போய் வா அம்பி போய் வா!
ஒரு வாரம் போனதே தெரியலை. வலை சரத்துல என்னாடா எழுத போறோம்?னு ஒரே மலைப்பா இருந்தது. நீங்க அனுமார் மாதிரி! சும்மா தைரியமா குதிங்க!னு தங்கமணி சொன்ன போதும் எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான். சந்தடி சாக்குல நம்மை வானரம்!னு சொல்ராங்கலோனு.
புதிய சுட்டிகளா குடுக்கனுமேனு ஒரு பதட்டம் வேற. என்னா என் வாசிப்பு வட்டம் சிறியது தான். ஆபிஸ்ல பிளாக் படிக்கறதுக்கு எல்லாம் சம்பளம் தர மாட்டாங்களாம். வேலையும் செய்யணுமாம்.
சக வலை பதிவர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். ஆயுர்வேத மருந்துகள், பழம் பெரும் கலைகளான களரி, வர்மக் கலை போன்றவற்றை பற்றி தெரிந்தவர் யாரேனும் பதிந்தால் மிகவும் பயுன்னுள்ளதாக இருக்கும். ரொம்பவே தேடி அலுத்து போனேன். பேசாம நாமே இந்த வர்மக் கலையை கற்று கொண்டு பதிவு போட்டு விடலாமா?னு யோசிக்க ஆரம்பித்து விட்டேன். எனக்கும் ஒரு தற்காப்பு கலை தெரியுமாக்கும்னு தாங்கமணியிடம் தைரியமா உதார் விடலாம்.
ஒரு வாரமாய் பின்னுட்டமளித்து உற்சாகமளித்த எல்லோருக்கும் மிகவும் நன்னி. வார இறுதியில் சென்னை பயணம் இருந்ததால் அதிகம் யோசிக்க முடியலை. இந்த வாய்ப்பை என்னை நம்பி அளித்த வலைசர குழுவுக்கு ரொம்பவே தாராள மனசு. அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்னி.
வர வர ஒரு பதிவை எப்படி முடிப்பதுனு ரொம்பவே திணறுகிறேன். ஒன்னு இலவச கொத்தனார் போல டிஸ்கி போட்டு முடிக்க தெரியனும். இல்லை, கதையும் முடிந்தது, கத்ரிகாயும் காச்சது!னு வல்லிமா மாதிரி சொல்லி முடிக்கணும் போலிருக்கு.
டிஸ்கி: கலப்பை எல்லாம் இல்லை, குகிள் உதவியுடன் தட்டச்சியதால் எழுத்து பிழைகள் இருக்கலாம். எவ்ளோ பிழை இருக்கோ அதற்கேற்றவாறு ஆயிரம் போர்காசுகளில் குறைத்து கொள்ளுங்கள்.
|
|
ஆமாங்க, தங்கமணி உங்களைத் 'தா'ங்(க)குகிறமணி ஆயிட்டாங்க! பொற்காசு "போர்" காசாயிட்டு, ஒரு வாரம் நீங்க போரிட்ட களைப்பில். ஆனாலும் போரிலே வெற்றி உங்களுக்குத்தான்! நான் சொல்வது சரிதானா நண்பர்களே??
ReplyDeleteஆகா அம்பி
ReplyDeleteஒரு வாரம் ஓடிப்போச்சா - நன்று
நல்ல பதிவுகளைச் சுட்டியதற்கு நன்றி
விடை பெறுவோம்
நல்வாழ்த்துகள்
அம்பி, ஒரு நல்ல வாரம் கடந்தது. ரொம்ப நன்றி. எப்போதுமே நகைச்சுவை,சிரிப்பு என்று என்னிக்கும் நன்றாக இருக்கணும்.
ReplyDelete//பேசாம நாமே இந்த வர்மக் கலையை கற்று கொண்டு பதிவு போட்டு விடலாமா?னு யோசிக்க ஆரம்பித்து விட்டேன். எனக்கும் ஒரு தற்காப்பு கலை தெரியுமாக்கும்னு ....//
ReplyDeleteஅடுத்த நமது சந்திப்புக்கு பிறகு வ.கலை பக்கம் போங்கப்பா!!! பயமாருக்கு!!!
ம்ம்ம்..
பரவால்ல அம்பி ஒருவாரமும் சிறப்பாதான் கொடுத்தீங்க! சனிஞாயிறும் எதிர்பார்த்தேன்...சென்னைல சென்னாகிதீரேன்னு தெரியுது!நோ ப்ராப்ளம்!
//நீங்க அனுமார் மாதிரி! //
ReplyDeleteஇதில் சந்தேகம் வேறயா? அம்மிணி கவுத்துட்டாங்கடோய்!!
//வர வர ஒரு பதிவை எப்படி முடிப்பதுனு ரொம்பவே திணறுகிறேன். ஒன்னு இலவச கொத்தனார் போல டிஸ்கி போட்டு முடிக்க தெரியனும். இல்லை, கதையும் முடிந்தது, கத்ரிகாயும் காச்சது!னு வல்லிமா மாதிரி சொல்லி முடிக்கணும் போலிருக்கு.//
ReplyDeleteஇதெல்லாம் காப்பிரைட் மேட்டர்ப்பா. ஜாக்கிரதை.
அப்போ சென்னை போறவங்க, சென்னையிலே இருக்கறவங்க யாராலும் யோசிக்க முடியாதுன்றீங்களா... மக்கள்ஸ்.. கொஞ்சம் கவனிங்க...
ReplyDeletediscசூப்பரு, உதித் நாராயணன் மாதிரியே தட்டச்சிருக்கீங்க. Bye Bye அம்பி
ReplyDeleteஅம்பி,
ReplyDeleteசூப்பர் வாரம்.
//அம்பி, ஒரு நல்ல வாரம் கடந்தது. ரொம்ப நன்றி. எப்போதுமே நகைச்சுவை,சிரிப்பு என்று என்னிக்கும் நன்றாக இருக்கணும்.//
//அப்போ சென்னை போறவங்க, சென்னையிலே இருக்கறவங்க யாராலும் யோசிக்க முடியாதுன்றீங்களா... மக்கள்ஸ்.. கொஞ்சம் கவனிங்க...//
ரிபீட்டேய் ! ரிபீட்டேய் !!
//பேசாம நாமே இந்த வர்மக் கலையை கற்று கொண்டு பதிவு போட்டு விடலாமா?னு யோசிக்க ஆரம்பித்து விட்டேன்//
ReplyDeleteஅம்பி...
மர்மக் கலைன்னு டைப்ப நெனச்சி வர்மக் கலைன்னு அடிச்சிட்டியாப்பா? சரி என்ன மர்மமோ மாயமோ...ஒரு வாரம் நல்லாவே இருந்திச்சி! அதிலும் சமையல் சரம் சூப்பரோ சூப்பர்! :-)
super week ambi..ippa dhaan ella postayum padichaen...konja naala blog makkal postellam padichu romba naal aachu...unga post padichadhum oru pudhu energyae vandhaachu....enrum kalakkum ambikku en vaazthukkal
ReplyDeleteaaha nadoola chennaiku poneengala...hmma anga irundhu irundhaa paathu irukkalaam...sari neenga new jersey varadhaa irundhaa kandippa sollungka..ok vaa