ஆயக் கலைகள் அறுபத்தி நான்காமே!
ஒரு சமூகம் முன்னேறி இருக்கிறது, நாகரீகம் வளர்ந்து இருக்கிறது என்பதற்க்கு பெருகி வரும் கலைகளே அத்தாட்சி. அது சிற்பமாக இருக்கலாம், ஓவியமாக இருக்கலாம், ஒரு மொழியாக இருக்கலாம். வலையுலகிலும் பலப்பல வித்தகர்கள் பலதரப்பட்ட கலைகளை தம் வலைப்பூ வழியாக வளர்த்து வருகிறார்கள்.
எல்லோருக்குமே தம்மை புகைபடம் எடுத்து கொள்ள ஆர்வம் அதிகம் தான்.
இந்த கல்யாண வீடுகளில் பொண்ணு மாப்பிள்ளை நீங்கலாக சுமார் ஒரு முப்பது பேர் மொய் எழுதிய உரிமையில் போட்டோவுக்கு போஸ் குடுக்க முந்தி அடிப்பர். ஆனால் எத்தனை பேருக்கு அந்த புகைப்பட கலை பத்தி போதிய விஷய ஞானம் இருக்க முடியும்? அந்த குறையை நீக்க பிட் என்று செல்லமாக அழைக்கபடும் ஒரு குழுபதிவு தமிழில் இயங்கி வருகிறது.
எளிய தமிழில், என்னை மாதிரி டியூப்லைட்டுகளுக்கு கூட புரியும் வகையில் மிக நேர்த்தியாக சொல்லி குடுக்கிறார்கள். மாதா மாதம் சுவையான தலைப்புகளில் போட்டி வேறு வைத்து உங்கள் புகைபட திறனை மேம்படுத்துகிறார்கள்.
சூப்பர் பிகர்கள் புகைப்பட போட்டி எப்பண்ணே வைப்பீங்க? :)
நம் எல்லோருக்குமே நமது எதிர்காலத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம் நிறைய உண்டு. பிகர்களை மடக்க, எனக்கு கைரேகை தெரியுமாக்கும்! என கப்சா விட்ட அனுபவம் பலருக்கும் உண்டு (சும்மா வெக்கபடாம பின்னூட்டத்தில் சொல்லுங்க). குரு பார்வை வந்தா தான் எனக்கு ஏதேனும் செட் ஆகும் போல!(கல்யாணத்துக்கு தான்) என கவலைபடும் மக்கள் துயர் துடைக்க நமது சுப்பையா வாத்தியார் எளிய தமிழில், கதைகளுடன், சாம்பிள் ஜாதகங்களுடன் சோதிட வகுப்பு நடத்துகிறார்.
இன்று கோச்சாரபடி, சனி வக்ரமடைவதாலும், அனானி அருள் இல்லாததாலும் என் பதிவுக்கு பத்து பின்னூட்டம் கூட வராது!னு நீங்களே கணிக்க கூடிய வகையில் வகுப்பு அழகாக செல்கிறது. அட்மிஷனுக்கு முந்துங்கள், சிபாரிசுகள் ஏற்றுகொள்ளபட மாட்டாது. :)
தாய்மொழி தவிர இன்னுமொரு மொழி கற்று கொள்வது பெரிய பலமே. நீங்க மலாய் மொழியை கற்று கொள்ள உதவறாங்க நம்ம 'மலேசிய மாரியாத்தா' மை பிரண்டு மற்றும் தர்ஹா! மன்னிக்கவும், துர்கா. :)
இனிமே நீங்களும் என்னை ஜப்பான்ல சாக்கி சான் கூப்டாக! அமெரிக்காவுல மைக்கேல் சாக்சன் கூப்டாக!னு மலாய் மொழில சொல்லிக்கலாம். என்ன நான் சொல்றது?
ல்தகா சைஆ இருக்கா? என்பதை மலாய்ல எப்படி சொல்லனும் மலேசிய மை பிரண்ட்? :)
குழந்தை வளர்ப்பும் என்னை பொறுத்த வரை ஒரு அரிய கலை தான்.
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே!
அவர் நல்லவராவதும் தீயவராவதும் தங்கமணி வளர்பதிலே! என்ற வரிகள் வரும் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அத்தகைய கு.வ பத்தி ரொம்ப தெளிவா, எளிமையா இந்த தளத்தில் ஒரு குழு பதிவா எழுதிட்டு வராங்க. குழந்தைகள் சைக்காலஜி, குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் உணவு முறைகளையும் சொல்லி இருக்காங்க.
ஜோதிகா மாசமா இருந்த போது, சூர்யாவும், அவங்களோட குழந்தை வளர்ப்பு பற்றிய பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தாராம். அடடா, என்ன ஒரு பொறுப்பான ரங்கமணியா இருக்காரு பாருங்க.
நான் எப்பவோ இந்த தளத்தை என் பேவரிட் ஐட்டத்தில் சேர்த்தாச்சு. அப்போ நீங்க? (கிசுகிசு மாதிரி இருக்கோ?)
மருத்துவ தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கா? கவலையே படாதீங்க. வலையுலகில் டாக்டர் ப்ருனோ இருக்கார். அலைபேசி, ஈமெயில் முகவரி எல்லாம் குடுத்து இருக்காரு. ஒரு மெயில் தட்டி விடுங்க. கண்டிப்பா பதில் குடுப்பாரு. பீஸ் எல்லாம் குடுக்கனுமா டாக்டர்? :)
சரி, இந்த பதிவை இதோட முடிச்சுக்கலாம். நாளைக்கு வீக் எண்ட் ஸ்பெஷல்.
|
|
நான் ஃபஸ்ட்டிகறேன். பின்ன படிச்சுக்கறேன் அம்பி!!
ReplyDeleteபீஸ் கிடையாது .. .எப்படி ”சுப்பையா வாத்தியார்” பீஸ் வாங்காமல் “டியூசன்” எடுக்கிறாரோ அது போல் இங்கு மருத்துவர் கட்டணமும் கிடையாது.
ReplyDeleteஅடச்சே நான்தான் முதல் பின்னூட்டம்னு நினைச்சிருந்தேன் அதுக்கிடையில அபிஅப்பா வந்துட்டாரு
ReplyDelete///எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே!
ReplyDeleteஅவர் நல்லவராவதும் தீயவராவதும்///
அம்பி நீங்க நல்லவரா கெட்டவரா...
அம்பி குழைந்தை வளர்பபு தளத்தோட சுட்டி வேலை செய்யலை போல இருக்கு...
ReplyDeleteஇதிலே என்னப்பா தமிழா இத்தன ஆர்வம், சரி அடுத்தமுறை நீங்கதான் ப்ஃஸ்ட்!!!
ReplyDeleteஅபிஅப்பா மற்றும் தமிழன் -> உங்க ரெண்டு பேர் சண்டையிலே, எனக்குக் கொடுக்க வேண்டிய 200$ மறந்திடப்போறீங்க...
ReplyDeleteஅப்போ பாக்கி இருக்கிற கலைகள் எல்லாம் வீக் எண்ட் பதிவுலே வருமா????
ReplyDeleteபதிவு சூப்பர்
ReplyDeleteமீ தி 10
ReplyDelete/
ReplyDeleteச்சின்னப் பையன் said...
அப்போ பாக்கி இருக்கிற கலைகள் எல்லாம் வீக் எண்ட் பதிவுலே வருமா????
/
அவ்வ்வ்வ்வ்வ்
//நான் எப்பவோ இந்த தளத்தை என் பேவரிட் ஐட்டத்தில் சேர்த்தாச்சு. அப்போ நீங்க? (கிசுகிசு மாதிரி இருக்கோ?)//
ReplyDeleteவாழ்த்துகள் அம்பி!!
//நான் எப்பவோ இந்த தளத்தை என் பேவரிட் ஐட்டத்தில் சேர்த்தாச்சு. அப்போ நீங்க? (கிசுகிசு மாதிரி இருக்கோ?)//
ReplyDeleteappa(a)ve(a) sEththutteengaLaa ? vaazhthugaL :-)
அவரவருக்குப் பிடிச்சக் கலையைப் படிச்சுக்க 'இந்தா பிடிச்சுக்கோ'ன்னு சுட்டிகளைச் சுட்டும் சூப்பர் பதிவு.
ReplyDeletecongrats ambi!
வாழ்த்துக்கள் அம்பி..
ReplyDeleteமயிலாடுதுறை மாஃபியா சார்பாகவும் (நெறய்ய பேரைக் காணோம்.. இப்ப நானும் அபிஅப்பாவும் தான் களத்தில்)..
அன்புடன்
சீமாச்சு
வாழ்த்துகள் அம்பி.. வீட்டுலயும் சொல்லிடுங்க.. :)
ReplyDelete//நான் ஃபஸ்ட்டிகறேன். பின்ன படிச்சுக்கறேன் அம்பி!!
ReplyDelete//
@abi appa, பஷ்டு நீங்க தான் ஒத்துக்கறேன். அதுக்காக படிச்சுக்கறேன்!னு எல்லாம் அள்ளி விட கூடாது அபி அப்பா. :p
//பீஸ் கிடையாது //
ReplyDelete@Dr.bruno, சூப்பர். தங்கள் சேவை எங்களுக்கு தேவை. :)
//அடச்சே நான்தான் முதல் பின்னூட்டம்னு நினைச்சிருந்தேன் //
ReplyDelete@thamizhan, பதிவை படிச்சதுனால் நீங்க தான் பஷ்ட்டு. இல்லையே, டாக்டர் படிச்சுட்டாரு போல. :p
//அம்பி நீங்க நல்லவரா கெட்டவரா...
//
தெரியல பா தெரியல! :)
//குழைந்தை வளர்பபு தளத்தோட சுட்டி வேலை செய்யலை போல இருக்கு...//
சுட்டி காட்டியதுக்கு நன்னி, சரி பண்ணிட்டேன்.
//இதிலே என்னப்பா தமிழா இத்தன ஆர்வம், சரி அடுத்தமுறை நீங்கதான் ப்ஃஸ்ட்//
ReplyDelete@abi appa, என்ன இப்படி கேட்டீங்க, பஷ்ட்டு கமண்டு போட ஜி3, ஷ்யாம், எனக்குனு அதிதடியே நடக்கும் ஒரு காலத்துல. :))
//உங்க ரெண்டு பேர் சண்டையிலே, எனக்குக் கொடுக்க வேண்டிய 200$ மறந்திடப்போறீங்க...
ReplyDelete//
அதானே, அப்ப தான் சின்ன பையன் என்னோட 500 டாலரை செட்டில் செய்ய முடியும்.
US $ முருகன் டாலர் இல்லப்பா. :p
//அப்போ பாக்கி இருக்கிற கலைகள் எல்லாம் வீக் எண்ட் பதிவுலே வருமா????
ReplyDelete//
சரி தான்! ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல. :p
//பதிவு சூப்பர்
ReplyDelete//
@m-siva, ஆக மொத்தம், பதிவை படிக்கல. :p
//வாழ்த்துகள் அம்பி!!
ReplyDelete//
@கொத்ஸ், உம்ம கண்ணுக்கு கரக்ட்டா படுமே.
நன்னி கொத்ஸ் அண்ணே! & பாலராஜன் சார்.
//'இந்தா பிடிச்சுக்கோ'ன்னு சுட்டிகளைச் சுட்டும் சூப்பர் பதிவு.
ReplyDelete//
r-lakshmi, மிக்க நன்னி ஹை! :p
//மயிலாடுதுறை மாஃபியா சார்பாகவும் //
ReplyDelete@seemachu, மிக்க நன்னி, ஹிஹி, சரியான பேரு தான். :p
/வாழ்த்துகள் அம்பி.. வீட்டுலயும் சொல்லிடுங்க//
ReplyDeleteநன்னி முத்தக்கா, கண்டிப்பா சொல்லிடறேன். :)
நான் ஊர்ல இல்லாதபோது 2போஸ்ட் ஆயிடிச்சா?): எப்படி அம்பி இப்படிஎதார்த்தமா எழுதறீங்க நிஜம்மா எனக்க்கெல்லாம் வரவே வராதுப்பா....இதுக்காகவே அம்பிக்கு மூட நெய்பெய்து முழங்கைவழிவார கேசரி ரெடி செஞ்சி ஒருநாள் அழைக்கறேன் என்ன?!!
ReplyDelete//நான் ஊர்ல இல்லாதபோது 2போஸ்ட் ஆயிடிச்சா?): //
ReplyDeleteஆமா! போன காரியம் ஜெயம் தானே?
:)
//நிஜம்மா எனக்க்கெல்லாம் வரவே வராதுப்பா....//
இதெல்லாம் டூ மச். :)
//மூட நெய்பெய்து முழங்கைவழிவார கேசரி ரெடி செஞ்சி ஒருநாள் அழைக்கறேன் என்ன?//
ஆஹா, கேக்கவே எவ்ளோ இனிமையா இருக்கு? :))
/
ReplyDeleteஷைலஜா said...
இதுக்காகவே அம்பிக்கு மூட நெய்பெய்து முழங்கைவழிவார கேசரி ரெடி செஞ்சி ஒருநாள் அழைக்கறேன் என்ன?!!
/
என்ன ஷைலஜா அக்கா நான் வந்தப்ப வெறும் தோசையோட அனுப்பிவிட்டுட்டீங்க!?!? அம்பிக்கு கேசரியா!?!?
நல்லா இல்லை சொல்லிட்டேன்
:)))))))))))
thanks Ambi for using my painstaking work in your article. As you have a large fan club & friends who visit your blog and post comments, I am sure, by default, I will also have some visitors.I am in chennai now and mymobile no is 9791040802
ReplyDelete//நல்லா இல்லை சொல்லிட்டேன்
ReplyDelete//
@shailaja, பாருங்க அக்கா, உங்க தோசையை நல்லா இல்லனு சொல்லி இருகாரு ம-சிவா. :p
நான் தான் நன்றி சொல்லனும் மணி சார். சென்னையிலா? சரி போன்ல பிடிக்கறேன். :)
ReplyDelete/
ReplyDeleteambi said...
//நல்லா இல்லை சொல்லிட்டேன்
//
@shailaja, பாருங்க அக்கா, உங்க தோசையை நல்லா இல்லனு சொல்லி இருகாரு ம-சிவா. :p
/
ஆஹா அடுத்த தடவை எதாச்சும் கிடைக்கும்னு பாத்தா அம்பி இப்பிடி ஆப்பு வைக்கிறாரே!!
:))))
அம்பி,
ReplyDeleteபுதுமையான பதிவு. ஆய(க் ?) கலைகள் பற்றிய சுட்டிகளைத் தொகுத்த முறை நன்று. நல்ல பதிவுகள்.
நல்வாழ்த்துகள்