07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, November 13, 2007

காமெடி சரவெடி..

"ஹாஹாஹாஹாஹாஹா"

ஒன்னுமில்லைங்க.. நான் சிரிச்சேன். அவ்வளவுதான். :-)
யாருப்பா அங்கே லூசு தனியா சிரிக்குதுன்னு சொல்றது?? அப்போ நீங்க கண்டிப்பாக இந்த பதிவில் இணைக்கப்பட்டிருக்கிற சுட்டிகளை படிக்க வேண்டும். நீங்களும் பக்கத்துல உட்கார்ந்திருக்கிறவங்க நீங்க லூசுன்னு நினைக்கிற அளவுக்கு சிரிக்க போறீங்க.

லவ்வர்ஸ் டேயில் பல்ப் பாண்டி.. இந்த நகைச்சுவை கதையை எத்தனை தடவை நான் படித்திருக்கிறேன்; மத்தவங்களுக்கு படித்து காட்டியிருக்கிறேன்; மின்னஞ்சல் மூலமாக மற்றவர்களுக்கு அனுப்பியிருக்கிறேன் என்று என்னாலேயே கணக்கு பண்ண முடியாது. எத்தனை தடவை படித்திருப்பேன். திரும்ப திரும்ப படிக்கும்போதும் கண்ணில் கண்ணீர் வர, வயிறு வலிக்க சிரித்திருக்கிறேன். ஒவ்வொரு வரியும் ரசித்து சிரிக்கும்படி எழுதியிருக்கார் அண்ணன் ஜி அவர்கள். :-) எந்த கதை எழுதினாலும் அந்த கதைப்பாத்திரமாகவே மாறிவிடுவார். லவ்வர்ஸ்டேயில் பல்ப் பாண்டியில் பல்ப் பாண்டியாய் அவதரித்தவர், யாருலே இங்கே சண்டியன் என்ற கதையில் 100% அக்மார்க் திருநெல்வேலி காரனாய் மாறினார். ஆண் என்ற அன்பானவன் கதையில் அப்படியே செண்டியால் தாக்கியிருப்பார்.

ஒருத்தர் இருக்காரு.. சாதாரணமா பதிவு போட மாட்டாரு. பதிவு போட்டால் அதுல கொஞ்சமாவது காமெடியுடன் கலந்த நையாண்டியும் இருக்காமல் இருக்காது. வலையுலகம் மூலமாகவே தன்னுடைய வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துக்கொண்டவர். அவர் தங்கமணி பதிவுகளை சனிக்கிழமைதான் படிப்பார் என்பதால் அவர் வெள்ளிக்கிழமை மட்டுமே பதிவு போடுபவர். யாருன்னு இந்நேரம் கண்டுபிடிச்சிருப்பீங்க. அம்பிதான் அவர்! பார்த்த முதல் நாளே, தீராத விளையாட்டு பிள்ளை, பாட்டு பாடவா, வாழ்க ஜனநாயகம், மலையேற போனாலும் மச்சினன் தயவு வேணும், கப்பல் ஓட்டிய கேப்டன் எல்லாம் காமெடி & காமெடி மட்டுமே! காட்டுக்குயில்-கருகுமணிமாலை இவரோட டாப் இடுகைகளில் ஒன்று. காமெடியில் கருத்தும் சொல்லலாம் என்று சுதந்திர தினத்துக்காக எழுதிய இன்றைய சுதந்திரம் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.

இங்கே போனால் காமெடிக்கு 100% கியாரண்டி என்று சொல்லும் அளவுக்கு சரவெடியாய் எழுதுபவர் வெடிமணி.. கண்மணி டீச்சர். தன்னை ஒரு டீச்சராக அறிமுகப்படுத்தி, பிச்சு, கிச்சு, ச்சுப்ரமணி, பங்கஜம் மாமி என்ற பல கேரக்டர்களை உருவாக்கி நமக்கு காமெடி ஊட்டுபவர். ச்சுப்ரமணிக்கு என்ன இனிஷியல் என்பதுதான் இங்கு நான் படித்த முதல் இடுகை. அதன் முன்னரும் பின்னரும் இவர் எழுதியதில் பல என் மனதை கவர்ந்ததாக இருந்தாலும் ஜெயிக்க போவது டைகரா ச்சுப்ரமணியா என்கிற போஸ்ட்ல கோபியோட சோனி கெலிச்ச போஸ்ட்டை நான் மறக்க மாட்டேன்.

அடுத்து அபி அப்பா. தன்னோட மகளை மையமாக கொண்டு இவர் எழுதும் காமெடி பதிவுகள் எல்லாமே முதல் ரகம். அபிராமி இ.ஆ.ப, அஞ்சு ஜார்ஜ்ச்சும் அபி பாப்பாவும், பாரதிக்கும் பாரத மாதாவுக்கும் என்ன பிரச்சனை, பத்மா சுப்ரமணியம் அவர்களே சவாலை சந்திக்க தயாரா என்று அபி பாப்பாவை மையமாக வைத்து எழுதிய அனைத்தும் சூப்பர்.

சந்திரமுகில ரஜினியும் வடிவேலுவும் பேய் கதையும் ஞாபகம் இருக்கா? அதே மாதிரி ஒரு கதை சின்சினாட்டி ரோட்டுல நட்ந்துச்சு. முருகேசு @ வடிவேலுவா ஆக்டிங் கொடுத்து நானும் சின்சினாட்டி மாமாவும் என வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார் க்லீவ்லேண்ட் அருண்குமார்.

அடுத்து சொல்லபோறவங்க பத்தி நான் டிஸ்கி கொடுத்தால் நீங்களே கண்டுபிடிச்சிடுவிங்க. இவங்க மேலே ஒரு கும்பலே வெறியுடன் இருக்கு. ஈரோட்டுக்கு ஆட்டோக்கள் அனுப்புற அளவுக்கு வெறின்னா பாருங்களேன். அப்ப்டி ஒரு கொலைவெறியுடன் சோகக்கவிதையா எழுதி தள்ளுவாங்க. அவங்களுக்கு நகச்சுவை பகுதியில என்ன வேலைன்னு கேட்குறீங்களா? இவங்க கவிதை மட்டும்தான் சோகக்கடலே தவிர காமெடினு வந்துட்டா சிவகாசிதான். முக்கியமாக படம் பார்த்துட்டு விமர்சனம் எழுதுவாங்க பாருங்க. இதை படிச்சீங்கன்னா கண்டிப்பா படம் பார்க்கவே மாட்டீங்க. கண்ணில் கண்ணீர் வர்ற அளவுக்கு சிரிப்பீங்க. கவிதாயினி காயத்ரியின் சில படைப்புகள்: பேய்கிட்ட பேசியீருக்கீங்ளா?, சமயற்கலை - ஓர் ஆய்வியல் அணுகுமுறை, புலம்ப வச்சிட்டியே பரட்டை.

இவரைப்பற்றி சொல்லியே ஆகணும். மாசத்துக்கு ஒரே ஒரு பதிவு மட்டுமே போடுவார். ஆனால் அந்த ஒரு பதிவு கண்டிப்பாக ஒரு பயனுள்ள, ரசிக்க கூடிய பதிவாய்தான் இருக்கும். அந்த ஒரே ஒரு பதிவுக்கு பிறகு, அவரே அவர் வீட்டு பக்கம் போக மாட்டார். ஆனால், மற்றவர்கள் பதிவு அனைத்தையும் படித்து, பின்னூட்டம் இட்டு, நல்ல பதிவுகளுக்கு மற்றவர்களிடம் இலவசமாக விளம்பரம் கொடுப்பார். இப்படி எனக்கே பல வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார் கோபிநாத் அண்ணா. அவருடைய நாங்களும் ஓட்டுவோம்ல என்ற இடுகையில் தன்னுடைய சிறுவயது சைக்கிள் ஓட்டும் அனுபவத்தை படித்திருக்கிறீர்களா? கூட்டாஞ்சோறு நினைவுகள் வேண்டுமா?

“பொண்ணுங்க எல்லாம் தெய்வம் மாதிரின்னு சொல்றாங்க. சரினு நின்னு தரிசனம் பண்ணனா மட்டும் ‘டீஸிங்’னு சொல்லி உள்ள தள்ளுறாய்ங்க!! என்ன கொடுமை இது கடவுளே!!” என்று ஃபீல் பண்ணி ஜொல்லு விடுவதற்கென்றே ஜொல்லுப்பேட்டையை உருவாக்கியிருக்கார் ஜொல்லுப்பாண்டி. ஜொல்லுவது தப்பில்லை என்பதிலிருந்து ஜொல்லுவது எப்படி என்று வகுப்பு நடத்துமளவு பல விதமாய் பதிவுகள் ஜொல்லியிருப்பார். எந்த பதிவுகளை விவரிபது… எது விடுவது என்றே தெரியவில்லை. அனைத்தும் ரசிக்கும்படியான எழுத்து முத்துக்கள். அதனால் எல்லா பதிவுகளையும் நீங்க இங்கேயே போய் படிங்க

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்யா கைப்புள்ளன்னு சொல்லுவாங்க. இங்கே லேடி கைப்புள்ள ஒருத்தவங்க இருக்காங்க. எவ்வளவு ஆப்பு வாங்குனாலும் சளைக்காமல் நின்னு அடுத்த ரவுண்ட் எப்போ ஸ்டார்ட்ன்னு கேட்ப்பாங்க. G3 என்ற பெயருக்கு சொந்தக்காரங்க. இவங்க வாங்கிய ஆப்புகளும் வாங்கிய ட்ரீட்களும் எண்ணனும்ன்னா அதுக்கு ஒரு கணக்கு புள்ளையை வேலைக்கு வச்சி லெட்ஜர் புத்தகத்துல எழுதி கால்குலேட்டர்லதான் கணக்கு பண்ணனும். ட்ரீட் வாங்கிய பதிவுகளை இங்கே வரிசைப்படுத்தினா நாளைக்கு வரையில் இந்த பதிவு முடியாதுங்கிறதுனால எல்லா பதிவுகளையும் இங்கே நேரடியாக போய் படித்துக்கொள்ளுங்கள் என்று ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோல் விடுக்கப்படுகிறது. இங்கு ஒரு இடுகைக்காவது ஒரு சுட்டியை தர வேண்டும் என்பதால் நம்மளை வச்சி காமெடி பண்றதே இவங்களுக்கு பொழப்பா போச்சு என்பதை இங்கு இணைக்கிறேன். ;-)

நாமக்கல் சிபி என்றாலே முதலில் தோணுவது கலாய்த்தல் மன்னன் என்றுதான். ஒரு தடவை அவர் வெள்ளை அறிக்கை விட்டார். என்ன ஒரு கருத்து! இப்போதுள்ள சமுதாயத்துக்கு மிகவும் பயனுள்ள அறிக்கை. கண்டிப்பாக படிக்க சிபியின் வெள்ளை அறிக்கை. (இது ஏன் நகைச்சுவையில சேர்த்திருக்கிறேன் என்று நீங்களே அந்த பதிவுக்கு போய் பாருங்க). கவிதைகளுக்கு எதிர் கவுஜ எழுதுவார் இவர். படிக்க ரொம்ப சுவாரஸ்யமாய் இருக்கும். ;-)

எதிர்கவுஜன்னதும் இன்னொருத்தர் நினைவுக்கு வருகிறார். குசும்பு! குசும்பை தவிர்த்து வேறெதுவுமில்லைன்னு சொல்பவர். சாட்சாத் குசும்பனேதான். எதிர்கவுஜ ஸ்பெஷலிஸ்ட் என்று ஒரு அவார்டே கொடுக்கலாம் இவருக்கு. கவிதாயினி எழுதிய முன்னாள் நன்பனுக்கு என்ற கவிதைக்கு (என்ன சொல்ல வர்றாங்கன்னே புரியலை எனக்கு! :-( ) குசும்பன் எழுதிய எதிர்கவுஜ இன்னாள் நண்பனுக்கு, இதோட முடிந்ததா? இல்லையே.. இன்னும் மூன்று எதிர்கவுஜ வந்ததே: இளாவின் நண்பனான சூனியன், ராமின் விவாஜிக்கு எதிர்கவுஜ மற்றும் ஜி.ராகவனின் சூனியமான நண்பன். குசும்பனின் அய்யனாரின் மகிமை, ஒரு அப்பாவி நம் வலைப்பதிவர்களிடம் விலாசம் கேட்கிறார் படிக்க மறவாதீர்கள்.

அடுத்து நாம் பார்க்கபோவது கேடி என்று செல்லமாக அழைக்கப்படும் பொற்கொடி. வலைபதிவு ஆரம்பித்து படிப்பு, வேலை, திருமணம்ன்னு எல்லாம் விரைவாக முடிந்து அமேரிக்காவுக்கு குடிபெயர்ந்த ஒரு சின்ன பொண்ணு. ஆனால், அவள் பண்ற கூத்துக்கு ஒன்றாம் நம்பர் கேடி என்று அவார்ட் கொடுக்கலாம். தன்னோட மூன்றாவது பதிவையே 5-ஆவது பதிவுன்னு போட்ட பெரிய கேடி. நல்ல காமெடி சென்ஸ். கண்ணு பட்டுப்போச்சே மற்றும் இச்சுத்தா இச்சுத்தா இவருடைய காமெடிக்கு அடையாளங்கள். வியர்டா? நானா? என்ற போஸ்ட் பாருங்களேன். இப்படி கூட எழுதலாமான்னு நானே ஆச்சர்யப்பட்ட பதிவு இது. ரூட் 16 முதல் அறை 267 வரை என்ற தொடர் எழுத தொடங்கினார். ரெண்டே பாகத்தோட பாதியிலேயே நிக்குது. தங்கச்சிக்கா, எப்போ அடுத்த பாகம் வெளியிடப்போறீங்க? இப்படி காமெடி பண்றவ பொறுப்பா ஏதாவது எழுதுவாளா என்று கேட்பவர்கள் படிக்க வேண்டிய பதிவு ஒ(இ)ரு வழிப் பாதை என்று கொடி செய்த ஆராய்ச்சி.

சென்ஷியின் கலாட்டா குடும்பமும் கலக்கல் டாக்டரும் படிச்சதுண்டா? பாகம் 1, பாகம் 2 & பாகம் 3..

பரணி என்ற பெயரில் அழைப்பதை விட பாவனா கிறுக்கன் என்று அழைப்பதில் பெருமைப்படும் ஒரு ஜீவன் பாட்டா பாடுவாரு. ஆங்காங்கே கவிதை G3 பண்ணுவாரு. வேதா proffesor-ஐ குருவாக கொண்டு கவிதை எழுத ஆரம்பிச்சுட்டாரு. ஆனாலும், நான் அவருடைய நகைச்சுவையை விரும்பி படிப்பேன். குடும்பத்துக்கு குண்டு வைப்போம் படிச்சுட்டீங்களா? இனி ஒரு tag செய்வோம்ன்னு ஒரு தொடர்கதை ஆரம்பிச்சார். அதுக்கூட அருமையா இருக்கும்.

பக்கா தமிழன் என்ற பெயர்ல ஒருத்தர் சொல்ற ஒவ்வொன்னுகும் எதிர்சொல் பேசாமல் ஓயமாட்டார். நாம் பேசுறதுக்குதான் திருப்பி நிறுத்தாமல் ஓட்டுராருன்னு பார்த்தால், அவரு பேசுறதுக்கும், மனசாட்சி பேசுனது போல எதிர்சொல் பேசுவாரு. வாய் ஓயாமல் பேசிட்டே இருந்தாலும், அவர் செய்யுற அந்த நகைச்சுவைகள் ரசிக்கும்படிதான் இருக்கிறது. காப்பி வித் கோபின்னு கோப்ஸ் ஒரு நிகழ்ச்சி நடத்துறார். அதுல இவர் பண்ற காமெடிக்கு அளவே இல்ல. லீவு லெட்டர் எழுதியிருக்கீங்களா நீங்க? இவரு எழுதியிருக்கார் பாருங்க இங்கே.

மலேசியா மாரியாத்தா மற்றும் மை ஃபிரண்டின் போலி என்று அழைக்கப்படும் ஒரு சின்ன பொண்ணு துர்கா. நான் மை ஃபிரண்ட் இல்லை.. நான் அவள் இல்லைன்னு ஒரு பதிவு போட்டாள். ஃபீல் பண்ணி எழுதியிருந்தாள். ஆனால் அதுவே நகைச்சுவையாய் அமைந்துவிட்டது. இப்படி நகைச்சுவை பண்றேன்னு சீரியஸா ஆனதும் சிரியஸா எழுதுறேன்னு காமெடியாய் எழுதியதும் சூப்பரோ சூப்பர். மலேசிய வலைபதிவர் சந்திப்பு ஒன்று எழுதியிருப்பாள் பாருங்க. மறவாமல் அதையும் படிங்க.

ரொம்ப எழுதிட்டேனோ??? சரி சரி.. ஒரு சின்ன இடைவெளி விட்டு நாளைக்கு வாரேன்.. அதுவரை பின்னூட்ட பதிவில் சந்திப்போம்... வர்ட்டா..

37 comments:

  1. வந்துட்டோம்ல....

    ReplyDelete
  2. அக்கா இது இது இத தான் நாங்க எதிர்பார்த்தோம்....கலக்கிட்டீங்க....வாழ்துக்கள்...சரி சரி பதிவ படிச்சிட்டு வரென்...

    ReplyDelete
  3. நாளைக்கு என்ன சரவெடின்னு தெரிஞ்சிபோச்சி........சும்மா அதிரும்ல...

    ReplyDelete
  4. யாருப்பா இது...வெடி இல்லாத தீபாவளி கொண்டாடின என்னை கிண்டல் பண்ணுற மாதிரி வெடி போடுறது....

    ReplyDelete
  5. இன்னைக்கு கொடுத்த லிங்க்ல பாதி பதிவு படிச்சதுதான்.

    நல்ல பதிவு!!

    பாராட்டுக்கள்

    ReplyDelete
  6. கலக்குங்க மை ஃப்ரெண்ட்!

    ஜொல்லுப்பாண்டி = ஜொள்ளுப்பாண்டி !!

    ஜி யின் வலைபதிவில் நான் ரசித்து சிரித்த பதிவுகளை நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  7. அட இன்னைக்கும் நான் தான் 1ஸ்ட்டா....அபி + நட்டு அப்பாக்காக (birthday அதான்) உங்க பதிவை நான் சமர்பிக்கிறென்...

    ReplyDelete
  8. //யாருப்பா இது...வெடி இல்லாத தீபாவளி கொண்டாடின என்னை கிண்டல் பண்ணுற மாதிரி வெடி போடுறது..//

    தப்பா சொல்லுறீங்க டிபிசிடி.வெடி வாங்க தெரியாததினால் வெடி இல்லாத தீபாவளின்னு சொல்லனும்..


    வாழ்த்துக்கள் அக்கா..
    அப்புறம் நன்றி என்னையும் இந்த லிஸ்டில் சேர்த்திற்கு :D

    ReplyDelete
  9. ஆகா எல்லாமே சூப்பரு எப்டி இப்டி சரவெடியா கொளுத்தற. நல்லா இருக்கு எல்லாமே :)

    ReplyDelete
  10. எஸ் மேடம்!! இப்பதைக்கு அட்டெண்டென்ஸ்!! அப்பாலிக்கா வந்து படிக்கிறேன்!!

    ReplyDelete
  11. //"ஹாஹாஹாஹாஹாஹா"
    ஒன்னுமில்லைங்க.. நான் சிரிச்சேன். அவ்வளவுதான். :-)//
    என்னக்கா இதெல்லாம்! சின்னப்பிள்ளைகளெல்லாம் இருக்கம்ல. பயமுறுத்தாதீங்க. தெரியாத பலரையும் தெரிய வைத்தற்கு நன்றி.ம்.. கலக்குங்க.

    ReplyDelete
  12. //கண்டிப்பாக படிக்க சிபியின் வெள்ளை அறிக்கை. (இது ஏன் நகைச்சுவையில சேர்த்திருக்கிறேன் என்று நீங்களே அந்த பதிவுக்கு போய் பாருங்க).//
    அறிக்கை சூப்பரா இருக்கு

    ReplyDelete
  13. பல ஜாம்பாவன்கலோடு என்னையும் இனைச்சதுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  14. செல்லம்.. ஏத்தியிருக்கியா இறக்கியிருக்கியான்னே புரில. :( எதுக்கும் ஒரு நன்றி சொல்லிக்கறேன்!!

    //அந்த ஒரே ஒரு பதிவுக்கு பிறகு, அவரே அவர் வீட்டு பக்கம் போக மாட்டார். //

    :)))) கோபி இங்க பாருங்க.. இந்த பொண்ணு உண்மையெல்லாம் போட்டு உடைக்குது..

    ReplyDelete
  15. \\அந்த ஒரே ஒரு பதிவுக்கு பிறகு, அவரே அவர் வீட்டு பக்கம் போக மாட்டார். //

    சூப்பர் பஞ்ச் டயலாக் ஆச்சே இது...

    வெடி பலமாஇருக்கே...

    ReplyDelete
  16. ஆத்தா மலேஷிய மாரியாத்தா...எவ்ளோ நேரந்தான் வலிக்காத மாதிரியே அடி வாங்கறது.என்னமோ கிச்சு கிச்சு மூட்டமட்டுந்தான்னு முத்திரை குத்தி என்னை உருப்படியா எழுத வுட மாட்டேங்கிறீங்களே ஆத்தா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  17. @Baby Pavan:

    //வந்துட்டோம்ல....//

    வாடா தம்பி. இன்னைக்கும் நீதான் ஃபர்ஸ்ட்டு. ;-)

    //அக்கா இது இது இத தான் நாங்க எதிர்பார்த்தோம்....கலக்கிட்டீங்க....வாழ்துக்கள்...சரி சரி பதிவ படிச்சிட்டு வரென்...//

    குட். என்னை மாதிரியே நீயும் வளர்ற. பதிவை படிக்காம்ல் பின்னூட்டம் போட்டுட்டு பிறகு பதிவு படிப்பது. ;-)

    //நாளைக்கு என்ன சரவெடின்னு தெரிஞ்சிபோச்சி........சும்மா அதிரும்ல...//

    தெரிஞ்சிருச்சா? நம்மளை போல சின்ன புள்ளைங்களுக்கு பிடிச்ச செஸ்ஷந்தான் நாளைக்கு. :-)

    ReplyDelete
  18. கண்மணி said...

    ஆத்தா மலேஷிய மாரியாத்தா...எவ்ளோ நேரந்தான் வலிக்காத மாதிரியே அடி வாங்கறது.என்னமோ கிச்சு கிச்சு மூட்டமட்டுந்தான்னு முத்திரை குத்தி என்னை உருப்படியா எழுத வுட மாட்டேங்கிறீங்களே ஆத்தா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    அக்காவ யாருப்பா கலாய்க்கரது....ஆட்டோ ஸ்டார்ட்...

    ReplyDelete
  19. @TBCD:

    //யாருப்பா இது...வெடி இல்லாத தீபாவளி கொண்டாடின என்னை கிண்டல் பண்ணுற மாதிரி வெடி போடுறது....
    //

    இந்த விஷயத்தைத்தானே பிபிசி நியூஸ்ல சொல்லிட்டாங்களே.. நீங்க பார்க்கலையா? :-P

    ReplyDelete
  20. @மங்களூர் சிவா:

    //இன்னைக்கு கொடுத்த லிங்க்ல பாதி பதிவு படிச்சதுதான்.

    நல்ல பதிவு!!

    பாராட்டுக்கள்//

    என்ன பண்றது சிவா... உங்க நட்பு வட்டாரம் என்னுடையதை விட பெருசு. அதான். ;-)

    ReplyDelete
  21. @Divya:

    //கலக்குங்க மை ஃப்ரெண்ட்!//

    நீங்க இன்னும் கரண்டி கொடுக்கலையே திவ்யா. :-)

    //ஜொல்லுப்பாண்டி = ஜொள்ளுப்பாண்டி !! //

    ஆஹா.. தப்பா டைப் பண்ணிட்டேனோ? சாரி பாண்டிண்ணே..

    //ஜி யின் வலைபதிவில் நான் ரசித்து சிரித்த பதிவுகளை நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்!//

    :-)))

    ReplyDelete
  22. @Baby Pavan:


    //அட இன்னைக்கும் நான் தான் 1ஸ்ட்டா....அபி + நட்டு அப்பாக்காக (birthday அதான்) உங்க பதிவை நான் சமர்பிக்கிறென்...//

    தம்பிக்கு ஒரு ரிப்பீட்டேய்.. :-)

    ReplyDelete
  23. @துர்கா|thurgah:

    //தப்பா சொல்லுறீங்க டிபிசிடி.வெடி வாங்க தெரியாததினால் வெடி இல்லாத தீபாவளின்னு சொல்லனும்..//

    :-P

    //வாழ்த்துக்கள் அக்கா..//

    நன்றீம்மா..

    //அப்புறம் நன்றி என்னையும் இந்த லிஸ்டில் சேர்த்திற்கு :D//

    நல்ல பதிவுகளை சுட்டிக்காட்ட சொன்னாங்க.. காட்டிட்டேன். ;-)

    ReplyDelete
  24. @அனுசுயா:

    //ஆகா எல்லாமே சூப்பரு எப்டி இப்டி சரவெடியா கொளுத்தற. நல்லா இருக்கு எல்லாமே :)//

    :-))) வெடி நல்லா வெடிக்குதா?

    ReplyDelete
  25. @குட்டிபிசாசு:

    //எஸ் மேடம்!! இப்பதைக்கு அட்டெண்டென்ஸ்!! அப்பாலிக்கா வந்து படிக்கிறேன்!!//

    வந்து படிப்பீங்கல்ல?

    ReplyDelete
  26. @வித்யா கலைவாணி:

    //என்னக்கா இதெல்லாம்! சின்னப்பிள்ளைகளெல்லாம் இருக்கம்ல. பயமுறுத்தாதீங்க.//

    எனக்கேவா? :-P

    // தெரியாத பலரையும் தெரிய வைத்தற்கு நன்றி.ம்.. கலக்குங்க.//

    நன்றி நன்றி. :-)

    //அறிக்கை சூப்பரா இருக்கு//

    தலைபை பார்த்துதானே நானும் ஏமார்ந்தேன். :-P

    ReplyDelete
  27. @வித்யா கலைவாணி:

    //என்னக்கா இதெல்லாம்! சின்னப்பிள்ளைகளெல்லாம் இருக்கம்ல. பயமுறுத்தாதீங்க.//

    எனக்கேவா? :-P

    // தெரியாத பலரையும் தெரிய வைத்தற்கு நன்றி.ம்.. கலக்குங்க.//

    நன்றி நன்றி. :-)

    //அறிக்கை சூப்பரா இருக்கு//

    தலைபை பார்த்துதானே நானும் ஏமார்ந்தேன். :-P

    ReplyDelete
  28. @குசும்பன்:

    //பல ஜாம்பாவன்கலோடு என்னையும் இனைச்சதுக்கு மிக்க நன்றி!//

    ஓவர் தன்னடக்கமா இருக்கே? என்ன சேதி? :-P

    ReplyDelete
  29. @காயத்ரி:

    //செல்லம்.. ஏத்தியிருக்கியா இறக்கியிருக்கியான்னே புரில. :( எதுக்கும் ஒரு நன்றி சொல்லிக்கறேன்!! //

    இப்போ விளக்கமா சொல்றேன். உங்க பதிவுல போடுறது கலாய்த்தல் மட்டுமே! இங்கே எழுதியது உங்களுக்கு கிடைக்க வேண்டிய பாரட்டுக்கள் மட்டுமே!

    வேணும்ன்னா உங்களை கலாய்ச்சு என் ப்ளாக்ல ஒரு போஸ்ட் போடவா அக்கா? :-D

    இந்த கலாய்த்தலுக்கு குசும்பன் அண்ணாதான் எனக்கு குரு என்று வெலியில் சொல்லமாட்டேன்.. :-)

    //:)))) கோபி இங்க பாருங்க.. இந்த பொண்ணு உண்மையெல்லாம் போட்டு உடைக்குது..//

    இது அவருக்கே தெரிஞ்ச விஷயமாச்சே. :-P

    ReplyDelete
  30. @முத்துலெட்சுமி:

    //\\அந்த ஒரே ஒரு பதிவுக்கு பிறகு, அவரே அவர் வீட்டு பக்கம் போக மாட்டார். //

    சூப்பர் பஞ்ச் டயலாக் ஆச்சே இது...//

    :-)))

    //வெடி பலமாஇருக்கே...//

    நாளைக்கு குறைச்சுடலாம்க்கா. ;-)

    ReplyDelete
  31. @கண்மணி:

    //ஆத்தா மலேஷிய மாரியாத்தா...எவ்ளோ நேரந்தான் வலிக்காத மாதிரியே அடி வாங்கறது.என்னமோ கிச்சு கிச்சு மூட்டமட்டுந்தான்னு முத்திரை குத்தி என்னை உருப்படியா எழுத வுட மாட்டேங்கிறீங்களே ஆத்தா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    கண்மணியக்கா காமெடின்னா சும்மாவா? வீ வான் ஒன்லி காமெடி.. :-D எங்களை ஏமாத்த மாட்டீங்கல்ல?? :-)

    ReplyDelete
  32. மைப்ரெண்ட் :)))
    என்னடா இது இங்கன கே கொள்ளேன்னு ஒரே சவுண்டா இருக்குதேன்னு எட்டிப்பார்த்தா ஆத்தா ஆவேசமா ஆடிகிட்டு இருக்கு !! :)))) என்னா ஒரு பதிவு என்னா ஒரு கலக்கலு !! சும்மா பின்னுங்கம்மணி !!! வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  33. அணு.. அக்கா..ஆண்ட்டி.. அட ரொம்பவே மெனக் கெட்டிருக்காங்கபா...நெறய நல்ல பதிவுங்கள அறிமுகப் படித்தி இருக்காங்க.. ரொம்ப டேங்ஸ் அத்தை.. :)

    ReplyDelete
  34. சில புதிய பதிவுகளின் சுட்டிக்கு ஒரு நன்றி ;)

    என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கிட்டதுக்கு ஒரு மிக பெரிய நன்றி ;))

    @காயத்ரி
    \\//அந்த ஒரே ஒரு பதிவுக்கு பிறகு, அவரே அவர் வீட்டு பக்கம் போக மாட்டார். //

    :)))) கோபி இங்க பாருங்க.. இந்த பொண்ணு உண்மையெல்லாம் போட்டு உடைக்குது..\\

    நானே வலிக்காத மாதிரி நடிச்சிக்கிட்டு இருக்கேன் இதுல நீங்க வேற...;)

    @ முத்துலெட்சுமி

    \\அந்த ஒரே ஒரு பதிவுக்கு பிறகு, அவரே அவர் வீட்டு பக்கம் போக மாட்டார். //

    சூப்பர் பஞ்ச் டயலாக் ஆச்சே இது...\\

    வேண்டாம் அப்புறம் நான் அழுதுடுவேன்...அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  35. @ஜொள்ளுப்பாண்டி:

    //மைப்ரெண்ட் :)))
    என்னடா இது இங்கன கே கொள்ளேன்னு ஒரே சவுண்டா இருக்குதேன்னு எட்டிப்பார்த்தா ஆத்தா ஆவேசமா ஆடிகிட்டு இருக்கு !! :))))//

    ஆஹா.. எனக்கு இன்னும் சாமி வரலை. :-P

    // என்னா ஒரு பதிவு என்னா ஒரு கலக்கலு !! சும்மா பின்னுங்கம்மணி !!! வாழ்த்துக்கள் !!//

    நன்றீ நன்றீ நன்றீ அண்ணே. :-)))

    ReplyDelete
  36. @~பொடியன்~:

    //அணு.. அக்கா..ஆண்ட்டி.. அட ரொம்பவே மெனக் கெட்டிருக்காங்கபா...நெறய நல்ல பதிவுங்கள அறிமுகப் படித்தி இருக்காங்க.. ரொம்ப டேங்ஸ் அத்தை.. :)//

    பொடியன் அங்கிள்.. கொஞ்சம் தெளிவா பேசுங்க.. அக்காவா, ஆண்டியா, அத்தையா? :-P

    ReplyDelete
  37. @கோபிநாத்:

    //சில புதிய பதிவுகளின் சுட்டிக்கு ஒரு நன்றி ;)//

    :-))))

    //என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கிட்டதுக்கு ஒரு மிக பெரிய நன்றி ;))//

    நன்றி ஹை.. :-)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது