நன்றி!!
ஹி..ஹி... ஆரம்பமே நன்றியான்னு ஆச்சர்யப்படறவங்களுக்கு, இது போனவாரம் வலைச்சர ஆசிரியரா இருந்த தங்கச்சிக்காவுக்கு இந்த வார வலைச்சர ஆசிரியராகிய நான் கூறும் நன்றி. எங்க தங்கச்சிக்கா ஒரு வாரமா வலைச்சரத்த சும்மா அதிரவெச்சிட்டாங்க இல்ல. இவங்க இத்தனை நாள் எல்லா பதிவுக்கும் போய் வெறுமனே மீ த பர்ஸ்டுன்னு கமெண்ட் போட்டுட்டு பதிவ படிக்காமலே கும்மி அடிச்சிட்டு வருவாங்கன்னு நினைச்சிட்டிருந்தவங்களுக்கெல்லாம் அதிர்ச்சி தர்ற மாதிரி சரவெடியா கொளுத்திட்டாங்க இல்ல. தங்கச்சிக்கா, உங்க புண்ணியத்துல நானும் வலைச்சர வாசகர்களும் நிறைய நல்ல பதிவுகளை தெரிஞ்சிக்கிட்டோம். எங்கள் எல்லோரின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள்.
போன பதிவுல நீங்க எல்லாரும் குடுத்த அமர்க்களமான வரவேற்புக்கும், அறிமுகப்பதிவு போட்ட தங்கச்சிக்காவுக்கும், என்னை வலைச்சரம் எழுத அழைத்த வலைச்சர ஆசிரியர்களுக்கும் சிறப்பு நன்றிகள் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என்னை வலைச்சரம் எழுத கூப்பிட்டப்ப எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமா இருந்தது. ஏன்னா இதுக்கு முன்னாடி இந்த பக்கம் நான் வந்தது மிகவும் அரிதாகத்தான். அப்படி இருக்கும்போது என்னை எல்லாம் கூப்பிடறாங்களே. யாரையுமே தெரியாத இடத்துல போய் நாம என்ன பண்ண போறோம்னு ஒரு தயக்கம் (பயம்ன்னெல்லாம் படிக்கபுடாது சொல்லிட்டேன்). அப்புறம் நம்ம தங்கச்சிக்காவும் முத்துக்காவும் தான் அதெல்லாம் ஒன்னும் இல்ல. சும்மா நீ படிச்ச, ரசிச்ச பதிவுகளோட இடுகைகளை குடுத்தா போதும்னு சொன்னாங்க. ஆஹா. இது வெறுமனே கடை தேங்காய எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைக்கற கதை தான் போல. இதை நான் நல்லாவே செய்வேனேன்னு நானும் களத்துல குதிச்சிட்டேன். நல்ல தேங்காயான்னு நீங்க தான் சொல்லனும். (உங்களை எல்லாம் கடவுள்னு சொல்லியிருக்கேன்.. இந்த ஐஸுக்காவது கொஞ்சம் பலன் இருக்கான்னு பாப்போம் :)) )
என்ன பத்தி சொல்லனும்னா நான் வலையுலகத்துக்கு வந்தது ஆபீஸ்ல இருக்கற வெட்டியான நேரத்தை போக்கதான். நேரத்தை போக்க வலைப்பூக்குள்ள எப்படி நுழைஞ்சேங்கற அரிய வரலாற்றை இங்க பதிவிட்டிருக்கேன். படிச்சிக்கோங்க. இப்படியாக வலைப்பூவத் திறந்தப்புறம் எப்ப எல்லாம் எனக்கு போர் அடிக்குதோ அப்போ ஏதாவது ஃபார்வர்ட் மெயில்ல இருந்து படம்/ கவிதைன்னு சுட்டு பதிவா போட்டுட்டு எல்லாருக்கும் ஒரு மின்னஞ்சல் தட்டி புது பதிவு போட்டுட்டேன்னு சொல்லுவேன். வெட்டியா இருக்கறவங்க யாராவது வந்து இதெல்லாம் ஒரு பதிவான்னு துப்ப ஆரம்பிப்பாங்க. மாட்னான்யா ஒருத்தன்னு நானும் அவங்களோட கமெண்ட்ல கும்மி அடிக்க ஆரம்பிச்சுடுவேன் :) எப்பவுமே இப்படி சுட்ட பதிவாவே போடறதால G3 = சுடறதுன்னு புது அகராதியே போட்டுபுட்டாய்ங்க பதிவுலகத்துல. பதிவுலக வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்னு நானும் ப்ரீயா விட்டுட்டேன் :)
ஒன்னுமே உருப்படியா எழுதலைன்னாலும் இவ்ளோ நாள் நான் இந்த வலையுலகத்துல இருக்க காரணம் என் வலையுலக நண்பர்கள் தான். அவங்கள்ல சில பேரையும் அவங்களோட பதிவுகளையும் தான் உங்களுக்கு இந்த வாரத்துல நான் அறிமுகப்படுத்த போறேன். குடுக்கப்பட்டிருக்கும் நேரம் குறைவுங்கறதால எல்லா பதிவுகளையும் திரட்ட முடியுமான்னு தெரியல. அதனால தமிழ்மணத்துல இல்லாத மக்கள பத்தி மட்டும் எழுதலாம்னு இருக்கேன். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
என்றும் நட்புடன்,
ஜி3.
|
|
நல்வருகைங்க ஜி3..(ஹிஹி..நானும் வலைசரத்துக்கு புதுசுத்தேன்..)
ReplyDelete// (உங்களை எல்லாம் கடவுள்னு சொல்லியிருக்கேன்.. இந்த ஐஸுக்காவது கொஞ்சம் பலன் இருக்கான்னு பாப்போம் )//
எதுக்கு பிரசாதத்த கண்ணுல காட்டிட்டு, நீங்களே.. சாப்பிடறத்துக்கா?..
// நான் வலையுலகத்துக்கு வந்தது ஆபீஸ்ல இருக்கற வெட்டியான நேரத்தை போக்கதான். //
ReplyDeleteஅடப்பாவமே.. இதை G3 ஆபிஸ்ல இருக்கரவங்க கொஞ்சம் கவனிக்கவும்..
அய்யோடா .. கும்மி பதிவுக்கு நாந்தேன் பஸ்ட்டா?
ReplyDeleteவந்துஇடேன்...இம்சைக்கு பதிலா நான் பிரசண்ட் போட்டுக்கரென்
ReplyDeleteவாங்க G3! வலைசரத்திற்கு தங்கள் வரவு நல்வரவாகட்டும்.
ReplyDelete//தமிழ்மணத்துல இல்லாத மக்கள பத்தி மட்டும் எழுதலாம்னு இருக்கேன். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.//
ReplyDeleteநல்ல ஐடியா G3 ஆண்ட்டி, ஆனா கொஞ்சம் தமிழ் ப்ளாக்கா பாத்து சொல்லுங்க.
வாழ்த்துக்கள்
:))) வாழ்த்துக்கள் :)))
ReplyDeleteஸ்டார்ட் மீயுஜிக்:)
ReplyDeleteவாழ்த்துக்கள் ;))
ReplyDeleteவாழ்த்துக்கள் டா!
ReplyDelete@ரசிகன்,
ReplyDeleteஉங்கள் வரவேற்புக்கு நன்றிங்க :)
உங்கள் வரவும் நல்வரவாகுக (நீங்களும் புதுசு தானே :))
//எதுக்கு பிரசாதத்த கண்ணுல காட்டிட்டு, நீங்களே.. சாப்பிடறத்துக்கா?..//
நான் குடிக்கப்போற பதிவுகளின் விருந்த நீங்களும் ருசிக்கலாம். நோ தடைஸ் :)
//அடப்பாவமே.. இதை G3 ஆபிஸ்ல இருக்கரவங்க கொஞ்சம் கவனிக்கவும்..//
ஹி..ஹி.. இது உலகமறிந்த விஷயம் (என் ஆபீஸ் மக்கள் உட்பட :P)
//அய்யோடா .. கும்மி பதிவுக்கு நாந்தேன் பஸ்ட்டா?//
ரிப்பன் வெட்டாமல் கும்மி கடையை திறந்து வைத்ததற்கு நன்றிகள் :)
@வேதா
ReplyDeleteகுருவே ஆசிர்வாதம் பண்ணியாச்சு. இனி பட்டைய கிளப்பிற வேண்டியது தான் :)
@பவன்,
ReplyDeleteஉன் கடமை உணர்ச்சிய பாத்தா புல்லரிக்குதுபா :))) அட்டெண்டன்ஸ் நோட் பண்ணியாச்சு :)
@நிலா,
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி நிலா.
//நல்ல ஐடியா G3 ஆண்ட்டி, ஆனா கொஞ்சம் தமிழ் ப்ளாக்கா பாத்து சொல்லுங்க.//
முடிந்தவரை முயல்கிறேன் மா :)
@ஜி
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி ஜி :)
@குசும்பன்
ReplyDeleteநான் நாளைக்கு போடப்போற பதிவப் பத்தி உங்க கிட்ட யாரு சொன்னது???
@கோபி
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி கோபி :)
@கவிதாயினி
ReplyDeleteநன்றி டா செல்லம் :)
வாழ்த்துக்கள் ;)) ஸ்டார்ட் மீயுஜிக்:)
ReplyDelete@டு.டி. அக்கா,
ReplyDeleteநன்றிக்கா :)
சூப்பரு!!
ReplyDeleteபிரமாதம்11
ReplyDeleteஅப்புறம்!
ReplyDeleteநீங்க எங்கன பதிவ போட்டாலும்..
ReplyDeleteஅங்கன வந்து 25 அடிப்போம்ல!
@ட்ரீம்ஸ்
ReplyDeleteநன்றி. பாராட்டுக்கும் குவாட்டர் அடிச்சதுக்கும் :)
@வித்யா,
ReplyDelete//வாங்க G3! வலைசரத்திற்கு தங்கள் வரவு நல்வரவாகட்டும்.//
மன்னிச்சிக்கோங்க. அன்னிக்கு உங்க கமெண்ட்ட கவனிக்காம வுட்டுட்டேன் போல. இப்போ தான் கவனிச்சேன். வாழ்த்துக்களுக்கு நன்றி :)
நான் வர்றதுக்குள்ளே குவாட்டர் தாண்டியாச்சா??
ReplyDeleteகமேண்ட் மோடரேஷன் கூட தூக்கிட்டாங்க பாருங்க. :-))
ReplyDeleteசொர்ணாக்கா...
ReplyDeleteஒரு வாரம் உங்களோடது.. போடுங்க உங்க குத்தாட்டத்தை. :-))
//
ReplyDeleteரசிகன் said...
நல்வருகைங்க ஜி3..(
//
REPEATEYYYYYYY