07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, June 14, 2008

வானொலிக்கால நினைவுகள்!


வானொலி கேட்டுக்கொண்ட்டே நாட்களை நகர்த்துவது என்பது ஒரு சுகானுபவம்தான் அதுவும் என்னைப்போன்றவர்களுக்கு ரேடியோ ஆன்லைன்னில் எப்பொழுதுமே போய்க்கொண்டேதான் இருக்கும! ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் சின்ன வயதில் சலிப்பாக தெரிந்திருந்தாலும் இப்போது
நினைத்துப்பார்க்கையில் ஒரு இனம்புரியா மகிழ்ச்சியை அளிக்கும் விஷயமாகவே உள்ளது!
என்னைப்போலவே இன்னும் பலரின் எண்ணங்கள் இங்கே...!




ஒரு பகுதிநேர வானொலி அறிவிப்பாளரின் எண்ணங்களில் வானொலி நினைவுப்படுத்தும் விளம்பரம் - கண்டிப்பாக தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலெல்லாம் கூட இந்த விளம்பரம் கேட்காத ஆட்கள்லே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிரபலமான விளம்பரம்! என் அத்தானின் வயலினிலே அருவி போல் தண்ணீரு பாயுதே, பினலெக்ஸ் பைப்பின் ஜாலமே தங்கமே தங்கமே இது" முதல் அடிகளைப் பெண்குரலும் இரண்டாவது அடியை ஆண்குரலுமாகப் பாடும் சென்னை வானொலியின் விவசாய நிகழ்ச்சியின் விளம்பரப்பாடல்!

۞۞۞۞

கப்பியின் வானொலி தொடர்பான நினைவுகள்!

ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி" இது தான் அந்த நாட்களில் படுக்கையிலிருந்து எழ அலாரம். அதிகாலையில் எழுந்ததுமே அப்பா வானொலியை உயிர்ப்பித்துவிடுவார். சுப்ரபாதம், பக்திப் பாடல்கள், "ஏசு அழைக்கிறார்", நாகூர் ஹனிபாவின் கம்பீரக் குரலில் பாடல்கள் என்று ஆரம்பிக்கும். அப்போது விழிப்பு வந்தாலும் போர்வையை இழுத்துப் போர்த்தி அரைத்தூக்கத்தில் படுத்திருப்பது பரமசுகம்

۞۞۞۞۞

சின்னகுட்டியின் வானொலி கிரிக்கெட் நேரடி ஒலிபரப்பு நினைவுகள்!

உந்த கிரிக்கற் மச்சுக்கள் நடந்தால் காதோரம் வைத்து உந்த டிரான்சிஸ்ட் பெட்டிகளோடு மாரடிச்சு கொணடிருப்பன். விடிஞ்சால் பொழுதுவிட்டால் உதோடை கிடக்கிறாய் மோனை வேற வேலை வெட்டி இல்லையே அதாலை போன அப்பம்மா புறு புறுத்தண்டு போகுது.

۞۞۞۞۞

வானொலியை தோழியாக்கி அதன் அருமை பெருமைகளை சிலாகித்து சொல்லும் இவரின் வானொலி பற்றிய பதிவு!

۞۞۞۞۞

தினமும் சீக்கிரம் எழுந்து வானொலிச் செய்திகளைக் கேட்டு செய்திகளை கொஞ்சம் விரிவாக தயார் செய்ய ஆரம்பித்தேன். 7 மணிக்கு அல்லது 7.30 மணிக்கு (நேரம் சரியாக நினைவில்லை) வானொலியில் மாநிலச் செய்திகளை சரோஜ் நாராயணசுவாமி வாசிப்பார். அவரது குரல் மிக மிக தெளிவாகவும், கம்பீரமாகவும் இருக்கும். நான் பள்ளியின் அதிகாரப்பூர்வ செய்திவாசிப்பாளனாக இருந்த காலக்கட்டத்தில் இருந்து இன்று வரையிலும்
இணைபிரியாமல் வானொலி பற்றி சொல்லும் இவரின் லுக்கான பதிவு!

۞۞۞۞۞

இன்னப்பாடல் தான் என்றில்லை விளம்பரப்பாடல்கள் கூட கூடவே பாடுவேன். மழைக்காலம் வந்தால் அந்த ரேடியோ பாடாது . அதுக்கு குளிரடிக்கும் போல. பின்னர் அதை கொஞ்சம் வெயிலடிக்கும் போது கொண்டு போய் மாடியில் காயப்போட்டால் பாடும். தட்டி கொட்டி பாடும்!

கூடைக்குள்ள வைத்து தேரோட்ட சத்தங்களையும் வாத்தியங்களையும் கோயில் மணி சத்தங்களையும் பதிவு செய்திருக்கிறோம் . அதைக் கேட்கும் போது அங்கேயே இருக்கும் உணர்வைத்தரும். - இப்படியெல்லாம் பல சிறுமுயற்சிகள் பண்ணுனவங்க பதிவு !

۞۞۞۞۞

சென்னை கச்சேரி தேவ் ரசிச்சு ரசிச்சு பாட்டு கேட்ட அனுபவங்களை பாருங்களேன்!

மதியம் நல்லா சாப்பிட்டுட்டு ரூம் கதவைச் சாத்திட்டு வெயில் ஜன்னல் வழியா வருவதை திரைப் போட்டு பாதி தடுத்தும் தடுக்காமலும் மல்லாக்கப் படுத்துகிட்டு ரேடியோவைப் போட்டா அந்த அனுபவம் இருக்கு பாருங்க அட்டகாசம் பொழுது பக்காவாப் போகும்...

۞۞۞۞۞

வானொலி நிலையங்கள் பற்றியும் வெவ்வேறு காலகட்டங்களில் பிரபலமாக இருந்த வானொலி அறிவிப்பாளர்கள் பற்றியும் ஒரு தகவல் பெட்டகமாக இந்த வலைப்பூவில்

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுக்கோளாய்...!

நீங்கள் செய்யும் பணி தடையின்றி எந்தவொரு இடையூறும் இன்றி அதே சமயத்தில் மகிழ்ச்சியோட வைத்திருக்க உதவும் வானொலிப்பெட்டியை பயன்படுத்திப்பாருங்கள்! பின் பதிவிட்டு தாருங்கள் உங்கள் அனுபவங்களை!

4 comments:

  1. ///நீங்கள் செய்யும் பணி தடையின்றி எந்தவொரு இடையூறும் இன்றி அதே சமயத்தில் மகிழ்ச்சியோட வைத்திருக்க உதவும் வானொலிப்பெட்டியை பயன்படுத்திப்பாருங்கள்! பின் பதிவிட்டு தாருங்கள் உங்கள் அனுபவங்களை!///


    பணியிடத்தில் தினமும் வானொலி கேட்கிறேன். ஆனா பதிவு எல்லாம் போடுற மாதிரி ஒண்ணும் இல்லைங்க.

    ReplyDelete
  2. அன்றைக்கு சென்னை வானொலி கேட்ட சுகம் இன்றும் பசுமையா இருக்கு. இப்போது நூற்றுக்கு அண்மித்த உலக வானொலிகள் இணையத்தில் கிடைத்தாலும் அதே சென்னை வானொலியை கேட்கவே ஆசை அதிகம் இருக்கிறது.

    ReplyDelete
  3. நான் அந்தக் கால 'இலங்கை வானெலி
    வர்த்தக ஒலிபரப்பு' க்கு அடிமை.
    பள்ளி விட்டு வந்து ரேடியோவுக்கு காது கொடுத்தேனானால், வணக்கம் வரை கேட்டுத்தான் காதை பிய்த்தெடுப்பேன். இது பற்றி பதிவொன்றும் போட்டிருக்கிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது