அதிகாரி ஆசிரியராகிரான்!
சுய சரம்.
டிஸ்கி: இதை கொஞ்சம் டீகடை உரையாடல் பாணியில் படித்து பாருங்கள்
அதிகாரி ஆசிரியராராம்யா! என்றபடி பாய் வந்தார்! “வாரும்ங்காணும்” என்று வரவேற்ற ஐயர்! “என்ன பாய், இன்னிக்கி அரசியல் பேச மாட்டேன்னுட்டு என்னமோ ஆரம்பிக்க்றேள்!” என்று வார்த்தை விட பாய் சுறுசுறுப்பானார்!
“அரசியல் இல்லபா! இது வேற உலகத்த பத்தி! பதிவுலகம்ன்னு சொல்லுவாங்கபா! அதுல நடக்க போறத பத்தி தான் சொல்லுறேன்!” “ஓ! அந்த அப்பனும் மகனும் பேரா இருக்குற பதிவர் பத்திதானே சொல்லுறேள்!” “அட கண்டு பிடுச்சிட்டியே! அவர பத்தி தெரியுமாபா?”
“3 வருஷத்துக்கு முன்னாடி ஆபீஸ்ல பொழுது போகாம, கூகுள்ல எதையாவது தேடி போய் படிப்பாராம் அப்பறம், பதிவுகள்ல ஆன்மீக சூப்பரு இருக்காரோன்னோ அவரோட பதிவுகள படிக்க ஆரம்பிச்சு, கொஞ்சம் கொஞ்சமா பதிவுபக்கம் வந்தாராம், அப்பறம், நம்பிக்கை, முத்தமிழ்-ன்னு தமிழ்ல்ல இருக்குற ஒருசில தமிழ் குழுமத்தில் சேர்ந்து எழுத ஆரம்பித்தாராம், பிறகு பதிவுலக டீச்சர் பதிவுகள படிக்கிறது, இனியது கேட்பது, மாதவி பந்தல்ல ஒதுங்குறது, சுப்ரபாதம் கேட்பது, சிலர் வீட்டுக்கு போறது, தேவகோட்டைக்கு போறது, வகுப்பறைக்கு போறது, ஆன்மீகம் அறிவது, காற்று வெளியில உலாவுரது, மழையை இரசிப்பது, சங்கத்து சங்கதிகளை படிப்பது, அதோட தமிழ்மணம் முகர்ரது, தேன் கூட்டை பார்ப்பதுன்னு இருந்தாராம்யா, அப்பறம் ஒருநாள் ஆன்மீக சூப்பருவோட ஒரு பதிவ பார்த்து இவரே மீனாட்சி அம்மன் கோவிலோட ஒரு படபதிவு தொடரும், மதுரை சித்திரை திருவிழா தொடரும், ஞானவெட்டியான் என்ற ஒரு பதிவரின் பதிவுகள படிச்சு சித்தர் பாடல்கள்ன்னு ஒரு வலைபூவும், தன்னோட வேலை பற்றி சொல்ல SAP-பற்றின்னு ஒரு வலைபூவும், மதுரை கோவில்ன்னு ஒரு சில பதிவுகளும் போட்டார், இடையிலே ஒரு சில பாடல்கள யுனிகோட்ல குடுத்தவரு, சௌராஷ்ட்ர திருக்குறளுக்கு ஒரு நல்ல இடத்தை தரனும்ங்கற இவரோட ரொம்பநாள் கனவை, இப்போ பதிவுவழியா யுனிகோட்ல தந்து தாகத்த தீர்த்துகிட்டு இருக்கார், சரிதானே?”
“சரி தான்பா! ஆனா அவர் ஒரு அதிகாரி அது தெரியுமாபா?” “அதுவும் தெரியுங்காணும், அதுமட்டுமில்ல சொத்த பிரிச்சுட்டாளோன்னோ ’ “அண்ணன் தம்பிங்க” அதுல தம்பியோட கடன் தரும் நிருவனத்துல நம்ம அதிகாரி, மனிதவள துறையில் உயரதிகாரியா, வேலை பார்க்குறார்,!” “அட விஷயத்த அப்பிடியே புட்டு வைக்கிறீயேபா.! அதெப்பெடிப்பா கணினி படிச்ச இவர் மனிதவளத்துல வேல பார்க்குறார்?”
“ கொஞ்சநாள் இவர் ஒரு மத்தியஅரசு திட்டத்துல ஒரு மேலதிகாரிக்கு சின்ன லெவல்ல காரியதரிசியா இருந்தாராம், அப்பறம் ஒரு நிறுவனத்துல மனிதவள துறைல உதவியளாரா வேலைபாத்து அப்பிடியே உயர்ந்துட்டாராம்.” “ஆனா அவர் எப்போ ஆசிரியர் ஆனார்! அதை சொல்லுவே! ஒரு சில ட்ரெய்னிங் மாட்யூல் வகுத்து தன்னோட சக-ஊழியர்களுக்கு ட்ரெய்னிங் கொடுத்துருக்கார்! ஆனா எப்போ ஆசிரியரானார் அதைக்கொஞ்சம் சொல்லுங்காணும்”
“தமிழில் பதிவுகள்ன்னு வர்ர பல பதிவுகள எடுத்துக்காட்டும் வலைச்சரத்துல வாரம் ஒருவர் ஆசிரியாரா இருப்பார்பா!, அதுல நம்ம அதிகாரிய ஆசிரியராக்கனும்ன்னு அந்த பதிவோட பொறுப்பாசிரியர் நினைச்சு இவர அணுகினாராம். இவரும் ஒத்துகிட்டாராம்ய்யா”
“அதெப்படிபா, புதுஸ்ஸா ஒருவேலைய தேடிகிட்டு இருக்கும்போது எப்படி இதுக்கெல்லாம் இவருக்கு நேரம் கெடைக்குது”
“இது ஒரு மாசத்துக்கு முன்னாடியே இதுக்கு சரின்னு சொல்லிட்டு எல்லா பதிவுகளையும் எழுத ஆரம்பிச்சுட்டார்பா!” “அப்பறம் இப்போ தினமும் தன்னோட வீட்டு பக்கதுல இருக்குற ’கபே’ போயி பதிவுகள படிப்பாராம்!” “ஏகமனதா இன்னிக்கு ஆரம்பிக்குறார்”
“என்ன பதிவுகள எழுத போறாராம்?”
“அதை ஏம்பா கேக்குற! ஒன்னுக்குள்ள ஒன்னா, ரொம்ப நெருங்கி இருக்குரவங்களுக்கும் இதைப்பத்தி ஒன்னும் சொல்லலயாம்! ஆனா எனக்கு தெரிஞ்ச வரை தன்னோட நன்பர்களிடம் “ஆறு பதிவு இலட்சியம், மூனு பதிவு நிச்சயம்ன்னு” அண்ணா மாதிரி சொல்லுராம்பா! இது வலைச்சரம்ங்கறதால ஒவ்வொரு நாளும் ஒரு விதமானசரம் இருக்கும்னும் அந்த சரத்தை யாராவது ஒருவருக்கோ ஒரு சாரருக்கு சமர்பணம்ன்னு சொல்லுவார்ன்னு அவரோட நன்பர்கள் நம்புராங்க பா!”
முருகா! சிவ சிவ! என்றபடி எழுந்தார் ஐயர்! “பாய்” மாயமானார்!
தினமும் எல்லா செய்திகளையும் படித்து, விவாதிக்கும் அனைவருக்கும் இன்றைய சரம் சமர்பணம்.
|
|
எங்கள் தங்கம், எங்களூர் சிங்கத்தை வருக, வருகன்னு வரவேற்கிறோம். :)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துகள் சிவமுருகன்.
ReplyDelete//எங்களூர் சிங்கத்தை வருக, வருகன்னு வரவேற்கிறோம்//
@M'pathi, சிங்கம் என்ற வார்த்தையை பயன்படுத்த வல்லிம்மாவிடம் அனுமதி வாங்கியாச்சா? :p
ஆவலைத் தூண்டுகிறது முதல் பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteமதுரையம்பதி said...
ReplyDeleteஎங்கள் தங்கம், எங்களூர் சிங்கத்தை வருக, வருகன்னு வரவேற்கிறோம். :)
>>>எ(பெ)ங்களூர் சார்பா நானும் வரவேற்கிறேன்..
.மதுரையம்பதி !எங்களூர்னு சொன்னது உங்க மதுரைய இல்லதானே?:)(வந்துட்டாங்கப்பா இங்கயும் வம்பு பண்ண அப்டின்னு மனசுக்குள்ள சொல்லிக்கறது கேக்குது:))
வாழ்த்துகள் சிவமுருகன்.
ReplyDeleteவணக்கம், திகழ்மிளிர். நன்றி.
ReplyDeleteவணக்கம், மௌலி அண்ணா. நன்றி
ReplyDeleteஅம்பி,
ReplyDelete//வாழ்த்துகள் சிவமுருகன்.//
நன்றி.
////எங்களூர் சிங்கத்தை வருக, வருகன்னு வரவேற்கிறோம்//
@M'பதி, சிங்கம் என்ற வார்த்தையை பயன்படுத்த வல்லிம்மாவிடம் அனுமதி வாங்கியாச்சா? :ப்//
அவங்க எதாவது ட்ரேட் மார்க் வாங்கி வச்சுட்டாங்களா?
வணக்கம் ராமலக்ஷ்மி.
ReplyDeleteஉங்கள் ஆவல் நிச்சயம் நிறைவேற எல்லாம் வல்ல உமையாளை வேண்டுகிறேன்.
அறிமுகப் பதிவு - அதிகாரி ஆசிரியராகிறான் அருமை அருமை. உணமையான அறிமுகம். அத்தனை குணங்களையும் சுட்டிக் காட்டி பதிவிட்டமை பாராட்டத் தக்கது.
ReplyDeleteநல்வாழ்த்துகள் சிவமுருகன்
//>>>எ(பெ)ங்களூர் சார்பா நானும் வரவேற்கிறேன்..//
ReplyDeleteநன்றி
//(வந்துட்டாங்கப்பா இங்கயும் வம்பு பண்ண அப்டின்னு மனசுக்குள்ள சொல்லிக்கறது கேக்குது:))//
ஷைலஜா உங்களுக்கு பாம்பு காதுங்கள?
// குமரன் (Kumaran) said... //
ReplyDeleteஅண்ணா, லிங்க் எல்லாம் சரியா இருக்கா? :-)
//வாழ்த்துகள் சிவமுருகன்.//
நன்றி
//அறிமுகப் பதிவு - அதிகாரி ஆசிரியராகிறான் அருமை அருமை. உணமையான அறிமுகம். அத்தனை குணங்களையும் சுட்டிக் காட்டி பதிவிட்டமை பாராட்டத் தக்கது.//
ReplyDeleteஇது தான் டீக்கடை உரையாடலுக்கு உள்ள ஒரு தனித்துவம். ஆகவே இதை தேர்ந்தெடுத்தேன்.
//நல்வாழ்த்துகள் சிவமுருகன்//
நன்றி
வாழ்த்துக்கள்..
ReplyDeleteஎல்லோரையும் ஈடுபடுத்தி வாசிக்க வைக்கும் பதிவு. வாழ்த்துக்கள் சிவமுருகன் !
ReplyDeleteஆறு சாயா (ஆறு முகத்துக்கும்)!
ReplyDeleteஆறு பொறை பிஸ்கோத்து (எனக்கு மட்டும்)!
இன்னா...டீக்கடை பெஞ்சு களை கட்டது! அடுத்தாப்ல என்னா சேதிப்பா சொல்லப் போற?
வாழ்த்துக்கள் சிவா! சர வெடி வெடிச்சி விளையாடுங்க! :-))
//எங்கள் தங்கம், எங்களூர் சிங்கத்தை வருக, வருகன்னு வரவேற்கிறோம். :)//
ReplyDeleteஎங்களூரும் தான்! தெரியும்ல? - M'Pathi அண்ணா?
வடமதுரையும் தென்மதுரையும் ரொம்பவே க்ளோசு! இல்லக்கா, ஷைலு அக்கா? :-))
//ஆறு பதிவு இலட்சியம், மூனு பதிவு நிச்சயம்ன்னு” அண்ணா மாதிரி சொல்லுராம்பா//
ReplyDeleteமெளலி அண்ணா!
இப்படி ஏதாச்சும் சொன்னீங்களா என்ன?
ஏன்? ஏன்? ஏன்?
// ச்சின்னப் பையன் said...
ReplyDeleteவாழ்த்துக்கள்..
//
நன்றி ச்சின்னப் பையன்!
// சதங்கா (Sathanga) said...
ReplyDeleteஎல்லோரையும் ஈடுபடுத்தி வாசிக்க வைக்கும் பதிவு. வாழ்த்துக்கள் சிவமுருகன் !
//
நன்றி சதங்கா.
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteஆறு சாயா (ஆறு முகத்துக்கும்)!
ஆறு பொறை பிஸ்கோத்து (எனக்கு மட்டும்)!
இன்னா...டீக்கடை பெஞ்சு களை கட்டது! அடுத்தாப்ல என்னா சேதிப்பா சொல்லப் போற?//
அதை கடை பெரிசுகள் தான் சொல்லணும் :-)
//வாழ்த்துக்கள் சிவா! சர வெடி வெடிச்சி விளையாடுங்க! :-))//
இதைத் தான் வித்யாசமாய்... ன்னு சொன்னேன்!
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//எங்கள் தங்கம், எங்களூர் சிங்கத்தை வருக, வருகன்னு வரவேற்கிறோம். :)//
எங்களூரும் தான்! தெரியும்ல? - M'Pathi அண்ணா?
வடமதுரையும் தென்மதுரையும் ரொம்பவே க்ளோசு! இல்லக்கா, ஷைலு அக்கா? :-))//
இது வேறு அது வேறு என்பவன் பேறு குறை படும் பேறு!
////ஆறு பதிவு இலட்சியம், மூனு பதிவு நிச்சயம்ன்னு” அண்ணா மாதிரி சொல்லுராம்பா//
ReplyDeleteமெளலி அண்ணா!
இப்படி ஏதாச்சும் சொன்னீங்களா என்ன?
ஏன்? ஏன்? ஏன்?//
எந்த அண்ணான்னு டீக்கடையில எல்லாம் சொல்ல மாட்டாங்க! அது மௌலி அண்ணா இல்ல அறிஞர் அண்ணா!