07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 4, 2007

பெண்ணூட்ட எக்ஸ்பிரஸ்

தமிழ் வலைப்பதிவுகளை பொறுத்தவரை பெண்கள் எழுதுவதும் அதிகமாகவே இருக்கிறது ஆனால் தங்கள் எண்ணங்களை யாரும் எழுதுகிறார்களா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. கவிதைகள், கதைகள் சொந்த கதை சோககதை என்று ஆண்களுக்கு சற்றும் சளைக்காத மொக்கை ராணிகளே இங்கே அதிகம் ஆனாலும் சில நம்பிக்கை நட்சத்திரங்கள் ஜொலிக்கத்தான் செய்கின்றன.

அந்த வகையில் திருநெல்வேலியில் பிறந்த இந்த தமிழச்சி மதுராவின் பதிவுகள் எல்லாம் ஒரு முன்னோடி. தனது கருத்துக்களை முகத்தில் அடித்தார்போல் அதே நேரம் யாருக்கும் காயம் ஏற்படாமல், புத்தியில் உறைக்கிற மாதிரி சொல்வதற்கு மதுராவின் நக்கல் நடையும் ஒரு காரணமாய் இருக்கலாம் ஏனோ இப்போதெல்லாம் அதிகம் எழுதவில்லை.

எந்த கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்காமல் மொக்கை ஜல்லி போட்டோ புலிகள் என கலந்து கட்டி ஆடிவரும் தூயாவின் பதிவுகள் படிக்கும்போதே ஒரு மகிழ்வை உண்டாக்குகின்றது.

சூரியாளின் பதிவுகள் பயணக்கட்டுறைகள் நேர்காணல் கவிதை என பரந்த தளம் கொண்டவை பெண் வலைப்பதிவர்களின் கொஞ்சம் பிரபலமான எழுத்தாளரும்கூட.

பிரேமலதாவின் பதிவுகள் அதிகம் சொந்த அனுபவங்களாக இருப்பினும் படிப்பதற்கு சுவாரஸ்யமானவை. நீங்களும் ஒரு எட்டு போயிட்டு வரலாம் ....

நால்வர் கூட்டணியும் நல்லாத்தான் இருக்கு ஆனா என்னாச்சுன்னு தெரியல இப்போ எழுதவே இல்ல :( பொடிச்சியின் பெட்டைக்குப் பட்டவையும்
சினேகிதியின் தத்தக்க பித்தக்க கொஞ்சம் ரியலிச ? :) பெண்பதிவு எனலாம் தனது அடையாளத்தை தொலைப்பதை அவர் விரும்பாதது போலவே எனக்குத் தோன்றுகிறது இன்னும் சில பெண்பதிவர்கள் எழுதுகிறார்கள் அதையெல்லாம் லிங்க் கொடுத்தால் அடிக்க வருவீர்கள் என்பதால் இப்போதைக்கு நன்றி கூறி விடு ஜூட்

No comments:

Post a Comment

தமிழ் மணத்தில் - தற்பொழுது