07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, May 30, 2008

சுத்தி சுத்தி வந்தீக

மறுபடி மறுபடி ஒரே வேலைய செஞ்சுகிட்டு செக்கு மாடு போல உழன்றுகிட்டு இருக்கறவங்க கூட, வருஷத்துக்கு ஒரு தடவையாவது எங்காவது புதிய ஊர்களுக்கு, சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம்.
இதுல நம்ம விட வெளி நாட்டு காரங்க ரொம்பவே ஈடுபாடு காட்டுவாங்க. ஒரே ஒரு பெரிய பையை தோளில் மாட்டிகிட்டு அந்த ஊர் வரைபடத்தை வெச்சுகிட்டு கிளம்பிடுவாங்க. நாம அப்படியா?

பால்காரன், பேப்பர்காரன், பூக்காரி, கரண்ட் பில், போன் பில், கேபிள்காரன் என எல்லாரையும் கேட்டுகிட்டு தான் வெளியவே கிளம்ப முடியும்.
அப்படியே கிளம்பினாலும், கேஸை ஒழுங்கா மூடினோமா? மாடில காய போட்ட துணிய மடிச்சு வெச்சோமா?னு திரிசங்கு நிலை தான்.

பணி நிமித்தமாக வெளியூர் சென்றாலும், அந்த ஊரின் சிறப்பு, முக்ய இடங்கள்னு வார இறுதி நாட்களிலாவது நாம் எல்லோரும் செல்வது வாடிக்கை.

நம்ம கைபுள்ளை ராஜஸ்தானை சுத்தி பாத்து என்னமா எழுதி இருக்கார் பாருங்க. கண்ணை கவரும் போட்டோக்களுடன், வரலாற்று தகவல்களுடன் ஒரு பெரிய தகவல் சுரங்கமா இவரது பதிவுகள் விளங்குது.

ஒட்டகத்தை கட்டிக்கோ!னு பாடிட்டே ஊரை சுத்தி பாத்தீங்களா தல? :)

கீதா சாம்பசிவம் மேடம் தனது ஆன்மீக பயணமான கைலை யாத்ரையை தனி பிளாக்காவே ஆரம்பிச்சு, ஒரு கல்வெட்டு மாதிரி பதிந்து வெச்சு பக்கத்துலேயே உக்காந்து இருக்காங்க பாருங்க. நாளைக்கு வர போற சந்ததியினர் இதை பாத்து நம் பாரத நாட்டின் பெருமையை தெரிந்து கொள்வார்கள். அடுத்து எந்த ஊருக்கு கிளம்பறீங்க மேடம்? :)

காசிக்கு போகும் சன்யாசி,
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி!

- இந்த பாட்டை வெங்கல குரலில் சீர்காழி அவர்கள் பாட கேட்டு இருக்கீங்களா?
வெரிகுட்!
காசி, கயா, புதுதில்லி போன தன் அனுபவங்களை தமது வலையில் பகிர்ந்து இருகிறார் பாருங்க டிடி அக்கா.


என்னடா எப்ப பாத்தாலும் உள் நாடு தானா? வெளி நாடெல்லாம் பத்தி தெரிய வேணாமா?னு கேக்கறவங்களுக்கு இருக்கவே இருக்கு ஜில்லுனு மலேசியா என்ற குழும பதிவு.

வடக்குபட்டி ராமசாமி சிங்கைக்கு பக்கத்துல இருக்கற ஒரு தீவுக்கு போய் வந்து என்னமா படம் காட்டி இருக்காரு பாருங்க.


பாரீஸுக்கு போனா நாம எல்லாம் முதல்ல என்னத்த பாப்போம்? ஈபில் டவர் தானே? அதான் இல்லைனு புலம்பி இருக்காங்க பாருங்க பிரான்ஸ் காரருக்கு வாக்கபட்ட நம்மூர்கார பொண்ணு ஒருத்தர். :)


அமீரகத்தின் அழகிய பக்கங்களை நமக்கு பானி பூரி சாப்பிட்டு கொண்டே காட்றாங்க பாருங்க நம்ம வல்லியம்மா. :)


மரகத வல்லி மீனாட்சி மதுரை நகரில் வாழுகிறாள்

கடைகண் காட்டும் காமாட்சி காஞ்சியிலே வாழுகிறாள்!

என்பது ஊரறிந்த செய்தி. மரகத புத்தர் எங்க இருக்கார்? தெரியுமா உங்களுக்கு? தெரியலைனா துளசி டீச்சர்கிட்ட கேளுங்க.
சனி, ஞாயிறு எல்லோரும் பதிவுகள படிப்பீங்களா?னு தெரியல. ஹிஹி, நான் பெரும்பாலும் படிக்க மாட்டேன். அதுனால அடுத்து என்ன எழுத?னு ஒரே யோசனையா இருக்கு. பாக்கலாம்.

11 comments:

  1. நல்ல சுத்தல்தான் அம்பி. சிலரது பதிவுகளை இதைபார்த்துதான் படிக்கப்போறேன்...வித்தியாசமாய் இருக்கு.எங்கள மாதிரி இல்லத்தரசிகளுக்கு சனியாவது ஞாயிறாவது? weakend !!எங்களுக்காக ஏதாவது எழுதியே ஆகணும் மைசூர்-சென்னை வண்டிக்கு தப்பிச்சி ஓடவேண்டாம்...:):)

    ReplyDelete
  2. நீங்க எழுதறேன்னு சொல்லுங்க.. பாதி ராத்திரியானாலும் நான் பின்னூட்டம் போடறேன்...

    ReplyDelete
  3. /
    ச்சின்னப் பையன் said...

    நீங்க எழுதறேன்னு சொல்லுங்க.. பாதி ராத்திரியானாலும் நான் பின்னூட்டம் போடறேன்..
    /

    ரிப்பீட்டேய்

    ReplyDelete
  4. வலயச் சுத்தி சுத்தி வந்து பத்தி பத்தியா தந்திருக்கீக "சுத்தி சுத்தி வந்தீக"வுல!

    சுத்தியும் பாத்திடுறோம் உங்க தயவுல!

    ReplyDelete
  5. அம்பி,இவ்வளவு நல்லா ஊர் சுத்தினவுங்க நடுவில என்னையும் சேத்துட்டீங்களே.:)

    சரி நன்றி.:)
    இனிமே இதுக்காகவே நல்லா ரீல் சுத்தறேன்.

    ReplyDelete
  6. ஆஹா, சுத்துது ஒலகமே. இதுல பல பதிவுகள் புதுசா இருக்கு, சுத்தி, சுத்தி எடுத்துக் கொடுப்பதற்கு வாழ்த்துக்கள் அம்பி !

    ReplyDelete
  7. அம்பி,

    அருமையான பதிவு. உலகம் சுற்றும் பதிவர்களின் பயணக் கட்டுரைகளைத் தேடித் தேடி சுட்டியது பாராட்டத்தக்கது. நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. யார்யார் எங்கெங்கே சுத்தினாங்கன்னு
    தெரிஞ்சுக்கிட்டதிலே நமக்கு தலையே சுத்துது!! ஷைலஜா சொன்னா மாதிரி
    எங்க வீக்கெண்ட் எல்லாம் wea..kend தான். அதையெல்லாம் ஒரு சுத்துசுத்திட்டு வாரேன்!!!

    ReplyDelete
  9. பின்னுட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்னி. தனித்தனியாக பதில் போட முடியலை. மன்னிக்கவும்.

    ReplyDelete
  10. நன்றி அம்பி! என்னதான் வெளிநாட்டுல இப்படி தனியா போயி என்ஜாய் பண்ணாலும், நம்மூருல பக்கத்துல இருக்க ஏதாச்சும் ஒரு இடத்துக்கு மொத்த குடும்பத்தோட போயி கூத்தடிக்கிற மாதிரி வராது;)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது