கவனம் ஈர்த்த கதைசொல்லிகள்!
வலையில் என்னை அதிகம் பொறாமைப்பட வைப்பதும், 'சோதனை' முயற்சியாகக் கூட நான் இறங்காமல் இருப்பதுமான கதைக்களத்தை ஏராளமான பதிவர்கள் வெகு எளிதாகக் கையாண்டு வருவது ஆச்சரியப்படுத்துகிறது! நீண்ட நெடும் புதினங்களை விடவும் சட்டென முடிவுக்கு வந்துவிடும் சிறுகதைகளே என்னை ஈர்க்கின்றன.
சிறுகதை என்றதும் மரத்தடி டாட் காமில் படித்த ஜெயஸ்ரீ கோவிந்தராஜனின் "மீண்டும் ஒரு காதல் கதை" யின் நினைவு தான் வந்து போகிறது. பெண் மனதின் ஆசைகளை, பெண்ணுணர்வுகளை மிக அழகாய்ச் சித்தரித்த சற்றே பெரிய சிறுகதை அது.
"சிவதனுசு நகர்த்திப்
பந்தெடுத்த சீதையை-
பின் எப்பொழுதுமே
பார்க்க முடிந்ததில்லை
ஜனகனால்."
என கதையை கவிதையால் சொல்லி முடித்த விதம் அழகோ அழகு!
வா.மணிகண்டனுக்கு சிறுகதைகள் இயல்பான நடையில் வருகின்றன. இவர் பதிவில் சமீபமாய்ப் படித்த " ஒரு தற்கொலையும் இரண்டு காரணங்களும்" மிகவும் பிடித்திருந்தது. அதே போல் "எனக்கு பிரம்மச்சரிய ராசி" மற்றும் "ஒரு நடிகையின் கதை" ஆகியனவும் நன்றாக இருக்கின்றன.
ஆழியூரானின் நட்சத்திர வாரத்தின் போதுதான் அவர் பதிவுகளை முதன்முதலாய் படிக்கத் தொடங்கினேன். என்னமாய்க் கதை எழுதுகிறார் மனிதர்! என்று ஆச்சரியப்பட வைத்தவர். இவரின் "குப்பமுத்து குதிரை" "காதலித்துப்பார் - டவுசர் கிழியும் தாவு தீரும்" கதைகளின் இலகுவான நடை அசத்தலாயிருந்தது.
தமிழ்நதி கவிதைகளோடு சேர்த்து கதைகளையும் அனாயசமாய் கையாள்கிறார். இவரின் "கதை சொன்ன கதை"யை ரொம்பவே ரசித்தேன். "என் பெயர் அகதி" படித்து முடிக்கையில் மனதில் சோகம் கப்பிக் கொண்டது.
நுனிப்புல் உஷாவின் கதைகளில் வரும் மெலிதான அங்கதம் பிடித்துப் போகிறது! "ப்ளாக்கோபோபியா" மற்றும் "நானே நட்சத்திரம் ஆனேனே" இரண்டும் சுவாரசியமான சிறுகதைகள்!
நிலாரசிகனின் "இரு நிமிடக் கதைகள்" தளம் உடனடி அவசர சிறுகதைகளைக் கொண்டிருக்கிறது. "14வது கதை" எனக்குப் பிடித்திருந்தது.
எங்கள் சங்கத்து தங்கம் இம்சையரசி காதல் சொட்டும் கதைகளை சிறப்பாக எழுதி வருகிறார். இவரின் "அத்தை மகனே அத்தானே" எனக்குப் பிடித்த சிறுகதை.
இவை தவிர..
அய்யனாரின் "எண்களால் நிரம்பிய சங்கமித்திரையின் அறை", "உறங்க இடம்தேடியலையும் பூனைக்குட்டியின் முகச்சாயல்களையொத்தவள்"
தம்பியின் அன்பின் நிராகரிப்புகள்
அருள்குமாரின் "மரணம் என்றொரு நிகழ்வு"
கவிதைச் சாலை சேவியரின் "ஏலி ஏலி லாமா சபக்தானி" "கடவுள் கேட்ட லிஃப்ட்"
தமிழியின் உறவுகள் - ஒரு சிறுகதை
சயந்தனின் "ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்"
மெலட்டூர் இரா.நடராஜனின் "எனது 19 வது சிறுகதை"
எனக்குப் பிடித்தவற்றின் வரிசையிலிருக்கின்றன!
|
|
நல்ல கதைகள் தேடி எழுதியிருக்கீர்கள் அக்கா. :-)
ReplyDeleteவலைச்சரத்துக்கு 4 மாசம் லீவு விடப் போறேன்னு சொன்னீங்க!
ReplyDeleteஎப்ப அறிவிக்கப் போறீங்க?
//நாமக்கல் சிபி said...
ReplyDeleteவலைச்சரத்துக்கு 4 மாசம் லீவு விடப் போறேன்னு சொன்னீங்க!
எப்ப அறிவிக்கப் போறீங்க?//
போனவாரமே விட்டிருக்கலாமோ?
மைஃப்ரண்ட்.. தேங்க்ஸ்டா.
ReplyDelete//வலைச்சரத்துக்கு 4 மாசம் லீவு விடப் போறேன்னு சொன்னீங்க!//
ஹிஹி அதான் தீபாவளிக்கு 2 நாள் லீவு விட்டாச்சே?
ஜே.கே
//போனவாரமே விட்டிருக்கலாமோ?//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்
காயூ! நன்னி, நன்னி நன்னி, கதைசொல்லி என்ற சொல் எனக்கு பிடித்தமானது :-)
ReplyDeleteநன்றி :)
ReplyDeleteதாங்ஸ். :))
ReplyDelete// கதைசொல்லிகள் //
ReplyDeleteகதைசொல்லிகள் (story tellers )என்ற வார்த்தை கதை எழுதுபவர்களுக்குப் பொருந்தாது. கதையை திரைப்படமாக்கும் சினிமா இயக்குனர்களுக்குக்கூட பொருந்தாது.
A storyteller is someone who conveys real or fictitious events in words, images, and sounds.
http://en.wikipedia.org/wiki/Storyteller
FYI:
http://www.storyteller.net/tellers/
கதை சொல்லுவது என்பது ஒரு சிறந்த கலை. அதற்கு கதையுடன் சேர்த்து பார்வையளர்களைக் கட்டிப்போடும் செப்படி வித்தையும் தெரிய வேண்டும் :-)
இது ஒரு வகையான street play போன்றது.
கதை எழுதுபவர்கள் அல்லது கதை புனைவர்கள் என்று சொல்லலாம்.
சுவத்தில் ஒண்ணுக்குப் போவதுதான் ஆணியம், அது பெண்ணால் முடியுமா என்ற ரீதியில் தலை சிறந்த தத்துவங்களை எழுத்தில் வடிக்கும் சுஜாதா போன்ற கதை எழுதிகள் கூட அனைத்து உணர்ச்சிகளையும் கூட்டி எழுதிய அதே சுவராசியத்துடன் கதை "சொல்ல" முடியுமா என்று தெரியாது.
இயக்குனர்கள் தயாரிப்பாளரிடம் (புதிய இயக்குனர்கள்) கதை சொல்வது மிக சுவராசியமாக இருக்கும் என்று சினிமா நண்பர் சொல்லியிருக்கிறார்.
ஆனால் கதை எழுதிகள் எல்லாம் கதை சொல்லிகள் என்றே பலரும் எழுதி வருகின்றனர். நானும் சில இடங்களில் கதைசொல்லிகள் என்று பொதுவாக சொன்னது உண்டு.
http://en.wikipedia.org/wiki/Writer
A writer is anyone who creates a written work, although the word more usually designates those who write creatively or professionally, or those who have written in many different forms.