மியா?. தாங்க முடியலைலா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது