07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, November 14, 2007

கதை கேளு.. கதை கேளு..

சின்ன குழந்தையை அதட்டி, மிரட்டி சோறு ஊட்டினால் சாப்பிடவே சாப்பிடாது. அதுவே ஒரு கதை சொல்லி ஊட்டி பாருங்க. சாப்பிடுறோம் என்று அறியாமலேயே கதையை கேட்டுட்டே எல்லாத்தையும் சாப்பிட்டு முடித்துவிடும். தூங்க போற குழந்தைக்கும் கதை சொல்லி தூங்க வைக்கிற பெற்றோர்கள் நிறைய பேர் இருக்காங்க. சின்ன குழந்தை முதல் வயதான முதியோர் வரை யாருக்குமே கதை என்றால் பிடிக்காது என்று சொல்லி நான் கேட்டதில்லை. கதை என்றால் எனக்கும் மிகவும் பிடித்த ஒன்று. நமது நண்பர்களில் பலர் மிக மிக அருமையாக கதை எழுதுகிறார்கள். ஒவ்வொருத்தராய் பார்ப்போம் வாருங்கள்...

ஒரு கதை படிக்கும்போதே நம் மனதில் அந்த காட்சி ஓடுற மாதிரி தோண்றுவதுதான் அந்த கதையின் முதல் வெற்றி. தேவ் அண்ணாவின் மௌனம் பேசியபொழுது என்ற கதை படித்தபோது அது ஒரு நிஜ கதை என்று நம்பினேன். எழுதியவரே வந்து இது கற்பனைன்னு சொன்னால் கூட நம்பாத அளவுக்கு எனக்கு இது ஒரு நிஜமாக பட்டது. உடனே அவருடைய பழைய இடுகைகளை நோண்டி எல்லா கதைகளையும் படிக்க ஆரம்பித்தேன். அவருடைய படிப்புகளில் என்னை ரொம்பவும் கவர்ந்தது நானும் என் கவிதையும் என்ற கதைதான். ஒவ்வொரு கதையும் படிக்க படிக்க தித்திப்பு மூட்டும் விதமாக அமைந்தவை. இவரின் மனதில் நிற்கும் மற்ற கதைகள்:

நட்பெனும் தீவினிலே
நன்பனின் காதலி

ஒரு சாரல் பொழுது
சிற்பியே உன்னை செதுக்குகிறேன்

கதை என்று சொன்னாலே இம்சை அரசிக்கு கண்டிப்பாக என் ஓட்டு உண்டு. அவரை இம்சை அரசின்னு சொல்வதை விட எழுத்து அரசின்னுதான் சொல்ல வேண்டும். இவருடைய ஒவ்வொரு கதையிலும் உயிரோட்டம் இருக்கும். அத்தை மகனே! அத்தானே! அனேகமாக அனைவரையும் கவர்ந்த ஒரு தொடர்கதை. இரண்டு சுட்டித்தனமான கேரக்டர்களுக்கு வரும் காதலையும் அதை சொல்லிய விதமும் மிகவும் அழகாக சித்தரித்திருக்கிறார். காதலி தனக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சுன்னு சொல்லும்போது தன்னோட காதலை சொல்ல முடியாமல் திணறிய மனோவின் வலியை அறிய இதையும் படிக்கவும்.

அழுகையுடன் ஆரம்பமானது முதலிரவு... தலைப்பே எவ்வளவு இண்ட்ரெஸ்டிங்-ஆ இருக்கிறது என்று யோசிக்கிறீங்களா? அப்படின்னா மறவாமல் நீங்க காதல் முரசு அருட்பெருங்கோவின் இந்த கதையை படித்தே ஆகவேண்டும். "டீனேஜ்" வயதில் அரும்பும் காதலையும் அதன் தாக்கத்தையும் ப்ளஸ் 2 காதல் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார் இவர்.

அமேரிக்க மாப்பிள்ளை என்றாலே சிலர் ஒன்றும் யோசிக்காமலேயே திருமணம் செய்து வைக்க தயாராக இருக்கின்றனர், மகள் அமேரிக்காவில் சந்தோஷமாக இருப்பாள் என்ற குருட்டு நம்பிக்கையுடன். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஒரு பெண்ணின் அமேரிக்க கணவனை பற்றியும் அவளின் வாழ்க்கையை பற்றியும் எல்லாருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திய ப்ரியாவின் கண்ணாளனே கதை கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.

ஜி. ராகவன் எழுதிய கள்ளியிலும் பால் தொடர்கதை பற்றி சொல்லணுமா? பெரிய பெரிய எழுத்தாளர்களே படித்துட்டு சூப்பர்ன்னு சொன்ன கதை. எனக்கெல்லாம் ஒரு கதை எழுதவே வர மாட்டேங்குது. ஆனால் 12 பாகங்களையும் விறுவிறுப்பாக எழுதி முடித்துட்டுவிட்டு இப்போ காதல் குளிர் என்ற தொடர்கதையை ஆரம்பித்திருக்கிறார்.

கொல்டின்னு ஒரு சூப்பர் கதை எழுதி பலரோட பாராட்டைப்பெற்றவர் வெட்டிப்பயல் பாலாஜி. ஒரு தமிழ் பையனுக்கும் தெலுங்கு பொண்ணுக்கும் ஏற்படும் காதல். அதை சொல்லாமலேயே பிரிந்த சோகம்ன்னு எல்லாவற்றையும் அருமையான நடையில் எழுதியிருப்பார். தனிமைதான் உலகம்ன்னு நினைச்சிட்டு இருந்த கார்த்திக்கு ஆர்த்தியின் நட்பால் அடைந்த மாற்றங்கள் உண்மையிலேயே ஒரு தூரல்தான்.

பொதுவாவே நட்பு சம்பந்தமா எது எழுதியிருந்தாலும் நான் விரும்பி படிப்பேன். அதுவும் கதை என்றால் சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு தடவையும் படிக்கும்போது புது கதை படிப்பதுபோலவே தோன்றும். அறிவுஜீவி கப்பிபய ஒரு நண்பனின் மரணத்தைப் பற்றி மரணமும் மரணத்தை சார்ந்தும் என்ற சிறுகதை எழுதியிருப்பார். காதலில் பிரச்சனை வரும்போது முன் பின் யோசிக்காமல் அவசரமாக எடுக்கப்படும் முடிவு சரியல்ல என்பதை தெளிவு என்ற கதையில் புரியவைத்திருப்பார்.

என்ன நினைச்சு சவுண்ட் பார்ட்டின்னு பேரு வச்சாரோ தெரியவில்லை.. நிஜமாலுமே இவர் எழுதுற கதைகளுக்கு இவர் தன்னோட சட்டை கோலரை தூக்கிவிட்டு சவுண்ட் விட்டுக்கலாம்.. நல்லா எழுதுறாரு. ஆனால், சில காலம் சவுண்டே கேட்கலை. இப்போது நான் வலைச்சரம் எழுதும் நேரம் அவர் திரும்பி வந்திருக்காரு. அவரை மீண்டும் வருக என்று வரவேற்போம். இவர் பல கதைகள் எழுதியிருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தது நிஜமல்ல கதை, வாசுவும் வெடைக்கோழியும் மற்றும் கருவாச்சி காவியம். என்னடா கவிச்சு வாடை அடிக்குதேனு நினைக்காதீங்க. ஒரு தடவை முகர்ந்து பாருங்க. எப்போதும் விட மாட்டீங்க..

பாரதி கண்ணாம்மாவில் வலைப்பதியும் கார்த்திக் பிரபுவின் நான் கணவனான போது என்ற அவருடைய அனுபவங்களை படிக்க ஆரம்பித்ததிலிருந்து அவருடைய ஒவ்வொரு பதிவாக முன்னும் பின்னும் படித்து ரசித்தவள் நான். கதைகளில் ஒரு டாக்டர் இஞ்சினியரான கதையும் சினிமாவைப்பற்றி எழுதிய தமிழ் சினிமா கேரக்டர்கள் - ஒரு அலசல், நீங்க மிஸ் பண்றீங்களா? மற்றும் அத்தை பெண்கள் என்ற அழகிகள், அத்தை பையன்கள் என்ற அழகன்கள் கவிதைகளும் நான் மிகவும் ரசித்தவைகளில் சில.

கணவன் தன் மேல் பாசம் இல்லைன்னு நினைக்கும் ஒரு மனைவியின் மனப்போராட்டத்தையும், அதே காதல் மனைவிக்கு எல்லாம் செய்து மகிழ்ச்சியூட்ட வேண்டும் என சிந்திக்கும் கணவனைப்பற்றியும் அழகிய கவிதையாய் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என்ற கதயில் சொல்லியிருக்கிறார் பல மாதங்களாய் காணாமல் போய் திரும்பி வந்திருக்கும் திவ்யா. இனி தொடர்ந்து பல கதைகள் எழுத வாழ்த்துக்கள்.

ஒரு தடவை ராம் ஒரு கதையை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்து, "ஒரு கதை இருக்கு. படிச்சு பாரு"ன்னு சொன்னார். அப்பவே ப்ரிண்ட் எடுத்து வைத்து படித்தேன். இது ஒரு காதல் கதைதான். கதையில் தலைப்பு வெண்ணிலா கேக். கதை நல்லா இருந்துச்சு. "ராம், கதை சூப்பர். எப்போ பப்ளிஷ் பண்ண போறீங்க"ன்னு கேட்டதுக்கு, "அது நான் எழுதியது அல்ல. கொங்கு ராசா எழுதியது. கீழே அவர் பெயரு இருக்குமே?"ன்னு சொல்லி கொங்குராசாவின் முகவரியை கொடுத்தார். அன்றிலிருந்து நான் சுற்றித்திரியும் இன்னொரு இடமாக ஆகிவிட்டது இவரின் தளம்.

சின்ன பசங்க எங்களுக்கு இல்லாத வேகம் துளசி டீச்சருக்கு இருக்கு. அவங்க பதிவெழுதுற வேகத்தை எவ்வளவு விரட்டினாலும் பிடிக்க முடியலை. ஒரு பதிவு படிச்சு முடிச்சு பின்னூட்டம் போடுறதுக்குள் இவங்க இரண்டு பதிவுகளை போட்டுடுறாங்க. டீச்சர், என்னைக்கு இருந்தாலும் ஆமை வேகத்திலாவது உங்க பதிவை படிச்சு முடிப்பேன். பார்த்துட்டே இருங்க. நீங்க இப்போது அவங்க கதையாக எழுதும் வீடு ‘வா வா’ங்குது தொடரை படிங்களேன்.

பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறு ஜென்மம் என்று சொல்வார்கள். பிரசவ வலி என்பது அந்த பெண் மட்டுமே அனுபவிக்கும் வலி அல்ல. அது அவள் கணவனும் அனுபவிக்கும் வலி என்பதை ஒரு சிறுகதையாக எழுதியுள்ளார் அண்ணன் டுபுக்கு அவர்கள். படிக்கும்போது நாமே அந்த வலி அனுபவிக்கும்படி சூழ்நிலையை அவர் கதையில் உருவாக்கியுள்ளார்.

இந்த பதிவை எழுதும்போதே முதலில் இந்த கதை பற்றிதான் எழுதவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், எப்போதும் பெஸ்ட் என்பதை கடைசியாக எழுதுவது சிறந்தது என்று சொல்வார்கள். (அதுக்குன்னு மேலே உள்ளது சிறந்தது இல்லைன்னு தப்பா நினைச்சிடாதீங்க). ஒரு கதை எனக்கு பிடித்திருந்தால், அந்த கதை படித்து முடிக்கும்போது அந்த கதையின் தாக்கமும் கூடவே என்னுடன் இருக்கும். அப்படிப்பட்ட கதைகளைத்தான் இந்த பதிவில் நான் வரிசைப்படுத்தியிருக்கிறேன். ஆனால், இந்த கதை something special for me. இந்த கதையை படித்து முடிக்கும்போது நான் அழுதேன். ரூபியின் மரணம் ஒரு உண்மை சம்பவம் என்று அறிந்ததாலா இல்லை ராம் அவர் உருகி அவருடைய மனதில் இருப்பதை அப்படியே கொட்டினதில் அந்த சம்பவம் நேரில் நடப்பது போல் தோன்றியதாலா என்று சொல்ல தெரியவில்லை. அது எனக்கே நடந்ததுபோலவும் மாணிக்க மலர் ரூபி என் சொந்த தங்கச்சி போலவும் அந்த கதையில் உணர்ந்தேன். ராம் இனி எத்தனை கதை எழுதினாலும் இந்த கதைதான் THE BEST OF THE BEST.

நான் எழுதவே மாட்டேன்னு நீங்க நினைக்கிற ஒன்றைப்பற்றி நாளை.. காத்திருப்பீர்களா??

18 comments:

  1. அக்காவுக்கு குட்டீஸ் தின வாழ்த்துக்கள்....நன்றி

    ReplyDelete
  2. நாங்க தான் எங்கயும் எப்பவும் 1ச்ட்....
    சரி சரி பதிவு படிச்சிட்டு வரென்...

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்கு. நிஜமாலுமே எனக்கு பிடிச்ச மாதிரி எழுதியிருக்கிற. இனிமே கதை படிக்கனும்னா இந்த பதிவு லிங்க் போதும் :)

    ReplyDelete
  4. \\நான் எழுதவே மாட்டேன்னு நீங்க நினைக்கிற ஒன்றைப்பற்றி நாளை.. காத்திருப்பீர்களா??//

    எனக்குத்தெரியுமே அது என்னன்னு :)

    ReplyDelete
  5. \\நான் எழுதவே மாட்டேன்னு நீங்க நினைக்கிற ஒன்றைப்பற்றி நாளை.. காத்திருப்பீர்களா??//
    நான் கண்டுபிடிச்சிட்டேனே! அக்கா பேய்க்கதை தானே எழுதப் போறீங்க.

    ReplyDelete
  6. கவிதை எழுதறதுக்கு முன்னாடி நான் எழுதினதே இந்த ரெண்டு கதை மட்டும்தான். அந்த ரெண்டையும் படிக்க தகுந்ததுன்னு சொல்லியிருக்கீங்களா? நன்றி மை ஃப்ரெண்ட் :).

    லின்க் கொடுத்திருக்கிற மற்ற கதைகளையும் படிக்கனும். நேரம் தான் கிடைக்க மாட்டேங்குது :(

    ReplyDelete
  7. @Baby Pavan:

    //அக்காவுக்கு குட்டீஸ் தின வாழ்த்துக்கள்....நன்றி//

    உனக்கும் மற்ற குட்டீஸ்களுக்கும் வாழ்த்துக்கள்டா. எல்லாரும் எல்லா வளமும் கண்டு சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள்..

    //
    நாங்க தான் எங்கயும் எப்பவும் 1ச்ட்....
    சரி சரி பதிவு படிச்சிட்டு வரென்...//

    நல்லா சுறுசுறுப்பா இருக்கே. மத்தவங்களெல்லாம் சுறுசுறுப்புன்னா என்னன்னு உங்கிட்டதான் கத்துக்கணும் ராஜா. :-)

    ReplyDelete
  8. @அனுசுயா:

    //ரொம்ப நல்லா இருக்கு. நிஜமாலுமே எனக்கு பிடிச்ச மாதிரி எழுதியிருக்கிற. இனிமே கதை படிக்கனும்னா இந்த பதிவு லிங்க் போதும் :)
    //

    ஆமாவா அக்கா? :-) நன்றி. ;-)

    ReplyDelete
  9. @வேதா:

    //இந்த தொகுப்புல ப்ரியா,டுபுக்கு இவங்க கதைய தவிர வேற எந்த கதையும் படிச்சது இல்ல :) நீ கொடுத்துருக்கற விமர்சனத்தை பார்த்தவுடன கண்டிப்பா படிச்சு பார்க்கணும்னு தோணுது :)//

    எல்லாரையும் add பண்ணுங்க professor..இனி உங்க கூகல் ரீடர் அதிரப்போகுது. :-)

    ReplyDelete
  10. @முத்துலெட்சுமி:

    //எனக்குத்தெரியுமே அது என்னன்னு :)//

    ஆமா. ஆமா. எப்போதும் உங்க கிட்டதானே விளக்கம் கேட்பேன். ;-)

    ReplyDelete
  11. மைஃபரண்ட், நல்ல கதைகள் படிக்க அருமயா லிங்க் கொடுத்திருக்கிறீங்க, நன்றி!
    என் பதிவின் கதையையும் கோடிட்டு காட்டியமைக்கு மிக்க நன்றி!

    என் அருமை நண்பர் கொங்கு ராசாவின் 'வெண்ணிலா கேக்' எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று!

    நான் இதுவரை படித்திராத பல பதிவுகளின் லிங்க கிடைத்துள்ளது உங்கள் பதிவில், கண்டிப்பாக அவைகளை விரைவில் படிக்கிறேன்!

    ReplyDelete
  12. //ராம் இனி எத்தனை கதை எழுதினாலும் இந்த கதைதான் THE BEST OF THE BEST.//

    நன்றிம்மா...

    ReplyDelete
  13. நல்லா தொகுத்து இருக்கிங்க :)

    ரெண்டு பதிவர்களின் கதை தான் இன்னும் படிக்கல (கொங்குராசா, ப்ரியா) படிச்சிடுறேன் ;)

    ReplyDelete
  14. இந்தப் பதிவின் மூலம் நாட்டுக்கு நம்ம கதைகளையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றிம்மா

    ReplyDelete
  15. @Divya:

    //மைஃபரண்ட், நல்ல கதைகள் படிக்க அருமயா லிங்க் கொடுத்திருக்கிறீங்க, நன்றி!//

    நன்றி திவ்யா. :-)

    //என் பதிவின் கதையையும் கோடிட்டு காட்டியமைக்கு மிக்க நன்றி!//

    நல்ல கதைகள். கோடிட்டு காட்டியாச்சு. ;-)

    //என் அருமை நண்பர் கொங்கு ராசாவின் 'வெண்ணிலா கேக்' எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று!//

    படித்ததில் இருந்து எனக்கும் பிடித்துவிட்டது. :-)

    //நான் இதுவரை படித்திராத பல பதிவுகளின் லிங்க கிடைத்துள்ளது உங்கள் பதிவில், கண்டிப்பாக அவைகளை விரைவில் படிக்கிறேன்!//

    வாங்க.. ஒன்றாக உலா வரலாம். :-)

    ReplyDelete
  16. @இராம்/Raam:


    //நன்றிம்மா...//

    :-)))

    ReplyDelete
  17. @கோபிநாத்:

    //நல்லா தொகுத்து இருக்கிங்க :)//

    நன்றிண்ணே.. :-)

    //ரெண்டு பதிவர்களின் கதை தான் இன்னும் படிக்கல (கொங்குராசா, ப்ரியா) படிச்சிடுறேன் ;)
    //

    படிச்சிட்டு வாங்கண்ணே. :-)சூப்பரா இருக்கும். ;-)

    ReplyDelete
  18. @தேவ் | Dev:

    //இந்தப் பதிவின் மூலம் நாட்டுக்கு நம்ம கதைகளையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றிம்மா//

    நாடென்ன நாடு.. இன்னேரம் உங்க டேலண்டை உலகமே அறிஞ்சிருக்கும். :-)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது