07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, November 15, 2007

காற்றாக.. கவிதையாக..

பொதுவாக கவிதை எழுதணும் என்றால் அதுக்கு தமிழ் நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்று சொல்வாங்க. இந்த கண்டிஷன்ல ஆரம்பத்துலேயே நான் ஃபெயில் மார்க்தான்.

காதலித்துப்பார்.. கவிதை வரும்ன்னு வைரமுத்து சொல்லியிருக்காராம்ல. காதல் வலையில் சிக்காததுனால் கவிதையும் எழுத வரலை.

ஒவ்வொருத்தரும் கனவு காணனும்ன்னு அப்துல் கலாம் சொன்னாராம். தூக்கமே சரியாய் வராதபோது கனவு எங்கிருந்து வர்றது? எப்போ நான் கவிதை எழுதுறது?

எனக்கு கவிதை எழுத வரவில்லையென்றால் என்ன? மற்றவர்கள் எழுதுறதையாவது படிக்கலாம்ன்னு போனா...... எல்லாரும் கொலைவெறியுடன் புலி கவுஜ, சிங்க கவுஜன்னு எழுதுறாங்க. அய்யனார், காயத்ரி, ராம்ன்னு ஒரு பக்கம் கொலைவெறி கவிதைகள் எழுதினால், இளா, சிபி, குசும்பன்னு எதிர் கவுஜ எழுதுறாங்க. எழுதுறதுல ஒரு வரியும் எனக்கு புரியிறது இல்லை. நீங்களே வந்து பஞ்சாயத்துல தீர்ப்பு சொல்லுங்க.. என்ன பண்ணும் இந்த சின்ன குழந்தை?

ஆனாலும், சிலர் இருக்காங்க. எனக்கும் புரியிற மாதிரி சுலபமான வார்த்தைகளைக் கொண்டு ரசிக்கும்படியாக எழுதும் கவிதைகள்.

காதல் முரசு அருட்பெருங்கோவின் ஒரு நொடி கவிதைகள் நான் ரசிப்பவை. அதில் சில:




என் காதல் கேள்விகளுக்கு நீயே விடை என்றிருந்தேன்.
நீயோ கேள்விகள் எதுவுமின்றி என்னிடமிருந்து,
'விடைபெற்றாய்'

*****
களிமண்ணை சிற்பம் ஆக்கினாய்.
பிறகு ஏனோ உடைத்துப் பார்த்தாய்.
மண்ணாகவே இருந்திருக்கலாம்!

*****

நீ,
நான்,
நம் காதல்
சந்தித்தப் புள்ளியில்
கோலமிட ஆரம்பித்தது காலம்.

*****

என்னை அடிக்க நீ கை ஓங்கும் போதெல்லாம்
கண்களை மூடிக்கொண்டு சுகிக்கதான் நினைக்கிறேன்.
ஆனால் நீ அடிக்க வரும் அழகைக் கண்டதும்
இமைக்காமல் நிற்கின்றன என் கண்கள்.

*****

அகத்தின் அழகு முகத்திலாம்.
கண்ணாடியில் முகம் பார்த்தால்...
நீ!

*****

உன்னோடுப் பேசிக் கொண்டிருக்கிறேன்.
இடையில் வந்து போகிறது...
பகல், இரவு, உறக்கம், கனவு எல்லாம்!

*****

ஒருமுறைதான் பிறந்தாய்
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!

*****

காதலியின் சுகம்
காதல் கவிதையில்...
என் காதலின் சோகம்
இந்தக் காயக் கவிதையில்!

இம்சை அரசியின் கைவண்ணத்தில் என்னை கவர்ந்தவை:

என் காதல்
மலர்ந்த நாள்...
அன்று முதல்
என் இதயம் இங்கு
கருவறையானது!
என் முதல் குழந்தை
உன்னை
சுமக்க ஆரம்பித்ததால்!!
****

நீண்ட நேரம்
நின்றிருந்தேன்
நீல ஓடையிலே.......
நிலவினை எதிர்பார்த்து!
நினைவில்லாமல்.......
அன்று அமாவாசையென!!


****

உறைய வைக்கும்
மார்கழிப் பனியில்
கொழுந்து விட்டெரியும்
தீயின் அருகிலிருக்கும்
சுகம் வேண்டாம்...

அன்பே!
ஆதரவாய்
என் கரம் பற்றும்
உன் உள்ளங்கையின்
வெப்பம் போதும் எனக்கு...

****

இளைத்து
கொண்டே போகிறாயோ??!!!
இதயம் லேசாகி
கொண்டே வருகிறது!!!

****

தோல்வியே
வெற்றிக்கு முதல் படியாம்
ஒத்து வருமோ
காதலுக்கு???


கனவில் வாழ்வதாலோ என்னவொ தெரியவில்லை. ட்ரீம்ஸ் ஒரு கவிஞர் என்று சொல்லுமளவு பல கவிதைகளை எழுதியுள்ளார். காணவில்லை சுதந்திரதேவி என உணர்ச்சி பொங்க ரத்தம் துடிக்க அவர் எழுதிய கவிதை எனக்கு பிடித்த கவிதைகளில் ஒன்று:

அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே
என முழங்கி வாங்கின சுதந்திரம்..
மிச்சமில்லை மிச்சமில்லை
மிச்சம் வைப்பதில்லையே
என கொள்ளை அடிக்குது ஒரு கூட்டம்..

கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்றில் கிடைத்தது
கத்தி கதறி ரத்தம் சிந்தி
அர்த்த நெறியில் கிடக்குது

நாட்டு கொடியை
மறந்து விட்டு
கட்சிக் கொடிகள்
பறக்க..
தேசப்பாடல் பாடக்கூட
மதங்கள் தடை செய்ய..

காந்தி வாங்கி கொடுத்ததாம்
சுதந்திர நாள் மட்டும்..
சாந்தி தியேட்டரில் கூட்டம்
கொடி கட்டி பறக்குமாம்..

தனிமனித சுதந்திரம்
தனியே சென்று விட
பொது மனித அங்கீகாரம்
போதை ஏறி நடக்குது...

ஜாதியென்ன மதமென்ன
பண்பாடென்ன மொழியென்ன
ஆண்னென்ன பெண்னென்ன
எதில் பிடித்தாலும் வெறி தான்..

காதலர் பேச கூட
தாய் மொழியில் பேச கூட
தடை விதிக்கும்
கூட்டத்தில் காணாமல் போன சுதந்திரம்..

நம் கைக்கு எட்டிய சுதந்திரம்
போனது யார் வாய்க்கோ?

ஒட்டுங்கப்பா போஸ்டர..
கிடைத்தற்றிந்த அந்நாளே
அரசியலில் தொலைந்தவள்
மத ஜாதி சண்டைகளில்
வீழ்ந்து போய் மறந்தவள்
நம் வாழ்க்கை சோம்பலில்
மறந்து போய் கரைந்தவள்..
கிடைப்பாளா மீண்டும்?
காணவில்லை: சுதந்திரதேவி.


ஆதலினால் காதல் செய்வோம் என்று காதல் கவிதைகளாக கொட்டிக்கொண்டிருக்கிறார் நவின் பிரகாஷ். அவருடைய ஒரு நொடி கவிதைகளில் சிலவற்றை பார்ப்போமா?

கருப்பாக
இருப்பதாக
குறைபட்டுக்
கொள்கிறாய்
சிலைகள்
எந்த நிறத்தில்
இருந்தால் என்ன?


****

"சாதிகள்
இல்லையடி
பாப்பா"
கேட்டதும்
கேட்கிறோம்
சொன்னவர்
என்ன சாதி ?


****

தாலி
மெட்டி
குங்குமம்
எப்படியெல்லாமோ
வேலி போட்டு
அனுப்புகிறாய்
உன் சக ஆண்குலத்தின்
மீது அப்படியொரு
நம்பிக்கையா ?? !!

****

ஆசிரியருக்கு தெரியாமல்
'பிட்' அடிக்கும்போது
கிடைக்கும் 'த்ரில்'
நீ பார்க்காத போது
உன்னை 'சைட்'
அடிக்கும்போது கிடைக்கிறது
தெரியுமா?


பூவாகவே என்ற வலைப்பூவில் பதியும் ராஜியின் மனசும் ஒரு பூதான். இவரின் கவிதகளும் ஒரு பூதான். இவரின் முதல் பதிவே ஒரு கவிதைதான் - "கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா ப்லீஸ்"

"பிரசவ வலியில் துடிக்கும்-லட்சுமிக்கு
மாட்டு வண்டி மாடசாமி
கொடுத்ததும் லிப்ட் - அந்த சிசுவின் உயிருக்கு"

முதல் பாராவே ரொம்ப touching-ஆ இருந்தது. நல்ல படைப்புக்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவது ஒரு நல்ல முயற்சி. இதையும் அழகாய் இந்த வரியில் சொல்லியிருக்கார் பாருங்கள்

"என் முதல் கவிதை உங்கள் வலைப்பூவில் வந்தால்
என் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிக்க
கொடுக்கும் லிப்ட் - என் மகிழ்ச்சிக்கு"

இவரின் மற்ற படைப்புகள்:

ஆயிரம் ஆண்டுகள்
தவமிருக்க காத்திருகிறேன்
மீண்டும் உன் கருவறையில்
இடம் கிடைக்குமா?-அம்மா

****

புள்ளிகளாய் நான்
கோடுகளாய் நீ
வந்து அணைத்துக் கொ(ல்)ள்
என் வாழ்க்கை கோலம்
முற்று பெற!!

****

சூரியனாக நீ
சூரியகாந்தியாக நான்
உன் பாதை தொடர
உன்னையே நோக்கிருப்பேன்!!

****

உனக்கென்ன கடலோரம் நடந்து சென்று விட்டாய்
நானல்லவா சண்டையிடுகிறேன்
எனக்கு முன் உன் கால் தடஙகளைத்
தொட்டு செல்ல வரும் அலைகளுடன்!!



ப்ரியன் அவர்களின் ஒரு நொடி கவிதைகளில் சில:

உந்தன் கையெழுத்தில்
கொஞ்சம்!
எந்தன் கையெழுத்தில்
கொஞ்சம்!
கலந்து எழுதும்
எதுவுமே
கவிதை!
****

சாபமென்றால்
வதைப்பட நான்
வதைக்க நீ!
வரமென்றால்
பக்தனாய் நான்
அருள்பாளிக்கும் அம்மனாய் நீ!
சொல்,
என் காதல்
வரமா?சாபமா?!


குட்டிப்பொண்ணு ரம்யாவும் கவிதை எழுதுவாங்க. ஆனால், இப்போதெல்லாம் வலைப்பக்கம் வருவதற்கே அவங்களுக்கு நேரமில்லை. இவருடையதையும் கொஞ்சம் படிச்சு பாருங்க:

என்னடா இது நியாயம்?
என் இதயத்தை திருடியவன் நீ
தனிமை சிறையில்
தண்டனை பெறுவது நானா??

****

ஒய்யாரப் புன்முறுவலுடன்
லிஃப்ட்-ல் சாய்ந்து
விழியோரங்களில்
டிஜிட்டல் நாணம் வழிய
டி-ஷர்ட் மங்கைyiடம் கேட்டேன்
"மனதில் லிஃப்ட் கிடைக்குமா"??

அவள் இதழோரம் வழிந்தது
இருபதாம் நூற்றாண்டின்
நம்பிக்கை சிரிப்பு

அட
மனசில் லிஃப்ட் கேட்ட
எனக்கு
லிஃப்ட்-ல் மனம் கிடைத்துவிட்டதே!!!!


நிலா ரசிகனின் விழித்துப்பார் மகனே:


ரசிகவ் ஞானியரை மட்டும் நாம் மறக்கலாமா? அவருடைய சில ஹைக்கூ:

தமிழ்தான் மூச்சு
தமிழ்தான் பேச்சு
தமிழ்தான் ஊற்று
தமிழ்தான் காற்று
"அட ஆங்கிலம் புரியலப்பா! "

****

கடைசி வரை புரியவேயில்லையடி ...
உனது
காதல் !
அந்தடாக்டரின் கையெழுத்துப்போலவே !

****

சிக்கெடுத்த கூந்தலை
கிராப்பாக்கினாய்
சிக்குண்ட இதயத்தை
கிறுக்காக்கினாய்

****

இப்பொழுது
உன் தோள் மீது
தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைக்கு...
பெயர்வைக்க நீ
அடம்பிடித்ததாய்
உன் கணவன் சொல்கின்றான்!
அவனுக்கெப்படி தெரியும்?
அந்தப்பெயர் என்
செல்லப்பெயரென்று!

****

"ஏலே நொண்டி"

சூம்பிப்போன கால்களை
மண்ணில் நிறுத்தி
கைகளால் எம்பி
முகம் திருப்பி பார்த்தேன்!

அட..
அங்கே ஓர்
இதய நொண்டி

ரெண்டு மூனு நாளா ஜாலியா ஜல்லியடிச்சு இருந்துட்டேன். அதனால நாளைக்கு ஒரு சீரியஸ் பதிவு.. பதிவை படிச்சுட்டு யாரும் சிரிக்க கூடாது. சொல்லிட்டேன்.. :-P

24 comments:

  1. வந்தாச்சி....

    ReplyDelete
  2. கவித எல்லாம் படிச்சிட்டு தூங்காம இருந்தா திரும்ப வரென்...

    ReplyDelete
  3. //காதலித்துப்பார்.. கவிதை வரும்//

    இதை வைரமுத்து சொன்னாரா? இல்லை நீங்க சொல்றீங்களா?

    அவர் காதலித்துப் பார் கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான்ன்னு சொன்னதாத்தான் நான் கேள்விப்பட்டிருக்கேன்.

    ReplyDelete
  4. காப்பி பேஸ்ட் பன்றதுக்கு ரொம்ப ஈஸியா இருந்ததோ இன்னைக்கு போஸ்ட்!!!!

    எனக்கும் கவுஜ புரியாது
    :-)))

    ReplyDelete
  5. அப்புறம் சொல்ல மறந்துட்டேன் அந்த வில்லன் டயலாக் சூப்பர்!

    ReplyDelete
  6. சி.மது enpavarin blogspot il ennai intha kavithai kavarnthathu.....

    http://mathu-naan.blogspot.com

    மு(யு)த்தம்

    உன் இதழ் கொண்டு
    என் இதழ் பதித்து
    சத்தமில்லாமல்
    முத்தப்போர் செய்வாயோ

    ReplyDelete
  7. கவிதை தொகுப்பாக நீங்கள் அளித்த இந்த பதிவின் மூலம் நிறைய பேரோட கவிதைகளை கண்டுக்கொண்டேன்........நன்றி!

    ReplyDelete
  8. //
    Divya said...
    கவிதை தொகுப்பாக நீங்கள் அளித்த இந்த பதிவின் மூலம் நிறைய பேரோட கவிதைகளை கண்டுக்கொண்டேன்........நன்றி!
    //
    பல நாட்கள் முன்பு 'ஆப்பு'ரேஷன் கவுஜர்ஸ் என்ற ஒன்றை குசும்பன் துவக்கினார் திரும்ப அதற்கு வேலை வந்துவிட்டது என நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. //மங்களூர் சிவா said... காப்பி பேஸ்ட் பன்றதுக்கு ரொம்ப ஈஸியா இருந்ததோ இன்னைக்கு போஸ்ட்!!!!எனக்கும் கவுஜ புரியாது:-)))//
    ரிப்ப்ப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு

    ReplyDelete
  10. நல்ல வேளை தப்பிச்சோம். அக்கா பேய்க்கதை சொல்வாங்களோனு பயந்தோம்.//
    கவிதைகள் தேர்வுகள் நல்லா தான் இருக்கு.

    ReplyDelete
  11. \\கவிதைகள் தேர்வுகள் நல்லா தான் இருக்கு.\\

    ரீப்பிட்டேய்ய்ய்

    ReplyDelete
  12. @Baby Pavan:

    //வந்தாச்சி....//

    வாப்பா.. இன்னைக்கும் நீதான் ஃபர்ஸ்ட்டூ. :-)


    //கவித எல்லாம் படிச்சிட்டு தூங்காம இருந்தா திரும்ப வரென்...//

    ஹீஹீ..

    ReplyDelete
  13. @ஸ்பெல்லிங்:

    ////காதலித்துப்பார்.. கவிதை வரும்//

    இதை வைரமுத்து சொன்னாரா? இல்லை நீங்க சொல்றீங்களா?

    அவர் காதலித்துப் பார் கையெழுத்து அழகாகும் தபால்காரன் தெய்வமாவான்ன்னு சொன்னதாத்தான் நான் கேள்விப்பட்டிருக்கேன்.//

    ஹீஹீ.. சார், அதான் எனக்கு கவிதை வராதுன்னு சொன்னேனே.. இதுவும் ஒரு உதாரணம். :-P

    ReplyDelete
  14. @மங்களூர் சிவா:

    //காப்பி பேஸ்ட் பன்றதுக்கு ரொம்ப ஈஸியா இருந்ததோ இன்னைக்கு போஸ்ட்!!!!
    //

    ஆமா சிவா. இந்த வார பதிவு எல்லாமே G3 பண்றதுதானே! ;-)

    //எனக்கும் கவுஜ புரியாது
    :-)))//

    நாம் மட்டும் புரிஞ்சா செய்யுறேன்? :-P

    //அப்புறம் சொல்ல மறந்துட்டேன் அந்த வில்லன் டயலாக் சூப்பர்!/

    புரிஞ்சிடுச்சு.. நீங்க போஸ்ட் படிக்கலைன்னு புரிஞ்சிடுச்சு. :-P

    ReplyDelete
  15. @sainthana:

    //சி.மது enpavarin blogspot il ennai intha kavithai kavarnthathu.....

    http://mathu-naan.blogspot.com

    மு(யு)த்தம்

    உன் இதழ் கொண்டு
    என் இதழ் பதித்து
    சத்தமில்லாமல்
    முத்தப்போர் செய்வாயோ//

    தலைப்பே மிக அருமையாக இருக்கு சைந்தனா.. அந்த வலையில் போய் படிக்கிறேண். :-) லிங்குக்கு நன்றி. :-)

    ReplyDelete
  16. @வேதா:

    //எல்லாமே அழகான கவிதைகள். தனித்தனியா லிங்க் தராம கவிதைகளையே இங்க பதிவு செஞ்சு ஒரு கவிதைச்சரமாக்கிட்ட அருமை :)//

    professor சொன்னா அது சரியாகத்தான் இருக்கும். :-) நன்றி. :-D

    ReplyDelete
  17. @Divya:

    //கவிதை தொகுப்பாக நீங்கள் அளித்த இந்த பதிவின் மூலம் நிறைய பேரோட கவிதைகளை கண்டுக்கொண்டேன்........நன்றி!//

    புரியாத கவிதைகளும் நிறைய இருக்கு. அதுக்கெல்ல்லாம் லிங்க் கொடுக்கவில்லை. :-)))

    ReplyDelete
  18. @மங்களூர் சிவா:

    //பல நாட்கள் முன்பு 'ஆப்பு'ரேஷன் கவுஜர்ஸ் என்ற ஒன்றை குசும்பன் துவக்கினார் திரும்ப அதற்கு வேலை வந்துவிட்டது என நினைக்கிறேன்.//

    சிவா, அது கொலவெறி கவுஜர்களுக்கு. :-)))

    ReplyDelete
  19. @வித்யா கலைவாணி:

    //
    ரிப்ப்ப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு//

    யக்கா.. நீங்களும் ரிப்பீட்டே போட ஆரம்பிச்சிட்டீங்களா? நெல்கம் டூ தி க்லப். ;-)

    //நல்ல வேளை தப்பிச்சோம். அக்கா பேய்க்கதை சொல்வாங்களோனு பயந்தோம்.//

    அதுக்கு கவிதாயினி கிட்டதான் ஸ்பெஷல் ட்ரேயினிங் எடுத்துட்டு வரணும். ;-)

    //கவிதைகள் தேர்வுகள் நல்லா தான் இருக்கு.//

    நன்றி ஹை. :-)

    ReplyDelete
  20. அத்தனை குறுங்கவிதைகளும் அருமை. ரசித்தேன். எனக்கு நவீன் பிரகாஷின் கவிதைகள் பிடிக்கும். அவரது பக்கத்திற்கு அடிக்கடி செல்வேன். இத்தனை கவிதைகளும் படித்து ரசித்த கவிதைகள் என ஒரு பதிவு. வாழ்த்துகள்

    ReplyDelete
  21. //
    .:: மை ஃபிரண்ட் ::. said...
    @மங்களூர் சிவா:

    //பல நாட்கள் முன்பு 'ஆப்பு'ரேஷன் கவுஜர்ஸ் என்ற ஒன்றை குசும்பன் துவக்கினார் திரும்ப அதற்கு வேலை வந்துவிட்டது என நினைக்கிறேன்.//

    சிவா, அது கொலவெறி கவுஜர்களுக்கு. :-)))
    //
    @ .:: மை ஃபிரண்ட் ::.

    கவுஜ எழுதறவங்க எல்லாம் அதை கவிதைன்னே சொல்லுறாங்க.

    அத படிக்கிறவங்க எல்லாம் அத கவுஜன்னே சொல்லுறாங்க

    எனி ஹெள 'ஆப்பு'ரேஷன் ரீஸ்டார்ட்ஸ்.. ரீஸ்டார்ட்ஸ்.. ரீஸ்டார்ட்ஸ்

    ReplyDelete
  22. //
    cheena (சீனா) said...
    அத்தனை குறுங்கவிதைகளும் அருமை. ரசித்தேன். எனக்கு நவீன் பிரகாஷின் கவிதைகள் பிடிக்கும். அவரது பக்கத்திற்கு அடிக்கடி செல்வேன். இத்தனை கவிதைகளும் படித்து ரசித்த கவிதைகள் என ஒரு பதிவு. வாழ்த்துகள்
    //
    ஐயா சீனா

    நவீன் ப்ரகாஷ் போட்டோவே இல்லாம கவிதை போட்டா நீங்க அப்பவும் போவீங்களா?

    அதுதான் மேட்டர்!!!!!
    :-)))

    ReplyDelete
  23. சிவா, கவிதைக்கு நவீன் - படத்துக்கு சிவா

    எதெது எங்கே கெடைக்கும்னு எனக்குத் தெரியும் சிவா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது